விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஏர் இந்தியா சார்பில் தலா ரூ.1 கோடி இழப்பீடு
ஜூன் 12 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171) குறித்து, டாடா குழும தலைவர் நடராஜன் சந்திரசேகரன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்.
லண்டனுக்கு செல்லவிருந்த போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம், புறப்பட்ட சில வினாடிகளில் பி.ஜே. மெடிக்கல் கல்லூரி விடுதி வளாகத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இதில் 241 பயணிகள் உட்பட 279 பேர் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவம் குறித்து டாடா குழும தலைவர் சந்திரசேகரன், “விபத்து குறித்து கேள்விப்பட்டவுடன், விமானத்தில் பயணித்தவர்கள் உயிர் பிழைக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டேன். ‘கடவுளே, என்ன இது?’ என்று தோன்றியது. அனைவரும் பிழைத்துவிட வேண்டும் என்பதே எனது எண்ணமாக இருந்தது,” என்று உருக்கமாக தெரிவித்தார்.
இது எங்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி மற்றும் துயரத்தை அளித்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறோம்....









