வெள்ளிக்கிழமை, ஜூலை 31
Shadow

Tag: சூர்யா

டிஜிட்டல் ரிலீஸ்… சூர்யாவுக்கு பெருகும் ஆதரவு!

டிஜிட்டல் ரிலீஸ்… சூர்யாவுக்கு பெருகும் ஆதரவு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  ஜோதிகா படம் டிஜிட்டல் ரிலீஸ்... சூர்யாவுக்கு பெருகும் ஆதரவு! ஜோதிகா நடிப்பில் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்த படம் பொன்மகள் வந்தாள். இந்த படத்தை கடந்த மார்ச் 28ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டது. இந்த சூழலில் கொரானா என்ற கொடூர வைரஸ் தாக்கத்தால் உலகமே ஊரடங்கால் முடங்கிப் போனது. திரையுலகமும் ஒட்டுமொத்த பணிகளை நிறுத்தி முடங்கி இருக்கிறது. இந்த சூழலில் அனைவரும் வீடுகளில் முடங்கி இருக்கிறார்கள். எல்லா பணிகளும் முடங்கி இருந்தாலும் டிஜிட்டல் தொழில்நுட்பம் மட்டுமே இப்போது தனது வேலையை முன்பைவிட மிக அதிகமாக பரபரப்பாக இயங்கி வருகிறது. தியேட்டர்கள் மூடப்பட்டாலும் வீடுகளில் முடங்கி உள்ள மக்கள் டிஜிட்டல் மூலமாக திரைப்படங்களை வீடுகளிளேயே பார்த்து வருகிறார்கள். இந்த சூழலில் கொரானா சிக்கல் எப்போது முடிவுக்கு வரும் என்பது தெரியாமல் இருக்கிறது. இதன் காரணமாக ஜோதிகாவின் ப...
ஜோதிகா படத்தை டிஜிட்டலில் ரிலீஸ் செய்ய பிரபல தயாரிப்பாளர் ஆதரவு!

ஜோதிகா படத்தை டிஜிட்டலில் ரிலீஸ் செய்ய பிரபல தயாரிப்பாளர் ஆதரவு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  ஜோதிகா படத்தை டிஜிட்டலில் ரிலீஸ் செய்ய பிரபல தயாரிப்பாளர் ஆதரவு! சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவன தயாரிப்பில் ஜோதிகா நடித்து மார்ச் 28 ரிலீஸ் ஆக இருந்த படம் பொன்மகள் வந்தாள். கொரானா ஊரடங்கு காரணமாக பட ரிலீஸ் தள்ளிப் போனது. இந்த சூழலில் இந்த படத்தை தியேட்டர்கள் திறந்து ரிலீஸ் செய்வதில் காலதாமதம் ஆகும் என்பதால் நேரடியாக டிஜிட்டலில் ரிலீஸ் செய்ய தயாரிப்பு தரப்பு முடிவு செய்தது. அதற்காக பிரபல டிஜிட்டல் நிறுவனத்திடம் ரிலீஸ் செய்ய பேசப்பட்டது அந்த நிறுவனமும் படத்தை பெரிய விலை கொடுத்து வாங்கி கொண்டது. இதனால் தயாரிப்பாளருக்கு பட்ஜெட்டுக்கு மேல் ஒரு மடங்கு லாபம் கிடைத்துள்ளது. ஊரடங்கு காரணமாக மக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கி இருப்பதால் டிஜிட்டலில் படம் பார்ப்பது அதிகரித்திருப்பதால் இந்த முடிவுக்கு வந்ததாக தெரிகிறது. இந்த சூழலில் நடிகர் சூர்யாவின் இந்த முடிவு...
முன்னாள் பத்திரிகையாளரின் படத்தலைப்பின் பாதியை எடுத்துக் கொண்ட சூர்யா- ஹரி!

முன்னாள் பத்திரிகையாளரின் படத்தலைப்பின் பாதியை எடுத்துக் கொண்ட சூர்யா- ஹரி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  ஹரி இயக்கத்தில் மீண்டும் சூர்யா நடிக்கும் புதிய படம் அருவா! ஹரியும் சூர்யாவும் இணைந்து சிங்கம், வேல் என பல ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார்கள். மீண்டும் இந்த கூட்டணி இணைந்துள்ளது. இந்த கூட்டணியை இணைத்தது ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா. இவர் தயாரிப்பில் உருவாக உள்ள படத்துக்கு அருவா என்று பேர் வைத்து இருக்கிறார்கள். டி இமான் இசையமைக்கிறார். ஏப்ரலில் தொடங்கி ஒரே ஷெட்யூலில் படத்தை முடித்து தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டம். படத்தலைப்பு அருவா என்பதால் கண்டிப்பாக ஆக்‌ஷன் தூள் பறக்கும் என தெரிகிறது. அதே நேரம் அருவா படத்தலைப்பு சின்ன சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் வெளியாகி ஹிட் ஆன சிலந்தி படத்தின் இயக்குனர் ஆதிராஜன் இப்போது அருவா சண்ட என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இதில் சரண்யா பொன்வண்ணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சென்சார் அதிகாரிகளால...
சூர்யாவின் சூரரைப் போற்று இந்தியில் ரீமேக் ஆகிறது!

சூர்யாவின் சூரரைப் போற்று இந்தியில் ரீமேக் ஆகிறது!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    சூர்யாவின் சூரரைப் போற்று இந்தியில் ரீமேக் ஆகிறது! சூர்யா நடிப்பில் இப்போது உருவாகி இருக்கும் படம் ‘சூரரைப் போற்று’. இப்படத்தை சுதா கொங்கரா இயக்கியுள்ளார். இதில் நாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். மேலும், மோகன் பாபு, ஜாக்கி ஷெராப், கருணாஸ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகி உள்ளது. குறைந்த கட்டணத்தில் சாதாரண மக்களும் விமான பயணத்தை மேற்கொள்ள முடியும் என காட்டிய ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி இந்த கதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை ஏப்ரலில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது...
நடு வானில் பாடல்… என் 20 வருட சினிமாவில் இதுதான் பெஸ்ட் “சூரரைப் போற்று” சூர்யா நெகிழ்ச்சி!

நடு வானில் பாடல்… என் 20 வருட சினிமாவில் இதுதான் பெஸ்ட் “சூரரைப் போற்று” சூர்யா நெகிழ்ச்சி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    70 குழந்தைகளுடன் நடுவானில் வெளியிடப்பட்ட 'சூரரைப் போற்று' படத்தின் ஒரு பாடல். சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் வழங்கும் 'சூரரைப் போற்று' படத்தின் ஒரு பாடல் வெளியீட்டு விழா ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் நடைபெற்றது. இப்படத்தின் பாடல்களில் ஒன்றான 'வெய்யோன்சில்லி' என்று தொடங்கும் பாடல் நடுவானில் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் தலைவர் அஜய் சிங் மற்றும் சூர்யா இருவரும் வெளியிட்டனர். இதுகுறித்து நடிகர் சூர்யா கூறியதாவது :- எனது 20 வருட சினிமாவில் இந்த படத்தை தான் முக்கியமாக கருதுகிறேன். இப்படம் சிறப்பாக வருவதற்காக இயக்குநர் சுதா 10 வருடங்கள் உழைத்திருக்கிறார். இது சாதாரண விஷயமல்ல. மேலும், சுமார் 30 நிமிட காட்சிகள் விமானத்தில் எடுக்கப்பட்டது. அதற்கு ஸ்பைஸ் ஜெட் நிறுவனதிற்கு மட்டும் நன்றி கூற முடியாது. படப்பிடிப்பின் போது எங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்த ஒவ்வொரு குழுவ...
பறக்கும் விமானத்தில் சூரரைப் போற்று பாடல் வெளியிட திட்டம்!

பறக்கும் விமானத்தில் சூரரைப் போற்று பாடல் வெளியிட திட்டம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் படம் சூரரைப் போற்று. இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி வரும் இந்தப் படத்தில் அபர்ணா பாலமுரளி, தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்தப் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும், சிக்யா நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன. இந்நிலையில், அரசுப் பள்ளியில் பயிலும் 100 மாணவர்களை இலவசமாக விமானத்தில் அழைத்து செல்ல சூரரை போற்று படக்குழு முடிவு எடுத்துள்ளது. விமான நிறுவனம் தொடங்குவது தொடர்பான கதை களத்தில் சூர்யா நடிக்கிறார். இதனால் பள்ளி மாணவர்களை விமானத்தில் அழைத்து செல்ல படக்குழு முடிவு எடுத்தது. அதன்படி அகரம் பவுண்டேசன் சார்பில் சுமார் 100 மாணவ, மாண...
சூர்யாவுக்காக செந்தில் கணேஷ் பாடிய பாடல்..!

சூர்யாவுக்காக செந்தில் கணேஷ் பாடிய பாடல்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  சூர்யாவுக்காக செந்தில் கணேஷ் பாடிய பாடல்..! சுதா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 'சூரரைப் போற்று' படத்தின் ஓபனிங் பாடலை செந்தில் கணேஷ் பாடியுள்ளதாகவும், இந்த பாடலை ஏகாதேசி என்ற பாடலாசிரியர் எழுதி இருப்பதாகவும் இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இந்த தகவல் சூர்யாவின் ரசிகர்களுக்கு பெரும் இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் சூர்யா ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். மேலும் ஜாக்கி ஷெராப், , கருணாஸ், மோகன்பாபு உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் அடுத்த ஆண்டு ரிலீஸ் ஆகும்....
காப்பான் விழாவில் ரஜினி பரபரப்பு

காப்பான் விழாவில் ரஜினி பரபரப்பு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  சூர்யா நடித்து கே.வி.ஆனந்த் இயக்கியுள்ள 'காப்பான்' படத்தின் பாடல் வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று இரவு நடந்தது. விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், சிவகுமார், மோகன்லால், ஆர்யா, இயக்குனர்கள் ஷங்கர், தங்கர் பச்சான், சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி, நடிகை சாயிஷா, இசையமைப்பாளர் ஹாரிஷ் ஜெயராஜ், கவிஞர்கள் வைரமுத்து, கபிலன், கபிலன் வைரமுத்து உள்பட கலந்துகொண்டனர் மோகன்லால் பேசும்போது, "சூர்யாவை போன்று சினிமாவின் மீது அர்ப்பணிப்பும் காதலும் உடைய ஒரு நடிகரை என் 40 ஆண்டு அனுபவத்தில் பார்த்தது இல்லை. இந்த படத்தில் எனக்கு மகனாக ஆர்யா நடித்துள்ளார். ஆனால் எதிர்பாராத படப்பிடிப்பு காரணமாக அவரது திருமணத்தில் என்னால் கலந்துக் கொள்ள முடியவில்லை. அதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார். விழாவில் ரஜினிகாந்த் பேசியதாவது, "கே.வி.ஆனந்த் திறமையான இயக்குனர். நான் நடித்...
புதிய கல்வி கொள்கை விவகாரத்தில் சூர்யாவின் கருத்தை வரவேற்கிறேன் – வைகோ பாராட்டு

புதிய கல்வி கொள்கை விவகாரத்தில் சூர்யாவின் கருத்தை வரவேற்கிறேன் – வைகோ பாராட்டு

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  புதிய கல்வி கொள்கை விவகாரத்தில் சூர்யாவின் கருத்தை வரவேற்கிறேன் - வைகோ பாராட்டு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைத்து, சமூக நீதிக்கு கொள்ளி வைத்து, ஏழை–எளிய, தலித், பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் எதிர்காலத்தை சூன்ய மயமாக்கும் புதிய தேசிய கல்விக்கொள்கைக்கு கலை உலகின் ஒளிவிடும் நட்சத்திரமான நடிகர் சூர்யா தனது நியாயமான எதிர்ப்பை பதிவு செய்தார். நாட்டின் எதிர்காலத்துக்கே ஆபத்தான கூடாரத்திலிருந்து அதற்கு எதிர்ப்பு ஓங்கார குரல் எழுந்தது. சமூக நீதியிலும், மாநில சுயாட்சியிலும் மாறாத பற்று கொண்டவர்கள் நடிகர் சூர்யாவை ஆதரித்து குரல் தந்தபோது நான் மகிழ்ச்சியடைந்தேன். ஸ்டெர்லைட் மற்றும் தேசத்துரோக வழக்குகளின் பணி சுமையால் நடிகர் சூர்யாவை ஆதரித்து உடனே அறிக்கை தரும் கடமையில் தவறிவிட்டது எனது மனதை காயப்படுத்துகிறது. நடிகர் சூர்யாவின்...
சூர்யாவின் பட காப்பான் பாடல்கள் பட்டையை கிளப்புமா..?!

சூர்யாவின் பட காப்பான் பாடல்கள் பட்டையை கிளப்புமா..?!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  சூர்யாவின் பட காப்பான் பாடல்கள் பட்டையை கிளப்புமா..?! லைகா தயாரிப்பில் சூர்யா நடிப்பில் கேவி ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் 'காப்பான்' படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை சென்னையில் நடந்தது. இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் ஷங்கர், கவிஞர் வைரமுத்து உட்பட பலர் கலந்து கொண்டார்கள். இந்த நிலையில் 'காப்பான்' திரைப்படத்தின் டிராக்லிஸ்ட் சற்று முன் வெளியாகி உள்ளது இந்த படத்தின் முதல் பாடல் 'சிறுக்கி' என்று தொடங்குகிறது. இந்த பாடலை விஜய் டிவி புகழ் செந்தில் கணேஷ், ரமணி அம்மாள் பாடியுள்ளனர், ஞானகரவேல் இந்த பாடலை எழுதியுள்ளார். இரண்டாவது பாடல் 'விண்ணில் விண்மீன்' என்று தொடங்குகிறது. இந்த பாடலை இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ் மகள் நிகிதா ஹாரீஸ் பாடியுள்ளார். இந்த பாடலை வைரமுத்து எழுதியுள்ளார் மூன்றாவது பாடல் 'ஹே ஹமிகோ' என்று தொடங்குகிறது. லெஸ்லி ...