சனிக்கிழமை, ஜூன் 13
Shadow

Tag: சென்னை மாநகராட்சி

சென்னை மாநகராட்சியின் முதல் பெண் மேயராக  பதவி ஏற்றார் பிரியா!

சென்னை மாநகராட்சியின் முதல் பெண் மேயராக பதவி ஏற்றார் பிரியா!

HOME SLIDER, NEWS, செய்திகள், தமிழக அரசியல்
360 ஆண்டுகாலம் பழமை வாய்ந்த சென்னை மாநகராட்சியில் இதுவரை 46 மேயர்கள் பதவி வகித்துள்ளனர். ஆங்கிலேயர் கால மேயர்களை தொடர்ந்து தமிழர்கள் மேயராக பதவி வகித்த சிறப்பும் உள்ளது. சென்னை மேயராக பதவி ஏற்கக்கூடியவர்களுக்கு பல்வேறு சிறப்புகள் வழங்கப்படுகின்றன. சென்னை மாநகராட்சியில் பட்டியலின பெண் மேயராக முதன் முதலாக பிரியா பதவி ஏற்றுள்ளார். மேயராக தேர்வு செய்யப்பட்ட அவரை மாநகராட்சி கமி‌ஷனர் ககன்தீப்சிங் பேடி மேயரின் சிம்மாசனத்திற்கு அழைத்து வந்து அமர வைத்தார். மேயருக்கான அங்கியை வழங்கினார். அதன்பின்னர் செங்கோல் வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து மேயர் அணியக்கூடிய 105 பவுன் தங்க சங்கிலியை, மேயர் பிரியாவுக்கு கமி‌ஷனர் அணிவித்தார். சென்னை மேயராக பணியாற்றக்கூடிய மேயர்களுக்கு தங்க சங்கிலி அணிவது வழக்கம். கடந்த 6 ஆண்டுகளாக மேயர் தலைமையில் உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால் அந்த தங்க சங்கிலி வங்கியில் ...
உள்ளாட்சி தேர்தலில் 153 வார்டுகளை கைப்பற்றியது தி.மு.க.!

உள்ளாட்சி தேர்தலில் 153 வார்டுகளை கைப்பற்றியது தி.மு.க.!

HOME SLIDER, NEWS, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. தற்போதைய நிலையில் ஏறக்குறைய எல்லா வார்டுகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் தி.மு.க. தனியாக 153 வார்டுகளில் வெற்றி பெற்றது. அ.தி.மு.க. 15 இடங்களை கைப்பற்றியது. தி.மு.க. கூட்டணி கட்சியான காங்கிரஸ் 13 இடங்களில் வெற்றி பெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  4 இடங்களையும், சி.பி.ஐ., பா.ஜனதா தலா ஒரு இடங்களிலும் வெற்றி பெற்றன. விடுதலை சிறுத்தைகள் 4 இடங்களிலும், ம.தி.மு.க. 2 இடங்களிலும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலா ஒரு இடங்களிலும், சுயேட்சை 5 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன....
உள்ளாட்சி தேர்தல்- தேசிய கட்சிகளுக்கு தண்ணீர் காட்டும் மாநில கட்சிகள்!

உள்ளாட்சி தேர்தல்- தேசிய கட்சிகளுக்கு தண்ணீர் காட்டும் மாநில கட்சிகள்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
மிக நீண்ட பாரம்பரியம் மிக்க தேசிய கட்சியான காங்கிரசுக்கும், பலம் வாய்ந்த ஆளும் கட்சியாக இருக்கும் பா.ஜனதாவுக்கும் தமிழகத்தில் மாநில கட்சிகளான தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் தேர்தல் நேரங்களில் தண்ணீர் காட்டி வருகின்றன. இதனால் காங்கிரசும், பா.ஜனதாவும் விழிபிதுங்கி தவிக்கின்றன. பாராளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல்களில் அப்படி என்றால் இப்போது உள்ளாட்சி தேர்தலிலும் படாதபாடு படுகின்றன. 2011-ல் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சியில் காங்கிரசுக்கு தி.மு.க. 14 இடங்களை கொடுத்தது. அப்போது மொத்த வார்டுகள் 155 தான். இப்போது வார்டு எண்ணிக்கை 200 ஆக உயர்ந்துள்ளது. ஆனால் காங்கிரசுக்கு ‘அந்த 14’ மட்டும்தான். வேண்டுமானால் மண்டலத்துக்கு ஒன்று வீதம் 15 இடங்கள் தரலாம் என்று கூறுவதாக கூறப்படுகிறது. ஆனால் காங்கிரஸ் தரப்பில் சட்டமன்ற தொகுதிக்கு 2 வீதம் 21 சட்டமன்றத்துக்கும் 42 தொகுத...
‘வருமுன் காப்போம்’ திட்டம் மீண்டும் தொடக்கம்- மு.க.ஸ்டாலின் வாழப்பாடியில் தொடங்கி வைத்தார்!

‘வருமுன் காப்போம்’ திட்டம் மீண்டும் தொடக்கம்- மு.க.ஸ்டாலின் வாழப்பாடியில் தொடங்கி வைத்தார்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
‘வருமுன் காப்போம்’ திட்டம் மீண்டும் தொடக்கம்- மு.க.ஸ்டாலின் வாழப்பாடியில் தொடங்கி வைத்தார்! மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோது 2006-ம் ஆண்டு டிசம்பர் 30-ந்தேதி வருமுன் காப்போம் திட்டத்தை கொண்டு வந்தார். அப்போது அவர் பூந்தமல்லி அண்ணா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் இத்திட்டம் தமிழ்நாடு முழுவதும் தீவிரமாக செயல்படுத்தப்பட்டது. 2011-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. கடந்த 10 ஆண்டுகளாக எந்த செயல்பாடுகளும் இல்லாமல் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. தி.மு.க. ஆட்சி மீண்டும் வந்ததும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி இருந்தார். அதன்படி நடந்து முடிந்த சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரின்போது மருத்துவத்துறை சார்பில் 110 அறிவிப்புகள் அறிவிக்கப்பட்...
சென்னையில் 1 லட்சத்து 57 ஆயிரம் போஸ்டர்கள் அகற்றம்- மாநகராட்சி நடவடிக்கை!

சென்னையில் 1 லட்சத்து 57 ஆயிரம் போஸ்டர்கள் அகற்றம்- மாநகராட்சி நடவடிக்கை!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
சென்னையில் 1 லட்சத்து 57 ஆயிரம் போஸ்டர்கள் அகற்றம்- மாநகராட்சி நடவடிக்கை! ‘சிங்கார சென்னை 2.0’ திட்டத்தை செயல்படுத்தும் வகையில் சென்னையில் அரசு சுவர்கள் மற்றும் பொது இடங்களில் போஸ்டர்கள் ஒட்டுவதற்கு மாநகராட்சி தடை விதித்துள்ளது. இதை மீறி போஸ்டர் ஒட்டுபவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை நகரம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை அகற்றி விட்டு அங்கு வண்ண வண்ண ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன. மாநகராட்சி ஊழியர்கள் ஒவ்வொரு பகுதியிலும் எங்கெங்கு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன? என்பதை கண்காணித்து அவற்றை அகற்றி வருகின்றனர். சென்னையில் மொத்தம் 57 ஆயிரத்து 374 இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதில் இதுவரை 1 லட்சத்து 57 ஆயிரத்து 527 போஸ்டர்கள் அகற்றப்பட்டுள்ளன. இன்று மட்டும் 210 இடங்களில் ஒட்டப்பட்டிருந்த 1,159 போஸ்டர்கள் அகற்றப்ப...
7,500 வியாபாரிகளுக்கு மாநகராட்சி அனுமதி- சென்னையில் புதிய திட்டம் நாளை முதல் அமல்!

7,500 வியாபாரிகளுக்கு மாநகராட்சி அனுமதி- சென்னையில் புதிய திட்டம் நாளை முதல் அமல்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
7,500 வியாபாரிகளுக்கு மாநகராட்சி அனுமதி- சென்னையில் புதிய திட்டம் நாளை முதல் அமல்! கொரோனா பரவாமல் இருப்பதற்காக தமிழக அரசு ஊரடங்கு உத்தரவை வருகிற 7-ந்தேதி வரை நீட்டித்துள்ளது. இந்த நிலையில் பொது மக்களுக்கு தேவையான மளிகை பொருட்களை உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதியுடன் அந்தந்த பகுதிகளில் உள்ள மளிகை கடை வியாபாரிகள் தங்களது வாகனங்கள் மற்றும் தள்ளுவண்டிகள் மூலம் நாளை (திங்கட்கிழமை) முதல் தெருத்தெருவாக சென்று விற்பனை செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது. பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு அருகே உள்ள கடைகளுக்கு சென்று சீட்டு எழுதி கொடுத்து விட்டு வந்து விடலாம் அல்லது செல்போன் மூலமும் மளிகைப் பொருட்களை வாங்க தகவல் கொடுக்கலாம். கடைக்காரர்கள் இந்த பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்குவதற்கும் அரசு அனுமதி கொடுத்துள்ளது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மளிகைப் பொருட்களை விநியோகிக்க நேரம் ஒதுக்கி உள்ளது. இ...
ஊரடங்கு வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை- சென்னை மாநகராட்சி

ஊரடங்கு வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை- சென்னை மாநகராட்சி

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம், செய்திகள்
ஊரடங்கு வதந்தி பரப்பினால் சென்னை மாநகராட்சி கடும் நடவடிக்கை! சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் எதிர்புறம் அமைந்துள்ள மார்க்கெட்டில் பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான கோ.பிரகாஷ் நேற்று கொரோனா தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது. சென்னையில் 4 லட்சம் பேர் இதுவரை தடுப்பூசி போட்டு உள்ளனர். இவர்களில் யாருக்கும் இதுவரை எந்த ஒரு பக்கவிளைவும் இல்லை. 40 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட்டால்தான் சென்னை பாதுகாப்பான நகரம் என சொல்லமுடியும். 40 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இன்னும் 3 மாத காலம் ஆகும். சென்னையில் உள்ள 140 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மாநகராட்சி மூலமாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஒரு நாளைக்கு 60 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட தயாராக வைக்கப்பட்டிருக்கும் நிலையில் 25 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்...
கொரானா சிகிச்சைக்கு அண்ணா பல்கலைக்கழக மாணவர் விடுதியை ஒப்படைக்க மாநகராட்சி உத்தரவு – அதிர்ச்சியில் மாணவர்கள்

கொரானா சிகிச்சைக்கு அண்ணா பல்கலைக்கழக மாணவர் விடுதியை ஒப்படைக்க மாநகராட்சி உத்தரவு – அதிர்ச்சியில் மாணவர்கள்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கொரானா சிகிச்சைக்கு அண்ணா பல்கலைக்கழக மாணவர் விடுதியை ஒப்படைக்க மாநகராட்சி உத்தரவு - அதிர்ச்சியில் மாணவர்கள் கொரானா சிகிச்சை அளிப்பதற்காக அண்ணா பல்கலைக்கழக விடுதியை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் ஒப்படைக்குமாறு மாநகராட்சி சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் பல்கலைக் கழக விடுதியில் மாணவர்களின் உடைமைகள் இருப்பதால் இப்போதைக்கு ஒப்படைக்க முடியாது என்று துணைவேந்தர் கூறியதாக தகவல் வெளியானது. இந்நிலையில் மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் கூறியதாவது: தேசிய பேரிடர் காலத்தில், அரசு கட்டடங்கள் மருத்துவ முகாமிற்காக பள்ளி, கல்லூரி, பல்கலைக் கழக கட்டிடங்களை குறிப்பிட்ட கால கட்டத்திற்குள் ஒப்படைக்க வேண்டும் என்று மாநகராட்சி மூலம் கடிதம் எழுதி உள்ளோம். ஆகவே அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் விடுதி கட்டிடத்தை மாநகராட்சியிடம் ஒப்படைக்க வேண்டும் என்றார். மாநகராட்சி கமிஷ்னரின் இந்த அறிவிப...
சென்னையில் 50 ஆயிரம் பெட் தயாராகுது… கொரானா முன்னெச்சரிக்கை!

சென்னையில் 50 ஆயிரம் பெட் தயாராகுது… கொரானா முன்னெச்சரிக்கை!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
சென்னை மாநகராட்சியின் நோக்கம் 50 ஆயிரம் படுக்கைகள் உருவாக்க பகுதிகளை அணுகவுள்ளோம். இதுவரை 4000 படுக்கை பகுதிகள் தயாராக உள்ளது. மாநகராட்சி பள்ளிகள், அரசுப்பள்ளிகள், தனியார் பள்ளிகள் என தெரிவித்துள்ளோம். மொத்தம் 50000 ஆயிரத்தில் முதல் 25000 படுக்கைகளுக்கு அரசு உயர் கல்வி நிறுவனங்கள், அடுத்து 25000 அரசுப்பள்ளிகள் பின்னர் தனியார் பள்ளிகள் என படிப்படியாக செல்ல உள்ளோம். அடுத்து சென்னையில் உள்ள கல்யாண மண்டபங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். சென்னையில் 747 கல்யாண மண்டபங்கள் உள்ளது. அவை அனைத்தும் எங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். தேசிய பேரிடர் சட்டத்தின்கீழ் அதற்கு எங்களுக்கு அதிகாரம் உள்ளது. அதை அவர்களுக்கு தெரிவித்து விட்டோம், ஏனென்றால் இது தேசிய அவசர நிலை காலம். இப்ப கல்யாண மண்டபம் கிடைத்தவுடன் முதல்வேலையாக அங்கு படுக்கைகள் சேமிக்கத்தொடங்கி விடுவோம், 50 ஆயிரம் படுக்கைகள் ஒரு மாதத்...