வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26
Shadow

politics

அரை நூற்றாண்டுகளாக தமிழகம் கறைபட்டுள்ளது – கமல்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  மக்கள் நீதி மய்யத்தின் “இது நம்மவர் படை” பாடல்கள்  வெளியிடப்பட்டது. பாடலாசிரியரும், நடிகருமான கவிஞர் சினேகனின் வரிகளில், இசையமைப்பாளர் தாஜ்நூர் இசையில் உருவாகி இருக்கும் 6 பாடல்கள் கொண்ட தொகுப்பை  “மக்கள் நீதி மய்யம்” கட்சியின் தலைவர் பத்மபூஷன் கமல்ஹாசன் வெளியிட்டார். தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் வரிசையில் “மக்கள் நீதி மய்யம்”இணைந்த பிறகு நடைபெற்ற முதல் கட்சி நிகழ்ச்சியாக அமைந்த இந்த விழாவில், கட்சியின் உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். இந்த விழாவில் பாடல்களை வெளியிட்டு சிறப்புரையாற்றிய கமல்ஹாசன், "நம்மவர் என்பது உங்களையும், என்னையும் குறிக்கும். வரும் காலங்களில் மாலைகளையும், பொன்னாடைகளையும் நாம் தவிர்க்க வேண்டும். மாற்றத்தை நோக்கி நகர்கிறோம் என்பதற்கான சமிக்ஞையாக அது இருக்கும். வருகிற வழியில் சில பேனர்களைப் பார்த்தேன். நமது சாலைகளி...
இந்தியாவில் ஜனநாயகம் ஆபத்தில் இருக்கிறது – யஷ்வந்த் சின்கா

இந்தியாவில் ஜனநாயகம் ஆபத்தில் இருக்கிறது – யஷ்வந்த் சின்கா

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
பா.ஜ.க.வில் இருந்து சமீபத்தில் வெளியேறிய முன்னாள் மத்திய நிதி மந்திரி யஷ்வந்த் சின்கா, வாரணாசியில் நடந்த ஆம் ஆத்மி கட்சி பேரணியில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:- இந்திரா காந்தி காலத்தில் அறிவிக்கப்பட்ட நெருக்கடி நிலையை விட தற்போது அதிக ஆபத்து நிறைந்த அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை நாட்டில் நிலவுகிறது. ஜனநாயகம் ஆபத்தில் இருக்கிறது. அரசியலமைப்பை நகைச்சுவை ஆக்கிவிட்டனர். அனைத்து அரசு அமைப்புகளும், நிறுவனங்களும் தவறாக பயன்படுத்தப்படுகின்றன. ஆட்சியாளர்களின் உத்தரவுகளுக்கு ஏற்ப இந்த அமைப்புகள் செயல்படுகின்றன. மற்றவர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளுக்கு உத்தரவிடுவார்கள். ஆனால், அரசாங்கத்தில் உயர் பதவி வகிப்பவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து எந்த விசாரணைக்கும் உத்தரவிட மாட்டார்கள். பண மதிப்பு நீக்க காலத்தில் முதல் ஐந்து நாட்களுக்குள் அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியில் ரூ...

கருத்துரிமையை பறிக்கவே கைது நடவடிக்கை – இயக்குனர் அமீர் குற்றச்சாட்டு

CINI NEWS, NEWS, politics, செய்திகள்
  கோவையில் தனியார் தொலைக்காட்சி சார்பில் கடந்த 8-ம் தேதி விவாத்தின் போது அமைதியை குலைக்கும் வகையில் பேசியது உள்ளிட்ட 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில் இயக்குனர் அமீருக்கு கோவை நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது. முன்னதாக கோவையில் தனியார் தொலைகாட்சி இம்மாதம் நடத்திய விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. அமீர் சர்ச்சைக்குரிய வகையிலும், மோதல் ஏற்படுத்தும் வகையிலும் பேசியதாகவும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகும்படி அமீருக்கு சம்மன் அனுப்பியிருந்தனர். இதில் அமீர் மீது போடப்பட்ட வழக்கு தொடர்பாக முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று 3-வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதனையடுத்து நடைபெற்ற விவாதத்தின் அடிப்படையில் அமீர்க்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். இந...
முனைவர் ராஜேந்திரன் IAS முயற்சியில் புதுப்பொலிவு பெறும் கற்புக்கரசி கண்ணகி கோயில்..!

முனைவர் ராஜேந்திரன் IAS முயற்சியில் புதுப்பொலிவு பெறும் கற்புக்கரசி கண்ணகி கோயில்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
*தமிழக எல்லையில், கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் குமுளியில் கண்ணகி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள மங்களா தேவி கண்ணகி கோயிலில், மறு சீரமைப்பு செய்யவும், புதிய சிலை பிரதிஷ்டை செய்யவும், வருடத்தில் 27 நாட்கள் தரிசனம் செய்ய, கேரள அரசு முடிவு செய்து உள்ளது.* *அது சம்மந்தமாக நேற்று 16.06.2018 -ம் தேதி காலை, சபரிமலையில், தமிழக பக்தர்களின் கோரிக்கையை, கடந்த 17 வருடங்களாக கையில் எடுத்த, கண்ணகி தேவி டிரஸ்ட்டின் முதன்மை தலைவர், காவல் தெய்வம் முனைவர் M. ராஜேந்திரன், IAS.,தலைமையில் சென்ற குழுவினர், தேவசம் போர்டு தலைவர் பத்மகுமாரை சந்தித்து ஆதரவு தெரிவித்தார், குழுவினர் விரைவில் கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களையும் சந்தித்து, ஆதரவும், நன்றியை தெரிவிக்க உள்ளனர். *வரலாற்றை நேசிப்பதோடு மட்டும் அல்லாமல், சமூகம், சமுதாயம், வரலாற்றை, புத்தக வடிவில், மக்களுக்கு எளிய நடையில் தெரியப்படுத்தியும்...
கோரிக்கை மனுவை ஜனாதிபதி நிராகரித்தால் 7 பேர் விடுதலையாவதில் பின்னடைவு..!

கோரிக்கை மனுவை ஜனாதிபதி நிராகரித்தால் 7 பேர் விடுதலையாவதில் பின்னடைவு..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
கோரிக்கை மனுவை ஜனாதிபதி நிராகரித்தால் பேரறிவாளன்  உள்ளிட்ட7 பேர் விடுதலையாவதில் பின்னடைவு..! முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேர் 27 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வருகிறார்கள். இந்த வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேருக்கு தூக்கு தண்டனையும் மற்ற 4 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. பின்னர் 3 பேரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக 7 பேரும் சிறை தண்டனை அனுபவித்து விட்டதால் அவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு எடுத்து மத்திய அரசின் அனுமதி கேட்டது. இதை ஏற்க முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு மறுத்ததுடன் தமிழக அரசின் முடிவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு 7 பேரையும் விடுத...
சென்னை – சேலம் 8 வழி பசுமை சாலைக்கு கடும் எதிர்ப்பு- தீக்குளிப்போம் என விவசாயிகள் அறிவிப்பு

சென்னை – சேலம் 8 வழி பசுமை சாலைக்கு கடும் எதிர்ப்பு- தீக்குளிப்போம் என விவசாயிகள் அறிவிப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
சேலம்-சென்னை இடையே 8 வழி பசுமை சாலை அமைக்க அரசு முடிவு செய்து உள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்தப்படும் போது, சேலம் மாவட்டத்தில் அரமனூர், மஞ்சுவாடி, ஆச்சாங்குட்டப்பட்டி, கத்திரிப்பட்டி, மூக்கனூர், ஆச்சாங்குட்டப்பட்டி புதூர், குப்பனூர், அயோத்தியாப்பட்டணம், மாசிநாயக்கன்பட்டி, உடையாப்பட்டி, எருமாபாளையம், சுக்கம்பட்டி, வெள்ளையப்பட்டி, குள்ளம்பட்டி, மின்னாம்பள்ளி, சின்னகவுண்டாபுரம், பாரப்பட்டி, சித்தனேரி, உத்தமசோழபுரம், பூலாவரி அக்ரகாரம் உள்பட பல்வேறு கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படும். அதே போன்று பல்வேறு பகுதிகளில் உள்ள பலரது வீடுகளும் இடிக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இந்த திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த முதல் கட்ட பணியை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொடங்கி உள்ளனர். இந்த நிலையில் இந்த திட்டம் செயல்படுத்தினால் சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விவசாயம் முற்றிலும் பாத...
இயக்குனர் அமீர் மீது வழக்கு பதியப்பட்டது தனி மனித சுதந்திரத்தை பறிக்க திட்டமிட்ட சதி..! TMJA கண்டனம்

இயக்குனர் அமீர் மீது வழக்கு பதியப்பட்டது தனி மனித சுதந்திரத்தை பறிக்க திட்டமிட்ட சதி..! TMJA கண்டனம்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
இயக்குனர் அமீர் மீது வழக்கு பதியப்பட்டது தனி மனித சுதந்திரத்தை பறிக்க திட்டமிட்ட சதி..! தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் கண்டனம்(TMJA) தமிழகத்தில் நடைபெறும் “தொடர் போராட்டங்கள் மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கா?, அரசியல் காரணங்களுக்கா?” என்ற தலைப்பில் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் சார்பில்  (08.06.2018) கோவையில் வட்டமேசை விவாத நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் திமுக சார்பில் திரு. டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி., பாஜக சார்பில் திருமதி தமிழிசை சவுந்தரராசன், சிபிஐ (எம்) சார்பில் தோழர். பாலகிருஷ்ணன், அஇஅதிமுக சார்பில் திரு. செம்மலை எம்.எல்.ஏ., தமிழ்மாநில காங்கிரஸ் சார்பில் திரு. ஞானதேசிகன், கொங்கு இளைஞர் பேரவை சார்பில் திரு. உ. தனியரசு எம்.எல்.ஏ., இந்திய குடியரசுக் கட்சி சார்பில் திரு. செ.கு. தமிழரசன் இவர்களோடு இயக்குநர் திரு.அமீர் அவர்களும் நிகழ்ச்சியில் கலந...
கில்டு தேர்தல் பொய் பிரச்சார வீடியோ வெளியிட்ட ஜாக்குவார் தங்கம் – அதிர்ச்சியில் விஷால்

கில்டு தேர்தல் பொய் பிரச்சார வீடியோ வெளியிட்ட ஜாக்குவார் தங்கம் – அதிர்ச்சியில் விஷால்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
தயாரிப்பாளர் சங்க இடத்தை காட்டி பொய் பிரச்சாரத்தில் ஈடுபடும் ஜாக்குவார் தங்கம் விஷால் அதிர்ச்சி தமிழ் திரைப்படத் துறையினருக்காக முதல்வர் கருணாநிதி அவர்களால் பையனூர் பகுதியில் 95 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. பெப்சி தொழிலாளர் குடியிருப்புக்கு 50 ஏக்கரும், ஸ்டுடியோ, மருத்துவ மனை, பள்ளிக்கூடம் உள்ளிட்ட பணிகளுக்கு 15 ஏக்கரும் என பெப்சிக்கு மட்டும் 65 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. இந்த நிலம் அப்போது தலைவராக இருந்த வி.சி.குகநாதன் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 10 ஏக்கர் நிலம் சின்னத்திரை நடிகர்கள், தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும், 10 ஏக்கர் நடிகர் சங்கத்துக்கும் , 10 ஏக்கர் தமிழ் தயாரிப்பாளர் சங்கத்துக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.   தயாரிப்பாளர் கில்டு அமைப்புக்கு எந்த நிலமும் ஒதுக்கப்படவில்லை. உண்மை இப்படியிருக்க கில்டு தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என...
கேன்சர் நோயாளிகளுக்கு உதவ இசை ஆல்பத்தில் நடித்த இனியா..!

கேன்சர் நோயாளிகளுக்கு உதவ இசை ஆல்பத்தில் நடித்த இனியா..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
இனியாவின் இசை ஆல்பம்    இனியா ... தமிழ் சினிமா மட்டுமில்லாமல் மலையாள பட உலகிலும் நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகை. மற்ற நடிகைகளைப் போல் இல்லாமல் இயல்பாக பழகக் கூடியவர். நடிப்பு மட்டுமல்லாமல் நடனத்தை அதிக அளவில் நேசிக்கக் கூடியவர். அதனால் மியா என்ற நடனப் பெண் ஒருவரின் வாழ்க்கைப் பதிவை 8 நிமிட வீடியோ ஆல்பமாக “மியா” என்ற பெயரில் தயாரித்திருக்கிறார்.                                                        மியா துடிப்புள்ள ஒரு பெண். பிரபல டான்ஸராகி கொடி கட்டி பறக்க வேண்டும் ..விருதுகளை வாங்கி குவிக்க வேண்டும். இது தான் அந்தப் பெண்ணின் வாழ்க்கை லட்சியம். அந்த லட்சியத்தை அடைய போராடுகிறாள் எவ்வளவோ தடைக்கற்கள். ஆனால் லட்சியத்தை அடைய வேண்டுமென்றால் முயற்சியை கை விடக் கூடாது என்று போரடுகிறாள் அந்த முயற்சி எப்படி வெற்றியாகிறது..இது தான் மியாவின் பதிவு  “ வானத்தில் பறக்க   சிறகுக...
சத்தமில்லாமல் போய் தூத்துக்குடியில் ஆறுதல் சொன்ன விஜய்..!

சத்தமில்லாமல் போய் தூத்துக்குடியில் ஆறுதல் சொன்ன விஜய்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
சத்தமில்லாமல் பைக்கில் வந்து ஆறுதல் கூறிய விஜய். தூத்துக்குடியில் போலீஸ் துப்பாக்கி சூட்டில் பலியானவர் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறும் திரையுலக பிரபலங்களில் விஜய் மனித நேயத்துடன் நடந்து கொண்டார். ரஜினி போவதற்கு முன் நான் நடிகனாக போகிறேன் மக்களை சந்தோஷப்படுத்த என்று சொல்லிவிட்டு... அங்கே போய் மக்கள் நன்மைக்காக போரடியவர்களை சமூக விரோதிகள் என் சொல்லிவிட்டு வந்த ரஜினியின் "சினிமா அரசியல்" ... முன்பாக அறிவித்து ஆர்ப்பாட்டமாக போய் திரும்பிய கமல் அரசியல்... இவைகளுக்கு மத்தியில் ஆர்ப்பாட்டம் இல்லாமல் அறிவிப்பு இல்லாமல் பைக்கில் பாதிக்கப்பட்ட மக்கள் வீடுகளுக்கு பந்தா இல்லாமல் போன நடிகர் விஜய் உண்மையில் பாராட்டப்பட வேண்டியவரே..! - கோடங்கி ...