ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28
Shadow

Tag: online tamil news

தூத்துக்குடி சோபியா வழக்கில் மனித உரிமை மீறல் – ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவு

தூத்துக்குடி சோபியா வழக்கில் மனித உரிமை மீறல் – ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
  தூத்துக்குடி விமான நிலையத்தில் அப்போதைய தமிழக பாஜக தலைவருக்கு எதிராக கோஷமிட்டதாக கைது செய்யப்பட்ட சோபியா வழக்கில் மனித உரிமை மீறல் நடந்துள்ளதாக மாநில மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3ம் தேதி, தற்போதைய தெலங்கானா மாநில ஆளுநரும், அப்போதைய தமிழக பாஜக தலைவருமான தமிழிசை சவுந்தரராஜன் சென்னையிலிருந்து தூத்துக்குடி செல்லும் விமானத்தில் பயணம் செய்தார். தூத்துக்குடி விமான நிலையத்தில் அவரை பார்த்ததும், அங்கிருந்த சோபியா என்ற மாணவி, பாஜகவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினார். இதனால், தமிழிசை சவுந்தரராஜனுக்கும், சோபியாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, சோபியா மீது விமான நிலைய அதிகாரியிடம் தமிழிசை புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை போலீசார் சோபியாவை கைது செய்தனர் இந்த ...
மீண்டும் விஜய்யுடன் மோதலில் இறங்கும் சிம்பு!

மீண்டும் விஜய்யுடன் மோதலில் இறங்கும் சிம்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, திரைப்படங்கள், நடிகர்கள்
      கடந்த சில வருடங்களாக ஒரு மெகாஹிட் படத்திற்காக ஏங்கிக்கொண்டிருந்த சிம்புவிற்கு மாநாடு திரைப்படம் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த நவம்பர் மாதம் வெளியான இப்படம் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று 100 கோடி வசூல் சாதனை செய்தது. இந்நிலையில் தொடர் வெற்றிக்கான முயற்சியில் சிம்பு அடுத்தடுத்து படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார். கெளதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு, கோகுல் இயக்கத்தில் கொரோனா குமார் மற்றும் கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல ஆகிய படங்களில் தற்போது நடித்துகொண்டுவருகிறார். மேலும் ஓ மை கடவுளே படத்தை இயக்கிய அஸ்வந்த் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகிவரும் வெந்து தணிந்தது காடு படத்திலிருந்து ஒரு அறிவிப்பு வந்துள்ளது. இப்படத்தின் பட...
இன்றைய முக்கியச் செய்திகள் 11.01.22

இன்றைய முக்கியச் செய்திகள் 11.01.22

HOME SLIDER, kodanki headlines news, செய்திகள்
முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதியின் பெயரில், மதுரையில் சர்வதேச தரத்தில் நூலகம் அமைக்கப்படும் என கடந்த சட்டப் பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். மதுரையில் கலைஞர் நினைவு நூலகத்திற்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டுகிறார். அஜித்குமார் நடித்துள்ள வலிமை திரைப்படத்தின் வெளியீட்டு தேதி ஒத்திவைக்கப்பட்டதற்கு, வேதனை தெரிவித்து அவரது ரசிகர்கள் கோவையில் போஸ்டர் ஒட்டியுள்ளனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து இன்று முதல் வியாழக்கிழமை வரை நான்காயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது பொங்கல் பண்டிகைக்கு ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தயாராகி வரும் நிலையில், 300 மாடுபிடி வீரர்கள், 150 பார்வையாளர்கள் மட்டுமே பங்கேற்கும் வகையில் தமிழ்நாடு அரசு கட்டுப்பாடுகளை விதித்து உத்த...
இன்றைய முக்கியச் செய்திகள் 7.1.22

இன்றைய முக்கியச் செய்திகள் 7.1.22

HOME SLIDER, kodanki head line
  * தமிழகம் முழுவதும் நேற்று இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இன்று முதல் 3 நாட்களுக்கு வழிபாட்டு தலங்கள் மூடல். தமிழ்நாட்டில் ஒரே நாளில் மேலும் சுமார் 7 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட 117 பேரும் குணமடைந்துள்ளனர். சென்னை குரோம்பேட்டை எம்ஐடி கல்லூரியில் கொரோனா தொற்று பாதித்த 81 மாணவர்களில் 66 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறிகள் இருப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையாளர்கள் இன்றி நடத்த மாவட்ட நிர்வாகம் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. நீட் தேர்வு விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காக சனிக்கிழமை அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். நீட் எதிர்ப்பு கொள்கையில் அதிமுக உறுதியாக இருப...