Tag: ops
கட்சி அனுமதி இன்றி யாரும் கருத்து சொல்ல கூடாது – அதிமுகவினருக்கு தடை போட்ட இபிஎஸ்- ஓபிஎஸ்
தனிப்பட்ட முறையில் யாரும் கருத்து சொல்லக் கூடாது என அதிமுகவினருக்கு இபிஎஸ்- ஓபிஎஸ் இணைந்து அறிக்கை
அனைத்து நிலைகளிலும் செயல்பட்டு வரும் கழகப் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட அனைவரும், எந்தவித முன்யோசனையும் இன்றி, கழகத் தலைமையின் ஒப்புதல் இல்லாமல் தொலைக்காட்சிகள் உள்ளிட்ட இன்னபிற ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும், தங்களின் தனிப்பட்ட கருத்துகளைத் தெரிவிப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்…
ஊடக விவாதங்களில் கழக அரசின் சாதனைகளைப் பற்றியும், மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக, கழக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களைப் பற்றியும் எடுத்துச் செல்லுங்கள் என்று, ஓ.பி.எஸ். இ.பி.எஸ் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அடுத்த முதல்வர் யார் என்பது குறித்து அமைச்சர்கள் சிலர் பேசிய பேச்சுகள் ஊடகங்களில் சர்ச்சை ஆன நிலையில், ஓபிஎஸ் சார்ந்த தேனி மாவட்டத்தில் ஜெயலலிதாவின் நம்பிக்...
ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி இழப்பு வழக்கில் முதல்வர் கடிதத்தால் திடீர் திருப்பம்!
ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி இழப்பு வழக்கில் முதல்வர் கடிதத்தால் திடீர் திருப்பம்!
தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்தின் மீது 2017-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 18-ந்தேதி நடைபெற்ற ஓட்டெடுப்பின் போது, தற்போதைய துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் நம்பிக்கை தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தனர்.
அவர்களை தகுதிநீக்கம் செய்யக்கோரி திமுக தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் சபாநாயகரே சட்டத்தின் அடிப்படையில் உரிய முடிவை எடுப்பார் என்று கூறி வழக்கை முடித்து வைத்தது.
அதன்பின்னர், எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்த துணை முதல்வர் ஓபிஎஸ் உள்பட 11 எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.
இந்த நிலையில், தி.மு.க. சார்பில்...
அண்ணா நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் உட்பட தலைவர்கள் மரியாதை!
அண்ணா நினைவிடத்தில் முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உட்பட தலைவர்கள் மரியாதை!
பேரறிஞரின் 51வது நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அண்ணா நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மெரினாவில் உள்ள பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அதிமுக மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்பட பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு அண்ணாவிற்கு மரியாதை செலுத்தினர்.
முன்னதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திமுக நிர்வாகிகளோடு வந்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்....
பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலையில் உறுதியாக இருக்கிறோம்- ஓ.பன்னீர்செல்வம்
பெரியகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் பெரியகுளத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்- அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்பட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசின் சார்பில் 2 முறை கவர்னரிடம் பரிந்துரை செய்து உள்ளோம். அமைச்சரவை கூட்டத்தில் அவர்களை விடுதலை செய்வது என முடிவு செய்யப்பட்டு உள்ளது. எனவே அவர்களை விடுதலை செய்வதில் உறுதியாக இருக்கிறோம்.
ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் குடிசைகளை மாற்றி 13 லட்சம் வீடுகள் கட்டிக் கொடுக்க திட்டம் தீட்டப்பட்டு இருந்தது. இதில் 3¾ லட்சம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. வரும் 2022-ம் ஆண்டுக்குள் தமிழகத்தில் 13 லட்சம் வீடுகள் கட்டிக...
தினகரனை சந்தித்து பேசியது உண்மைதான் – துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்
முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஆட்சியில் இருந்து இறக்கிவிட்டு, இருவரும் இணைந்து நல்லாட்சி வழங்கலாம் என்று டிடிவி தினகரனிடம் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாக தங்க தமிழ்ச்செல்வன் சமீபத்தில் கூறி, தமிழக அரசியலில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தினார்.
ஆனால் இந்த தகவலை அமைச்சர்கள் தங்கமணி, முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் உடனடியாக மறுத்தனர். அ.தி.மு.க.வுடன் இணைய தினகரன் 2 மாதத்திற்கு முன் தூதுவிட்டதாகவும், அதை ஏற்காததால் பிரித்தாளும் சூழ்ச்சியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறினர்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், கடந்த ஆண்டு ஜூலை 12-ம் தேதி ஓ.பன்னீர் செல்வம் என்னை சந்தித்தது உண்மைதான் என்றும் அதற்கான வலுவான ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாகவும் கூறினார். மேலும், செப்டம்பர் இறுதி வாரத்தில் டிடிவி தினகரனை சந்திக்க ஓபிஎஸ் நேரம் கேட்டதாகவும், எடப்பாடி த...
அதிமுக ஆலோசனை கூட்டம் மதுரையில் தொடங்கியது
அதிமுக சார்பில் மதுரையில் நடைபெற்று வரும் ஆலோசனை கூட்டத்தில் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர்.
திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி மறைவையடுத்து அவரது திருவாரூர் தொகுதியும், திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக எம்எல்ஏ ஏ.கே. போஸ் காலமானதையடுத்து திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை தொகுதியும் காலியாக உள்ளது.
இதையடுத்து, இந்த இரு தொகுதிகள் உள்பட பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. எனவே, திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன.
இந்நிலையில், அதிமுக செயல் வீரர்கள் கூட்டம் மதுரையில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், மூத்த அமைச்சர்கள், நிர்வாகிக்க உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். தேர்தல் பணிக் குழுக்களை அமைப்...

