வெள்ளிக்கிழமை, மார்ச் 29
Shadow

Tag: தனுஷ்

மகனுக்காக ஒன்று சேர்ந்த தனுஷ் – ஐஸ்வர்யா!

மகனுக்காக ஒன்று சேர்ந்த தனுஷ் – ஐஸ்வர்யா!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும் தனுஷும் காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2004ம் ஆண்டு நவம்பர் 18ம் நாள் திருமணம் செய்துக் கொண்டனர். மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வந்த இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் யாத்ராவுக்கு 15 வயது ஆகிறது. தனுஷ் - ஐஸ்வர்யா சமீபத்தில் தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்து செய்யப்போவதாகவும், இனிமேல் இருவரும் தனித்தனி பாதைகளில் பயணிக்கப்போவதாகவும் அறிவித்த்திருந்தனர். விவாகரத்து அறிவிப்புக்கு பின்னர் தனுஷ் பெயரை தனது சமூக வலைதள பக்கங்களில் இருந்து நீக்கி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என மாற்றியிருந்தார். தனுஷ் - ஐஸ்வர்யா இந்நிலையில் இருவரின் பிரிவிற்கு பிறகு மூத்த மகன் யாத்ராவின் பள்ளி நிகழ்ச்சிக்கு முதல் முறையாக இருவரும் ஒன்றாக வந்தனர். இவர்கள் மீண்டும் இணைய வேண்டும் என்று எதிர்ப்பார்த்திருந்த ரசிகர்களுக்கு தனது ம...
வைரலாகும் திருச்சிற்றம்பலம் டிரைலர்!

வைரலாகும் திருச்சிற்றம்பலம் டிரைலர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
'யாரடி நீ மோகினி', 'குட்டி', 'உத்தமபுத்திரன்' படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகி உள்ள 'திருச்சிற்றம்பலம்' படத்தில் தனுஷ் நடித்துள்ளார். இப்படத்தில் நித்யா மேன‌ன், பிரியா பவானி சங்கர், ராஷி கன்னா, பிரகாஷ்ராஜ், இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. அண்மையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. அதன்படி, சாதாரண டெலிவரி பாயாக இருக்கும் தனுஷின் வாழ்க்கையில் ஏற்படும் காதல் கதைகளை வெளிப்படுத்தும் விதமாக உருவாகியுள்ள இந்த டிரைலர் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. https://twitter.com/sunpictures/status/1556328206323847168?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1556328206323847168%7Ctwgr%5E6a3394ac6f95776be67d4a0e0a137...
தனுஷ் பிறந்தநாள்: புதிய போஸ்டரை வெளியிட்ட வாத்தி படக்குழு!

தனுஷ் பிறந்தநாள்: புதிய போஸ்டரை வெளியிட்ட வாத்தி படக்குழு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'வாத்தி'. பிரபல தயாரிப்பாளர் நாக வம்சி தயாரிக்கவுள்ள இப்படம், நேரடியாக தெலுங்கிலும் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் 'சார்' என்றும், தமிழில் 'வாத்தி' என்றும் தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்நிலையில் தனுஷின் பிறந்தநாளான இன்று அவருக்கு வாழ்த்து தெரிவிக்கு வகையில் 'வாத்தி' படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.    ...
இரவின் நிழல் ரிலீஸ் தேதியை வெளியிடும் நடிகர் தனுஷ்!

இரவின் நிழல் ரிலீஸ் தேதியை வெளியிடும் நடிகர் தனுஷ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் இயக்கி நடித்துள்ள திரைப்படம் 'இரவின் நிழல்'. இதில் வரலஷ்மி சரத்குமார், ரோபோ ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 'இரவின் நிழல்' திரைப்படம் நான் லீனியர் திரைக்கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. 'அகிரா புரொடக்ஷன்ஸ்' தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இதன் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் 'இரவின் நிழல்' படத்தின் புதிய அப்டேட்டை பிரபலம் ஒருவர் வெளியிடுவார் என்றும் அப்பிரபலம் என்ற வார்த்தையிலுள்ள மூன்றெழுத்தும் அவர் நடித்துள்ள படத்தின் மூன்றெழுத்தும் ஒன்றாகும் என்று பார்த்திபன் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். அதன்படி, இத்திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை நடிகர் தனுஷ் இன்று மாலை 6 மணிக்கு...
திருச்சிற்றம்பலம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

திருச்சிற்றம்பலம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  யாரடி நீ மோகினி', 'குட்டி', 'உத்தமபுத்திரன்' படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகி உள்ள 'திருச்சிற்றம்பலம்' படத்தில் தனுஷ் நடித்துள்ளார். இப்படத்தில் நித்யா மேன‌ன், பிரியா பவானி சங்கர், ராஷி கன்னா, பிரகாஷ்ராஜ், இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் இப்படத்தின் கதாபாத்திரங்களை படக்குழுவினர் அறிமுகம் செய்தனர். இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'திருச்சிற்றம்பலம்' திரைப்படம் ஆகஸ்ட் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் ஒரு வீடியோ பதிவு மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த வீடியோவை தனுஷ் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து...
தனுஷின் அடுத்த பட நாயகி!

தனுஷின் அடுத்த பட நாயகி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தனுஷ் நடிப்பில் வெளியான மாறன் படத்தை தொடர்ந்து, இயக்குனர் செல்வராகவன் இயக்கும் 'நானே வருவேன்' படத்தில் தனுஷ் நடித்து முடித்துள்ளார். தற்போது தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கும் 'வாத்தி' படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார். இதற்கிடையில் அருண் மாதேஸ்வரன் இயக்கும் படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார். இப்படத்தை 'சத்யா ஜோதி ஃபிலிம்ஸ்' சார்பாக தியாகராஜன் தயாரிக்கிறார். டார்க் காமெடி ஜானரில் உருவாகவுள்ள இப்படத்திற்கு 'கேப்டன் மில்லர்' என பெயரிடப்பட்டுள்ளது.   இந்நிலையில் 'கேப்டன் மில்லர்' படத்தில் கதாநாயகி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக டாக்டர், எதற்கும் துணிந்தவன், டான் படங்களில் நடித்த பிரியங்கா மோகன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக பிரியங்கா மோகனிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி ...
மன்னிப்பு கேட்காவிட்டால் ரூ.10 கோடி நஷ்ட ஈடு – தனுஷின் அதிரடி முடிவு!

மன்னிப்பு கேட்காவிட்டால் ரூ.10 கோடி நஷ்ட ஈடு – தனுஷின் அதிரடி முடிவு!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
நடிகர் தனுஷ் தங்கள் மகன் எனக் கூறி மதுரையைச் சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதியினர் மேலூர் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்திருந்தனர். அத்துடன் ஊடகங்களிலும் தனுஷ் தங்கள் மகன் என்று பேட்டி அளித்து இருந்தனர். இந்த வழக்கை ஐகோர்ட் மதுரைக்கிளை ரத்து செய்தது. இந்த நிலையில் தங்களைக் கொலை செய்ய கஸ்தூரிராஜா முயற்சித்ததாகவும், கோர்ட்டில் போலி ஆவணங்களை தாக்கல் செய்து உத்தரவு பெற்று விட்டதாகவும் குற்றச்சாட்டுகளைக் கூறி கதிரேசன் தம்பதியினர் நடிகர் தனுசுக்கும், கஸ்தூரி ராஜாவுக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். இந்த குற்றச்சாட்டுகளுக்கு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், தவறினால் 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு கோர்ட்டில் வழக்குத் தொடர நேரிடும் எனவும் நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் கஸ்தூரிராஜா சார்பில் கதிரேசன் தம்பதியினருக்கு வழக்கறிஞர் காஜாமொய்தீன் கிஸ்தி நோட்டீஸ் அனுப்பி உள்ளார்....
வைரலாகும் வாத்தி பட போஸ்டர்!

வைரலாகும் வாத்தி பட போஸ்டர்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
செல்வராகவன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘நானே வருவேன்’ படத்தில் தனுஷ் கவனம் செலுத்தி வருகிறார். இந்தப் படத்தைத் தொடர்ந்து பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கும் 'வாத்தி' படத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளார். பிரபல தயாரிப்பாளர் நாக வம்சி தயாரிக்கவுள்ள இப்படம், நேரடியாக தெலுங்கிலும் வெளியாகவுள்ளது. இ ப்படத்திற்கு தெலுங்கில் 'சார்' என்றும், தமிழில் 'வாத்தி' என்றும் தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். தனுஷ் திரையுலகிற்கு அறிமுகமாகி 20ஆண்டுகளை கடந்துள்ளார். இதனை ரசிகர்களும் திரைத்துறையினரும் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தனுஷ் நீண்ட அறிக்கை ஒன்றை அவருடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்நிலையில் தனுஷிற்கு வாழ்த்து தெரிவி...
தனுஷுடன் இணைந்த ஸ்வீடன் நடிகை!

தனுஷுடன் இணைந்த ஸ்வீடன் நடிகை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வரும் திரைப்படம் 'நானே வருவேன்'. இந்த திரைப்படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் நாயகியாக இந்துஜா நடிக்கிறார். சமீபத்தில் இதன் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில், இப்படத்தில் எல்லி அவுரம் என்ற ஸ்வீடன் நாட்டு நடிகை முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. பலரும் எதிர்ப்பார்த்திருக்கும் இப்படத்தில் ஸ்வீடன் நாட்டு நடிகை இணைந்திருக்கும் தகவலை ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் போஸ்டரை தனுஷ் அவருடைய வலைத்தளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார் இதனை எல்லி அவுரம் அவருடைய வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்திருள்ளார். இதன்மூலம் இப்படத்தி...
ஐஸ்வர்யாவை வாழ்த்திய தனுஷ்… ரசிகர்கள் அதிர்ச்சி!

ஐஸ்வர்யாவை வாழ்த்திய தனுஷ்… ரசிகர்கள் அதிர்ச்சி!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா தற்போது 'பயணி' என்ற இசை ஆல்பம் ஒன்றை இயக்கியுள்ளார். இந்த இசை ஆல்பம் தமிழில் 'பயணி', தெலுங்கில் 'சஞ்சாரி', மலையாளத்தில் 'யாத்ரக்காரன்', இந்தியில் 'முசாபிர்' என்ற பெயரில் தயாராகி உள்ளது. இந்த 'பயணி' இசை ஆல்பத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். விவேகா பாடல் வரிகள் எழுதியுள்ளார். இந்த பாடலை  நடிகர் ரஜினிகாந்த் இன்று தன்னுடைய சமூக வலைதளத்தில் வெளியிட்டார். தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதியாக வலம் வந்த தனுஷ்- ஐஸ்வர்யா, கடந்த மாதம் பிரிய போவதாக அறிவித்து சினிமா உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தினர். இதன் மூலம் அவர்களது 18 வருட திருமண வாழ்க்கை முறிந்தது. அதைத் தொடர்ந்து இருவரும் அவரவர் வேலைகளில் கவனம் செலுத்த தொடங்கினர். இந்த நிலையில் நடிகர் தனுஷ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பயணி இசை ஆல்பத்தை பகிர்ந்து, ஐஸ்வர்யாவை தோழி என குறிப்பிட்டு அவருக்கு வ...