ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28
Shadow

Tag: India

எல்லைப்பிரச்சினையில் இந்தியாவுடனான பேச்சு ஆக்கப்பூர்வமானது- சீனா கருத்து!

எல்லைப்பிரச்சினையில் இந்தியாவுடனான பேச்சு ஆக்கப்பூர்வமானது- சீனா கருத்து!

HOME SLIDER, NEWS, World News, உலக செய்திகள், செய்திகள்
சீன தலைநகர் பீஜிங்கில் ராணுவ அமைச்சக செய்தி தொடர்பாளர் உ கியான் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், “எல்லையில் அசல் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சீன தரப்பில் இருந்து இந்தியா கடுமையான சூழ்நிலையை சந்தித்து வருகிறது என இந்தோ-பசிபிக் விவகாரங்களுக்கான அமெரிக்க துணை பாதுகாப்பு மந்திரி ஏலி ராட்னர் கூறி இருக்கிறாரே?” என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சீன ராணுவ அமைச்சக செய்தி தொடர்பாளர் உ கியான் பதில் அளிக்கையில், “எல்லை பிரச்சினையை பேச்சுவார்த்தை, ஆலோசனை மூலம் சரியாக கையாள்வது என்று சீனாவும், இந்தியாவும் ஒப்புக்கொண்டுள்ளன. 3-ம் தரப்பினரின் தலையீட்டை உறுதியாக எதிர்க்கின்றன” என குறிப்பிட்டார். மேலும், “கடந்த 11-ந் தேதி இரு தரப்பினரும் நடத்திய 15-வது சுற்று பேச்சுவார்த்தை நேர்மறையாகவும், ஆக்கப்பூர்வமாகவும் அமைந்தது. எஞ்சி உள்ள பிரச்சினைகளில் தீர்வு காண்பது, அமைதி மற்றும் வளர்ச்சியை மேம்படு...
குழந்தைகளுக்கு முக கவசம் தேவை இல்லை: மத்திய அரசு

குழந்தைகளுக்கு முக கவசம் தேவை இல்லை: மத்திய அரசு

helth tips, HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கொரோனாவின் 3-வது அலை சிறுவர்-சிறுமிகளையும் விட்டு வைக்கவில்லை. நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் குழந்தைகள் மற்றும் சிறார் தொடர்பான திருத்திய கொரோனா வழிகாட்டுதல்களை மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்டது. இதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:- * 5 வயது மற்றும் அதற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு முக கவசம் தேவை இல்லை. 6-11 வயதிற்குட்பட்டவர்கள், பெற்றோரின் நேரடி மேற்பார்வையின் கீழ் பாதுகாப்பாகவும், சரியான முறையிலும் குழந்தையின் திறனை பொறுத்து முக கவசம் அணியலாம். 12 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர் பெரியவர்களை போல முக கவசம் அணிய வேண்டும். * கொரோனா, ஒரு வைரஸ் தொற்று ஆகும். தீவிரமற்ற கொரோனா தொற்றை சமாளிப்பதில் நுண்ணுயிர் எதிர்ப்பிகளுக்கு (ஆன்டிமைக்ரோபியல்) எந்தப் பங்கும் இல்லை. எனவே அறிகுறியற்ற மற்றும் லேசான பாதிப்புகளுக்கு சிகிச்சை அல்லது நோ...
கொரோனா 2வது அலையை போன்ற பாதிப்பு மீண்டும் ஏற்படும் – இந்தியாவை எச்சரிக்கும் ஐ.நா.சபை

கொரோனா 2வது அலையை போன்ற பாதிப்பு மீண்டும் ஏற்படும் – இந்தியாவை எச்சரிக்கும் ஐ.நா.சபை

HOME SLIDER, NEWS, செய்திகள்
கொரோனா 2வது அலையை போன்ற பாதிப்பு மீண்டும் ஏற்படும் - இந்தியாவை எச்சரிக்கும் ஐ.நா.சபை சர்வதேச அளவிலான கொரோனா பாதிப்பு குறித்து ஐ.நா.சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்தியாவில்,டெல்டா வைரஸ் பரவலால் உருவான 2வது அலையில் ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் 2,40,000 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்திய பொருளாதாரத்தை 2வது அலை சீர்குலைத்தது. கொரோனா இரண்டாவது அலையின் தாக்கத்தால் இந்திய மருத்துவமனைகள் அனைத்தும் முடங்கின. இதேபோன்ற பாதிப்பு விரைவில் நடக்கக் கூடும் மிகவும் வேகமாக பரவக்கூடிய ஒமைக்ரான், மனித சமுதாயத்திற்கும்,  பொருளாதாரத்திற்கும் மீண்டும் பாதிப்பை அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று இரண்டாவது அலையில், இறப்புகளின் எண்ணிக்கை அதிவேகமாக அதிகரித்தது. நோய்த்தொற்றுகளின் அதிகரிப்பு நாட்டின் சுகாதார உள்கட்டமைப்பிற்கு சுமையாக இருந்தது. ...
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் – கதாயுதத்துடன் வாகை சூடிய நியூசிலாந்து!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் – கதாயுதத்துடன் வாகை சூடிய நியூசிலாந்து!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் - கதாயுதத்துடன் வாகை சூடிய நியூசிலாந்து! இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டனில் நடைபெற்றது. முதல் இன்னிங்சில் இந்தியா 217 ரன்களும், நியூசிலாந்து 249 ரன்களும் எடுத்தன. 32 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 64 ரன்கள் எடுத்த நிலையில், 5வது நாள் ஆட்டம் நிறைவடைந்தது. புஜாரா 12 ரன்னுடனும், கோலி 8 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 6வது நாளான இன்று தொடர்ந்து ஆடிய இந்தியா, விரைவில் விக்கெட்டுகளை இழந்தது. கேப்டன் கோலி 13 ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். புஜாரா 15 ரன்கள், ரகானே 15 ரன்கள், ஜடேஜா 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். மிகவும் பொறுமையாக ஆடிய ரிஷப் பண்ட், 41 ரன்கள் சேர்த்து ஆறுதல் அளித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக...
அதிகரிக்கும் கொரோனா பரவல்: இந்தியாவுக்கு உதவ தயார் – சீன அதிபர் ஜி ஜின்பிங்!

அதிகரிக்கும் கொரோனா பரவல்: இந்தியாவுக்கு உதவ தயார் – சீன அதிபர் ஜி ஜின்பிங்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
அதிகரிக்கும் கொரோனா பரவல்: இந்தியாவுக்கு உதவ தயார் - சீன அதிபர் ஜி ஜின்பிங்! கொரோனா வைரஸ் தொற்றால் இந்தியா கடும் பாதிப்பையும், உயிரிழப்பையும் சந்தித்து வருகிறது. இதனால்  இந்தியாவுக்கு அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகின்றன. இந்தியாவுக்கு தேவையான மருத்துவ உதவி பொருட்கள் பல நாடுகளில் இருந்து வந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில், கொரோனா வைரசுக்கு எதிராக போராடுவதில் இந்தியாவுக்கு உதவ தயாராக இருப்பதாக சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார். சீன அரசு தொலைக்காட்சி இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக சீன அரசு தொலைக்காட்சியில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனாவை எதிர்த்துப் போராடுவதில் இந்தியாவுடனான ஒத்துழைப்பை அதிகரிக்க சீனா தயாராக உள்ளது. இந்தியாவுக்கு ஆதரவு மற்றும் உதவிகளை வழங்க சீனா தயாராக உள்ளது என ஜி ஜின்பிங் கூறினார் என்று த...
இந்திய-பாக் போர் சூழலில் கவனம் ஈர்க்கும் ‘மிட்டி’..!

இந்திய-பாக் போர் சூழலில் கவனம் ஈர்க்கும் ‘மிட்டி’..!

CINI NEWS, செய்திகள்
சென்னை இளைஞர்கள் உருவாக்கத்தில்  வைரலாகும் இந்தியா பாகிஸ்தான் எல்லையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட "மிட்டி"இந்தி குறும்படம். இந்தியா பாகிஸ்தான் எல்லையை கருவாகக் கொண்டு உருவாக்கப்பட்ட mitti (மிட்டி) இந்தி குறும்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது . சமீபத்தில் நடைபெற்ற காஷ்மீர் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பிறகு இணையத்தில் அதிகமாக பார்க்கப்பட்ட பகிரப்பட்ட இந்த குறும்படத்தை இயக்கியவர்கள் சென்னையை சேர்ந்த இளைஞர்கள் இந்தியில் mitti என்றால் தமிழில் மண் என்று அர்த்தம். இந்திய மண்ணும் பாகிஸ்தான் மண்ணும் போரினால் பாதிக்கப்பட்டு இருக்கும் சூழலை மிக அழகாக எதார்த்தமாக ஒரு குறும்படத்தில் படம்பிடிக்கப்பட்டு இன்று இணையத்தில் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இந்த இந்தி mitti குறும் படத்தை இயக்கியவர்கள் முதல் இந்த படத்தில் வேலை செய்த அத்தனை பேரும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். இந்த படத்தை இயக்கிய விக...