வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

செய்திகள்

கூகுள் பே செயலிக்கு தடை கோரி தேர்தல் ஆணையத்திடம் மனு!

கூகுள் பே செயலிக்கு தடை கோரி தேர்தல் ஆணையத்திடம் மனு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கூகுள் பே செயலிக்கு தடை கோரி தேர்தல் ஆணையத்திடம் மனு! தமிழகத்தில் வரும் 6ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. வேட்பாளர்கள் வீடு வீடாகச் சென்று பொதுமக்களை சந்தித்து வாக்கு கேட்கின்றனர். வாக்காளர்களை கவரும் வகையில் அரசியல் கட்சிகள் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி உள்ளன. வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருள் கொடுப்பதை தடுக்கும் வகையில் தேர்தல் ஆணையம் சோதனையை தீவிரப்படுத்தி உள்ளது. எனவே, ஆன்லைன் செயலிகள் மூலம் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்ய வாய்ப்பு உள்ளது. இந்நிலையில், மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ராமசுப்பிரமணியன், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவுக்கு மனு அனுப்பி உள்ளார். அதில், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க வேண்டும் என்றும், இதற்காக, நாளை முதல் ஏப்ரல் 5ம் தேதி வரை பணப்பரிமாற்ற செயலிகள்...
வாழ்க்கையை நினைத்தால் சோகமும் பயமும் வருகிறது – ராதிகா ஆப்தே!

வாழ்க்கையை நினைத்தால் சோகமும் பயமும் வருகிறது – ராதிகா ஆப்தே!

HOME SLIDER, NEWS, செய்திகள், நடிகைகள்
வாழ்க்கையை நினைத்தால் சோகமும் பயமும் வருகிறது - ராதிகா ஆப்தே! ராதிகா ஆப்தே நடிப்பில் ‘தாண்டவ்’ என்ற வெப் சீரிஸ் கடந்த ஜனவரி மாதம் ஒடிடி தளத்தில் வெளியானது. இந்துக் கடவுள்களை தவறாக சித்தரித்து ஒளிபரப்பான இந்த தொடரை தடை செய்யவேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வந்தனர். இந்த விவகாரம் பெரிதாக வெடித்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த வெப் சீரிசை உடனடியாக நீக்க வலியுறுத்தி நடிகை கங்கணா உள்ளிட்ட பல பிரபலங்கள் போர்கொடி உயர்த்தினர். இதை பார்த்த மத்திய அரசு, ஓடிடி தளங்களைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மாதம் சட்ட விதிமுறைகளை வகுத்தது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே கூறியுள்ளதாவது, ’ஒரு விஷயத்திற்கு எதிராக மாற்று கருத்து உருவாகும்போது சுதந்திரத்துக்கும், சகிப்புத் தன்மைக்கும் இடம் கொடுக்க வேண்டும். நமது வாழ்க்கை எங்கே சென்று க...
நயன்தாரா பற்றி பேசி மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ராதாரவி!

நயன்தாரா பற்றி பேசி மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ராதாரவி!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
நயன்தாரா பற்றி பேசி மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ராதாரவி! நடிகரும், அரசியல் பிரமுகருமான ராதாரவி இரண்டு வருடங்களுக்கு முன்பு நடந்த விழாவில், நயன்தாரா ஒரு பக்கம் பேயாகவும் நடிக்கிறார். இன்னொரு பக்கம் சீதாவாகவும் நடிக்கிறார். முன்பெல்லாம் சாமி வேஷம் போட வேண்டும் என்றால் கே.ஆர்.விஜயாவை தான் தேடுவார்கள். ஆனால் இப்போது யார் வேண்டுமானாலும் நடிக்கலாம். இப்போது பார்த்தவுடன் கும்பிடத் தோன்றுபவர்களும் நடிக்கலாம், பார்த்தவுடன் கூப்பிடத் தோன்றுபவர்களும் நடிக்கலாம் என பேசினார். இது மிகவும் சர்ச்சையானது. இந்த சர்ச்சை எதிரொலியாக திமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது பிஜேபி கட்சியில் இணைந்து பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த பிரச்சாரத்தின் போது, நயன்தாரா பற்றி நான் பேசியதால் என்னை திமுக கட்சி தற்காலிகமாக நீக்கியது. நான் முழுவதுமாக கட்சியை விட்டு வெளியேறினேன். நயன்தாரா யாரு? திமுக கட்சியி...
நிர்வாண புகைப்படம் கேட்ட ரசிகர் – நெத்தியடி பதில் கொடுத்த பிரியாமணி!

நிர்வாண புகைப்படம் கேட்ட ரசிகர் – நெத்தியடி பதில் கொடுத்த பிரியாமணி!

HOME SLIDER, NEWS, செய்திகள், நடிகைகள்
நிர்வாண புகைப்படம் கேட்ட ரசிகர் - நெத்தியடி பதில் கொடுத்த பிரியாமணி! தமிழில் கண்களால் கைது செய் படத்தில் அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக வலம் வந்த பிரியாமணி பருத்தி வீரன் படத்தில் நடித்து தேசிய விருதை பெற்றார். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கிய அவர் தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். தமிழில் ‘கொட்டேஷன் கேங்க்’ படத்திலும் தெலுங்கு, இந்தி, கன்னட படங்களிலும் நடிக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் பிரியாமணி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார். அதற்கு நிறைய வரவேற்பும், விமர்சனங்களும் கிளம்பின. இதைப் பார்த்த ரசிகர் ஒருவர், நிர்வாண புகைப்படங்களை வெளியிடுங்கள் என்றார். இதனால் கோபமான பிரியாமணி முதலில் உனது தாய், சகோதரியிடம் இதை கேள், அதன்பிறகு நானும் பதிவிடுகிறேன் என்று சாடினார். பிரியாமணியின் பதில் வை...
ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது!

ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது! இந்திய சினிமாவில் வாழ்நாள் சாதனை செய்தவர்களுக்கு ஆண்டு தோறும் மத்திய அரசால் “தாதா சாகேப் பால்கே” விருது வழங்கப்படுகிறது. இந்த விருது இந்திய திரைப்படத்துறையின் தந்தை என்று கருதப்படும் தாதா சாகேப் பால்கே பெயரால் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 1969-ம் ஆண்டு அவரது பிறந்த நாள் நூற்றாண்டு முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்திய திரைத்துறையில் சாதனை செய்தவர்களுக்கு வழங்கப்படும் விருதுகளில் மிக உயரிய விருதாக இந்த விருது கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டு இறுதியில் தேசிய விருதுகள் வழங்கப்படும் போது இந்த விருதும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்த பல்வேறு திரை பிரபலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், இயக்குனர் சிகரம் என்று அழைக்கப்பட்ட டைரக்டர் பாலச்...
இரு மதத்தினரிடையே வன்முறையை தூண்டி கலவரத்தை நடத்தி ஆதாயம் பார்க்கலாம் என நினைக்கும் பாஜக சமூக விரோதிகள் விரைவில் முறியடிக்கப்படுவார்கள் – கமல்ஹாசன்

இரு மதத்தினரிடையே வன்முறையை தூண்டி கலவரத்தை நடத்தி ஆதாயம் பார்க்கலாம் என நினைக்கும் பாஜக சமூக விரோதிகள் விரைவில் முறியடிக்கப்படுவார்கள் – கமல்ஹாசன்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
  கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் ஆதரித்து பிரச்சாரம் செய்ய இன்று உத்தரப்பிரதேசத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கோவை வந்திருந்தார். பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு விளைவிக்கும் படி ஆயிரக்கணக்கான வாகனங்களில் காவி கொடிகளை ஏந்தியபடி பாஜகவினர் ஊர்வலமாக சென்றனர். ஊர்வலம் டவுன்ஹால்பெரிய கடைவீதி பகுதியை கடக்கும் போது அங்கே கடைகள் வைத்திருந்த இஸ்லாமியர்களைக் கடைகளை அடைக்க சொல்லி பாஜக கும்பல் வன்முறையில் ஈடுபட்டது. கல்வீச்சிலும் ஈடுபட்டனர். பாஜகவினர் செய்த அடாவடிகள் ஊடகங்களிலும் ஆதாரத்துடன் வெளியாகின. இந்த சம்பவத்தினை மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் கோவை தெற்குத் தொகுதி வேட்பாளருமான கமல் ஹாசன் கண்டித்திருந்தார். "கலவர ஸ்பெலிஷ்டுகளை நாம் ஒற்றுமையால் முறியடிப்போம்" என இந்தச் சம்பவம் குறித்து அவர்கள் ட்வீட் செய்திருந்தார் ...
பிக்பாஸ் ஆரியின் தேர்தல் பிரச்சாரம்!

பிக்பாஸ் ஆரியின் தேர்தல் பிரச்சாரம்!

HOME SLIDER, politics, செய்திகள், நடிகர்கள்
பிக்பாஸ் ஆரியின் தேர்தல் பிரச்சாரம்! தமிழக தேர்தல் ஆணையத்துடன் இணைந்து நடிகரும், சமூக ஆர்வலருமான ஆரி அர்ஜுனன் தேர்தல் பிரச்சாரம் விழிப்புணர்வு வீடியோ ஒன்றில் நடித்துள்ளார். இதில் ஓட்டு கேட்டு வரும் அனைவரும் மாஸ்க் அணிந்து வர வேண்டும் என்று கட்சி வேட்பாளர் முதல் தொண்டர்கள் அனைவருக்கும் அறிவுரை கூறுவது போல் இந்த விழிப்புணர்வு வீடியோ அமைந்துள்ளது. நாட்டுக்காக ஓட்டு போடுங்க. உங்களுக்காக மாஸ்க் போடுங்க எனும் வாசகத்தோடு வரும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஓட்டு போடுவது எப்படி நமது கடமையோ, அதேபோல் சமூக இடைவெளி யோடு மாஸ்க் அணிந்து ஓட்டு போடுவது நமது கடமையாகும் என்கிறார் நடிகரும், சமூக ஆர்வலரும் ஆன ஆரி அர்ஜுனன். ...
முன்னாள் கமிஷனர் பரம் வீர் சிங்கை ஐகோர்ட் சரமாரி கேள்வி!

முன்னாள் கமிஷனர் பரம் வீர் சிங்கை ஐகோர்ட் சரமாரி கேள்வி!

HOME SLIDER, NEWS, செய்திகள்
முன்னாள் கமிஷனர் பரம் வீர் சிங்கை ஐகோர்ட் சரமாரி கேள்வி! மகாராஷ்டிர மாநில உள்துறை மந்திரி அனில் தேஷ்முக், காவல்துறை அதிகாரி சச்சின் வாசேவிடம் ஒவ்வொரு மாதமும் பார்கள் மற்றும் ரெஸ்டாரண்டுகளில் 100 கோடி ரூபாய் மாமூல் வசூல் செய்து தன்னிடம் கொடுக்கும்படி தெரிவித்தாக முன்னாள் கமிஷனர் பரம் வீர் சிங் புகார் கூறினார். இது தொடர்பாக அவர் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்த விவகாரம் மகாராஷ்டிர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மந்திரி அனில் தேஷ்முக் பதவி விலகக்கோரி பாஜகவினர் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், மந்திரி அனில் தேஷ்முக் மீதான புகார் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி காவல் துறை அதிகாரி பரம் வீர் சிங் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம், பரம் வீர் சிங்கிடம் சரமாரியாக கேள்வி எழுப்பியது. நீங...
சென்னையில் இருந்து 3 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்கம்!

சென்னையில் இருந்து 3 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்கம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
சென்னையில் இருந்து 3 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்கம்! சட்டசபை தேர்தலை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க வசதியாக சிறப்பு பஸ்களை அரசு போக்குவரத்து கழகங்கள் ஏற்பாடு செய்துள்ளன. நாளை (1-ந் தேதி) முதல் 5-ந் தேதி வரை சென்னையில் இருந்து தினசரி இயக்க கூடிய 2,225 பஸ்களுடன் சிறப்பு பேருந்துகளாக 3,090 என மொத்தம் 14,215 பஸ்கள் இயக்கப்படுகின்றன. கோவை, திருப்பூர், சேலம், பெங்களூரு ஆகிய இடங்களில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு 2,644 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. நாளை முதல் 3-ந் தேதி வரை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்படுகிறது. 4, 5-ந் தேதி ஆகிய இரண்டு நாட்கள் மாதவரம், கே.கே.நகர், தாம்பரம் பஸ் நிலையங்கள், தாம்பரம் ரெயில் நிலைய பஸ்நிறுத்தம், பூந்தமல்லி, கோயம்பேடு ஆகிய பஸ் நிலையங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இது குறித்து போக்குவரத்து கழக அதிகாரி...
கமல்ஹாசனின் பிரசாரம் திடீர் ரத்து!

கமல்ஹாசனின் பிரசாரம் திடீர் ரத்து!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
கமல்ஹாசனின் பிரசாரம் திடீர் ரத்து! நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கமல்ஹாசன் இன்று பிரசாரம் செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அவர் காலை 11 மணிக்கு தூத்துக்குடியிலும், பிற்பகலில் நெல்லை, பாளை பகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்தும் பிரசாரம் செய்துவிட்டு மாலை கன்னியாகுமரி மாவட்டத்திற்கு செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் கமல்ஹாசனின் இன்றைய தென்மாவட்ட நிகழ்ச்சிகள் திடீரென்று ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மக்கள் நீதி மய்ய நிர்வாகிகளிடம் கேட்டபோது கூறியதாவது:- கமல்ஹாசன் நேற்று மதுரை மாவட்டத்திற்குட்பட்ட தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அவனியாபுரம், பெத்தானியாபுரம், ஆரப்பாளையம் குறுக்கு சாலை, கோ.புதூர் பஸ் நிலையம், தெப்பக்குளம் ஆகிய பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார...