ஞாயிற்றுக்கிழமை, மே 12
Shadow

திரைப்படங்கள்

4 ஹீரோயின்களோடு விஜய் ஆண்டனியின் “காளி”

4 ஹீரோயின்களோடு விஜய் ஆண்டனியின் “காளி”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், முன்னோட்டம்
விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன்  ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில் விஜய் ஆண்டனி, அஞ்சலி, சுனைனா நடிப்பில் கிருத்திகா உதயநிதி இயக்கியிருக்கும் படம் 'காளி'. மே 18ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் பத்திரிகையாளர்களுக்கு படத்தின் 20 நிமிட காட்சிகள் பிரத்யேகமாக திரையிட்டு காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து படத்தை பற்றிய சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டனர் படக்குழுவினர். விஜய் ஆண்டனியுடன் 4 படங்களில் வேலை பார்த்திருக்கிறேன். ரொம்பவே பாஸிடிவான மனிதர். எடுத்த காரியத்தில் நம்பிக்கை வைத்து வெற்றி பெறுபவர், அதை நான் அவரிடமிருந்து கற்றுக் கொண்டேன். ரொம்ப ஸ்ட்ராங்கான டீம் இந்த படத்தில் அமைந்தது பெரிய ப்ளஸ் என்றார் கலை இயக்குனர் சக்தி வெங்கட்ராஜ். ஆண்கள் மட்டுமே அளுமை செய்யும் திரையுலகில், பெண்கள் இணைந்து ஆளுமையோடு உருவாக்கி இருக்...
சைனா படத்தின் இசை வெளியீட்டு விழா

சைனா படத்தின் இசை வெளியீட்டு விழா

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
சைனா படத்தின் இசை வெளியீட்டு விழா ! இயக்குநர் ஹர்ஷவர்தனா இந்த படத்தினை  இயக்கியுள்ளார். இப்படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக ரித்து வர்மா நடித்துள்ளார்.வேத் சங்கர் சுகவனம் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு  அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரசன்னா.ஜி.கே படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இதனை ’7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ – டிவைன் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இத்திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா சூர்யன் FM இல் (SURYAN FM ) நடைபெற்றது. ஜூன் மாதம் இத்திரைப்படம் வெளிவர இருக்கிறது. ...
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யாவுடன் இணைகிறார் மோகன்லால்

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யாவுடன் இணைகிறார் மோகன்லால்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சூர்யாவுடன் இணைந்து கேரள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிக்கவுள்ளதாக கே.வி. ஆனந்த் தெரிவித்துள்ளார். தற்போது சூர்யா, செல்வராகவன் இயக்கத்தில் என்ஜிகே என்கிற படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக இயக்குநர் கே.வி. ஆனந்துடன் மீண்டும் இணைய உள்ளார். இந்தப் படத்தில் சூர்யாவுடன் சேர்ந்து மோகன்லால் நடிக்கவுள்ளதாக கே.வி. ஆனந்த்  தெரிவித்துள்ளார். கே.வி.ஆனந்த் இயக்க உள்ள படத்தில் முதலில் சூர்யாவுடன் இணைந்து அமிதாப்பச்சன் நடிக்க இருப்பதாக வதந்திகள் பரவியது. இந்நிலையில் தற்போது மோகன்லால் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் மோகன்லால் இந்த வார தொடக்கத்தில் இயக்குனரை சந்தித்ததாகவும், அதில் ஒரு பகுதியாக நடிக்க ஒப்புக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அயன், மாற்றான் படங்களுக்குப் பிறகு சூர்யா - கே.வி. ஆனந்த் ஆகிய இருவரும் மீண்டும் இணைகிறார்கள். இந்த படத்தின் மூலம் சூர்யா மற்றும் மோகன்லால...
‘காலா’ படத்தில் நீட் தேர்வுக்கு பலியான அனிதா..!

‘காலா’ படத்தில் நீட் தேர்வுக்கு பலியான அனிதா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  அதிக மதிப்பெண் பெற்றும்கூட நீட் தேர்வினால் மருத்துவ படிப்புக்கு செல்ல முடியாமல் போராடி உயிர்விட்ட அனிதாவின் வாழ்க்கை ஏற்கனவே சினிமா படமாக தயாராகி வருகிறது. அனிதா கதாபாத்திரத்தில் ஜுலி நடித்து வருகிறார். ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படத்திலும் அனிதா காட்சி இடம்பெறுகிறது. இந்த படத்தில் வரும் தெருவிளக்கு என்ற பாடலில் இந்த காட்சி வருகிறது. தெருவிளக்கு வெளிச்சத்துல, நாங்க முன்னேறுவோம் என்று தொடங்கும் வரிகளுக்கு பின்னணியில் அனிதா படம் காட்டப்படுகிறது. மும்பை தாராவி பகுதியில் அனிதாவின் சுவரொட்டியை ஒட்டி வைத்து ‘டாக்டர் அனிதா, தமிழர்கள், நீட் தேர்வுக்கு எதிரானவர்கள்’ என்று வாசகத்தை அதில் குறிப்பிட்டு உள்ளனர். மும்பை விழித்தெழு இயக்கம் என்றும் அந்த சுவரொட்டியின் கீழ் எழுதி உள்ளனர். நெல்லையில் இருந்து சென்று தாராவி பகுதியில் தாதாவாக மாறி அங்குள்ள தமிழ் மக்களுக்காக போராடுபவர் பற்றிய படமாக க...
திரைத்துறையில் மட்டுமல்ல..எல்லாத் துறையிலும் பெண்களை படுக்கைக்கு அழைக்கிறார்கள் – காலா ஹீரோயின் பளீச்

திரைத்துறையில் மட்டுமல்ல..எல்லாத் துறையிலும் பெண்களை படுக்கைக்கு அழைக்கிறார்கள் – காலா ஹீரோயின் பளீச்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
திரைத்துறையில் மட்டுமல்ல..எல்லாத் துறையிலும் பெண்களை படுக்கைக்கு அழைக்கிறார்கள் - காலா ஹீரோயின் பளீச் 71 வது கேன்ஸ் திரைப்படவிழாவில் காலா பட  நடிகை  ஹூமா குரேஷி கலந்து கொண்டு அவரது சொந்த  அனுபவங்கள் ,குறித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- "இந்தியாவிலும்  உலகின் மற்ற இடங்களிலும்   பெண்கள்  துன்புறுத்துதலுக்கு எதிராக பேசும் அமைப்பு உருவாகி விட்டது.. பெண் அவளுடைய அறநெறி பற்றி, அவள் அணிந்திருக்கு ஆடைகள்  பற்றியும் அத்தகைய அனைத்து விஷயங்கள் குறித்து  நான் நியாயமற்றது என்று நினைக்கிறேன் " சிறுமிகள் இந்தியாவில் பாலியல் பலாத்காரம் செய்யபடும் சம்பவங்கள் ஒரு பெரிய மாற்றத்திற்கான தேவையை காட்டுகின்றன இதற்கு "சட்டங்கள் மட்டுமே உதவ முடியாது, மாற்றம் மிகவும் ஆழ்ந்ததாக இருக்க வேண்டும். மேலும் தன்னார்வமாகவும் இருக்க வேண்டும்.  "பெண்களை படுக்கைக்கு அழைப்பது திரைத்துறையில் மட்டுமல்ல...
திருடனாக மாறிய விஜய் ஆண்டனி

திருடனாக மாறிய விஜய் ஆண்டனி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
இசையமைப்பாளராக இருந்து ‘நான்’ படம் மூலம் ஹீரோவாக மாறியவர் விஜய் ஆண்டனி. ‘நான்’, ‘சலீம்’, ‘பிச்சைக்காரன்’ என்று வரிசையாக வெற்றிப் படங்களாக கொடுத்ததைத் தொடர்ந்து முன்னணி நடிகர் ஆனார். எதிர்மறை தலைப்புகளையே தொடர்ந்து தனது படங்களுக்கு வைத்தார். இந்தியா - பாகிஸ்தான், எமன், சைத்தான் என்று வரிசை நீண்டது. அவரது நடிப்பில் காளி படம் வருகிற 18-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. அவர் தற்போது ‘திமிரு பிடிச்சவன்’ என்ற தலைப்பிலும் ‘கொலைகாரன்’ என்ற தலைப்பிலும் நடித்துவருகிறார். அடுத்து ‘திருடன்’ என்ற தலைப்பில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை ‘வாய்மை’ படத்தை இயக்கிய அ.செந்தில்குமார் இயக்கவிருக்கிறார். இந்த படம் முழுக்க முழுக்க வெளிநாடுகளில் நடக்கும் கதை. இந்த படத்துக்காக விஜய் ஆண்டனியை ஸ்டைலிஷாக மாற்றவிருக்கிறாராம் செந்தில்குமார்....
கேன்ஸ் திரைப்பட விழாவில் தனுஷ்

கேன்ஸ் திரைப்பட விழாவில் தனுஷ்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தனுஷின் முதல் ஹாலிவுட் படமான `தி எக்ஸ்டார்ட்டினரி ஜார்னி ஆஃப் தி ஃபகிர்' உலகளவில் பிரபலமான கேன்ஸ் படவிழாவில் திரையிடப்பட உள்ளது. அதற்காக நடிகர் தனுஷ் பிரான்ஸ் சென்றுள்ளனர். ஹாலிவுட் இயக்குநர் கென் ஸ்காட் இயக்கியிருக்கும் இந்த படம் ஐக் வார்ட்ரோபின் `தி எக்ஸ்டார்ட்டினரி ஜார்னி ஆஃப் தி ஃபகிர்' என்ற நாவலை தழுவி காமெடி படமாக உருவாகியுள்ளது. இந்த படத்தில் தனுஷுடன் பெர்னைஸ் பெஜோ, பர்காத் அப்தி, அபெல் ஜப்ரி, எரின் மோரியார்டி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். உலக சினிமா சந்தையில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த படத்தின் வெளிநாட்டு உரிமையை பெரும்பாலான நாடுகளில் சோனி பிக்சர்ஸ் கைப்பற்றியிருக்கிறது. வருகிற மே 30-ஆம் தேதி இந்த படம் பிரான்சில் ரிலீசாக இருக்கிறது. அதே வாரத்தில் இந்தியாவிலும் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தின் புதிய போஸ்டர் இன்று வெளிய...
அப்போ விஜய், இப்போ சூர்யா

அப்போ விஜய், இப்போ சூர்யா

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் `என்.ஜி.கே.', படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு சூர்யா அடுத்ததாக கே.வி.ஆனந்த்துடன் இணையவிருக்கிறார். இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியாகிய நிலையில், இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மோகன் லால் கடைசியாக தமிழில் விஜய்யுடன் ஜில்லா படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் ப்ரீ ப்ரொடக்‌ஷன்ஸ் பணிகள் துவங்கி விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், என்.ஜி.கே. படத்தை முடிந்த பிறகு சூர்யா கே.வி.ஆனந்த் படத்தில் இணையவிருக்கிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நியூயார்க், பிரேசில், மும்பை, சென்னை உள்ளிட்ட இடங்களில் நடைபெற இருக்கிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக...
மீண்டும் சால்ட்-அண்ட் பெப்பர் லுக்குக்கு மாறும் அஜித்

மீண்டும் சால்ட்-அண்ட் பெப்பர் லுக்குக்கு மாறும் அஜித்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சமீபகாலமாக அஜித் தனது படங்களில் தனது கறுப்பு-வெள்ளை கலந்த இயற்கையான முடியுடன் நடிக்கவே அதிக ஆர்வம் காட்டி வருகிறார். சிவா இயக்கத்தில் ‘விவேகம்’ படத்தில் வெள்ளை முடியுடன் நடித்தார். இதனால் அவருடைய ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர். அடுத்து, அஜித் நடிக்கும் ‘விஸ்வாசம்’ படத்தையும் சிவா இயக்குகிறார். இதில் கறுப்பு முடியுடன் இளமையாக அஜித் நடிப்பார் என்று கூறப்பட்டது. முன்பு கறுப்பு முடியுடன் அவர் நிற்கும் படங்கள் வெளியாகின. விஸ்வாசம் படத்தில் நடிப்பதற்காகத்தான் டை அடித்து போஸ் கொடுத்தார் என்று கூறப்பட்டது. இப்போது, ஐதராபாத்தில் ‘விஸ்வாசம்’ படப்பிடிப்பு தொடங்கி நடந்து வருகிறது. நயன்தாராவும் இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார். இங்கு படக்குழுவினருடன் அஜித் எடுத்த புகைப்படங்கள் வெளியாகி வருகின்றன. இதில், அஜித் வெள்ளை முடி வெள்ளை தாடியுடன் காணப்படுகிறார். எனவே, அவருடைய ரசிகர்கள் எதிர்பா...
தள்ளிப்போன கோலிசோடா-2 ரிலீஸ்

தள்ளிப்போன கோலிசோடா-2 ரிலீஸ்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், விமர்சனம்
ரஃப் நோட் புரொடக்‌ஷன் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கோலிசோடா-2’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ரிலீஸ் தேதி தள்ளிப்போயுள்ளதாக இயக்குநர் விஜய் மில்டன் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தயாரிப்பாளர் சங்கத்தின் முதற்முயற்சியை கருத்தில் கொண்டு படத்தை அடுத்த மாதம் அதாவது, ஜூன் 14-ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளோம் என்று விஜய் மில்டன் கூறியிருக்கிறார். கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியாகிய ‘கோலிசோடா’ படத்தின் இரண்டாவது பாகமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில், சமுத்திரக்கனி, கிஷோர், சுபிக்ஷா, சரவணன் சுப்பையா, பரத்சீனி, இசக்கி பரத், வினோத், ரேகா, ரோகினி, ஸ்டண்ட் சிவா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இயக்குனர் கவுதம் மேனன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். அடையாளத்துக்கும், அங்கீகாரத்துக்கும் போராடுவதை மையமாக வைத்து உருவா...