வியாழக்கிழமை, மார்ச் 28
Shadow

Tag: விஜய்சேதுபதி

திருடனோட கூட்டணி போட்ட விஜய்சேதுபதி மகன் – சிந்துபாத் ரகசியம்

திருடனோட கூட்டணி போட்ட விஜய்சேதுபதி மகன் – சிந்துபாத் ரகசியம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  இதுவரை குட்டி குட்டிப் பாத்திரங்களில் எட்டிப்பார்த்து வந்த நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா  அவரது ‘சிந்துபாத்’முக்கியப் பாத்திரத்தில் நடித்துள்ள நிலையில்  படத்தில் அவரது கேரக்டர் என்ன என்கிற ரகசியத்தை உடைத்திருக்கிறார் இயக்குநர் அருண்குமார். ‘பண்ணையாரும் பத்மினியும்’,’சேதுபதி’ ஆகிய இரு படங்களை ஏற்கனவே விஜய் சேதுபதியை வைத்து இயக்கியுள்ள அருண்குமார் மூன்றாவதாக இயக்கிவரும் படம் ‘சிந்துபாத்’.இப்படத்தில் அஞ்சலி வி.சே.வுக்கு ஜோடியாக நடிக்க அவரது மகன் சூர்யா முக்கியப் பாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்து கதையை எழுத ஆரம்பிக்கும்போதே அந்தக் கேரக்டர்ல சூர்யாவைத்தான் நடிக்க வைக்கணும்ங்குறதுல உறுதியா இருந்தேன். நிறையப் பேர் எங்களைக் கேக்காமலே சூர்யா இந்தப் படத்துல விஜய் சேதுபதியோட மகனாவே நடிக்கிறதா எழுதுறாங்க. அது உண்மையில்ல.  படத்துல பயங்கர தில்லாலங்கடி திருடன் கேரக்டர்...
டிவி நடிகையுடன் தனி விமானத்தில் பறந்த விஜய்சேதுபதி..!

டிவி நடிகையுடன் தனி விமானத்தில் பறந்த விஜய்சேதுபதி..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
  மதுரையில் சமீபத்தில் பிரபல நடிகைக்கடை ஒன்றை விஜய் சேதுபதி திறந்து வைத்திருக்கிறார். இந்த கடை திறப்பு விழாவுக்காக விஜய் சேதுபதியை தனி விமானத்தில் சம்மந்தப்பட்ட நகை கடை அழைத்துச் சென்றிருக்கிறது. அவருடன் பிரபல தொகுப்பாளினியும் சீரியல் நடிகையுமான தியாவும் அதே தனி விமானத்தில் சென்றிருக்கிறார். விஜய் சேதுபதியும், சீரியல் நடிகை தியாவும் சென்னையில் இருந்து மதுரைக்கு தனி விமானத்தில் பறந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது ...
விஜய்சேதுபதி – ஸ்ருதிஹாசன் ஜோடியை வைத்து லாபம் தேடும் இயக்குனர்  ஜனநாதன்..!

விஜய்சேதுபதி – ஸ்ருதிஹாசன் ஜோடியை வைத்து லாபம் தேடும் இயக்குனர் ஜனநாதன்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  தமிழ்சினிமாவில் சில சமயம் சில படங்கள்  அபூர்வங்களை நிகழ்த்தும். அது ஒரு ட்ரெண்ட் செட்டை உண்டு பண்ணும். சமுதாயத்தில் ஒரு விழிப்புணர்ச்சியையும் பெரு மலர்ச்சியையும் ஏற்படுத்தும். அப்படியான படங்கள் உருவாகும் தருணம் எல்லாமே உயரிய தருணம் தான். தற்போது அப்படியொரு தருணம் வாய்த்துள்ளது. ஆரஞ்சு மிட்டாய், ஜுங்கா, மேற்குத் தொடர்ச்சி மலை ஆகிய படங்களைத் தயாரித்த நடிகர் விஜய்சேதுபதியின் சொந்த நிறுவனமான விஜய்சே துபதி புரொடக்‌ஷனும், நாளு போலிஸும் நல்லா இருந்த ஊரும், ஒரு நல்லநாள் பார்த்துச் சொல்றேன் ஆகிய படங்களைத் தயாரித்த 7CS எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து ஒரு மிகப்பிரம்மாண்டமான படத்தை தயாரிக்கின்றன.  படத்தின் பெயர் லாபம்.     இப்படத்தின் கதாநாயகனாக விஜய்சேதுபதி நடிக்கிறார். தயாரிப்பாளர்களுக்கு லாபம் தரும் நாயகனாக மட்டுமில்லாமல் ரசிகர்களுக்கும் தன் படங்கள் மூலமாக லாபம் தரும் நாயகன...
வக்கிரபுத்திக்கு வழி சொல்லும் சூப்பர் டீலக்ஸ் – கோடங்கி விமர்சனம்

வக்கிரபுத்திக்கு வழி சொல்லும் சூப்பர் டீலக்ஸ் – கோடங்கி விமர்சனம்

HOME SLIDER, REVIEWS, விமர்சனம்
  தலைக்கனம் பிடித்த இயக்குனரின் வக்கிரபுத்திக்கு வழி சொல்லும் சூப்பர் டீலக்ஸ்... காமத்தையும் ஆபாச வார்த்தைகளையும் கலந்து விட்டால் சினிமாவில் ஜெயித்தது விடலாம் என்று எந்த மடையன் சொல்லிக் கொடுத்தானோ தமிழ் சினிமாவின் சாபக்கேடு விஜய்சேதுபதி நடித்துள்ள சூப்பர் டீலக்ஸ். விஜய்சேதுபதி திருநங்கை ஷில்பாவாக அரை மணி நேரத்திற்கு வருகிறார். பாவம் திருநங்கைகள் என சொல்லும் அளவுக்கு அத்தனை பாவமான காட்சிகள். அருவருப்பான காட்சிகள். ஆபாசமான சித்தரிப்பு.இயக்குனர் தியாகராஜ குமாரராஜாவின் மட்டமான சிந்தனை காட்சிக்கு காட்சி. சமந்தா நடித்த கதாபாத்திரம் மிக மிக கேவலமான காட்சியமைப்பு. ஆபாசத்தின் உச்சம். சரி கதை என்ன அப்படின்னு பாத்தா... சமந்தா - பஹத் பாசில் ஜோடி விருப்பம் இல்லாத புருஷன் பொண்டாட்டி. புருஷன் இல்லாத போது முன்னாள் கல்லூரி காதலனை வீட்டுக்கு வரச் சொல்லி தகாத உறவு வைத்துக் கொள்ளும...
புலிகளை தத்தெடுத்த விஜய்சேதுபதி… பராமரிப்புக்கு 5 லட்சம் வழங்கினார்

புலிகளை தத்தெடுத்த விஜய்சேதுபதி… பராமரிப்புக்கு 5 லட்சம் வழங்கினார்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  நடிகர் விஜய்சேதுபதி 2 புலிகளை தத்தெடுத்தார். வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள 2 புலிகளை விஜய்சேதுபதி தத்தெடுத்தார். இதற்கான ஒப்பந்தம் செய்ய வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு வந்த விஜய்சேதுபதி புலிகள் பராமரிப்புக்காக ரூ.5 லட்சம் காசோலை வழங்கினார்.
விஜய் சேதுபதியுடன் ஜோடி சேர்ந்த நாயகிகள் நிவேதா பெத்துராஜ், ராக்‌ஷிகன்னா

விஜய் சேதுபதியுடன் ஜோடி சேர்ந்த நாயகிகள் நிவேதா பெத்துராஜ், ராக்‌ஷிகன்னா

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  விஜயா புரொடக்க்ஷன்ஸ்" தயாரிப்பில் ,"விஜய் சேதுபதி"  நடிப்பில் விஜய் சந்தர் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு 4 ஆம் தேதி துவங்குகிறது.  பாதாள பைரவி, மாயாபஜார், மிஸ்ஸியம்மா, எம்.ஜி.ஆர் நடித்த - எங்கவீட்டு பிள்ளை, நம்நாடு, ரஜினிகாந்த் நடித்த உழைப்பாளி, கமலஹாசன் நடித்த நம்மவர் மற்றும் தாமிரபரணி, படிக்காதவன், வேங்கை, வீரம், தளபதி விஜயின் பைரவா உட்பட 60க்கும் மேற்பட்ட வெற்றிப்படங்களை தயாரித்த பழம்பெரும் பட நிறுவனம் பி.நாகிரெட்டியாரின் விஜயா புரொடக்ஷன்ஸ். பி.நாகிரெட்டியாரின் நல்லாசியுடன் பி.வெங்கட்ராம ரெட்டி வழங்க, விஜயா புரொடக்ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டிஅவர்கள் தயாரிக்கும் புதிய படத்தை இயக்குனர் விஜய் சந்தர் இயக்குகிறார். பி.பாரதி ரெட்டி அவர்களுக்கு இது 6 வது படமாகும். ஸ்கெட்ச் படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் சந்தர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியை கதாநாயகனாக  வைத்...
கார்த்தி-விஜய்சேதுபதி உள்ளிட்ட 201 பேருக்கு கலைமாமணி விருது

கார்த்தி-விஜய்சேதுபதி உள்ளிட்ட 201 பேருக்கு கலைமாமணி விருது

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
2011ம் ஆண்டு வரை வழங்கப்பட்டு வந்த கலைமாமணி விருதுகள், கடந்த 8 ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் மொத்தம் 8 ஆண்டுகளுக்கான கலைமாமணி உள்ளிட்ட கலைத்துறைக்கான உயரிய விருதுகளை பெறும் கலை வித்தகர்கள், திரைக் கலைஞர்கள், நாடகக் கலைஞர்கள் குறித்த விவரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2011ம் ஆண்டுக்கான கலைமாமணி விருதுகளுக்கு நடிகர்கள் பாண்டு, ஆர். ராஜசேகர், நடிகை குட்டி பத்மினி, பிண்ணனிப் பாடகி பி.எஸ். சசிரேகா, நடன இயக்குநர் புலியூர் சரோஜா உள்ளிட்ட பல்வேறு கலைத்துறை சார்ந்த 30 கலை வித்தகர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து 2012ம் ஆண்டுக்கான விருதுகள் பட்டியலில் நடிகைகள் டி. ராஜஸ்ரீ, பி.ஆர். வரலட்சுமி, இயக்குநர் சித்ரா லட்சுமணன் உள்ளிட்ட, பல்வேறு கலைப்பிரிவுகளை சேர்ந்த 30 பேருக்கு கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2013ம் ஆண்டுக்காக, நடிகர்கள் பிரசன்னா, ஆர். பாண்டி...
சீனுராமசாமி இயக்கத்தில் மீண்டும் இணைந்த விஜய்சேதுபதி..!

சீனுராமசாமி இயக்கத்தில் மீண்டும் இணைந்த விஜய்சேதுபதி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தமிழ் சினிமாவின் மிக முக்கியமான கலைஞர்கள் தற்போது மீண்டும் கைகோர்த்திருக்கிறார்கள், அதனால் சினிமா ரசிகர்கள் மிகவும்  உற்சாகமடைந்திருக்கிறார்கள். ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்படும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் இயக்குனர் சீனு ராமசாமி ஆகியோர் இணைந்திருக்கும் இந்த புதிய படத்தின் படப்படப்பிடிப்பு டிசம்பர் 14, 2018 காலை தேனியில் துவங்கியது. YSR Films சார்பில் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் இர்ஃபான் மாலிக் ஆகியோரால் தயாரிக்கப்படும் இந்த படத்துக்கு 'தயாரிப்பு எண் 2' என்ற தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. மேஸ்ட்ரோ, இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா ஆகியோர் முதன்முறையாக இணைந்து இந்த படத்துக்கு இசையமைப்பது மிக முக்கியமான சிறப்பம்சம் ஆகும்.  "நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்பதையும் தாண்டி, மொத்த படமும் எப்படி இருக்கும் என்பது எனக்கு இப்போதே என்  கண்முன்னால் தெரிவதால், மி...
சீதக்காதி தமிழ் சினிமாவின் நல்ல அடையாளம்..!

சீதக்காதி தமிழ் சினிமாவின் நல்ல அடையாளம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
படத்தின் நாயக கதாபாத்திரங்கள்  எப்போதும் நேர்மையான நபர்களாக சித்தரிக்கப்படும் என்ற ஒரு குறிப்பிட்ட விஷயம் உண்டு. அவர்கள் திரையில் ஆதிக்கம் செலுத்தும் போது, உண்மையில் நாம் கவனிக்க வேண்டியது அவர்களின் மனைவிமார்களை தான்.  அவர்கள் பேசுவதற்கு அதிக வார்த்தைகளே இருக்காது, ஆனால் அவர்களது மௌனத்தில் இருக்கும் அவர்களின் துன்பங்களை உணர முடியும். இந்த குணங்களை நீங்கள் ஒரு பிரபல நாடக கலைஞர் அய்யாவின் மனைவி லக்‌ஷ்மியிடம் காணலாம். பிரபல நடிகை அர்ச்சனா அந்த லக்‌ஷ்மி  கதாபாத்திரத்தில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். "நீங்கள் பொருள் தேடி ஓடாத, கலைஞர் ஒருவரின் ஆன்மாவாக  இருக்கையில், அது ஒரு தவிர்க்க முடியாத சூழ்நிலை. இது தியாகம் என்று சொல்ல முடியாது, ஆனால் கலையை நேசிக்கும், சுவாசிக்கும் ஒருவரின் துணையாக, பக்க பலமாக இருக்கும் ஒரு பொறுப்பு. நான் அப்படிப்பட்ட உணர்ச்சிகளுக்குள் கட்டுண்டு க...
96 தயாரிப்பாளருக்கு ரெட் கார்டு அராஜகம் செய்கிறார் விஷால் – கொந்தளிக்கும் சுரேஷ் காமாட்சி

96 தயாரிப்பாளருக்கு ரெட் கார்டு அராஜகம் செய்கிறார் விஷால் – கொந்தளிக்கும் சுரேஷ் காமாட்சி

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
தயாரிப்பாளர், இயக்குனர் சுரேஷ் காமாட்சி வெளியிட்ட அறிக்கை... ஒரு படத்தை தயாரிப்பதே பெரும்பாடு! ஆனா இங்கு சம்பளம் என்பதுதான் பாதி நஷ்டத்தை ஒரு தயாரிப்பாளருக்கு ஏற்படுத்துகிறது. படம் எடுத்து சம்பாதித்தவர்கள் இங்கு ரொம்பக் குறைவு. சம்பாதித்தவர்களும் கடனில் கிடக்கிறார்கள். தற்கொலை மட்டும்தான் செய்துகொள்ளவில்லை. ஆட்டை எடுத்து மாட்டில் போட்டு மறுபடியும் எழுந்துவிடமாட்டோமா என பிரம்ம பிரயத்தனம்தான் செய்துகொண்டிருக்கிறார்கள். படம் எடுப்பது பட்டினியிலிருந்து பல குடும்பங்களை காக்கிற நல்ல காரியம்தான். ஆனால் பல தயாரிப்பாளர்கள் குடும்பம் பட்டினியில் இருக்கிறது. அதற்குக் காரணம் தயாரிப்பாளர் சங்கத்தின் திட்டமிடல் குறைபாடுகள்தான். மற்ற மொழியில் படம் எடுப்பவர்கள் மினிமம் கேரண்டியோடு தப்பிக்கிறார்கள். இங்கே அந்த தப்பித்தல் இல்லை. ஒண்ணு அடுத்த படம். இல்லைன்னா ஓட்டாண்டி. இதுக்கு எப...