வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26
Shadow

சினி நிகழ்வுகள்

ஃபகத் பாசிலுக்கு ஜோடியாக நயன்தாரா

ஃபகத் பாசிலுக்கு ஜோடியாக நயன்தாரா

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாராவின் நடிப்பில் கடைசியாக வெளியான படம் மூக்குத்தி அம்மன். ஓடிடி தளத்தில் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 14-ம் தேதி வெளியான இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து தற்போது ரஜினிகாந்த் உடன் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வரும் நயன்தாரா அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் விஜய் சேதுபதியுடன் நடிக்க இருக்கிறார். இதனிடையே தமிழில் ‘நெற்றிக்கண்’ மலையாளத்தில் ‘நிழல்’ ஆகிய நயன்தாரா நடித்த திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. இந்நிலையில் ‘நிழல்’ படத்தை அடுத்து மலையாளத்தில் நயன்தாரா நடிக்க இருக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ‘பாட்டு’ என்ற டைட்டிலுடன் உருவாகும் இந்தப் படத்தில் ஃபகத் பாசிலுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க ‘பிரேமம்’ பட இயக்குநர் அல்போன்ஸ் புத்தி...
கோவா சர்வதேச திரைப்பட விழாவில் வெளியிட தேர்வாகிய ‘அசுரன்’, ‘தேன்’ படங்கள்!

கோவா சர்வதேச திரைப்பட விழாவில் வெளியிட தேர்வாகிய ‘அசுரன்’, ‘தேன்’ படங்கள்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
கோவா சர்வதேச திரைப்பட விழாவில் வெளியிட தேர்வாகிய 'அசுரன்', 'தேன்' படங்கள்! இந்திய அரசின் திரைப்படத்துறை (IFFI) சார்பில் வருடம்தோறும் நடத்தப்படும் ’கோவா சர்வதேச திரைப்பட விழா’ அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ளது. வரும் நவம்பர் மாதம் 20 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதிவரை நடக்கவிருந்த நிலையில் கொரோனா சூழலில் உலக நாடுகளின் இயக்குநர்கள், நடிகர்கள் என்று பலரும் வருவதற்கு சிக்கல் எழும் என்பதால் கோவா சர்வதேச திரைப்பட விழா ஜனவரி 16 ஆம் தேதிமுதல் 24 ஆம் தேதி வரை நடத்தப்படும் என்று சமீபத்தில் அறிவித்தார்கள் இந்நிலையில், கடந்த ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் படம் வெகுஜன பிரிவில் கோவா சர்வதேச திரைப்பட விழாவில் வெளியிட தேர்வாகியுள்ளது. இந்தப் படம் சாதிய மனநிலையை மிகக் கடுமையாக சாடி எடுக்கப்பட்ட நிலையில், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. கடந்த வருடம் வெளியான படங்களில் அ...
என்னை போல் யாரும் ஏமாந்து விடாதீர்கள் – ஷகிலா

என்னை போல் யாரும் ஏமாந்து விடாதீர்கள் – ஷகிலா

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  மலையாளத்தில் நடிகையாக அறிமுகமான ஷகிலா தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி பல படங்களில் நடித்துள்ளார். 1990 களில் வயது வந்தோருக்கான படங்களில் நடித்து, தனக்கென ரசிகர் வட்டத்தை சேர்த்து புகழ் பெற்றார். இந்நிலையில், ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் ஒன்று உருவாகி உள்ளது. இப்படத்தை இந்திரஜித் லங்கேஷ் இயக்கி இருக்கிறார். நேரிடையாக இந்தி மொழியில் எடுக்கப்பட்ட இப்படம், ஒரே நேரத்தில் தமிழ், கன்னடம், தெலுங்கு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வரும் கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் ஷகிலா பேசும் போது, எனக்கு தெரிந்து நான் செய்த தவறை தற்போது சினிமா துறைக்கு வரும் நடிகைகள், படிக்கும் மாணவிகள் அனைவருக்கும் ஒன்று சொல்லுகிறேன். என்னை போல் யாரும் ஏமாந்து விடாதீர்கள். அதைத்தான் என் புக்கில் எழுதி இருக்கிறேன். இத...
யார் யாரை ஏமாற்றினார்கள் என்பது சில நாட்களில் தெரியவரும் – விஷ்ணுவிஷால்

யார் யாரை ஏமாற்றினார்கள் என்பது சில நாட்களில் தெரியவரும் – விஷ்ணுவிஷால்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
  நில மோசடி தொடர்பாக விஷ்ணு விஷாலின் தந்தையும் முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலா மற்றும் தயாரிப்பாளர் அன்புவேல்ராஜன் உள்ளிட்டோர் மீது வழக்கு தொடர்ந்துள்ளார் சூரி. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இதனால் விஷ்ணு விஷால் - சூரி இருவருக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டது. இது தொடர்பாக தனது தரப்பு விளக்கத்தை, ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார் விஷ்ணு விஷால். அதற்குப் பிறகு நீதிமன்றத்தில் வழங்கு நடைபெற்று வருவதால், எதுவும் கருத்து தெரிவிக்காமல் இருந்தார். இந்நிலையில், ரசிகர் ஒருவர், "சூரியை ஏமாத்தாதீங்க தல. உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும், அந்த சூரி செய்திக்குப் பிறகு உங்களை வெறுக்கிறேன்" என்று பதிவிட்டு இருந்தார். அந்த ரசிகருக்குப் பதிலளிக்கும் விதமாக விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: "உண்மை இன்னும் வெளியே வரவில்லை. யார் யாரை ஏமாற்றினார்கள் என்பது சில நாட்களில்...
அச்சு அசலாக சித்ராவை போலவே இருக்கும் கீர்த்தனா

அச்சு அசலாக சித்ராவை போலவே இருக்கும் கீர்த்தனா

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
மறைந்த சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டதை அடுத்து அவரது ரசிகர்கள் பலரும் வேதனையில் உள்ளனர். முல்லை கதாபாத்திரத்தில் யார் நடிப்பார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் சித்ராவை போலவே அச்சு அசலாக காட்சியளிக்கிறார் கீர்த்தனா தினகர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் இடம் பிடித்தவர் சித்ரா. அந்த சீரியலில் அவர் முல்லையாக நடித்தது மட்டுமல்லாமல் வாழ்ந்திருக்கிறார் என்றே சொல்லலாம். கதிர், முல்லைக்காக மட்டுமே பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஓடியது. அவர்களுக்கு எப்பொழுது ரொமன்ஸ் வரும் என பலரும் எதிர்பார்த்திருந்தனர். இந்நிலையில் இதுவே அவருக்கு எமனாக வந்து முடிந்துள்ளது. ஹேமந்த் அவரிடம் சீரியலில் இப்படி நடித்ததை வைத்தே சந்தேகப்பட்டு சண்டையிட்டுள்ளார். இந்நிலையில் நடித்த கால்ஸ் திரைப்படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வேறு வெளியானது. சித்ராவின் முதல் படமும் அது தான் ...
மாஸ்டர் வேற லெவலாம் சென்சாரில் கிடைத்த பாராட்டு!

மாஸ்டர் வேற லெவலாம் சென்சாரில் கிடைத்த பாராட்டு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தமிழ் சினிமாவில் உச்சகட்ட நடிகராக இருப்பவர் இளைய தளபதி விஜய். தளபதி படம் என்றாலே ரசிகர்களுக்கு ஒரே ஆர்ப்பாட்டம் தான். அந்த வகையில் அவரது மாஸ்டர் திரைப்படம் நிலுவையில் உள்ள நிலையில் அந்த படத்தை சென்சார் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர். படத்தை பார்த்த அதிகாரிகள் ஆகா ஓகோ என புகழ்ந்து தள்ளியுள்ளனர். இளையதளபதி விஜயின் படமான மாஸ்டர் திரைப்படம் பல எதிர்பார்ப்புகளை அடுத்து ஜூன் மாதத்தில் வெளியாக இருந்தது. அதனால் மார்ச் மதத்திலும் இசை வெளியிட்டு விழாவும் நடந்தது. இப்படி இருக்க திடீரென ஏற்பட்ட லாக்டவுன் காரணத்தால் மாஸ்டர் படம் நிலுவையில் இருந்தது. மக்கள் பலரும் படம் எப்பொழுது வரும் என்றும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தனர். மாஸ்டர் திரைப்படமும் ஓடிடியில் வெளியாக போவதாக தகவல் வெளியானது. இதனை கேட்ட ரசிகர்களும் ஷாக் ஆக தான் செய்தனர். அதன் பிறகு படத்தின் இயக்குனர் கண்டிப்பாக இது திரையரங்கில் ...
“ஹாட் குயின்” யாஷிகா ஆனந்த்!

“ஹாட் குயின்” யாஷிகா ஆனந்த்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
தமிழ் திரையுலகின் “ஹாட் குயின்” யாஷிகா ஆனந்த் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் வேற லெவலில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். யாஷிகா நடிப்பிற்கு பெயர் போனவர் என்பதை விட அவர் ஹாட்டான புகைப்படங்களை வெளியிடுவதில் பெயர் போன நடிகை. இந்த பொது முடக்கத்தின் போது அவர் உச்சகட்ட கவர்ச்சிகரமான புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் போட்டு ரசிகர்களை உசுப்பேற்றி விட்டார். அதே போல் தற்போது பச்சை வண்ண உடையில் கவர்ச்சிகரமாக புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் வாய் பிளந்து பார்த்து வருகின்றனர். தற்போது வரை படங்களில் அவ்வளவாக நடிக்கவில்லை என்றாலும் தனது போட்டோ ஷூட் காரணமாக பலரையும் தன் வசம் இழுத்து வருகின்றார். ...
முதல்வரும் பிக்பாஸ் பார்க்கிறார் என்பது மகிழ்ச்சியளிக்கிறது- கமல்

முதல்வரும் பிக்பாஸ் பார்க்கிறார் என்பது மகிழ்ச்சியளிக்கிறது- கமல்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைக்குப் போன ஓர் இடத்திலும் தோல்வியோடு திரும்பவில்லை. பெரும்பாலான அதிகாரிகள் திருடித்தான் வைத்திருந்திருக்கிறார்கள். ரொக்கம், தங்கம், வைரம் என்று திருட்டில் செழிப்போ செழிப்பு. அரசு எவ்வழி, அதிகாரிகள் அவ்வழி என கமல் ஹாசன் விமர்சனம் செய்திருந்தார். அதற்கு, முதலமைச்சர் எடப்படி பழனிசாமி, பிக் பாஸ் நடத்துபவர்கள் அரசியல் செய்தால் எப்படி இருக்கும்? பிக் பாஸ் பார்த்தால் ஒரு குடும்பம் கூட நன்றாக இருக்காது என கமல் ஹாசனை தாக்கி கூறியிருந்தார். இந்த நிலையில் முதல்வரும் பிக்பாஸ் பார்க்கிறார் என்பது மகிழ்ச்சியளிக்கிறது என கமல் ஹாசன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். https://twitter.com/ikamalhaasan/status/1339560788902612992?s=20...
கமல்ஹாசன் நடத்தும் பிக்பாஸ் பார்த்தால் ஒரு குடும்பமும் உருப்படாது – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

கமல்ஹாசன் நடத்தும் பிக்பாஸ் பார்த்தால் ஒரு குடும்பமும் உருப்படாது – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
கமல்ஹாசன் நடத்தும் பிக்பாஸ் பார்த்தால் ஒரு குடும்பமும் உருப்படாது - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சீரமைப்போம் தமிழகத்தை என்று கடந்த ஒரு வாரமாக தொடர் பிரச்சாரத்தினை மேற்கொண்டு வருகிறார் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன். பிரச்சாரத்தில் அவர் அதிமுக ஆட்சியை கடுமையாக சாடி வருகிறார். போதாத குறைக்கு எம்.ஜி.ஆரின் நீட்சி, எம்.ஜி.ஆரின் வாரிசு என்றும் சொல்லி வருகிறார். இந்நிலையில் அரியலூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கமல்ஹசானை கடுமையா தாக்கி பேசினார். ‘’70வயதில் பிக்பாஸ் நடத்துகிறார். அந்த நிகழ்ச்சியை நடத்துகிறவர் அரசியலுக்கு வந்தால் சரியாக இருக்குமா? நாட்டுக்கு நல்ல செய்ய கமல் வரவில்லை. நல்லா இருக்குற குடும்பங்களை கெடுத்து வருகிறார் கமல். பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கெட்டுத்தான் போவார்கள்...
நடிகர் ஆறு பாலா இயக்கத்தில் இனிகோ பிரபாகர் நடிக்கும் புதிய படம்!

நடிகர் ஆறு பாலா இயக்கத்தில் இனிகோ பிரபாகர் நடிக்கும் புதிய படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  நடிகர் ஆறு பாலா இயக்கத்தில் இனிகோ பிரபாகர் நடிக்கும் புதிய படம் பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தனக்கென தனி முத்திரை பதித்தவர் நடிகர் ஆறு பாலா. தற்போது இவர் இயக்குனராக அறிமுகமாகிறார். ஓல்ட் பேட்ரியோடிக் புரொடக்‌ஷன் (Old patriotic production) தயாரிக்கும் படத்தை இயக்குகிறார் ஆறு பாலா இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் இனிகோ பிரபாகர் கதையின் நாயகனாக நடிக்கின்றார். உடன் மூணாறு ரமேஷ், ராம்ஸ், சங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பூஜையுடன் இப்படத்தின் படப்பிடிப்பு இனிதே துவங்கியது. ...