வெள்ளிக்கிழமை, ஜூலை 31
Shadow

Tag: தமிழக அரசு

ஆன்லைன் மூலம் ஆவணங்கள் தமிழக பதிவுத்துறை அடுத்த அதிரடி!

ஆன்லைன் மூலம் ஆவணங்கள் தமிழக பதிவுத்துறை அடுத்த அதிரடி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தமிழக பதிவுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- பதிவுத்துறைக்கான ஸ்டார் 2.0 ஆன்லைன் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2018-ம் ஆண்டு பிப்ரவரி 12-ந் தேதி தொடங்கி வைத்தார். அது சிறப்பாக செயல்பட்டு வருகிறது. குறித்த நேரத்தில் வரிசைக்கிரமமாகவும் விரைவாகவும் பாகுபாடற்ற சேவைகளை வெளிப்படையாக பொதுமக்களுக்கு வழங்குவதுதான் அந்தத் திட்டத்தின் நோக்கம். அதற்கு ஏற்றபடி மென்பொருளில், ‘பொதுமக்களே ஆன்லைன் வழி ஆவணங்களை உருவாக்கும் எளிய வழிமுறை’ என்ற வசதி உருவாக்கப்பட்டுள்ளது. “https://tnreginet.gov.in” என்ற இணையதளத்தில் முதலில் பொதுமக்கள் என்ற வகைப்பாட்டில் புதிய உள்நுழைவை (லாக் இன்) ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். பின்பு அதற்குரிய பயனர் பெயர், கடவுச்சொல்லை (யூசர் நேம், பாஸ்வர்டு) உள்ளடு செய்து உள்நுழைவிற்குள் சென்று, பதிவு செய்தல், ஆவணப் பதிவு ஆவணத்தை உரு...
பொது இடத்தில் துப்பினால் அபராதம், தண்டனை – தமிழக அரசு

பொது இடத்தில் துப்பினால் அபராதம், தண்டனை – தமிழக அரசு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    பொது இடத்தில் துப்பினால் அபராதம், தண்டனை - தமிழக அரசு தமிழகத்தில் ஜூன் 30-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அந்த அறிவிப்பை நிறைவேற்றும் வகையில் அதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டது. தலைமை செயலாளர் கே.சண்முகம் வெளியிட்ட அந்த அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- அரசு மற்றும் தனியார் பஸ்கள் நிபந்தனைக்கு உட்பட்டு அனுமதிக்கப்படுகின்றன. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பொது போக்குவரத்து கிடையாது. 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், அதிக சுகவீனமானவர்கள், கர்ப்பிணிகள், 10 வயதுக்கு கீழ்ப்பட்ட குழந்தைகள் ஆகியோர் மருத்துவ காரணங்கள் மற்றும் அவசர தேவைகளுக்காக மட்டும் வீட்டை விட்டு வெளியே வரலாம். ஆரோக்கிய சேது செயலியை பயன்படுத்தி தொற்றுக்கு விலகி கொள்ள வேண்டும். பணியிடங்களில் இந்த செயலியை அனைத்து ஊழிய...
ஜெ., வீடு அரசின் அதிகாரப்பூர்வ முதல்வர் இல்லம் ஆகிறதா?!

ஜெ., வீடு அரசின் அதிகாரப்பூர்வ முதல்வர் இல்லம் ஆகிறதா?!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகைகள்
    ஜெ., வீட்டை ஏன் அதிகாரப்பூர்வ முதல்வர் இல்லம் ஆக்கக்கூடாது? - யோசனை சொன்ன கோர்ட் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான போயஸ் கார்டன் உள்பட சுமார் ரூ.913 கோடி மதிப்பிலான சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகி ஒருவரை நியமிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் அ.தி.மு.க.வை சேர்ந்த புகழேந்தி என்பவர் கடந்தாண்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஜெயலலிதாவின் நெருங்கிய உறவினர்களான ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோரும் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டனர். ஐகோர்ட்டில் அவர்கள் இருவரும் நேரில் ஆஜராகி, ஜெயலலிதாவின் வாரிசுகள் தாங்கள் என்றும் தங்களை சட்டப்பூர்வமான வாரிசுகளாக அறிவிக்க வேண்டும் என்றும் தனியாக மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் என்.கிருபாகரன், அப்துல் குத்தூஸ் ஆகியோர் இன்று தீர்ப்பு வழங்கினர். அப்போது, ஜெயலலிதாவின் சொத்துக்க...
கொரானா தடுப்பு பணிக்கு மக்கள் நிதி அளிக்கவும் – தமிழக அரசு வேண்டுகோள்

கொரானா தடுப்பு பணிக்கு மக்கள் நிதி அளிக்கவும் – தமிழக அரசு வேண்டுகோள்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கொரானா தடுப்பு பணிக்கு பொதுமக்கள் தங்களால் இயன்ற நிதியை அளிக்க முன்வர வேண்டும் என தமிழக அரசு வேண்டுகோள்். முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு மனம் உவந்து பொதுமக்கள் தங்கள் பங்களிப்பை அளிக்க வேண்டும் . பொதுமக்களின் நன்கொடைக்கு வருமான வரி சட்டம் பிரிவு 80 (g)-ன் கீழ் 100 சதவீத வரி விலக்கு உண்டு. பொது நிவாரண தொகையை முதலமைச்சரிடம் மற்றும் அரசு அலுவலர்களிடம் நேரடியாக வழங்க வேண்டாம். முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 10 லட்சத்திற்கும் மேல் உதவி செய்யும் நபர்கள், நிறுவனங்களின் பெயர் பத்திரிகைகளில் வெளியிடப்படும் . இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, தலைமை செயலகம், சென்னை, 600009. சேமிப்பு கணக்கு எண்: 117201000000070, IFSC:IOBA0001172 என்ற கணக்கில் பணம் அளிக்கலாம்....
தமிழகத்தில் வரும் 31ம் தேதி வரை பள்ளி,கல்லூரி,தியேட்டர்கள் என மக்கள் கூடுமிடங்கள்  அனைத்துக்கும் “கொரானா” வால்  விடுமுறை.!

தமிழகத்தில் வரும் 31ம் தேதி வரை பள்ளி,கல்லூரி,தியேட்டர்கள் என மக்கள் கூடுமிடங்கள் அனைத்துக்கும் “கொரானா” வால் விடுமுறை.!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    தமிழகத்தில் வரும் 31ம் தேதி வரை அனைத்தும் விடுமுறை.. *கொரானா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், விளையாட்டு அரங்குகள், திரையரங்குகள், வணிக வளாகங்கள், டாஸ்மாக் பார்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களை மூட தமிழக அரசு உத்தரவு.. பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழக தேர்வுகள் மட்டும் திட்டமிட்டபடி நடக்கும்.....
கொரானா பரிசோதனை தனியார் ஆஸ்பதிரிகள் செய்யக்கூடாது – தமிழக அரசு உத்தரவு

கொரானா பரிசோதனை தனியார் ஆஸ்பதிரிகள் செய்யக்கூடாது – தமிழக அரசு உத்தரவு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    கொரானா பரிசோதனை தனியார் ஆஸ்பதிரிகள் செய்யக்கூடாது - தமிழக அரசு உத்தரவு உலகம் முழுதும் அச்சுறுத்தல் ஏற்படுத்தி உள்ள கொரானா வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு முயற்சிகள் செய்யப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக தொற்றுநோய் சட்டத்தின் கீழ் கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துவது தொடர்பாக, தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜே‌‌ஷ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:- அனைத்து மருத்துவமனைகளும் கொரோனா வைரஸ் தொடர்பாக பரிசோதிக்க மற்றும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பிரத்தியேக வார்டு அல்லது அறை வைத்து பராமரிக்க வேண்டும். பரிசோதனையின்போது அந்த நபர் கடந்த 28 நாட்களுக்குள் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டிருந்த பகுதிக்கு சென்றிருந்தாலோ, வெளிநாட்டுக்கு சென்று, கொரோனா தொற்றுக்கான அறிகுறி இல்லாமல் இருந்தால் 14 நாட்...
கொரானா பீதி தமிழக எல்லையோர 16 மாவட்டங்களில் தியேட்டர்கள், ஷாப்பிங் மால்களை மார்ச் 31வரை மூட வேண்டும் – முதல்வர் உத்தரவு

கொரானா பீதி தமிழக எல்லையோர 16 மாவட்டங்களில் தியேட்டர்கள், ஷாப்பிங் மால்களை மார்ச் 31வரை மூட வேண்டும் – முதல்வர் உத்தரவு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    கொரானா பீதி எல்லையோர 16 மாவட்டங்களில் தியேட்டர்கள், ஷாப்பிங் மால்களை மார்ச் 31வரை மூட வேண்டும் - முதல்வர் உத்தரவு மார்ச் 31 ம் தேதி வரை 16 மாவட்டங்களில் வணிக வளாகம், திரையரங்குகளை மூட முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா வைரஸ் நோய் உலகளாவிய பொது சுகாதார அவசர நிலையாக அறிவிக்கப்பட்ட நிலையில், உலக சுகாதார நிறுவனம் இதனை தற்போது உலகளாவிய நோய்த் தொற்றாக அறிவித்துள்ளது. அம்மாவின் அரசு எடுத்த தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளின் காரணமாக, தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய் பாதிப்பு இல்லையென்ற போதிலும், இந்த நோய் அண்டை மாநிலங்களிலிருந்து பரவாமல் தடுக்க கீழ்க்கண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். வெளிந...
புதிதாக கட்டப்பட்ட கால்வாய் இடிந்து விழுந்ததால் அமைச்சர் நிகழ்ச்சியில் வாய்க்காலில் விழுந்த மதுரை அதிமுகவினர்!

புதிதாக கட்டப்பட்ட கால்வாய் இடிந்து விழுந்ததால் அமைச்சர் நிகழ்ச்சியில் வாய்க்காலில் விழுந்த மதுரை அதிமுகவினர்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், வீடியோ
    புதிதாக கட்டப்பட்ட கால்வாய் இடிந்து விழுந்ததால் அமைச்சர் நிகழ்ச்சியில் வாய்க்காலில் விழுந்த மதுரை அதிமுகவினர்! மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜு கலந்துகொண்ட நிகழ்ச்சியின் போது புதிதாக கட்டப்பட்டுள்ள கால்வாய் இடிந்து விழுந்ததில் அதிமுக கட்சியினர் வாய்க்காலில் விழுந்தனர். மதுரை மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரை நகர் முழுவதும் ஆங்காங்கே ரவுண்டானா அமைக்கப்பட்டு அங்கு மதுரையின் தொன்மையையும் வீரத்தையும் காட்டக்கூடிய சிலைகள் வைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மதுரை செல்லூர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ரவுண்டானாவில் கபடி வீரர்களின் விளையாட்டு சிலைகள் வைக்கப்பட உள்ளது . இதன் தொடக்க விழா கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் இன்று நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ ...
கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கலெக்டர்களுக்கு அரசு கடிதம்!

கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கலெக்டர்களுக்கு அரசு கடிதம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கலெக்டர்களுக்கு அரசு கடிதம்! இந்தியாவில் கொரானா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வைரஸை தடுப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், சிறப்பு சிகிச்சைப் பிரிவுகள் ஆகியவற்றை ஏற்படுத்த மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில தலைமைச் செயலர்களுக்கும் கடிதம் அனுப்பியிருந்தது. அதனைதொடர்ந்து தமிழ்நாடு தலைமைச் செயலர் சண்முகம், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். ஆய்வு கூட்டங்கள் அரசு மருத்துவர்களும் தனியார் மருத்துவர்களும் கொரானா வைரைஸ் தொடர்பாக ஆய்வு கூட்டங்களை மேற்கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.கொரனா வைரஸ் தீவிரம், அதை தடுக்கு வழிமுறைகள், அவசர ஊர்திகள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களிலும் கவனம் செலுத்த வேண்டும். தனி வார்டுகள் மாவட்ட தலைநகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகள்...
உள்துறை அமைச்சர் அமீத்ஷாவுடன் தமிழக அமைச்சர்கள் திடீர் சந்திப்பு!

உள்துறை அமைச்சர் அமீத்ஷாவுடன் தமிழக அமைச்சர்கள் திடீர் சந்திப்பு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  உள்துறை அமைச்சர் அமீத்ஷாவுடன் தமிழக அமைச்சர்கள் திடீர் சந்திப்பு! சிஏஏக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வெடித்து வருகிறது.. குறிப்பாக சமீபத்தில் வெடித்த டெல்லி வன்முறை இந்திய மக்களை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது. அதே போல் தமிழகத்திலும் சிறுபான்மையினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டில்லி சென்ற தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி ஆகியோர் சந்தித்து சிஏஏ, என்பிஆர் குறித்து ஆலோசனை நடத்தி இருக்கிறார்கள். இதற்கு காரணம் சமீபத்தில் சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமிய அமைப்பு நடத்திய ஆர்ப்பாட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு போராட்டமாக மாறியதால் போலீசார் தடியடி நடத்தினர். அதை கண்டித்து தமிழகத்தின் பல பகுதிகளில் நள்ளிரவில் இஸ்லாமியர்கள் போராட்டத்தை தொடங்கியதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடதக்கது....