வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

Uncategorized

அம்மா பேச்சை தட்டாத சிம்புவுக்கு ஆகஸ்ட்டில் கல்யாணம்..!

அம்மா பேச்சை தட்டாத சிம்புவுக்கு ஆகஸ்ட்டில் கல்யாணம்..!

Uncategorized
  சிம்புவுக்கு ஆகஸ்ட்டில் கல்யாணம்..! லிட்டில் சூப்பர் ஸ்டார், எஸ்.டி.ஆர், சிலம்பரசன், சிம்பு என பல பெயர்களை தனக்கே உரிய பாணியில் தமிழ் சினிமாவில் ஒரு இடத்தில் அமர்ந்திருப்பவர் சிம்பு. நயன்தாராவுடன் காதல், ஹன்சிகாவுடன் காதல் என ஹாட் பீட்டை எகிற வைத்து அப்புறம் அந்த காதல் முறிந்து போய் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி பரபரப்பை கிளப்புவார் சிம்பு. அதோடு ஏதாவது பேசி அல்லது பாடி சர்ச்சையில் சிக்குவார். சில வாரங்களுக்கு முன் சிம்புவின் தம்பி குறளரசனுக்கு திருமணம் நடை பெற்றது. அப்போது பலரும் சிம்புவுக்கு எப்போது திருமணம் என்றே கேட்டனர். டி.ஆரும் விரைவில் சொல்கிறோம் என்றார். இப்போது சிம்புவுக்கு பெண் பார்த்து முடிவு செய்திருக்கிறார்கள். சிம்புவின் வாழ்க்கை துணைவியாக வரப்போகிறவர் திரைத்துறை சேர்ந்தவர் இல்லை. அம்மா உஷாவின் உறவுக்கார பெண். அம்மா பார்த்த பெண்ணைத்தான் சிம்ப...
தோற்றாலும் என் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பேன் – பிரகாஷ்ராஜ்

தோற்றாலும் என் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பேன் – பிரகாஷ்ராஜ்

Uncategorized
    தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் வில்லன், குணசித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் பிரகாஷ்ராஜ். அரசியல் கட்சி எதிலும் இல்லாவிட்டாலும் கடந்த சில ஆண்டுகளாக பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து வந்தார். மோடியின் கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையான பணமதிப்பிழப்பையும், பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொல்லப்பட்ட சம்பவத்தில் இந்துத்துவா அமைப்புகளை தொடர்புபடுத்தியும் கடுமையாக விமர்சித்தார். அடுத்த கட்டமாக கர்நாடகாவில் கடந்த ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. வுக்கு எதிராக தீவிர தேர்தல் பிரசாரம் செய்தார். நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேச்சையாக களம் இறங்கினார். வீதிவீதியாக தீவிர பிரசாரமும் செய்தார். ஆனாலும் சினிமா நட்சத்திர அந்தஸ்து அவருக்கு கைகொடுக்கவில்லை. தேர்தலில் தோல்வி அடைந்துள்ளார். இதுகுறித்து பிரகாஷ்ராஜ் டுவிட்டரில், ...
எதிர்க்கட்சிகள் காங்கிரசுடன் கை கோர்க்காமல் சிதறியதால்தான் பாஜக வெற்றி பெற்றது – திருமாவளவன்

எதிர்க்கட்சிகள் காங்கிரசுடன் கை கோர்க்காமல் சிதறியதால்தான் பாஜக வெற்றி பெற்றது – திருமாவளவன்

Uncategorized
  சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா மாநிலங்களில் ஒரு இடத்தில் கூட பாஜக வெற்றி பெற முடியவில்லை. ஆனால் பாஜக அல்லாத எதிர்க்கட்சிகள் ஓரணியில் இல்லாமல் தனியாக கூட்டணி போட்டதால் பாஜக 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் தொடர்கிறது. தமிழகத்தில் சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் நின்று நீண்ட இழுபறிக்கு பின் வெற்றி பெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் சென்னையில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்தார். பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசும்போது: "தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியோடு மாநில கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டிதிட்டது போல் மற்ற மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியோடு எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்திருந்தால் பாஜக தோற்றுப் போயிருக்கும் . எதிர்க்கட்சிகள் அனைத்தும் சிதறி இருந்தது பாஜகவுக்கு வாய்ப்பாக அமைந்து விட்டது" என்ற...
தர்பார் ரஜினிக்கு வில்லனாக பாலிவுட் பிரபலம்..!

தர்பார் ரஜினிக்கு வில்லனாக பாலிவுட் பிரபலம்..!

Uncategorized
  தர்பார் ரஜினிக்கு வில்லனாக பாலிவுட் பிரபலம்..! A.R. முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் லைகா நிறுவனம் மெகா பட்ஜெட்டில் தயாரிக்கும் ‘தர்பார்’ படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 3 மாதங்கள் அங்கு படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு உள்ளனர். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. அடுத்தகட்ட படப்பிடிப்பு வருகிற 29-ந் தேதி தொடங்க உள்ளது. இந்த படத்தில் ரஜினிகாந்த் மும்பையை கலக்கும் ரவுடிகளை சுட்டுத்தள்ளும் என்கவுண்ட்டர் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக கூறப்படுகிறது. பட டைட்டில் வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே டெரர் போலீஸ் கெட்டப்பில் ரஜினிகாந்த் போஸ் இருந்தது குறிப்பிடத்தக்கது. ஒரு ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மற்றொரு ரஜினிக்கு ஜோடி இருப்பது போல தெரியவில்லை. இந்த ரஜினியின் மகளாகதான் நிவேதா தாமஸ் நடிக்கிறார். தர்பார் படத்தில...
சனிக்கிழமை மாலை அறிவாலயத்தில் வெற்றி பெற்ற எம்.பி க்கள் கூட்டம் ஸ்டாலின் தலைமையில்…

சனிக்கிழமை மாலை அறிவாலயத்தில் வெற்றி பெற்ற எம்.பி க்கள் கூட்டம் ஸ்டாலின் தலைமையில்…

Uncategorized
  சனிக்கிழமை மாலை அறிவாலயத்தில் வெற்றி பெற்ற எம்.பி க்கள் கூட்டம் ஸ்டாலின் தலைமையில்... தமிழ்நாட்டில் நடந்த தேர்தலில் 38 பாராளுமன்ற தொகுதிகளில் 37 இடங்களில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெற்றது. பதிவான வாக்குகளில் 2 கோடியே 15 லட்சத்து 96 ஆயிரத்து 481 பதிவான வாக்குகளில் 51.5 சதவீத வாக்குகளை திமுக கூட்டணி பெற்றது. மு.க.ஸ்டாலின் தலைமையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களின் ஆலோசனை கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நாளை சனிக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெறும் என திமுக வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கனிமொழி எம்.பி.உட்பட வெற்றி பெற்ற சில எம்.பி.க்கள் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்....
தோற்றாலும் சாதித்த கமல்… அரசியல் கட்சிகள் கண்ணை உறுத்தும் ம.நீ.ம. வாக்கு வங்கி…!

தோற்றாலும் சாதித்த கமல்… அரசியல் கட்சிகள் கண்ணை உறுத்தும் ம.நீ.ம. வாக்கு வங்கி…!

Uncategorized
      தோற்றாலும் சாதித்த கமல்... அரசியல் கட்சிகள் கண்ணை உறுத்தும் ம.நீ.ம. வாக்கு வங்கி...! தமிழ்நாட்டில் அ.தி.மு.க. கூட்டணி, தி.மு.க. கூட்டணி, தினகரனின் அமமுக, சீமானின் நாம் தமிழர் ஆகியோருக்கு இடையில் புதிய வரவாக பாராளுமன்ற தேர்தலில் களம்கண்ட கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் என்ன சாதித்தார்கள். நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம், பெரம்பலூர் ஆகிய தொகுதிகளை தவிர்த்து 36 தொகுதிகளில் போட்டியிட்ட கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி கணிசமான வாக்குளை பெற்றுள்ளது முதல் சாதனை. பல இடங்களில் அக்கட்சியின் வேட்பாளர்கள் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளனர். இது இரண்டாவது சாதனை. ஒட்டுமொத்தமாக 36 தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள் 15 லட்சத்து 32 ஆயிரத்து 992 வாக்குகளை பெற்றனர். ஒரு அரசியல் கட்சி ஆரம்பித்த சில...

நமது பாரம்பரியத்தின் பெருமை பேசும் ‘கள்ளன்’ 

Uncategorized
  நமது பாரம்பரியத்தின் பெருமை பேசும் ‘கள்ளன்’  உணர்வுபூர்வமான படைப்பாக உருவாகி வரும் ‘கள்ளன்’ வேட்டையும், வாழ்க்கையும், காடுமாக ஒரு யதார்த்த படம் யதார்த்த சினிமாவிற்கு எப்பொழுதுமே ரசிகர்களின் மத்தியில் பெரிய வரவேற்பு இருக்கும். அப்படியானதொரு யதார்த்த படமாக உருவாகி வருகிறது எழுத்தாளர் சந்திராவின் ‘கள்ளன்’.  கதாபாத்திரத்துடன் தன்னை முழுமையாகப் பொருத்திக் கொண்டு சினிமாவை சுவாசிக்கும் ஒரு புகழ்பெற்ற ஆளுமை நடிக்கும்போது, அந்த படைப்பு மேலும் புகழ் பெறுகிறது. அத்தகைய குணங்களைக் கொண்டிருக்கும் கரு பழனியப்பன், எழுத்தாளர்  சந்திரா இயக்கும்  'கள்ளன்' படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இயக்குநர்கள் அமீர் மற்றும் ராம் ஆகியோரிடம் சினிமா கற்ற இயக்குனர் சந்திரா  ‘கள்ளன்’ பற்றிக் கூறும்போது, "கதை மற்றும் கதாபாத்திர வடிவமைப்பை எழுதி முடித்த போதே இந்த கதையின் மீது பெரிய நம்பிக்கை ஏற்பட்டது...

Karu Pazhaniappan becomes a perfect ‘Kallan’ now

Uncategorized
Author-driven roles have always carried a charm of specialty despites the fact who plays it. However, it becomes much more celebrated, when a renowned personality, who has breathed films through heart and soul get into the skin of such characters. Well, filmmaker Karu Pazhaniappan stands out to be an epitome of such paradigm through ‘Kallan’, directed by journalist turned filmmaker Chandra, who makes her directorial debut through this film. Shedding lights on the film, Chandra says, “Ever since, the story was crafted and branched out into the scripting and sketching characterizations, I strongly felt Karu Pazhaniappan sir would befittingly suit the role. Moreover, the positive vibes enlarged as he instantly gave a nod after listening to my script. He didn’t stop merely agreein...
லண்டன் விருதுவிழா ரெட்கார்ப்பெட்டில் நடிகை எமி ஜாக்சன் நிறைமாத கர்ப்பிணியாக போஸ் கொடுத்த புகைப்படம் வைரல்

லண்டன் விருதுவிழா ரெட்கார்ப்பெட்டில் நடிகை எமி ஜாக்சன் நிறைமாத கர்ப்பிணியாக போஸ் கொடுத்த புகைப்படம் வைரல்

Uncategorized
லண்டன் விருதுவிழா ரெட்கார்ப்பெட்டில் நடிகை எமி ஜாக்சன் நிறைமாத கர்ப்பிணியாக போஸ் கொடுத்த புகைப்படம் வைரல் ஆகி வருகிறது. பிரிட்டீஷ் நடிகையான எமி ஜாக்சன் தமிழில் மதராசப்பட்டினம் மூலம் அறிமுகமானவர். அதன் பின் சங்கரின் ஐ, எந்திரன் 2.0 போன்ற பல தமிழ், ஹிந்தி படங்களில் நடித்தவர். தற்போது லண்டனில் வசிக்கும் எமி, லண்டனில் கோடீஸ்வரர் ஜியார்ஜைக் காதலித்து வந்தார். தான் கர்ப்பமாக இருப்பதாகவும் குழந்தை பிறந்தபிறகுதான் திருமணம் என்று அதிரிடியாக அறிவித்த இந்த ஜோடி, இந்த மாதம்தான் நிச்சயதார்த்தம் செய்துகொண்டது. தனது தாய்மையை நினைத்துப் பூரித்துப்போயிருக்கும் எமி, கருவுற்ற நாளில் இருந்து அவ்வபோது புகைப்படங்களைப் பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் ஜிம்மில் ஒர்க் அவட் செய்யும் புகைப்படம் வெளியிட்டு திட்டும் வாங்கிக்கொண்டார். இவர் கர்ப்பமாகி 5 மாதம் முடியப்போகும் நிலையில் செப்டம்பரில் ப...
ஜி.வி.பிரகாஷின் வித்தியாசமான குப்பத்து ராஜா

ஜி.வி.பிரகாஷின் வித்தியாசமான குப்பத்து ராஜா

CINI NEWS, HOME SLIDER, Uncategorized, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களால் 'டான்ஸ் மாஸ்டர்  ' என்றே அழைக்கப்படுகிறார் பாபா பாஸ்கர். நவநாகரீக நடன அமைப்புகளை கொடுக்க அவர் பெரும் முயற்சிகள் எடுத்தாலும், உள்ளூர் விஷயங்களை கலந்து கொடுக்கவும் தவறியதில்லை. அதனால் தான் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடித்த நடன இயக்குனராகவும் இருக்கிறார். பல கொண்டாடப்படும் வெற்றி பாடல்களுக்கு நடனம் அமைத்த பாபா பாஸ்கர், குப்பத்து ராஜா படத்தின் மூலம் இயக்குனராகி இருக்கிறார். சமீபத்தில் வெளியான குப்பத்து ராஜா டிரெய்லர் 'லோக்கல்' பின்னணியை கொண்டிருக்கிறது என்று கூறப்படுகிறது, இது குறித்து பாபா பாஸ்கர் கூறும்போது, "உண்மையில் நான் 'லோக்கல்' என்ற வார்த்தையை ஏற்றுக் கொள்ளவில்லை, மாறாக அதை 'நேட்டிவிட்டி' என்று தான் அழைப்பேன். நம்மை சுற்றியுள்ள மக்கள் கிராமங்கள் மற்றும் அண்டை மாநிலங்களின் நேட்டிவிட்டியை பார்த்து வியக்கிறார்கள். சேரிகள் என்பவை உ...