புதன்கிழமை, ஜூலை 1
Shadow

Author: Kodanki

கடனை திருப்பி செலுத்த லதா ரஜினிகாந்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

கடனை திருப்பி செலுத்த லதா ரஜினிகாந்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
கோச்சடையான் படம் கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் வெளியானது. ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யா இந்த படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் எடுப்பதற்காக ஆட்பீரோ நிறுவனத்திடம் லதா ரஜினிகாந்த் ரூ.10 கோடி கடன் வாங்கி இருந்தார். ஆனால் இந்த கடனில் ரூ. 1½ கோடி மட்டுமே இதுவரை கொடுக்கப்பட்டு இருந்தது. ஆட்பீரோ நிறுவனத்திடம் வாங்கிய ரூ.10 கோடியில் ரூ.8½ கோடியை லதா ரஜினிகாந்த் திருப்பி செலுத்த வேண்டும். கடனை திருப்பி செலுத்தாதது தொடர்பாக அந்த நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது லதா ரஜினி காந்துக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பியது. கோச்சடையான் படத்திற்கான கடனை எப்போது செலுத்துவீர்கள் என்று கேள்வி கேட்டது. அதோடு எதற்காக கடனை செலுத்தவில்லை என்று கூறுங்கள். இதற்கான பதிலை மதியம் 12.30 மணிக்குள் தெரிவிக்குமாறும் லதா ரஜினிகாந்திற்கு சுப்ரீம் கோர்ட்ட...
‘நானும் மதுரைக்காரன் தான்’- ரசிகர்கள் வெள்ளத்தில் கமல்ஹாசன் பேட்டி

‘நானும் மதுரைக்காரன் தான்’- ரசிகர்கள் வெள்ளத்தில் கமல்ஹாசன் பேட்டி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
நடிகர் கமல்ஹாசன் நாளை புதிய கட்சி தொடங்க உள்ளார். ராமேசுவரத்தில் அரசியல் பயணம் மேற்கொள்வதற்காக இன்று மதியம் சென்னையில் இருந்து விமானம் மூலம் அவர் மதுரைக்கு வந்தார். அப்போது அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் “முதல்வரே வருக, முதல்வரே வருக” என கோ‌ஷமிட்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். விமான நிலையத்தில் கமல்ஹாசன் நிருபர்களிடம் கூறியதாவது:- நான் இப்போது எனது வாழ்க்கையின் ஒரு முக்கியமான தருணத்தில் நின்று கொண்டிருக்கிறேன். நாளை காலை ராமேசுவரத்தில் எனது அரசியல் பயணத்தை தொடங்குகிறேன். மாலையில் மதுரையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கட்சியின் கொள்கைகளை விளக்க உள்ளேன். ராமேசுவரம் சென்று விட்டு பரமக்குடி, மானாமதுரை கூட்டத்தில் கலந்து கொண்டு மாலையில் மதுரை வருவேன். ராமேசுவரமும் எனது ஊர் தான். மதுரையும் எனது ஊர் தான். யாதும் ஊரே, யாவரும் கேளிர். பொதுக்கூட்டத்திற்கு அனைவரும் வாருங்கள். இவ...
கமலுக்கு சகுனம் சரியில்லை – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆரூடம்

கமலுக்கு சகுனம் சரியில்லை – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆரூடம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பயணத்தை நாளை தொடங்க உள்ள நிலையில், பல்வேறு அரசியல் தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார். ஆனால், ஆளுங்கட்சியான அ.தி.மு.க. தலைவர்கள் யாரையும் சந்திக்கவில்லை. நாளை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கமலுக்கு ஆதரவு தெரிவிக்கும் தலைவர்கள் பங்கேற்க வாய்ப்பு உள்ளதாகவும் பேசப்படுகிறது. இந்நிலையில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று விருதுநகரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது ரஜினி, கமல் அரசியல் குறித்து அவர் கூறியதாவது:- கட்சி தொடங்கும் கமல் ஹாசனுக்கு ஆரம்பத்திலேயே சகுனம் சரில்லை. கட்சி நடத்துவோரிடம் கமல் கட்டிப்பிடி வைத்தியம் செய்து வருகிறார். அரசியல் கட்சிகளிடம் கமல் ஆதரவு கோருவது கேலிக்கூத்தாக முடியும். எத்தனை கமல் வந்தாலும் அ.தி.மு.க.வை அழிக்க முடியாது. வயதை கருத்தில் கொண்டு ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. ரஜினி வெளிப்படைத்த...
மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர தயார் – சந்திரபாபு நாயுடு

மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர தயார் – சந்திரபாபு நாயுடு

HOME SLIDER, NEWS, politics
ஆந்திர பிரதேசத்தில் இருந்து தெலுங்கானா மாநிலம் பிரிக்கப்பட்ட பின்னர், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என அம்மாநிலத்தில் தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்த வண்ணம் இருந்தது. 2014-ம் ஆண்டு தேர்தலின் போது பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனாலும், அது நிறைவேற்றப்படவில்லை. கடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் இவ்விவகாரம் எதிரொலித்ததின் விளைவாக இரு அவைகளும் அம்மாநில எம்.பி.க்களால் முடக்கப்பட்டன. முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி பா.ஜ.க கூட்டணியில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இன்னும் தொடர்வதால் மாநிலத்தில் கடும் அழுத்தத்தை சந்திரபாபு நாயுடு சந்தித்துள்ளார். இதன் காரணமாக ஆந்திராவின் நலனுக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயார் என சில நாட்களுக்கு முன்னதாக கூறியிருந்தார். ...
தமிழக அரசு கூட்டும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் தி.மு.க. பங்கேற்கும் – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தமிழக அரசு கூட்டும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் தி.மு.க. பங்கேற்கும் – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- காவிரி நதிநீர் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு அளித்துள்ள தீர்ப்பை தொடர்ந்து எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க தமிழக அரசின் சார்பில் 22-2-2018 அன்று அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருப்பதை தி.மு.க. சார்பில் வரவேற்கிறேன். தமிழக அரசே கூட்டத்தை நடத்துவதால், தி.மு.க. சார்பில் 23-2-2018 அன்று நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்ட அனைத்துக்கட்சி கூட்டம் ரத்து செய்யப்படுகிறது. அரசின் அனைத்துக்கட்சி கூட்டத்தில் தி.மு.க. பங்கேற்று காவிரி நதிநீர் பிரச்சினை குறித்து ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை தெரிவிக்கும் என்று தெரிவித்துக்கொள்கிறேன். காவிரி நதிநீர் பிரச்சினையில் தமிழக விவசாயிகளின் கருத்துகள், ஆலோசனைகள் மிக முக்கியமாக கேட்கப்பட ...
கமல் பொதுக் கூட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்பு

கமல் பொதுக் கூட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
நடிகர் கமல்ஹாசன் ராமேசுவரம் மாவட்டத்தில் உள்ள அப்துல் கலாம் வீட்டில் இருந்து தனது அரசியல் பயணத்தை நாளை தொடங்குகிறார். அங்கிருந்து சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து மதுரையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கிறார். அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்பாக கருணாநிதி, விஜயகாந்த், முத்தரசன் ஆகிய மூத்த தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார், தனது பாலிய நண்பரான ரஜினியிடமும் வாழ்த்து பெற்றிருந்தார். இந்நிலையில், மதுரையில் நாளை நடக்க இருக்கும் பொதுக் கூட்டத்தில் ஆம்ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே, சென்னை வந்திருந்த கெஜ்ரிவால் ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல்ஹாசன் வீட்டிற்கு சென்று அவரை நேரில் சந்தித்து பேசினார். அப்போது, ஊழலுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைய வேண்டிய காலம் வந்துள்ளதாகவும், கமல் அரசியலு...
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சந்திப்பு

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சந்திப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் வீட்டில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் சந்தித்து பேசினார். அப்போது மாநிலம் சார்ந்த பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் பேசினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பொன் ராதாகிருஷ்ணன், துறைமுகத் திட்டம் குறித்து முதல்வரிடம் பேசியதாக தெரிவித்தார். மேலும்,  மத்திய மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால்தான் மக்களுக்கு நல்லது கிடைக்கும் என்றும் அவர் கூறினார். தமிழகம் பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறிவருவதாக சமீபத்தில் பேசியது குறித்து கேட்டபோது, தமிழகத்தில் பயங்கரவாதிகள் பயிற்சி பெறுவதாகத்தான் கூறினேன் என்றார் பொன்.ராதாகிருஷ்ணன்.  ...
கமல் ஹாசனுடன் சீமான் சந்திப்பு – அரசியல் பயணத்திற்கு வாழ்த்து ..!

கமல் ஹாசனுடன் சீமான் சந்திப்பு – அரசியல் பயணத்திற்கு வாழ்த்து ..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
அப்துல் கலாம் வீட்டில் இருந்து நாளை அரசியல் பயணத்தை தொடங்க உள்ள நடிகர் கமல் ஹாசனை, நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் இன்று சந்தித்தார். ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல் வீட்டில் இந்த சந்திப்பு நடந்தது. அப்போது, கமலின் அரசியல் பயணத்திற்கு சீமான் வாழ்த்து தெரிவித்தார். பின்னர் இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது சீமான் கூறியதாவது:- படிக்கும் காலத்தில் இருந்தே நான் கமலின் ரசிகனாக இருந்தவன். நானும் கமலும் ஒரே பூமி,  ஒரே மண்ணைச் சேர்ந்தவர்கள்.  அரசியலில் மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும் என்று நாளை பயணத்தை தொங்குகிறார். கமலின் அரசியல் பயணம் புரட்சிகரமாகவும் வெற்றிகரமாக இருக்க வாழ்த்துக்களை தெரிவித்துள்ளேன். நானும் கமலும் இணைந்து செயல்படுவோமா, இல்லையா? என்பதை காலம் தான் முடிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். கமல் கூறும்போது, ‘என்னுடைய கொள்கை சீமானுக்கு தெரியாது. எனது சினி...
சிறுமி ஹாசினி கொலைக் குற்றவாளி தஷ்வந்திற்கு மரண தண்டனை

சிறுமி ஹாசினி கொலைக் குற்றவாளி தஷ்வந்திற்கு மரண தண்டனை

HOME SLIDER, NEWS, செய்திகள்
சென்னை மவுலிவாக்கத்தை சேர்ந்த 6 வயது சிறுமி ஹாசினி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த சாப்ட்வேர் எஞ்சினீயர் தஷ்வந்த் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறுமி ஹாசினி கொலை வழக்கு தொடர்பான விசாரணை செங்கல்பட்டு மகளிர் கோர்ட்டில் நடந்து வந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. பிற்பகல் 3 மணியளவில் தஷ்வந்த் குற்றம் இழைத்ததற்கான ஆதாரம் நிரூபிக்கப்பட்டிருப்பதாக கூறிய நீதிபதி வேல்முருகன் தஷ்வந்த் குற்றவாளி என அறிவித்தார். சுமார் ஒரு மணிநேரத்திற்கு பின்னர் தண்டனை விபரங்கள் அறிவிக்கப்பட்டன. சிறார்களுக்கு எதிராக பாலியல் குற்றம், ஆள்கடத்தல், தடயங்களை மறைத்தல் ஆகிய குற்றங்களுக்காக 31 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், கொலைக்குற்றத்திற்காக மரண தண்டனை விதிப்பதாக நீதிபதி வேல்முருகன் தீர்ப்பளித்தா...
சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் என்னும் கம்பெனியின் மூலம் தயாரிப்பு துறையிலும் அடியெடுத்து வைத்திருக்கிறார்..!

சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் என்னும் கம்பெனியின் மூலம் தயாரிப்பு துறையிலும் அடியெடுத்து வைத்திருக்கிறார்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் தற்போது சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் என்னும் கம்பெனியின் மூலம் தயாரிப்பு துறையிலும் அடியெடுத்து வைத்திருக்கிறார். சிவாவின் நெருங்கிய நண்பனாகவும், சூப்பர் ஸ்டாரின் கபாலி படத்தில் வரும் நெருப்புடா பாடலின் மூலம் மிகவும் பிரபலமான அருண்ராஜா காமராஜ் இயக்கும் படத்தை சிவா தயாரிக்கிறார். கிரிக்கெட் பின்னணியில் உருவாகும் இந்த படம் கிரிக்கெட்டில் சாதிக்க துடிக்கும் மகளுக்கும், ஆதரவான அப்பாவுக்கும் இடையில் நடக்கும் கதையை மையப்படுத்தியது. இதுகுறித்து சிவகார்த்திகேயன் கூறும்போது, ‘திரைத்துறை தான் எனக்கு பெயரும், புகழும் கொடுத்தது. இந்த துறைக்கு நான் நிறைய கடமைப்பட்டிருக்கிறேன். சாதிக்கும் கனவில் நாங்கள் சுற்றிய போது எல்லா நிலைகளிலும் என்னுடன் இருந்த, என் நண்பர்களின் கனவையும் புரிந்து கொள்வது என் கடமையாக உணர்கிறேன். அந்த வகையில் இந்த படத்தின் இயக்குனர் அரு...