செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 28
Shadow

Tag: டாப்சி

கவர்ச்சி நடிகை வாழ்க்கை படத்தில் டாப்சி!

கவர்ச்சி நடிகை வாழ்க்கை படத்தில் டாப்சி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் 450-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து 1980 மற்றும் 90-களில் தவிர்க்க முடியாத கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் சில்க் சுமிதா. இவரது கால்ஷீட்டுகாக தயாரிப்பாளர்கள் காத்து கிடந்த காலம் இருந்தது. சினிமாவில் உச்சத்தில் இருந்தபோதே 1996-ல் தற்கொலை செய்து கொண்டு பட உலகை அதிர வைத்தார். சில்க் சுமிதாவின் வாழ்க்கை 2011-ல் மிலன் இயக்கத்தில் இந்தியில் 'த டர்ட்டி பிக்சர்' என்ற பெயரில் சினிமா படமாக தயாராகி வெளியானது. இதில் சில்க் சுமிதா வேடத்தில் நடித்த வித்யாபாலன் சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார். தற்போது சில்க் சுமிதா வாழ்க்கை படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க ஏற்பாடுகள் நடக்கிறது. முதல் பாகத்தை எடுத்த பிரபல இந்தி பட அதிபர் ஏக்தா கபூர் 2-ம் பாகத்தையும் தயாரிக்கிறார். 2-ம் பாகத்தில் சில்க் சுமிதாவின் இளம் வயது வாழ்க்கை சம்பவங்கள் இடம்பெறுவ...
வைரலாகும் டாப்சி படத்தின் போஸ்டர்!

வைரலாகும் டாப்சி படத்தின் போஸ்டர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
தமிழில் ஆடுகளம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான டாப்சி, தொடர்ந்து ஆரம்பம், காஞ்சனா 2, வை ராஜா வை உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். டாப்சிக்கு இந்தியில் சமீப காலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகள் அமைகின்றன. இவர் கைவசம் இந்தியில் பல படங்கள் உள்ளன. இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்த மித்தாலி ராஜின் வாழ்க்கையை பாலிவுட்டில் படமாக எடுக்கப்பட்டு வருகிறது. இப்படத்தை 'சபாஷ் மித்து' என்ற பெயரில் இயக்குனர் ஸ்ரீஜித் முக்கர்ஜி இயக்கி வருகிறார். இதில் மித்தாலி ராஜாக டாப்சி பன்னு நடித்து வரும் நிலையில் தற்போது படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது....
இதுதான் நான் செய்த தவறு – வருத்தத்தை தெரிவித்த நடிகை டாப்சி!

இதுதான் நான் செய்த தவறு – வருத்தத்தை தெரிவித்த நடிகை டாப்சி!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
இதுதான் நான் செய்த தவறு - வருத்தத்தை தெரிவித்த நடிகை டாப்சி! தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை டாப்சி இப்போது இந்தியில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்தி திரையுலகில் அவருக்கு பெரிய ரசிகர்கள் பட்டாளம் சேர்ந்துள்ளது. சினிமாவுக்கு வந்த புதிதில் சில தவறுகளை செய்ததாக டாப்சி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “நான் தமிழ், தெலுங்கு படங்களில் நடித்தபோது கதைகளை தேர்வு செய்யும் முறையில் சில தவறுகளை செய்தேன். வணிக படங்கள்தான் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்று நினைத்து அதுமாதிரியான படங்களை தேர்வு செய்து நடித்தேன். அதுதான் நான் செய்த தவறு. அதன் பிறகு நான் என்ன மாதிரி படங்களைப் பார்க்க விரும்புகிறேனோ, அதுபோன்ற கதைகளை தேர்வு செய்து நடிக்க ஆரம்பித்தேன். அது எனக்கு சாதகமாக அமைந்தது. ஆனாலும் ஒரு ரசிகையின் பார்வையில் இருந...
காதலரை கரம்பிடிப்பது எப்போது? – நடிகை டாப்சி விளக்கம்!

காதலரை கரம்பிடிப்பது எப்போது? – நடிகை டாப்சி விளக்கம்!

CINI NEWS, HOME SLIDER, sports, சினி நிகழ்வுகள், நடிகைகள்
காதலரை கரம்பிடிப்பது எப்போது? - நடிகை டாப்சி விளக்கம்! தமிழில் ஆடுகளம் படத்தில் நடித்து பிரபலமான டாப்சி, பாலிவுட் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். இந்தியில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு டாப்சியும், டென்மார்க்கை சேர்ந்த பேட்மிண்டன் வீரர் மத்தியாஸ் என்பவரும் காதலிப்பதாகவும், இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கிசுகிசுக்கள் வந்தன. காதலருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் டாப்சி வெளியிட்டு வந்தார். இருவரும் மாலத்தீவுக்கு ஜோடியாக சென்று வந்தனர். இந்நிலையில், சமீபத்திய பேட்டியில் காதலர் குறித்து நடிகை டாப்சி கூறியதாவது: “சினிமா துறையில் இருப்பவரை காதலிக்க விரும்பவில்லை. எனது சொந்த வாழ்க்கையும், தொழில் சார்ந்த வாழ்க்கையும் தனித்தனியாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். மத்தியாஸ் எனக்...
நடுத்தர வயது பெண்ணாக டாப்ஸி நடிக்கும் பாலிவுட் படம்

நடுத்தர வயது பெண்ணாக டாப்ஸி நடிக்கும் பாலிவுட் படம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  நடுத்தர வயது பெண்ணாக டாப்ஸி நடிக்கும் பாலிவுட் படம் தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழி படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை டாப்ஸி. இவர் நடிப்பில் உருவாகியுள்ள 'சான்ட் கி ஆங்க்' என்ற பாலிவுட் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இந்நிலையில் குறித்து டாப்ஸி கூறுகையில் "தீபாவளி போன்ற பெரிய பண்டிகைகளுக்கு, சூப்பர் ஸ்டார் நடிகர்கள் நடித்த படங்கள் மட்டுமே திரைக்கு வரும். ஆனால், இந்தாண்டு, நான் நடித்த படமும், தீபாவளிக்கு வெளியாவது, மகிழ்ச்சியாக உள்ளது" என்று கூறினார். இதனிடையே நடுத்தர வயதுடைய இரு பெண்கள், துப்பாக்கிச் சுடும் போட்டிகளில் சாதிப்பதே, இந்த படத்தின் கதை என்பது குறிப்பிடத்தக்கது....
தடகள வீராங்கனை வாழ்க்கை படத்தில் டாப்சி..!

தடகள வீராங்கனை வாழ்க்கை படத்தில் டாப்சி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்து தடகள போட்டிகள் வீராங்கனையாக சாதனை பெற்ற ஒரு இளம்பெண்ணின் உண்மை கதையை இயக்குனர் நந்தா பெரியசாமி கதையாக எழுதி உள்ளார். இந்த கதையை திரைப்படமாக பாலிவுட்டின் பிரபல இயக்குநர் ஆர்காஷ் கருணா முன்வந்துள்ளார். இந்த கதை தற்போது பாலிவுட்டில் பிரமாண்டமாக பெரிய பட்ஜெட்டில் திரைப்படமாக உருவாக உள்ளது இந்த படத்தில் கதையின் நாயகியான ராஜஸ்தான் இளம்பெண்ணாக நடிகை டாப்ஸி நடிக்க உள்ளார். இதற்காக அவர் தடகள பயிற்சி எடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ராஷ்மி ராக்கெட் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படம் குறித்த அறிவிப்பை  நடிகை டாப்சி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது...
டாப்சி வெளியிட்ட தமன்னாவின் திகில் படம் பெட்ரோமாக்ஸ்..!

டாப்சி வெளியிட்ட தமன்னாவின் திகில் படம் பெட்ரோமாக்ஸ்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  டாப்சி வெளியிட்ட தமன்னாவின் திகில் பெட்ரோமாக்ஸ் தமன்னா ஒரு திகில் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை 'அதே கண்கள்' என்ற படத்தை இயக்கிய ரோஹின் வெங்கடேசன் என்பவர் இயக்கி வருகிறார். தமன்னா முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் மன்சூர் அலிகான், யோகி பாபு, பகவதி உட்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மார்ச் மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜிப்ரான் இசையமைக்கும் இந்த படத்தை ஃபாஷன் ஸ்டுடியோ என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் டைட்டிலை பிரபல நடிகை டாப்சி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இந்த படத்திற்கு 'பெட்ரோமாக்ஸ்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது....
தனுஷ் இன்று வெளியிடும் டாப்சியின் கேம் ஓவர் டிரைலர்..!

தனுஷ் இன்று வெளியிடும் டாப்சியின் கேம் ஓவர் டிரைலர்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  ஆடுகளம் மூலமாக தமிழில் அறிமுகம் ஆன டாப்சி நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் தமிழில் வருகிறார். அவர் இப்போது "கேம் ஓவர்’ என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் இப்படம் வெளியாகிறது. இதனை இயக்குநர் அஸ்வின் சரவணன் இயக்கியுள்ளார். ஒய் நாட் ஸ்டூடியோஸும், ரிலையன்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். ஏற்கனவே இதன் டீசர் வெளியாகி எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் நிலையில், இதன் டிரைலர் இன்று 1 மணிக்கு வெளியாகிறது. தமிழ் டிரைலரை நடிகர் தனுஷும், தெலுங்கு டிரைலரை தெலுங்கு நடிகர் ராணாவும் வெளியிடுகிறார்கள். இந்தி டிரைலரை டாப்சியே ரிலீஸ் செய்கிறாராம். தமிழில் ஆடுகளம் படத்தில் ஜோடியாக நடித்த டாப்சியின் பட டிரைலரை தனுஷ் வெளியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது....
டாப்சியின் கேம் ஓவர்..!

டாப்சியின் கேம் ஓவர்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
மாயா படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கும் புதுப்படத்தில் டாப்சி தான் ஹீரோயின். Y not ஸ்டுடியோ தயாரிக்கிறது. இதே கதை இந்தி தெலுங்கு மொழிகளில் படமாகிறது. இந்தியில் அனுராக் காஷ்யப் இயக்குகிறார் டாப்சி இதில் மாற்றுத்திறனாளி வேஷத்தில் நடிக்கிறார். படத்துக்கு கேம் ஓவர் என பேர் வைத்திருக்கிறார்கள். இதுவும் ஒரு விளையாட்டு அரசியல் தொடர்பான படம் என்கிறார்கள்....