வியாழக்கிழமை, மே 16
Shadow

Tag: முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி

பிப்ரவரி 14ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல்!

பிப்ரவரி 14ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    பிப்ரவரி 14ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல்! தமிழக சட்டப்பேரவை செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 14ம் தேதி தொடங்குகிறது. அன்றைய தினமே தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. தமிழக அரசின் 2020-21ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை துணை முதலமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் காலை 10 மணிக்கு தாக்கல் செய்கிறார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது....
அண்ணா நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் உட்பட தலைவர்கள் மரியாதை!

அண்ணா நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் உட்பட தலைவர்கள் மரியாதை!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    அண்ணா நினைவிடத்தில் முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உட்பட தலைவர்கள் மரியாதை! பேரறிஞரின் 51வது நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அண்ணா நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், மெரினாவில் உள்ள பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அதிமுக மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள்  உள்பட பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு அண்ணாவிற்கு மரியாதை செலுத்தினர். முன்னதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திமுக நிர்வாகிகளோடு வந்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்....
ஜெ.,சமாதிக்கு திடீரென சென்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி..!

ஜெ.,சமாதிக்கு திடீரென சென்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  ஜெ.,சமாதிக்கு திடீரென சென்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி..! சென்னை மெரினாவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் கட்டப்பட்டு வருகிறது. எம்.ஜி.ஆர். நினைவிடம் அருகே பீனிக்ஸ் பறவை வடிவில் ரூ.50.80 கோடியில் அந்த நினைவு மண்டபம் கட்டப்படுகிறது அதற்கான கட்டுமான பணிகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆய்வு செய்தார். முன்னதாக, ஜெயலலிதா நினைவிடம் சென்ற பழனிசாமி அங்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் நினைவக பணிகளை பார்வையிட்டார். முதல்வரின் இந்த திடீர் விஜயம் அதிமுகவினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது....
கோதாவரி – கிருஷ்ணா நதிகளை இணைக்கும் திட்ட அறிவிப்பு வெளியிட்ட மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நன்றி

கோதாவரி – கிருஷ்ணா நதிகளை இணைக்கும் திட்ட அறிவிப்பு வெளியிட்ட மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நன்றி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கோதாவரி - கிருஷ்ணா நதிகளை இணைப்பது தான் தமிழகத்திற்காக நாங்கள் செய்யும் முதல் வேலை என்று நிதின் கட்கரி கூறியதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, தற்போது மீண்டும் பாஜக தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இடம்பெற்ற பிறகு, கோதாவரி - கிருஷ்ணா நதிகளை இணைத்து தமிழகத்தின் தண்ணீர் பிரச்னையை சரிசெய்வதே எங்களது முதல் பணி என்று பாஜகவின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். கூறியதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று நன்றி தெரிவித்துள்ளார். https://twitter.com/EPSTamilNadu/status/1132509605089619969?s=19 இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "நிதின் கட்கரிக்கு மனமார்ந்த நன்றிகள். தற்போதைய சூழ்நிலையில், கோதாவரி - கிருஷ்ணா இணைப்பு என்பது மிகவும் முக்கியமானது. இந்த நதிகள் இணைப்பு தமிழகத்தின் தண்ணீர் பிரச்னையை...
பள்ளி மாணவிகளுக்கு ”கராத்தே”! தமிழக அரசு அறிவிப்பு. “எழுமின்” படக்குழுவினர் மகிழ்ச்சி.!!

பள்ளி மாணவிகளுக்கு ”கராத்தே”! தமிழக அரசு அறிவிப்பு. “எழுமின்” படக்குழுவினர் மகிழ்ச்சி.!!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  பள்ளி மாணவர்கள் தற்காப்புக்கலையை கற்றுக்கொள்ள வேண்டும், என்ற கருத்தை பரப்பும் நோக்கில் எடுக்கப்பட்ட திரைப்படம், எழுமின்.  வையம் மீடியாஸ் சார்பில் வி.பி.விஜி தயாரித்து இயக்கிய எழுமின் திரைப்படம் இந்த வாரம் வெளியானது. வெளியான நாளில் இருந்து அனைவராலும் கொண்டாடப்பட்டிருக்கும் இந்த படத்தில் ஜனங்களின் கலைஞன் விவேக், தேவயானி உட்பட பலர் நடித்துள்ளனர். மேலும், உண்மையான தற்காப்புக்கலை பயின்று சாம்பியன்களாகத் திகழும் 6 குழந்தைகள் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த குழந்தைகள் 6 பேரும் நடிப்பதில் மட்டுமல்ல அடிப்பதிலும் அசத்தி இருக்கிறார்கள். எழுமின் படத்தின் க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சியை பார்த்து அனைவரும் வியந்து பாராட்டியதே அதற்கு சாட்சி. இன்றைய சூழலில் தற்காப்புக்கலை எத்தனை அவசியமானது என்பதை அனைவருக்கும் உணர்த்தும் நோக்கில் எடுக்கப்பட்ட எங்களின் எழுமின் திரைப்படம் வெளியாகி ...