தமிழகத்தில் இன்று பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் திட்டங்கள்!
பிரதமர் மோடி இன்று மாலை சென்னை வருகிறார். நேரு உள் விளையாட்டரங்கில் மாலை 5.45 மணியளவில் நடைபெறும் அரசு விழாவில் கலந்துகொண்டு ரூ. 31 ஆயிரத்து 500 கோடி மதிப்பிலான திட்ட பணிகளை தொடங்கி வைத்தும் நாட்டுக்கு அர்ப்பணித்தும் உரையாற்றுகிறார்.
விழாவில் முடிவுற்ற 5 திட்டங்களை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். அந்த 5 திட்டங்கள் விபரம் வருமாறு:-
தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 30 கி.மீ. தூரத்துக்கு ரூ.598 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள 3-வது ரெயில் பாதையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
இதே போல் மதுரை-தேனி இடையே ரூ.506 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள அகல ரெயில் பாதையையும் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
எண்ணூர்-செங்கல்பட்டு பிரிவில் 115 கி.மீ. தூரத்துக்கு குழாய் வழியே எரிவாயு கொண்டு செல்லப்படுகிறது. இதற்காக 115 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.849 கோடி செலவில் எரிவாயு குழாய்கள் அமைக்கப்பட்...









