Sunday, March 29
Shadow

Tag: கொரானா எச்சரிக்கை

கொரானா எதிரொலி இசை நிகழ்ச்சிகளை ரத்து செய்த A.R. ரஹ்மான்!

கொரானா எதிரொலி இசை நிகழ்ச்சிகளை ரத்து செய்த A.R. ரஹ்மான்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
    கொடூர அரக்கனாக பல லட்சம் மக்களை பாதித்து, பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்து வரும் கொரானா வைரஸ் உலகம் முழுதும் தீவிரமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் அதன் தாக்கம் மெல்ல மெல்ல அதன் தீவிரத்தை அதிகரித்து வருகிறது. இதன் பரவலை தடுக்க நாடு முழுதும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். திரைப்பிரபலங்கள் பலரும் கொரானா விழிப்புணர்வு பதிவுகளை வீடியோ வடிவில் வெளியிட்டு வருகிறார்கள். திரைத்துறை முற்றிலும் முடங்கி உள்ளது. இந்த சூழலில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மே, ஜூன் மாதங்களில் திட்டமிட்ட தனது வெளிநாட்டு இசை நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்துள்ளார். இதுகுறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் “மே, ஜூன் மாதங்களில் வட அமெரிக்காவில் நடைபெற இருந்த தனது இசை நிகழ்ச்சிகள் அனைத்தையும் அடுத்த வருடத்துக்கு தள்ளிவைத்
கொரானா பாதிப்பால் அடுத்த 3 மாதங்களுக்கு வங்கிகளில் வாங்கிய கடனை கட்டுவதில் விலக்கு – ஆர்.பி.ஐ அறிவிப்பு

கொரானா பாதிப்பால் அடுத்த 3 மாதங்களுக்கு வங்கிகளில் வாங்கிய கடனை கட்டுவதில் விலக்கு – ஆர்.பி.ஐ அறிவிப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    கொரானா பாதிப்பால் அடுத்த 3 மாதங்களுக்கு வங்கிகளில் வாங்கிய கடனை கட்டுவதில் விலக்கு - ஆர்.பி.ஐ அறிவிப்பு நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கவும், கட்டுப்படுத்தவும் 21 நாள் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவின் காரணமாக பொதுமக்கள் தொடங்கி கூலித் தொழிலாளர்கள், தனியார் துறை ஊழியர்கள் என பல தரப்பினரும் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர். அனைத்து தொழில் துறைகளும் முடங்கி இருக்கின்றன. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால், மத்திய மாநில அரசுகள் பல்வேறு நிதி சலுகைகளை அளித்து வருகின்றன. மாத தொடக்கம் நெருங்கி வரும் சூழலில் வங்கி கடன் தவணைகள் மக்களை பெரிதும் அச்சப்படுத்தியது. அதோடு வங்கி கடன் தவணையில் ஏதாவது சலுகைகள் அறிவிக்க வேண்டும் என பலதரப்பிலும் கோரிக்கைகள் எழுந்தது. இந்நிலையில், செய்தியாளர்களுக்கு இன்று பேட்டி அளித
மலேசிய அரண்மனையில் 7 பேருக்கு கொரானா பாதிப்பு… மன்னர், ராணி தனிமைபடுத்தப்பட்டனர்!

மலேசிய அரண்மனையில் 7 பேருக்கு கொரானா பாதிப்பு… மன்னர், ராணி தனிமைபடுத்தப்பட்டனர்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    கொரானா வைரஸ் தாக்கம் என்பது உலகம் முழுதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிரை பறித்துள்ளது. சாமானிய மக்கள் தொடங்கி இங்கிலாந்து இளவரசர் வரை கொரானா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். ஏழை பணக்காரன் என்றில்லாமல் உலக மக்களை ரவுண்டு கட்டி அடிக்கும் கொரானா தாக்குதலில் சிக்கிய நாடுகளில் மலேசியாவும் ஒன்று. இங்கு இப்போது வரை 2,031 பேர் வைரஸ் கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளனர். 23 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அங்குள்ள அரண்மனை ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது சமீபத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மலேசிய அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில் , அரண்மனையைச் சேர்ந்த ஊழியர்கள் 7 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு  கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது, அவர்களுக்கு எப்படி வைரஸ் தொற்று ஏற்பட்டது என சுக
உஷார்… இதே வேகத்தில் போனால் மே மாசத்தில் கொரானா தாக்கம் 10 லட்சத்தை தாண்டுமாம்!

உஷார்… இதே வேகத்தில் போனால் மே மாசத்தில் கொரானா தாக்கம் 10 லட்சத்தை தாண்டுமாம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  உலகம் முழுதும் பெரும் அச்சத்தையும், நாளுக்கு நாள் ஆயிரக்கணக்கான மக்களின் உயிரை குடித்து வரும் கொரானா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் தற்போது சுமார் 700 பேர் இந்த வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி இருக்கின்றனர். இந்தநிலையில் கடந்த 16-ந்தேதி வரை இந்தியாவில் வைரஸ் பரவலின் வேகம் தொடர்பான விவரங்களை வைத்து சர்வதேச விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் முடிவில், ‘இந்தியாவில் வைரஸ் தொற்றின் வேகம் இப்போது இருக்கும் இதே வேகத்தில் சென்றால், மே மாத இடைப்பகுதிக்குள் இந்தியாவில் 1 முதல் 13 லட்சம் வரையிலான நபர்கள் கொரோனாவால் பாதிக்க வாய்ப்பு உள்ளது’ என கடும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதை தடுக்க சமூக விலகல் மிகமிக அவசியம் என்றும் எச்சரிக்கை செய்து இருக்கிறார்கள்.
கொரானாவின் தீவிரத்தை உணர்ந்து வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் – முதல்வர் பழனிச்சாமி வேண்டுகோள்

கொரானாவின் தீவிரத்தை உணர்ந்து வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் – முதல்வர் பழனிச்சாமி வேண்டுகோள்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
கொரானா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசியது: தமிழக முதலமைச்சராக இல்லாமல் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பேசுகிறேன்* *பொறுப்பான குடிமக்களாக இருந்து நம்மையும் சமுதாயத்தையும் பாதுகாக்க உறுதி ஏற்போம்* *அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கும் என்பதால் மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை* *சாதி மத இன வேறுபாடுகளைக் கடந்து கரோனாவை விரட்ட உறுதியேற்போம்* *விழித்திரு , விலகி இரு , வீட்டிலேயே இரு* *21நாள் ஊரடங்கு என்பது விடுமுறை அல்ல , உங்கள் குடும்பத்தை காக்கும் அரசின் உத்தரவு* *அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே சென்றால் சமூக விலகலை கடைபிடிக்கவேண்டும்* *கரோனாவின் தீவிரத்தை உணர்ந்து வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம்* *கரோனா பரவுவதை தடுக்க தமிழக அரசு போர்க்கால நடவடிக்கைகள் எடுத்து வருகிறது* *தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிﹷ*
தனிமைபடுத்தபட்டவர்கள் வெளியில் சுற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை

தனிமைபடுத்தபட்டவர்கள் வெளியில் சுற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    தனிமைபடுத்தபட்டவர்கள் வெளியில் சுற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை வெளிநாடு சென்று திரும்பியவர்கள் கண்டிப்பாக தனிமையில் இருக்க வேண்டும்... மீறினால் கடும் நடவடிக்கை - அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை கொரானா பாதிப்பு மிக வேகமாக பரவி வருகிறது. தயவு செய்து அரசு சொல்லும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுங்கள். குறிப்பாக சமீபத்தில் வெளிநாடு சென்று திரும்பியவ்ர்கள் தயவு செய்து உங்கள் பயண விவரங்களை தாமாக முன்வந்து சொல்லுங்கள். கண்டிப்பாக வெளிநாடு சென்று திரும்பியவர்கள் கண்டிப்பாக வெளியே செல்லக்கூடாது. ஏற்கனவே அரசு உத்தரவு பிறப்பித்த நிலையில் அதை அலட்சியம் செய்தால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். உத்தரவுகளை மீறுகிறவர்களை இனியும் அரசு வேடிக்கை பார்க்காது. நீண்ட காலமாக மருந்து எடுப்பவர்களுக்கு அவர்களுக்கு தேவைபடும் ம