புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

Tag: சீனா

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில்  நிலநடுக்கம்!

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் நிலநடுக்கம்!

HOME SLIDER, NEWS, World News, உலக செய்திகள், செய்திகள்
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பீஜிங், தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள யான் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக சீன நிலநடுக்க மையம் தெரித்தது. பெய்ஜிங் நேரப்படி நேற்று மாலை 5 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆகப் பதிவாகி உள்ளது. 17 கிமீ ஆழம் கொண்ட இந்த நிலநடுக்கம் 30.37 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 102.94 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையில் கண்காணிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அடுத்த 3 நிமிடங்களுக்குப் பிறகு, யானிலும் 4.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சீனாவின் அடுத்தடுத்த ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கங்களில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்ததுடன் வீடுகளும் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் மற்றும் அரசு ஊடகங்கள் தகவல் தெரிவித்த...
எல்லைப்பிரச்சினையில் இந்தியாவுடனான பேச்சு ஆக்கப்பூர்வமானது- சீனா கருத்து!

எல்லைப்பிரச்சினையில் இந்தியாவுடனான பேச்சு ஆக்கப்பூர்வமானது- சீனா கருத்து!

HOME SLIDER, NEWS, World News, உலக செய்திகள், செய்திகள்
சீன தலைநகர் பீஜிங்கில் ராணுவ அமைச்சக செய்தி தொடர்பாளர் உ கியான் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், “எல்லையில் அசல் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சீன தரப்பில் இருந்து இந்தியா கடுமையான சூழ்நிலையை சந்தித்து வருகிறது என இந்தோ-பசிபிக் விவகாரங்களுக்கான அமெரிக்க துணை பாதுகாப்பு மந்திரி ஏலி ராட்னர் கூறி இருக்கிறாரே?” என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சீன ராணுவ அமைச்சக செய்தி தொடர்பாளர் உ கியான் பதில் அளிக்கையில், “எல்லை பிரச்சினையை பேச்சுவார்த்தை, ஆலோசனை மூலம் சரியாக கையாள்வது என்று சீனாவும், இந்தியாவும் ஒப்புக்கொண்டுள்ளன. 3-ம் தரப்பினரின் தலையீட்டை உறுதியாக எதிர்க்கின்றன” என குறிப்பிட்டார். மேலும், “கடந்த 11-ந் தேதி இரு தரப்பினரும் நடத்திய 15-வது சுற்று பேச்சுவார்த்தை நேர்மறையாகவும், ஆக்கப்பூர்வமாகவும் அமைந்தது. எஞ்சி உள்ள பிரச்சினைகளில் தீர்வு காண்பது, அமைதி மற்றும் வளர்ச்சியை மேம்படுத்த ...
சீனாவில் 5.8 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம்!

சீனாவில் 5.8 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
சீனாவில் 5.8 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம்! சீன நாட்டில் வடமேற்கே அமைந்துள்ள குயிங்காய் மாகாணத்தில் டெலிங்கா நகரில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்த நில நடுக்கம் ரிக்டரில் 5.8 ஆக பதிவாகியுள்ளதாக சீன நிலநடுக்க நெட்வொர்க் மையம் தெரிவித்து உள்ளது. இந்நிலநடுக்கம் 8 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. நில நடுக்கத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. கடந்த 12-ம் தேதியும் குயிங்காய் மாகாணத்தில் மென்யுவான் கவுன்டி பகுதியில் ரிக்டரில் 5.2 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.  ஒரே மாதத்தில் குயிங்காய் மாகாணத்தில் 2-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது....
சீனாவில் கட்டுப்பாடு அதிகரிப்பு- மக்கள் உணவு கிடைக்காமல் அவதி!

சீனாவில் கட்டுப்பாடு அதிகரிப்பு- மக்கள் உணவு கிடைக்காமல் அவதி!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
சீனாவில் கட்டுப்பாடு அதிகரிப்பு- மக்கள் உணவு கிடைக்காமல் அவதி! உலகை அச்சுறுத்தும் கொரோனா முதல் முறையாக சீனாவில் உகான் நகரில் கண்டறியப்பட்டது. அதன்பிறகு உலகம் முழுவதும் இந்த நோய் வேகமாக பரவி பலரை காவு வாங்கியது. தற்போது உருமாறிய கொரோனா வைரசான ஒமைக்ரான் பொதுமக்களை மீண்டும் பயமுறுத்தி வருகிறது. சீனாவில் கடந்த 20 மாதங்களில் இல்லாத அளவு கொரோனா பாதிப்பு தற்போது இருந்து வருகிறது. இதனால் சீனாவில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. சீனாவின் ஷான்சி மாகாணத்தின் தலைநகரான சியான் உள்பட பல நகரங்களில் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 3 நாட்களுக்கு ஒருமுறை வீட்டுக்கு ஒருவர் வெளியே வந்து அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடப்பதால்...
சுதந்திரதின உரையில் சீனாவின் பெயரைக் கூட சொல்லாமல் ஏன் தவிர்க்கிறார் மோடி என காங்கிரஸ் கேள்வி

சுதந்திரதின உரையில் சீனாவின் பெயரைக் கூட சொல்லாமல் ஏன் தவிர்க்கிறார் மோடி என காங்கிரஸ் கேள்வி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
சுதந்திரதின உரையில் சீனாவின் பெயரைக் கூட சொல்லாமல் ஏன் தவிர்க்கிறார் மோடி என காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது.   சுதந்திர தினத்தையொட்டி, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று மூவர்ண கொடி ஏற்றி, நாட்டு மக்களுக்கு உரை ஆற்றினார். பல்வேறு விஷயங்கள் பற்றி பேசிய அவர், எல்லை மோதல்கள் பற்றி குறிப்பிட தவறவில்லை. இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், “இரு நாடுகளின் எல்லைகளில் நமது படை வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். நமது இறையாண்மைக்கு சவால் விடுக்க முயன்றவர்களுக்கு, நமது படைவீரர்கள் தகுந்த பதிலடி கொடுத்தனர்” என கூறினார். எல்லையில் வாலாட்டும் சீனாவையும், பாகிஸ்தானையும் சாடும் விதத்தில் இந்த கருத்தினை வெளியிட்ட பிரதமர் மோடி, அந்த நாடுகளின் பெயர்களை குறிப்பிடாததை காங்கிரஸ் கட்சி சாடி உள்ளது. டெல்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின கொடி ஏற்றும் விழாவில் கல...
இதிலும் டூப்ளிகேட்… கொரானா பாதிப்பை கண்டுபிடிக்கும் கருவிகள் அனுப்பியதில் சீனாவின் மோசடி – அதிர்ச்சியில் ஸ்பெயின், செக் குடியரசு

இதிலும் டூப்ளிகேட்… கொரானா பாதிப்பை கண்டுபிடிக்கும் கருவிகள் அனுப்பியதில் சீனாவின் மோசடி – அதிர்ச்சியில் ஸ்பெயின், செக் குடியரசு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    கொரானா பாதிப்பை கண்டுபிடிக்கும் கருவிகள் அனுப்பியதில் சீனாவின் மோசடி - அதிர்ச்சியில் ஸ்பெயின், செக் குடியரசு உலகம் முழுவதும் பல லட்சம் மக்களை பாதித்து, பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்த கொரானா வைரஸ் பிறப்பிடம் சீனா. அங்குள்ள ஹூஹான் மாகாணத்தில் தான் இந்த கொடூர உயிர்க்கொல்லி வைரஸ் உருவாகி இன்று உலகம் முழுதும் பரவி உலக மக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது. உலகத்தின் பல நாடுகளின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் தடை பட்டு உள்ளது. சாதாரண சாமானியன் முதல் இங்கிலாந்து இளவரசர் சார்லசு, பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சன் என அந்தஸ்து பார்க்காமல் தாக்கி உள்ளது. இந்த வைரஸ் தாக்கத்தை கண்டறிய ஸ்பெயின், செக் குடியரசு நாடுகள் கடந்த மாத துவக்கத்தில் சீனாவிடம் இருந்து பல பில்லியன் மதிப்பில் கொரானா வைரஸ் பாதிப்பை கண்டறியும் கருவிகளை வாங்கியது. அப்படி பல பில்லியன் மதிப்பில் வாங...
கொரோனா வைரஸ் பீதி – சீனாவில் இருந்து 2வது கட்டமாக சிறப்பு விமானம் மூலம் டெல்லி வந்த இந்தியர்கள்!

கொரோனா வைரஸ் பீதி – சீனாவில் இருந்து 2வது கட்டமாக சிறப்பு விமானம் மூலம் டெல்லி வந்த இந்தியர்கள்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    கொரோனா வைரஸ் பீதி - சீனாவில் இருந்து 2வது கட்டமாக சிறப்பு விமானம் மூலம் டெல்லி வந்த 323 இந்தியர்கள்! சீனாவின் வுகான் நகரில் இருந்து பரவிய கொரோனா வைரசினால் அந்நாட்டில் இதுவரை 304 பேர் உயிரிழந்துள்ளனர். 14,000 நபர்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தியா, இந்தோனேசியா, அமெரிக்கா, பிரான்ஸ் உள்பட பல நாடுகளில் இந்த வைரஸ் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சர்வதேச சுகாதார அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.  உலக நாடுகள் பலவும் சீனாவில் உள்ள தங்களது குடிமக்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்தி வருகின்றன.   இதற்கிடையே, சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகம் உள்ள வுகான் நகரில் உள்ள இந்தியர்களை மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது. இதுகுறித்து சீன அதிகாரிகளுடன் இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள் பேச்ச...
சீன மொழி பேசப் போகும் அஜீத்தின் நேர் கொண்ட பார்வை..!

சீன மொழி பேசப் போகும் அஜீத்தின் நேர் கொண்ட பார்வை..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  சீன மொழி பேசப் போகும் அஜீத்தின் நேர் கொண்ட பார்வை..! அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை சீனாவில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்காக சீன மொழி டப்பிங் செய்யும் வேலைகளில் படக்குழு மும்முரமாக இறங்கியுள்ளது. தமிழ், இந்தியில் அஜித்தின் 'நேர் கொண்ட பார்வை' படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. ஆனால் சீனாவில் நவம்பர் அல்லது டிசம்பரில் படம் ரிலீஸ் ஆகும் என தெரிகிறது. ஏற்கனவே போனி கபூர் தயாரிப்பில் ஸ்ரீதேவி நடித்த மாம் படம் சீனாவில் ரிலீஸ் ஆகி வசூல் மட்டுமே சுமார் 100 கோடியை தாண்டியது குறிப்பிடத்தக்கது. அதனால் அதே நிறுவன தயாரிப்பை சீனாவில் வெளியிட சிக்கல் எதும் இருக்காது. அஜீத் படம் சீனாவில் ரிலீஸ் ஆக உள்ளது அவர் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது....