சனிக்கிழமை, ஜூன் 13
Shadow

Tag: கொரானா நிவாரண உதவி

வந்தாரை வாழ வைக்கும் சென்னையில் கொரானா இல்லாத இடத்தை தேட வேண்டியுள்ளது – சூரி ஆதங்கம்

வந்தாரை வாழ வைக்கும் சென்னையில் கொரானா இல்லாத இடத்தை தேட வேண்டியுள்ளது – சூரி ஆதங்கம்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  வந்தாரை வாழ வைக்கும் சென்னையில் கொரானா இல்லாத இடத்தை தேட வேண்டியுள்ளது - வேலம்மாள் நிவாரண உதவி நிகழ்ச்சியில் சூரி ஆதங்கம் நகைச்சுவை நடிகர் சூரி அவர்கள் வேலம்மாள் கல்வி வளாகத்தில் நிவாரண பொருட்களை வழங்கினார். "வேலம்மாள் நெக்ஸஸ் கல்விக் குழுமம்" மற்றும் "மாற்றம் பவுண்டேஷன்" மூலம் இணைந்து சினிமாத்துறை நண்பர்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும், திருநங்கையர்களுக்கும், நடிகர் சூரி அவர்கள் முகப்பேர் கிழக்கில் அமைந்துள்ள வேலம்மாள் பள்ளி வளாகத்தில் நிவாரண பொருட்களை வழங்கினார்.அப்போது வேலம்மாள் நெக்ஸஸ் கல்விக் குழுமத்தின் மனிதாபிமான செயலை அவர் பாராட்டினார். நடிகர் சூரி பேசுகையில், "எனது அக்கா, தங்கைகளான திருநங்கையர்களுக்கும், எனது அண்ணன் தம்பிகளான மாற்று திறனாளிகளுக்கும் எனது வணக்கங்கள். எல்லோரும் நல்லா இருக்கீங்கன்னு நம்புறேன். இந்த நேரத்தில் உங்கள் அனைவரையும் பார்த்ததில் என...
தந்தையின் நினைவு நாளில் நலிந்த கலைஞர்களுக்கு ரூ.25 லட்சம் பண உதவி – ஐசரி கணேஷ் வழங்கினார்

தந்தையின் நினைவு நாளில் நலிந்த கலைஞர்களுக்கு ரூ.25 லட்சம் பண உதவி – ஐசரி கணேஷ் வழங்கினார்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    தமிழக முன்னாள் துணை அமைச்சர்  மறைந்த ஐசரிவேலன் அவர்களின் 33ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று. தன் தந்தையின் நினைவு தினத்தையொட்டி ஆண்டுதோறும் மே 14ஆம் தேதி அன்று வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் வேந்தரும் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் இன் தயாரிப்பாளருமான டாக்டர் ஐசரி K. கணேஷ் அவர்கள், ஆயிரக்கணக்கான நலிந்த நாடகநடிகர்களை ஒன்று சேர்த்து அவர்களுக்கு அறுசுவை உணவும் புத்தாடைகளும் வழங்குவது வழக்கம். இவ்வாண்டு COVID 19 பெரும் தொற்றின் காரணமாக பல நாடக நடிகர்கள் வாழ்வாதாரத்திற்கு போராடுவதால் இவ்வாண்டு, ரூபாய் 25 இலட்சத்தினை அவரவர் வங்கிக் கணக்கிற்கு 1000 ரூபாய் வீதம் 2500 கலைஞர்களுக்கு நேரடியாக செலுத்தியுள்ளார் டாக்டர் ஐசரி கே. கணேஷ். சென்ற மாதம் நடிகர் சங்கத்தின் நலிந்த நாடக நடிகர்களுக்காக ரூபாய் 10 லட்சத்தை நன்கொடையாக அவர் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.  ...
விளம்பர பரபரப்பு இல்லாமல் கொரானா நிவாரண உதவி செய்யும் பாடகி சின்மயி!

விளம்பர பரபரப்பு இல்லாமல் கொரானா நிவாரண உதவி செய்யும் பாடகி சின்மயி!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
    பாதிக்கப்பட்ட மக்களுக்கு விளம்பர பரபரப்பு இல்லாமல் நிவாரண உதவி செய்யும் பிரபல பாடகி சின்மயி! கொரானா கொடூர உயிர்க்கொல்லி வைரஸ் காரணமாக உலகமே முடங்கிப் போய் இயல்பு வாழ்க்கை முற்றிலும் அழிந்துள்ளது. இந்தியாவிலும் ஊரடங்கு காரணமாக வேலைவாய்ப்பு இழந்து தினக்கூலிகள், வீடுகளில் வேலை செய்யும் ஹவுஸ் கீப்பிங் பணியாளர்கள் என பல தரப்பட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் பிரபலங்கள் பலரும் நிதி உதவி பொருள் உதவி அளித்து வருகிறார்கள். பிரபல டப்பிங் கலைஞரும், பாடகியுமான சின்மயி சத்தமில்லாமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை அளித்து வருகிறார். இதற்கான நிதியை, பொருட்களை திரட்டுவதற்காக தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அதன்படி நிதி உதவி, நிவாரண பொருட்களை வழங்குகிறவர்களுக்கு ஸ்பெஷல் பாடலை பாடி ...
2ம் கட்டமாக ரேஷன்கார்டுக்கு ரூ.ஆயிரம் வழங்க தமிழக அரசு ஆலோசனை

2ம் கட்டமாக ரேஷன்கார்டுக்கு ரூ.ஆயிரம் வழங்க தமிழக அரசு ஆலோசனை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    ரேஷன் கார்டுக்கு 2ம் கட்டமாக தலா ரூ.ஆயிரம் வழங்க முதல்வர் ஆலோசனை - அமைச்சர் தகவல்! அமைச்சர் கருப்பண்ணன் செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது: தமிழகத்தில் கொரானா தொற்று பரவலை தடுக்க அரசு சார்பில் முழு வீச்சில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் காரணமாக நிலைமை இப்போது கட்டுக்குள் உள்ளது. அரசின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஊரடங்கு காரணமாக ஏழை மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக தமிழக அரசு சார்பில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு அனைத்து ரேஷன் கடைகள் மூலமாக மாத தொடக்கத்தில் தலா ரூ. 1000 நிதி உதவி மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. இதுவரை 97.5 சதவீதம் மக்களுக்கு இந்த நிவாரண உதவித் தொகை மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்ட...
நாட்டு மக்கள் அனைவருக்கும் தலா 7,500 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் – காங்.,காரிய கமிட்டியில் தீர்மானம்

நாட்டு மக்கள் அனைவருக்கும் தலா 7,500 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் – காங்.,காரிய கமிட்டியில் தீர்மானம்

HOME SLIDER, NEWS, செய்திகள்
    நாட்டு மக்கள் அனைவருக்கும் தலா 7,500 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் - காங்.,காரிய கமிட்டியில் தீர்மானம் காங்கிரஸ் கட்சி சார்பாக டில்லியில் இன்று நடந்த காரியக் கமிட்டிக் கூட்டத்தில் இந்தியாவில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் தலா 7500 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கொரானா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக இன்று காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் வீடியோ கான்பரன்ஸிங் மூலமாக நடைபெற்றது. அதில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காரிய கமிட்டி உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ’மத்திய மாநில அரசுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு மிகவும் அவசியமானது. கொரானாவை எந்த அளவுக்கு கட்டுப்படுத்துகிறோம் என்பதில்தான் ஊரடங்கின் வெற்றி உள்ளது’ எனக் கூறியுள்ளார். ...
கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் வடபழனி ஆட்டோ டிரைவர்களுக்கு கொரானா நிவாரண உதவிகள்!

கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் வடபழனி ஆட்டோ டிரைவர்களுக்கு கொரானா நிவாரண உதவிகள்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் வழபழனி ஆட்டோ டிரைவர்களுக்கு கொரானா நிவாரண உதவிகள்! கொரானா வைரஸ் பாதிப்பின் காரணமாக மக்கள் அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர் ...இந்த நேரத்தில் கலப்பை மக்கள் இயக்கத்தின் தலைவர் PT செல்வகுமார் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார் . .குறிப்பாக மொழி பேச தெரியாமல் உதவி பெற முடியாமல் தவித்த கேளம்பாக்கம் பர்மா அகதிகளுக்கும் , தெலுங்கு மொழி பேசும் கட்டிட தொழிலாளர்களும் 250 மூட்டை அரிசி பைகளையும் மளிகை சாமான்களையும் வழங்கி அந்த மக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தி மிக பெரிய தன்னம்பிக்கையை ஏற்படுத்தினார்கள் . நெல்லை மாவட்டத்தில் ஏழை எளிய மக்களுக்கும் 100 மூட்டை அரிசிகள் கலப்பை மக்கள் இயக்கத்தின் சார்பாக வழங்கப்பட்டது . இப்போது வடபழனியில் சாலிகிராமம் சுற்றுவட்டார ஆட்டோ டிரைவர்களுக்கு கலப்பை மக்கள் இயக்கத்தின் தலைவர் ...
ரேஷன் கார்டுக்கு 5 ஆயிரம், உயிரிழந்தால் 1கோடி வழங்க வேண்டும் திமுக கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் தீர்மானம்!

ரேஷன் கார்டுக்கு 5 ஆயிரம், உயிரிழந்தால் 1கோடி வழங்க வேண்டும் திமுக கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் தீர்மானம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    கொரானா வைரஸ் பரவலை தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் ஏற்பட்டுள்ள சூழல் குறித்து விவாதிப்பதற்காக அனைத்து கட்சி கூட்டத்துக்கு திமுக அழைப்பு விடுத்தது. இந்த கூட்டத்துக்கு போலீஸ் அனுமதி மறுத்தது. மேலும் காணொளி காட்சி மூலம் நடத்திக் கொள்ளலாம் என அறிவித்தது. இதையடுத்து கொரானா வைரஸ் தொடர்பாக மத்திய - மாநில அரசுகளின் அணுகுமுறை குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி மூலம் கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. கொரானா மற்றும் ஊரடங்கால் பரிதவிக்கும் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் மற்றும் நிவாரண உதவிகள் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச்செயலார் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், கே.பாலகிருஷ்ணன், கி.வீரமணி உள்ளிட்ட தலைவர்கள் இதில் பங்கேற்றன...
தமிழ் புத்தாண்டில் மீண்டும் கொரானா உதவி அறிவிக்கிறார் லாரன்ஸ்!

தமிழ் புத்தாண்டில் மீண்டும் கொரானா உதவி அறிவிக்கிறார் லாரன்ஸ்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    தமிழ் புத்தாண்டில் மீண்டும் கொரானா உதவி அறிவிக்க லாரன்ஸ் திட்டம்! கொரானா பரவல் காரணமாக முடங்கிப் போய் உள்ள தமிழ் திரைத்துறைக்கு கோலிவுட் பிரபலங்கள் பலரும் உதவி செய்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் லாரன்ஸ் 3 கோடி ரூபாய் நிதி உதவி அளித்தார். அதோடு, இன்னும் பல உதவிகள் செய்யப் போவதாகவும் அதை மாலை 5 மணிக்கு அறிவிப்பதாக கூறியிருந்தார். ஆனால் நேற்று மாலை 5 மணிக்கு உதவி குறித்த அறிவிப்பு எதையும் பதிவிடவில்லை. அதற்கு பதில் "அவரது ஆடிட்டர் மற்றும் நண்பர்கள் ஆலோசனைக்கு பின் முடிவெடுக்க 2 நாட்கள் கால அவகாசம் கேட்டதால் வரும் புத்தாண்டில் தனது அடுத்த கட்ட நலதிட்ட உதவிகள் குறித்து அறிவிக்கப் போவதாக குறிப்பிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் இந்த கொரானா ஊரடங்கு காலத்தில் அதிக நிதி உதவி செய்த ஒரே நடிகர் லாரன்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு அடுத்த கட்டமாக மீண்டும் உதவி...
ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்திருக்கும் மக்களுக்கு 5 ஆயிரம் நிவாரண நிதி கொடுங்கள் – முதல்வருக்கு ஸ்டாலின் கடிதம்

ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்திருக்கும் மக்களுக்கு 5 ஆயிரம் நிவாரண நிதி கொடுங்கள் – முதல்வருக்கு ஸ்டாலின் கடிதம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்திருக்கும் மக்களுக்கு 5 ஆயிரம் நிவாரண நிதி கொடுங்கள் - முதல்வருக்கு ஸ்டாலின் கடிதம் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் எழுதி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:- நாடு முழுவதும் இப்போது நடைமுறையில் உள்ள 21 நாள் ஊரடங்கு 18 நாட்களைக் கடந்துள்ளது. கொரானா நோய்த் தொற்று இந்திய அளவிலும், தமிழகத்திலும் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் இன்னும் வரவில்லை. பாதிப்புக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருவதும் துயர மளிக்கிறது. இந்நிலையில் மக்களின் பாதுகாப்பு மற்றும் நலன்கருதி, ஒரு சில கருத்துகளை தங்கள் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன். தமிழ்நாடு இரண்டாவது நிலையில் இருந்து மூன்றாவது நிலைக்குச் சென்றுவிடுமோ என்ற அய்யப்பாட்டையும் ஆழ்ந்த கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. அதனை எதிர்கொள்ளத் தேவை...
தன் பிறந்த நாளில் 250 குடும்பங்களுக்கு கொரானா நிவாரண பொருட்களை வழங்கிய மயிலாடுதுறை ரஜினி ரசிகர்!

தன் பிறந்த நாளில் 250 குடும்பங்களுக்கு கொரானா நிவாரண பொருட்களை வழங்கிய மயிலாடுதுறை ரஜினி ரசிகர்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    தன் பிறந்த நாளில் 250 குடும்பங்களுக்கு கொரானா நிவாரண பொருட்களை வழங்கிய மயிலாடுதுறை ரஜினி ரசிகர்! மயிலாடுதுறை கூறை நாடு எடத்தெரு சேர்ந்த ரஜினி மன்ற நிர்வாகியான செந்தில் தனது பிறந்த நாளான இன்று மயிலாடுதுறை கூறை நாடு சுற்றுவட்டார மக்களுக்கு கொரானா நிவாரண பொருட்களை வீடு வீடாக சென்று வழங்கினார்கள். ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர் டி.எல்.ராஜேஸ்வரன் ஆலோசனையின் பேரில் நகர செயலாளர் பவுன் முருகானந்தம் முன்னிலையில் 250 குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய், காய்கறிகள் என வீட்டுக்குத் தேவையான அத்தியாவசிய நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் மன்றத்தை சேர்ந்த விஜயகுமார், அந்தோணிசாமி, செந்தில், மணிக்கன்னண், ராஜா, பக்ருதின், நவீன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் நிர்வாகி ராஜன் நன்றி கூறினார். பிறந்த நாளில் நிவாரண உதவிகள் வழங்கி...