புதன்கிழமை, செப்டம்பர் 16
Shadow

Tag: Tmja

TMJA உறுப்பினர்களுக்கும், பெப்சி சங்கத்துக்கும் அரிசி மூட்டைகள் வழங்கிய தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம்!

TMJA உறுப்பினர்களுக்கும், பெப்சி சங்கத்துக்கும் அரிசி மூட்டைகள் வழங்கிய தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், வீடியோ
  TMJA உறுப்பினர்களுக்கும், பெப்சி சங்கத்துக்கும் அரிசி மூட்டைகள் வழங்கிய தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம்! உலகையே அச்சுறுத்தி நாள் தோறும் உயிர்பலிகளை வாங்கி வரும் கொடூர அரக்கனாக பரவி வரும் கொரானா தாக்கம் தமிழகத்திலும் பரவி வருவது வேதனையான உண்மை. இதன காரணமாக அனைத்து துறைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. அதில் நமது திரைத்துறையும் கடுமையாக பாதிப்படைந்து உள்ளது. பணியிழந்து சிரமத்தில் இருக்கும் நமது சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் தலா 25 கிலோ அரிசி பைகள் வழங்கப்பட்டது. இதே போல நமது திரைத்துறை ஊழியர்களின் வாழ்வாதார சிரமங்களை போக்கும் பணியில் நமது TMJA சங்கம் சார்பில் சங்க நிதியில் இருந்து 150கிலோ அரிசி பைகளை வாங்கி பெப்சி நிர்வாகிகள் சண்முகம், இசையமைப்பாளர் தினா ஆகியோரிடம் TMJA தலைவர் கவிதா, செயலாளர் கோடங்கி ஆகியோர் வழங்கினர்.  ...
அடுத்த வருடம் எனக்கு தல தீபாவளி – பிரியா ஆனந்த்

அடுத்த வருடம் எனக்கு தல தீபாவளி – பிரியா ஆனந்த்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
    அடுத்த வருடம் எனக்கு தல தீபாவளி - பிரியா ஆனந்த் தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தீபாவளி கொண்டாட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் சங்க தலைவர் கவிதா, செயலாளர் ஆபிரகாம்லிங்கன், . துணைத்தலைவர் ராதா பாண்டியன், பொருளாளர் நவநீதன் உட்பட உறுப்பினர்கள் பலரும் கலந்துக் கொண்டனர். சிறப்பு விருந்தினராக நடிகை பிரியா ஆனந்த் கலந்துக் கொண்டு சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி. பரிசு பொருட்களை வழங்கினார். பின்னர் நடிகை பிரியா ஆனந்த் பேசும்போது, ‘நான் நிறைய விழாவில் கலந்துக் கொண்டிருக்கிறேன். ஆனால், இந்த விழா எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. நான் எப்போதும் தீபாவளி கொண்டாட மாட்டேன். என்னுடைய பெற்றோர்கள் அமெரிக்காவில் இருப்பதால் என்னுடைய பாட்டி கூடதான் மிகவும் எளிமையாக தீபாவளி கொண்டாடுவேன். ஆனால், இந்த வருடன் பத்திரியாளர்களாகிய உங்களுடன் தீபாவளி கொண்டாடுவது மக...
விவசாயம் காப்போம்… விவசாயி மனம் குளிர செய்வோம் – TMJA பொங்கல் வாழ்த்து

விவசாயம் காப்போம்… விவசாயி மனம் குளிர செய்வோம் – TMJA பொங்கல் வாழ்த்து

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
எண்ணங்கள் ஏற்றம் பெறட்டும்வாழ்வில் வசந்தம் வீசட்டும்தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் பொங்கல் வாழ்த்து (TMJA) உலகம் முழுதும் உள்ள தாய் தமிழ் உறவுகளுக்கும், தமிழ் பேசும் மக்களுக்கும் தமிழ் திரைப்பட பத்திரிகையாளரர்கள் சங்கம் சார்பில் தமிழர் திருநாளாம் தை திங்கள் நாளில் இனிய பொங்கல் நல் வாழ்த்துகளை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். விவசாயம் செழிக்க, விவசாயிகள் மனம் குளிர இந்த தை திருநாளில் திருமகள் அருள் தமிழ் மண்ணில் முளைக்கட்டும்... உங்கள் எண்ணங்கள் ஏற்றம் பெறட்டும். மகிழ்ச்சிகள் தொடர்ந்து வாழ்வில் வசந்தம் வீசட்டும்... வறட்சியை போக்கவும், இயற்கை சீற்றங்களில் இருந்து நம்மை காத்துக் கொள்ளவும் மண்ணையும், மக்களையும் பாதுகாக்க இந்த தை திருநாளில் விவசாயத்தை காப்போம் என்று தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் உறுதி ஏற்போம்... திரைப்படங்கள் மூலம் சொல்லும் கதைகளில் நாட்டின் நலனையும், மக்...
விஜய் படத்தில் ரோபோ ஷங்கர் மகள் அறிமுகம் – TMJA பொங்கல் விழாவில் அட்லி வாக்குறுதி

விஜய் படத்தில் ரோபோ ஷங்கர் மகள் அறிமுகம் – TMJA பொங்கல் விழாவில் அட்லி வாக்குறுதி

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் (TMJA) சார்பில் சென்னையில் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. பிரியா அட்லி விளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார். இயக்குனர் அட்லி, நடிகர் ரோபோ ஷங்கர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். விழாவில் திரைத்துறையில் பல ஆண்டுகளாக கடை நிலை ஊழியர்களாக பணியாற்றி வரும் நலிந்த ஊழியர்களுக்கு உதவித் தொகையும் பொங்கல் பரிசு பைகளையும் சிறப்பு விருந்தினர்கள் இயக்குனர் அட்லி, பிரியா அட்லி, நடிகர் ரோபோ ஷங்கர் ஆகியோர் வழங்கி கவுரவப் படுத்தினர். பொங்கல் விழாவில் இயக்குனர் அட்லி பேசியது: பத்திரிகையாளர்கள் இணைந்து இப்படி ஒரு விழாவை நடத்துவது ரொம்ப மகிழ்ச்சியை தருகிறது. குறிப்பாக சொல்வதென்றால் இந்த விழாவில் சினிமாவில் கடை நிலை ஊழியர்களை அழைத்து கவுரவம் செய்வது மிக சிறப்பு. அந்த நிகழ்வில் என்னை அழைத்தது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியை தருகிறது. காரணம் என் ஷூட...
உயரம் குறைந்த நலிந்த கலைஞர்களுக்கு தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் நிதி உதவி!

உயரம் குறைந்த நலிந்த கலைஞர்களுக்கு தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் நிதி உதவி!

CINI NEWS, HOME SLIDER, NEWS, Photos, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் (TMJA) தீபாவளி மலர் வெளியிடும் நிகழ்வு மிகச் சிறப்பாக நடந்தது. செயற்குழு உறுப்பினர் முபாஷர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து தலைவர் கவிதா பேசினார். சங்க செயலாளர் கோடங்கி வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினர்களாக பிக்பாஸ் புகழ் ஆரவ் வெளியிட இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பெற்றுக் கொண்டார். விழா மிக சிறப்பாக நடந்தது. மிகவும் சிரமத்தில் இருக்கும் உயரம் குறைந்த நடிகர்களுக்கு சங்கம் சார்பில் நிதி உதவி அளிக்கப்பட்டது. முன்னதாக செயற்குழு உறுப்பினர் சஞ்சய் சிறப்பு விருந்தினர்களை வாழ்த்தி பேசினார். முடிவில் சங்க துணை தலைவர் ஒற்றன் நன்றி கூறினார்.  ...