திங்கட்கிழமை, மே 13
Shadow

செய்திகள்

பயன்பாட்டில் இல்லாத 12 ஆயிரம் ஏக்கர் நிலத்தை விற்க ரெயில்வே முடிவு

பயன்பாட்டில் இல்லாத 12 ஆயிரம் ஏக்கர் நிலத்தை விற்க ரெயில்வே முடிவு

HOME SLIDER, NEWS, செய்திகள்
நாடு முழுவதும் வளர்ச்சிப்பணிகளுக்காக பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தை 100 ஆண்டுகளுக்கு முன்பு ரெயில்வே இலாகா கையகப்படுத்தியது. இது தவிர அகல ரெயில் பாதை திட்டத்துக்காகவும் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் பெரும்பாலான மாநிலங்களில் மீட்டர் கேஜ் ரெயில் பாதை அகல ரெயில் பாதைகளாக மாற்றப்பட்டு விட்டன. இந்த பாதைகள் அகற்றப்பட்ட இடங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் அப்படியே வீணாக கிடக்கிறது. இதையடுத்து தன்னிடம் உபரியாக உள்ள 12 ஆயிரத்து 66 ஏக்கர் நிலத்தை மாநில அரசுகளுக்கு விற்பனை செய்ய ரெயில்வே முடிவு செய்துள்ளது. இதுபற்றி ரெயில்வே வாரியம் தமிழ்நாடு, மேற்கு வங்காளம், மராட்டியம், மத்திய பிரதேசம், கர்நாடகா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட 13 மாநிலங்களின் தலைமை செயலாளர்களுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளது. அதில், “உபரியாக இருக்கும் ரெயில்வேக்கு சொந்தமான நிலங்களை மாநில அரசுகள் தேசிய அல்லது மாநில நெடு...
333 கோடி வரதட்சணை கொடுத்து திருமணம் செய்த சவுதி இளவரசர்..!

333 கோடி வரதட்சணை கொடுத்து திருமணம் செய்த சவுதி இளவரசர்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், வீடியோ
சவுதி இளவரசர் சுல்தான் பின் சல்மான், ரூ. 333 கோடி வரதட்சனை கொடுத்து, 25 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சவுதி இளவரசரான 68 வயது சுல்தான் 25 வயதான பெண்ணை மணந்துள்ளார். இதற்காக அவர், 50 மில்லியன் டாலர்கள் வரதட்சணையாக அவர் கொடுத்துள்ளார். https://youtu.be/JBsSx-NKcxU திருமணத்தின் போது 30 சொகுசு கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தவிர, ஒரு சொகுசு பேருந்தில் 30 பெட்டிகளில் பரிசுகள் கொண்டு வரப்பட்டன. இந்த பரிசுகள் மணப்பெண் வீட்டாருக்கு கொடுக்கப்பட்டது. தவிர, வைரங்களும் தரப்பட்டது. மணப்பெண் வெள்ளை நிற ஆடையில் ஜொலிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. ...
பொய் செய்தியோ மார்பிங் படங்களையோ என் பெயரில் வெளியிட்டால் சட்ட நடவடிக்கை எடுப்பேன் – நடிகை நிவேதா பெத்துராஜ்

பொய் செய்தியோ மார்பிங் படங்களையோ என் பெயரில் வெளியிட்டால் சட்ட நடவடிக்கை எடுப்பேன் – நடிகை நிவேதா பெத்துராஜ்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
தமிழ் நாட்டில் பிறந்து , தமிழில் பேசி, தமிழ் படங்களில் நடிக்கும் நடிகைகள் வெகு சிலரே. "ஒரு நாள் கூத்து" படத்தின் மூலம் அறிமுகமாகி தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வரும் நிவேதா பெத்துராஜ் அவர்களில் ஒருவர்.சமீபமாக ஒரு சில ஊடங்கங்களில் வேறு ஒரு நடிகையின் மிக கவர்ச்சிகரமான படங்களை போட்டு, அது நிவேதா பெத்துராஜ் என்று அறிவித்ததை கண்டு மிகவும் வருத்தமடைந்து உள்ளார். " கடந்த சில நாட்களாக ஒரு சில ஊடகங்களில் வேறு ஒரு நடிகையின் புகை படங்களை வெளி இட்டு அது நான் தான் என்று பொய் பரப்புரை செய்து வருகின்றனர். என் மேல் அக்கறை கொண்ட சிலர் தொடர்ந்து இதை பற்றிய கவனத்தை என்னிடம் கொண்டு வந்தனர். இந்த செயலை வெறும் கவன குறைவான செயலாக என்னால் பார்க்க முடியவில்லை. என் பெயரை கெடுக்க வேண்டும் என்றே யாரோ இவ்வாறு செய்கிறார்கள் என்று சந்தேக பட வேண்டி உள்ளது. இத்தகைய நிகழ்வுகள் என்னை மிகவும் காயப்படுத்தி உள்ளது...
தொல்லியல் துறை கட்டுப்பாட்டின் கீழ் திருப்பதி கோயிலை மாற்றும் திட்டம் வாபஸ்: பக்தர்களின் எதிர்ப்பால் பின்வாங்கியது மத்திய அரசு

தொல்லியல் துறை கட்டுப்பாட்டின் கீழ் திருப்பதி கோயிலை மாற்றும் திட்டம் வாபஸ்: பக்தர்களின் எதிர்ப்பால் பின்வாங்கியது மத்திய அரசு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
திருப்பதி ஏழுமலையான் கோயிலை மத்திய தொல்லியல் துறைக்கு மாற்றுவது தொடர்பாக அந்தத் துறை சார்பில் திருப்பதி தேவஸ்தானத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. பக்தர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக இந்த நோட்டீஸ் உடனடியாக வாபஸ் பெறப்பட்டது. திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். சோழர் காலத்தில் தோன்றிய இந்த கோயில் சேரர்கள், பாண்டியர்கள், பல்லவர்கள், விஜய நகர பேரரசர்கள், மஹந்திக்கள், சுல்தான்கள், நவாபுகள், ஆங்கிலேயர்கள், ஜமீன்கள், மிராசுதாரர் கள் அதிகாரத்தின் கீழ் பராமரிக்கப்பட்டது. நாடு சுதந்திரம் அடை யும் முன்பு மதராஸ் மாகாணம் சார்பில் திருப்பதி கோயில் பாராமரிக்கப்பட்டது. பின்னர், 1933- ம் ஆண்டில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தொடங்கப்பட்டு, இன்றுவரை கோயிலை தேவஸ்தானம் பராமரித்து வருகிறது. ஆந்திரா, தமிழகம் பிரிந்தபோது, திருப்பதி ஏழுமலையான் கோயில்...
காதலருடன் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி

காதலருடன் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
இந்தியாவின் நம்பர் 1 பணக்காரரான முகேஷ் அம்பானி-நீதா அம்பானிக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். இதில் ஆகாஷ், இஷாவும் இரட்டையர்கள். 3-வது ஆனந்த், இதில் ஆகாஷ் அம்பானிக்கு தனது பள்ளித்தோழியான ஸ்லோகா மேத்தாவுடன் கடந்த மாதம் நிச்சயதார்த்தம் நடைப்பெற்றது. இவர்களது திருமணம் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் இஷா அம்பானிக்கும் டிசம்பரில் திருமணம் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. கோயிலில் வைத்து ஆனந்த பிரமோல், இஷாவிடம் தனது காதலை வெளிபடுத்தி உள்ளார். இவர்கள் இருவர்ம் நெருங்கிய நண்பர்கள் என்று கூறப்படுகிறது. ஆனந்த் பிரமோல், ரியல் எஸ்டேட் நிறுவனமான Piramal Realty இன் நிறுவனர் ஆவார், Piramal Group இன் நிர்வாக இயக்குனராகவும் இருக்கிறார். இவர்களது காதலுக்கு இரண்டு தரப்பு பெற்றோரும் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இவர்களது திருமணமும் டிசம்பரில் நடக்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக...
டெல்லியில் தினமும் 5 பெண்கள் கற்பழிப்பு அதிர்ச்சி தகவல்

டெல்லியில் தினமும் 5 பெண்கள் கற்பழிப்பு அதிர்ச்சி தகவல்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
டெல்லியில் பெண்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் இந்த சம்பவத்திற்கு பிறகு  பலப்படுத்தப்பட்டன. இருப்பினும் அங்கு கற்பழிப்பு, பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான தாக்குதல்கள் குறைந்தபாடில்லை. இதுதொடர்பாக டெல்லி போலீசார் அதிர்ச்சி தரும் புள்ளிவிவரங்களை வெளியிட்டு உள்ளனர். அதன் விவரம் பின்வருமாறு:– இந்த ஆண்டின் முதல் 3½ மாதங்களில் மட்டும் தினமும் 5–க்கும் மேற்பட்ட பெண்கள் கற்பழிக்கப்பட்டு உள்ளனர். கடந்த ஜனவரி மாதம் 1–ந் தேதி முதல் கடந்த மாதம் 15–ந் தேதி வரை 578 கற்பழிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதே கால கட்டத்தில் கடந்த ஆண்டு 563 கற்பழிப்பு வழக்குள் பதிவாகி இருந்தன. மேலும் இதே கால கட்டத்தில் பெண்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பாக இந்த ஆண்டில் 883 வழக்குகளும், கடந்த ஆண்டில் 944 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன. 2017–ம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக 2 ...
13 மாநிலங்களுக்கு புயல் எச்சரிக்கை கனமழைக்கு  129 பேர் பலி

13 மாநிலங்களுக்கு புயல் எச்சரிக்கை கனமழைக்கு  129 பேர் பலி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
வட மாநிலங்களில் இடி மின்னலுடன்  கடந்த சில தினங்களுக்கு முன்  பலத்த மழை பெய்தது. இந்த கனமழைக்கு  129 பேர் பலியாகி இருந்தனர். இந்த நிலையில், அடுத்த இரண்டு தினங்களுக்கு 13 மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் புயல் எச்சரிக்கை விடுத்துள்ளது. புயல் எச்சரிக்கையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஹரியானாவில் இன்று மற்றும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. கனமழை மற்றும் புயலில் இருந்து மக்கள் தங்களையும் தங்களது உடமைகளையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ள பஞ்சகுலா நிர்வாகம், முன்னெச்சரிக்கையாக இருக்குமாறும் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது. அசாம், மேகாலயா, நாகலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் ஆங்காங்கே சில இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. அதேபோல், உத்தர பிரதேசம், பீகார், மேற்கு வங்காளம், ...
ஜெயலலிதாவின் நினைவு மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டு விழா

ஜெயலலிதாவின் நினைவு மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டு விழா

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி முன்னாள் முதலமைச்சா் ஜெயலலிதா மரணமடைந்தார். அவரது உடல், மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜிஆர். நினைவிட வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்திலேயே ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு கடந்த ஆண்டு ஜுன் மாதம்  ஏற்கனவே அறிவித்தது. இந்த மண்டபம்  கட்டுவதற்காக சுமாா் ரூ.50.80கோடியில் அளவில்  டெண்டா் விடப்பட்டன.  இதைத்தொடா்ந்து இன்று காலையில் மொினாவில் ஜெயலலிதாவின் நினைவு இடத்தில்  மண்டபத்திற்கான  அடிக்கல் நாட்டு விழா தொடங்கியது. நினைவு மண்டபம் கட்டுவதற்கான யாகசாலை பூஜைகள்   காலை 6.30 மணி அளவில் நடைபெற்றது. இதில், முதலமைச்சர் பழனிசாமி,  துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர்  பங்கேற்றனர். அமைச்சகள் கடம்பூர் ராஜூ, காமராஜ், செங்கோட்டையன், வேலுமணி, சண்முகம், செல்லூர் ராஜு,  மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்....
நடைப்பயிற்சியும், நல்ல கொழுப்பும்

நடைப்பயிற்சியும், நல்ல கொழுப்பும்

HOME SLIDER, NEWS, Photos, செய்திகள்
தினமும் நடைப்பயிற்சி செய்தால் நல்ல கொழுப்பு என அழைக்கப்படுகிற ஹெச்.டி.எல். கொலஸ்ட்ரால் அதிகரிப்பது உறுதி. என்றாலும், நடைப்பயிற்சி மட்டுமே போதாது. உணவிலிருந்து நாம் பெறும் கொலஸ்ட்ரால் ரத்தத்தில் கரைவதில்லை, இது புரதத்துடன் இணைந்து ‘கொழுப்புப் புரதமாக‘ மாறி, ரத்தத்தில் பயணம் செய்யும். அப்போது அதன் அளவு சரியாக இருக்க வேண்டும். அதிகரித்தால் ஆபத்து காத்திருக்கும். கொழுப்புப் புரதம் எல்.டி.எல்., ஹெச்.டி.எல்., வி.எல்.டி.எல். என மூன்று வகைப்படும். இவற்றில், எல்.டி.எல்.லும், வி.எல்.டி.எல்.லும் கெட்டவை. இவை இரண்டும் கல்லீரலில் இருந்து கொழுப்பை இதயத்துக்கு எடுத்துச் சென்று, இதயத் தமனிக் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தி, மாரடைப்பை ஏற்படுத்தும். ஆகவே இவற்றைக் ‘கெட்ட கொழுப்பு‘ என்கிறோம். அதே வேளையில் ஹெச்.டி.எல். புரதம் இதயத்துக்கு நன்மை செய்கிறது. இதயத்திலிருந்து கொழுப்பை விடுவித்து, கல்லீரலுக்கு ...
இரத்தக்கொழுப்பை குறைக்கும் கிவி பழம்

இரத்தக்கொழுப்பை குறைக்கும் கிவி பழம்

HOME SLIDER, NEWS, Photos, செய்திகள்
  கிவி பழத்தில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இதனை ஒரு நாளைக்கு ஒன்று சாப்பிட்டு வந்தால் மூச்சுக்கோளாறான ஆஸ்துமா நீங்கும். கிவி மாதிரி வாழைப்பழங்களில் பொட்டாசியம் அதிகம் இருக்கிறது. ஆனால் வாழைப்பழங்களை ஒப்பிடுகையில் கிவி பழத்தில் கலோரியின் அளவு குறைவு. கலோரியின் அளவு குறைவாக இருப்பதால் சோடியத்தின் அளவு குறைகிறது. இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் சோடியத்தின் அளவு குறைவதால் இதய நோய் வராமல் தடுக்கிறது. வைட்டமின் ஈ அதிகமாக இருக்கும் உணவில் கொழுப்பும் அதிகமாக இருக்கும். ஆனால் கிவி பழத்தில் வைட்டமின் ஈ அதிகமாகவும், கொழுப்பு குறைவாகவும் உள்ளது. இதனால் ‘ஆன்டிஆக்ஸிடன்ட்’ அதிகமாவதால் ஆரோக்கியமான இதயத்தையும் தருகிறது. போலிக் அமிலம் கிவி பழத்தில் அதிகமாக, இருப்பதால் கர்பிணிகளுக்கு மிகவும் சிறந்தது. ஏனென்றால் குழந்தைகளுக்குச் செல்லும் நரம்புக்குழலில் ஏற்படும் பிரச்சனைகளை தடுப்பதோடு, க...