வெள்ளிக்கிழமை, மார்ச் 29
Shadow

HOME SLIDER

தமிழ்நாடு முழுவதும் ரூ.520 கோடி மதிப்புள்ள கோவில் நிலங்கள் மீட்பு- அமைச்சர் சேகர்பாபு!

தமிழ்நாடு முழுவதும் ரூ.520 கோடி மதிப்புள்ள கோவில் நிலங்கள் மீட்பு- அமைச்சர் சேகர்பாபு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தமிழ்நாடு முழுவதும் ரூ.520 கோடி மதிப்புள்ள கோவில் நிலங்கள் மீட்பு- அமைச்சர் சேகர்பாபு! தென்காசி மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் கோவில்களில் அமைச்சர் சேகர்பாபு  ஆய்வு செய்தார். அதன்படி ஆழ்வார்குறிச்சி வன்னியப்பர் கோவில், கீழப்பாவூர் திருவாலீஸ்வரர் கோவில், குற்றாலம் ஸ்ரீபராசக்தி மகளிர் கல்லூரி, தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் உள்பட கோவிலில்களில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், கலெக்டர் கோபால சுந்தரராஜ் ஆகியோருடன் அமைச்சர் சேகர்பாபு  ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழக அரசு பொறுப்பேற்ற நாள் முதல் இன்று வரை கிட்டத்தட்ட 50-க்கும் மேற்பட்ட இடங்களில் நேரடியாக சென்று கள ஆய்வு செய்து கோவில்கள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் கோவிலின் சார்பில் நடைபெறுகின்ற அனைத்து மையங்களையும் ஆய்வு செய்திருக்கின்றோம். அந்த அடிப்படையில் குற்றாலத்...
இன்று மாலை மத்திய அமைச்சரவைக் கூட்டம்!

இன்று மாலை மத்திய அமைச்சரவைக் கூட்டம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
இன்று மாலை மத்திய அமைச்சரவைக் கூட்டம்! பிரதமர் மோடி  தலைமையிலான மத்திய பா.ஜ.க. கூட்டணி அரசு தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சி அதிகாரத்துக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவு அடைந்துள்ளது. ஆனால் இந்த 2 ஆண்டுகளில் ஒரு முறைகூட மத்திய மந்திரிசபையில் மாற்றமோ, விரிவாக்கமோ செய்யப்படவில்லை. இந்த நிலையில், மத்திய மந்திரிசபையில் மாற்றங்கள் செய்ய வசதியாக 12 மந்திரிகள் நேற்று ராஜினாமா செய்தனர். 12 மந்திரிகளின் ராஜினாமாக்களை  பிரதமர் மோடியின் பரிந்துரை பேரில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்  ஏற்றுக்கொண்டார். அதைத் தொடர்ந்து மத்திய மந்திரிசபையில் புதிய மந்திரிகளின் பதவி ஏற்பு விழா, ஜனாதிபதி மாளிகையில் நேற்று மாலை நடந்தது. இதில் புதிதாக 43 மந்திரிகள் பதவி ஏற்றனர். அவர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இந்த நிலையில் பிரதமர் மோடி  தலைமையில் இ...
டோக்கியோ ஒலிம்பிக்: இந்திய தடகள அணியில் தமிழக வீரர்கள், வீராங்கனைகள்

டோக்கியோ ஒலிம்பிக்: இந்திய தடகள அணியில் தமிழக வீரர்கள், வீராங்கனைகள்

HOME SLIDER, sports, உலக செய்திகள்
டோக்கியோ ஒலிம்பிக்: இந்திய தடகள அணியில் தமிழக வீரர்கள், வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர். ஜப்பான் டோக்கியோவில் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 5 வரை 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டி நடைபெறுகிறது. இப்போட்டியில் பங்கேற்பதற்காக 26 போ் கொண்ட தடகள அணியை இந்திய தடகள சம்மேளனம் அறிவித்துள்ளது. இதில் தனிநபா் தடகள போட்டிகளில் பங்கேற்கும் 16 போ், ஆண்களுக்கான 4x 400 மீ தொடர் ஓட்டத்தில் பங்கேற்கும் 5 போ், கலப்பு 4x400 மீ தொடர் ஓட்டத்தில் 2 வீரர்கள், 3 வீராங்கனைகள் ஆகியோர் உள்ளனர். காயம் காரணமாக கர்நாடகத்தின் பூவம்மா, கலப்பு 4x400மீ தொடர் ஓட்டத்தில் பங்கேற்கவில்லை. தமிழ்நாட்டைச் சேர்ந்த தனலட்சுமி சேகர், ரேவதி வீரமணி, சுபா வெங்கடேசன் ஆகிய மூன்று வீராங்கனைகளும் கலப்பு 4x400 மீ தொடர் ஓட்டத்துக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்த தடகள வீரர்களான ஆரோக்ய ராஜீவ், நாகநாதன் பாண்டி ஆகிய...
படப்பிடிப்புக்காக வெளிநாடு செல்லும் ‘ஆர்.ஆர்.ஆர்’ படக்குழு!

படப்பிடிப்புக்காக வெளிநாடு செல்லும் ‘ஆர்.ஆர்.ஆர்’ படக்குழு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
படப்பிடிப்புக்காக வெளிநாடு செல்லும் ‘ஆர்.ஆர்.ஆர்’ படக்குழு! இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் தற்போது இரத்தம் ரணம் ரௌத்திரம் (ஆர்.ஆர்.ஆர்) படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் தெலுங்கின் முன்னணி கதாநாயகர்களான ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். டிவிவி தானய்யா தயாரிக்கும் இந்தப் படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இன்னும் 2 பாடல் காட்சிகள் மட்டுமே எஞ்சியுள்ளது. அதில் ஒரு பாடல் காட்சியை வெளிநாட்டில் படமாக்க முடிவு செய்து, அதற்கான இடத்தை தேடி வந்த ராஜமவுலி, இறுதியாக உக்ரைனில் படமாக்க முடிவு செய்துள்ளாராம். இதற்காக ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட் உள்ளிட்ட படக்குழுவினர் விரைவில...
திடீரென கவர்ச்சிக்கு மாறிய ஜகமே தந்திரம் பட நடிகை!

திடீரென கவர்ச்சிக்கு மாறிய ஜகமே தந்திரம் பட நடிகை!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
திடீரென கவர்ச்சிக்கு மாறிய ஜகமே தந்திரம் பட நடிகை! மலையாள நடிகையான ஐஸ்வர்யா லட்சுமி, கடந்த 2019ம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் வெளியான ‘ஆக்‌ஷன்’ படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதையடுத்து தனுஷுக்கு ஜோடியாக ‘ஜகமே தந்திரம்’ படத்தில் நடித்த அவர், தற்போது மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்து வருகிறார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி, அதன் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். வழக்கமாக மாடர்ன் உடையில் போட்டோஷூட் நடத்தும் அவர், அண்மையில், சேலையில் கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தியுள்ளார். அதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதோடு, அதிக லைக்குகளையும் பெற்று வருகிறது...
‘துருவ் விக்ரம் – மாரி செல்வராஜ்’ இணையும் படத்தின் அப்டேட்!

‘துருவ் விக்ரம் – மாரி செல்வராஜ்’ இணையும் படத்தின் அப்டேட்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
‘துருவ் விக்ரம் - மாரி செல்வராஜ்’ இணையும் படத்தின் அப்டேட்! விக்ரமின் மகன் துருவ், ஆதித்ய வர்மா படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானார். தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்காக வெளியான இப்படத்தில், துருவ் விக்ரமின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. இதையடுத்து தற்போது, தனது தந்தையுடன் இணைந்து ‘சியான் 60’ படத்தில் நடித்து வருகிறார் துருவ். கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதையடுத்து நடிகர் துருவ் விக்ரம், மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். கபடி விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தை இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது....
பீஸ்ட் ஷூட்டிங்கின் போது பிக்பாஸ் கவினை பாராட்டிய விஜய்!

பீஸ்ட் ஷூட்டிங்கின் போது பிக்பாஸ் கவினை பாராட்டிய விஜய்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
பீஸ்ட் ஷூட்டிங்கின் போது பிக்பாஸ் கவினை பாராட்டிய விஜய்!~ ‘சரவணன் மீனாட்சி’ என்ற சீரியலில் நடித்து பிரபலமானவர் கவின். இதையடுத்து படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த கவின், ‘நட்புன்னா என்னானு தெரியுமா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து பிக்பாஸ் 3 சீசனில் கலந்து கொண்ட கவின் ஏராளமான ரசிகர்களைப் பெற்ற அவர், தற்போது இயக்குனர் நெல்சனிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார். நெல்சன் இயக்கத்தில் தற்போது பீஸ்ட் படம் உருவாகி வருகிறது. இதில் விஜய் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்திலும் உதவி இயக்குனராக பணியாற்றி வரும் கவின், பீஸ்ட் படப்பிடிப்பின் போது நடந்த சுவாரஸ்ய சம்பவங்களை பகிர்ந்துள்ளார். அதன்படி, பீஸ்ட் படப்பிடிப்பு துவங்கியதில் இருந்து நடிகர் விஜய், செட்டில் இருப்பவர்கள் அனைவரிடமும் இயல்பாக பழகியதாக கூறியுள்ள கவின், மேலும் தனது நடிப்பில் வெளி...
பாடகியாக அறிமுகமான பிக்பாஸ் லாஸ்லியா!

பாடகியாக அறிமுகமான பிக்பாஸ் லாஸ்லியா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
பாடகியாக அறிமுகமான பிக்பாஸ் லாஸ்லியா! இலங்கையை சேர்ந்த லாஸ்லியா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார். அந்நிகழ்ச்சி மூலம் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவானார்கள். அந்நிகழ்ச்சிக்கு பின் அவருக்கு பட வாய்ப்பும் குவிந்து வருகிறது. அந்த வகையில் அவர் கைவசம் ‘பிரெண்ட்ஷிப்’, ‘கூகுள் குட்டப்பன்’ போன்ற படங்கள் உள்ளன. இதில் பிரெண்ட்ஷிப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜான் பால் ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இணைந்து இயக்கி இருக்கும் இப்படத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குக்கு ஜோடியாக நடித்துள்ளார் லாஸ்லியா. இந்நிலையில், இப்படத்தின் மூலம் நடிகை லாஸ்லியா, பாடகியாகவும் அறிமுகமாகி உள்ளார். பிரெண்ட்ஷிப் படத்தில் இடம்பெறும் ‘அடிச்சு பறக்கவிடுமா’ என்கிற குத்துப் பாடலை தேவாவுடன் இணைந்து பாடியுள்ளார் லாஸ்லியா. இந்தப் பாடல் வெளியாகி ரசிகர்களிடை...
ரூ.200 கோடி பட்ஜெட்டில் தயாராகும் பாகுபலி வெப் தொடர் – ஹீரோயின் யார் தெரியுமா!

ரூ.200 கோடி பட்ஜெட்டில் தயாராகும் பாகுபலி வெப் தொடர் – ஹீரோயின் யார் தெரியுமா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
ரூ.200 கோடி பட்ஜெட்டில் தயாராகும் பாகுபலி வெப் தொடர் - ஹீரோயின் யார் தெரியுமா! ராஜமவுலி இயக்கத்தில் 2 பாகங்களாக வெளியான படம் ‘பாகுபலி’. இதில் பிரபாஸ், நாசர், ராணா, அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்து இருந்தனர். சரித்திர கதையம்சம் கொண்ட இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்ததோடு, வசூலிலும் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியது. தற்போது பாகுபலி கதை தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெப் தொடராக தயாராகிறது. பாகுபலியில் ரம்யா கிருஷ்ணன் நடித்த ராஜமாதா சிவகாமிதேவி கதாபாத்திரத்தின் இளம் வயது வாழ்க்கையை மையமாக வைத்து இந்த தொடரை எடுக்கின்றனர். பாகுபலி பட காட்சிகளுக்கு முந்தைய சம்பவங்கள் இந்த தொடரில் இடம்பெற உள்ளன. சுமார் 9 எபிசோடுகளை கொண்ட இந்த வெப் தொடர், ரூ.200 கோடி பட்ஜெட்டில் தயாராக உள்ளதாக கூறப்படுகிறது. இதில் இளம் வயது சிவகாமிதேவி கதாபாத்திரத்தில் நடிக்க முதலில...