உக்ரைனில் சிக்கிய 240 இந்தியர்களுடன் 3-வது விமானம் இந்தியா திரும்பியது
உக்ரைனில் சிக்கியிருந்த 240 இந்தியர்களை மீட்டு, 3வது விமானம் இன்று காலை இந்தியா திரும்பியுள்ளது.
ரொமேனியா தலைநகர் புகாரெஸ்டில் இருந்து 250 இந்தியர்களுடன் 2வது விமானம் இந்தியா திரும்பிய அடுத்த சில மணி நேரங்களில் 3வது விமானமும் இந்தியா வந்துள்ளது.
டெல்லி வந்த 3வது மீட்பு விமானத்தை மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜியோதிராதித்ய சிந்தியா வரவேற்றார்.
உக்ரைன் நாட்டை ரஷ்யா தாக்கி வரும் நிலையில் அங்குள்ள வெளிநாட்டவர்களை மீட்கும் பணியில் அந்தந்த நாடுகளின் தூதரகங்கள் ஈடுபட்டுள்ளன.
இந்தியாவை சேர்ந்த சுமார் 25 ஆயிரம்பேர் அங்கு கல்வி மற்றும் பணி நிமித்தம் காரணமாக உக்ரைனில் தங்கியுள்ளனர்.
அங்கு என்ன வேண்டுமானாலும் ஏற்படக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளதால், உக்ரைனில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள் தங்களது சொந்த நாடுகளுக்கு திரும்பத் தொடங்கியுள்ளனர்.
இதற்கிடையே, பாதுகாப்ப...


