சனிக்கிழமை, செப்டம்பர் 12
Shadow

Tag: dmk

“ரீல்” தளபதியை கண்டு “ரியல்” தளபதிக்கு பயமா!? பத்திரிகையாளர் TVசோமு Open Talk

“ரீல்” தளபதியை கண்டு “ரியல்” தளபதிக்கு பயமா!? பத்திரிகையாளர் TVசோமு Open Talk

CINI NEWS, HOME SLIDER, kodanki voice, MOVIES, திரைப்படங்கள், நடிகர்கள், வீடியோ
  "ரீல்" தளபதியை கண்டு "ரியல்" தளபதிக்கு பயமா!? பத்திரிகையாளர் TVசோமு Open Talk   https://youtu.be/FzSuH9ivRMg
அரசியல் ஆசையா… மீண்டும் சர்ச்சைக்கதையில் சூர்யா?!

அரசியல் ஆசையா… மீண்டும் சர்ச்சைக்கதையில் சூர்யா?!

CINI NEWS, HOME SLIDER, kodanki voice, MOVIES, politics, திரைப்படங்கள், நடிகர்கள், வீடியோ
அரசியல் ஆசையா… மீண்டும் சர்ச்சைக்கதையில் சூர்யா?!   https://youtu.be/91rsl1r7k2o?si=qAA_5M8zfXLiwBnJ
வரும் 24ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் முதல்வர் பிரசாரம்!

வரும் 24ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் முதல்வர் பிரசாரம்!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 31-ந் தேதி தொடங்கியது. நேற்றுடன் வேட்பு மனு தாக்கல் முடிவடைந்தது. மேலும், தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில், போட்டியிடும் கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் முன்னாள் மத்திய மந்திரி ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து வரும் 24ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுப்படவுள்ளார். மேலும், 19ம் , 20ம் தேதி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காங். வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்....
பிரிவினைவாத கட்சி என்று தி.மு.க.வை களங்கப்படுத்த கவர்னர் முயற்சி செய்தார்- டி.கே.எஸ். இளங்கோவன்!

பிரிவினைவாத கட்சி என்று தி.மு.க.வை களங்கப்படுத்த கவர்னர் முயற்சி செய்தார்- டி.கே.எஸ். இளங்கோவன்!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
தமிழக கவர்னர். ஆர்.என். ரவிக்கும், தி.மு.க. அரசுக்கும் இடையே பல விஷயங்களில் கருத்து மோதல்கள் ஏற்பட்டு வந்தது. இதன் உச்சககட்டமாக தமிழ்நாடு என்று சொல்வதற்கு பதில் தமிழகம் என்ற வார்த்தையை கவர்னர் பயன்படுத்த தொடங்கினார். இதற்கு தமிழ்நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியதால் கவர்னர் ஆர்.என்.ரவி தனது நிலைப்பாட்டை மாற்றினார். எனது கண்ணோட்டத்தை தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை போல பொருள் கொள்வதோ அனுமானம் செய்து கொள்வதோ தவறானது மற்றும் யதார்த்தத்துக்கு புறம்பானது என்று கூறி இருந்தார். எனது பேச்சின் அடிப்படை புரியாமல் கவர்னர் தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை எனும் வாதங்கள் விவாத பொருளாகி இருக்கிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த விளக்கம் என்றும் கவர்னர் தெளிவுப்படுத்தி இருந்தார். இது பற்றி தி.மு.க. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவனிடம் கேட்ட போது அவர் கூறியதாவது...
ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி சார்பில் கமல்ஹாசன் போட்டி!

ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி சார்பில் கமல்ஹாசன் போட்டி!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, அரசியல், சினி நிகழ்வுகள், தமிழக அரசியல், நடிகர்கள்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கே மீண்டும் சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சரும் மறைந்த திருமகன் ஈ.வெ.ரா.வின் தந்தையுமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இல்லையென்றால் அவரது மனைவி வரலட்சுமி, 2-வது மகன் சஞ்சய் சம்பத், மறைந்த திருமகன் ஈ.வெ.ரா.வின் மனைவி பூர்ணிமா ஆகியோரில் ஒருவர் வேட்பாளராக தேர்வு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. இளங்கோவன் போட்டியிட விரும்பாதபட்சத்தில் தனது ஆதரவாளர் யாருக்காவது சீட் கேட்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனாலும் தொடர்ந்து இளங்கோவனை போட்டியிட அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக சமூக வலைதளங்களிலும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மக்க...
நாளை மறுநாள் அமைச்சராக பதவியேற்க்கும் உதயநிதி  ஸ்டாலின்!

நாளை மறுநாள் அமைச்சராக பதவியேற்க்கும் உதயநிதி ஸ்டாலின்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல், நடிகர்கள்
தி.மு.க. இளைஞரணி செயலாளராக 2-வது முறையாக உதயநிதி ஸ்டாலின் கடந்த மாதம் நியமிக்கப்பட்டார். அப்போதே விரைவில அவ்ருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகின. இதையடுத்து, நாளை மறுநாள் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவார் என தகவல்கள் வெளியானது. உதயநிதி அமைச்சராகும் அதே நாளில் 4 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்படும் என்றும் தெரிகிறது. இந்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினின் பரிந்துரையை ஏற்று ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளதன் மூலம் உதயநிதி ஸ்டாலின் நாளை மறுதினம் அமைச்சராக பதவியேற்க உள்ளார். வரும் 14-ம் தேதி காலை 9.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெறும் என ஆளுநர் மாளிகை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலினுக்காக கோட்டையில் தனி அறை ஒன்று தயாராகி வருவதாகவும், நாளை இரவுக்குள் பணிகளை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன....
19 தி.மு.க. மாவட்ட செயலாளர் பதவிக்கு அறிவாலயத்தில் இன்று மனுதாக்கல் !

19 தி.மு.க. மாவட்ட செயலாளர் பதவிக்கு அறிவாலயத்தில் இன்று மனுதாக்கல் !

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.முக. மாவட்டச் செயலாளர் பதவிக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. அங்கு மோதல் ஏற்படாமல் இருக்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தி.மு.க.வில் 5 ஆண்டுக்கு ஒருமுறை உட்கட்சி தேர்தல் நடைபெறுவது வழக்கம். அதன்படி கிளைக் கழகம் முதல் பேரூர், நகரம், ஒன்றியம், மாநகரம், வட்டம், பகுதி என பல்வேறு பதவிகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதன் அடுத்த கட்டமாக மாவட்டக்கழக செய லாளர்கள் பதவிக்கு இப்போது தேர்தல் நடத்தப்படுகிறது. தி.மு.க.வில் அமைப்பு ரீதியாக 72 மாவட்டங்கள் உள்ளன. இதில் மாவட்ட செயலாளர் பதவிதான் அதிகாரம் மிக்க உயர்ந்த பதவியாகும். இந்த பதவியை கைப்பற்ற ஒவ்வொரு மாவட்டத்திலும் கடும் போட்டி உள்ளது. ஆனாலும் கட்சித் தலைமை யாரை விரும்புகிறதோ அவர்களுக்குத்தான் மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்கும். இதற்காக கடந்த 2 நாட்களாக அண்ணா அறிவாலயத்தில் ஒவ...
பேனா நினைவு சின்னம் அமைக்க ஆரம்ப கட்ட அனுமதிகள் கிடைத்து விடும்?!

பேனா நினைவு சின்னம் அமைக்க ஆரம்ப கட்ட அனுமதிகள் கிடைத்து விடும்?!

HOME SLIDER, NEWS, செய்திகள்
முன்னாள் முதல்-அமைச்சர் மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.23 ஏக்கர் பரப்பளவில் அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது. உதயசூரியன் வடிவத்தில் நினைவிடத்தின் முகப்பு அமைகிறது. நினைவிடத்தின் பின்புறம் 360 மீட்டர் தொலைவில் நடுக்கடலில் பேனா வடிவிலான நினைவு சின்னம் அமைக்க அரசு திட்டம் வகுத்துள்ளது. கருணாநிதி நினைவிடத்தின் பின்பகுதியில் பெரிய கேட் அமைத்து அதன் வழியாக மக்கள் கடல் மேல் பாலத்தில் நடந்து சென்று பேனா நினைவு சின்னத்தை அடையும் வகையில் 650 மீட்டர் தூரத்துக்கு இரும்பு பாலம் அமைக்கவும் முடிவு செய்துள்ளனர் பாலத்தில் நடந்து செல்லும் பகுதி முழுவதும் கண்ணாடி தரையாக அமைக்கப்படும். இந்த பாலம் நிலத்தின் மீது 290 மீட்டரும், கடலின் மீது 360 மீட்டரும் அமையும் வகையில் கட்டுவதற்கு திட்டமிட்டுள்ளனர். கடலில் பேனா நினைவு சின்னம் அமைக்க ர...
குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் – அமைச்சர் துரைமுருகன்!

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் – அமைச்சர் துரைமுருகன்!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
வேலூர் மாவட்டம் சேனூர்அடுத்த ஜி.என்.நகர் பகுதியில் பகுதி நேர ரேசன் கடை மற்றும் கோடாவாரி பள்ளியில் புதிய ரேசன் கடை திறப்பு விழா நேற்று நடந்தது. கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். கதிர் ஆனந்த் எம்.பி., துணை மேயர் சுனில் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக வருவாய் அலுவலர் ராமமூர்த்தி வரவேற்றுப் பேசினார். அமைச்சர் துரைமுருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய ரேசன் கடைகளை திறந்து வைத்தார். தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவித்த அறிவிப்புகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அந்த வகையில் குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என்ற திட்டம் வருகிற 6 மாத காலத்துக்குள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். காட்பாடி அடுத்த வள்ளிமலையில் அரசு கலைக்கல்லூரி கொண்டுவர வேண்டுமென அந்த பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். அவர்களின்...
இன்று காலை தேனாம்பேட்டையில முதல்வர் திடீர் ஆய்வு !

இன்று காலை தேனாம்பேட்டையில முதல்வர் திடீர் ஆய்வு !

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
சென்னையில் கடந்த நவம்பர் மாதம் பெய்த கனமழையால் நகரில் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது. மழைநீர் வடிகால் வசதிகள் இருந்தும் தண்ணீர் வடியாததால் பல இடங்களில் 4 நாட்களுக்கு மேலாக தண்ணீர் தேங்கியது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். மழைநீர் தேங்கிய பகுதிகளை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு வரும் காலங்களில் மழைநீர் தேங்காத அளவுக்கு வடிகால்களை சீரமைக்க வேண்டும் என்று அதிகாரிகளை கேட்டுக் கொண்டனர். அதன் அடிப்படையில் வேப்பேரி, பெரம்பூர், புளியந்தோப்பு, தேனாம்பேட்டை, தி.நகர், மேற்கு மாம்பலம், கோடம்பாக்கம் உள்ளிட்ட நகரின் பல பகுதிகளில் மழைநீர் வடிகால் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் வேப்பேரி, புளியந்தோப்பு, பெரம்பூர், திரு.வி.க.நகர் பகுதிகளில் நடைபெற்ற பணிகளை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் நேரில் சென்று பார்வையிட்டார். இதைதொடர்ந்து இன்று தேனாம்பேட்டை பகுதி...