செவ்வாய்க்கிழமை, ஜூலை 7
Shadow

Author: Kodanki

மாணிக் என் வாழ்வில் நடந்த உண்மை கதை – இயக்குனர் மார்ட்டின்

மாணிக் என் வாழ்வில் நடந்த உண்மை கதை – இயக்குனர் மார்ட்டின்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
மாணிக்" என்னுடைய வாழ்க்கையில் நடந்த உண்மை கதை - இயக்குனர் மார்ட்டின் !"மாணிக்" திரைப்படத்தைப் பற்றி இயக்குனர் மார்ட்டின் பேசியது :-       நான் ஒரு விஸ்காம் மாணவன். எனக்கு மிகப் பெரிய ஆசை ஒரு தனியார் நியூஸ் சேனலுக்கு வேலைக்கு செல்ல வேண்டும் என்பது. ஆனால், அங்கோ அவர்கள் எனக்கு சரியான ப்ரொபைல் இல்லை என்று சொல்லி வெளியே அனுப்பினார்கள். சரியான மீடியா ப்ரொபைல் வேண்டும் என்று நான் குறும்படம் ஒன்றை எடுத்தேன். அதை நாளைய இயக்குனர் நிகழ்ச்சிக்கு அனுப்பினேன். ஆனால் நான் செலக்ட் ஆகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றேன். இறுதிச் சுற்று வரை சென்றேன். இயக்குநர் சுந்தர் C அவர்கள் என்னை இதே பாணியில் பணியாற்ற சொன்னார். நானும் லாஜிக் இல்லாமல் கதை செய்யும் பாணியில் இப்போது வரை பயணித்து 'மாணிக்' படத்தை இயக்கியுள்ளேன். 'மாணிக்' என்னுடைய வாழ்க்கையில் நடந்த கதை என்றே கூறலாம். இப்படத்தின் கதாபாத்திரங்க...
பிரான்மலை கோடங்கி விமர்சனம்

பிரான்மலை கோடங்கி விமர்சனம்

HOME SLIDER, REVIEWS, திரைப்படங்கள், விமர்சனம்
பிரான்மலை விமர்சனம் காதல் படத்தை இன்னொரு டைமன்ஷனில் காட்டியிருக்கும் படம் தான் பிரான்மலை. வளரி கலைக்கூடம் தயாரிப்பில் வர்மன் , நேஹா ஜோடி நடித்துள்ள பிரான்மலை சமூகத்தில் இப்போதும் யதார்த்தம் இதுதான் என்பதையும், வெளியே தெரிவதெல்லாம் வேஷம் என்பதையும் பட்டவர்த்தனமாக வலியோடு சொல்கிறது. கண்டிப்பான அப்பா வேலா ராமமூர்த்தி தன் மகன் வர்மன் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய வெளியூருக்கு வேலைக்கு போக சொல்கிறார். அப்பாவின் பேச்சை மீற முடியாமல் அதே நேரம் தனது நண்பன் பிளாக் பாண்டி இருக்கும் ஊருக்கு செல்கிறார். அங்கே ஆசிரமத்தில் வளரும் ஹீரோயின் நேஹாவை பார்க்கிறார். பார்த்ததும் காதல். நேஹாவுக்கு திடீரென ஒரு சிக்கல் அதை ஹீரோ எப்படி சரி செய்தார். இவர்கள் காதல் கை கூடியதா. காதலர்களை வேலா ராமமூர்த்தி என்ன செய்கிறார் என்பது தான் மீதி கதை. அறிமுக நடிகர் என்றே தெரியாமல் வர்மன் தன் கதாபாத்திரத்தில் அத...
நடிகர் சங்க கட்டிட நிதிக்கு ஐசரி கணேஷ் ரூ.1 கோடி நன்கொடை..!

நடிகர் சங்க கட்டிட நிதிக்கு ஐசரி கணேஷ் ரூ.1 கோடி நன்கொடை..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
நடிகர் சங்க கட்டிட நிதிக்கு ஐசரி கணேஷ் ரூ.1 கோடி நன்கொடை தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு சென்னை தியாகராய நகரில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. தரை தளத்துடன் மூன்று மாடிகளில் இந்த கட்டிடம் அமைய உள்ளது. ரூ.30 கோடிக்கும் அதிகமான செலவில் இந்த கட்டிடத்தை கட்டுகின்றனர். நடிகர் சங்க அலுவலகம் உடற் பயிற்சி கூடம், கருத்தரங்கு கூடம், திருமண மண்டபம் உள்ளிட்டவை இந்த கட்டிட வளாகத்தில் அமைய உள்ளன. கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடக்கிறது. மினி திருமண மண்டபம் கட்ட ரூ.1கோடி நன்கொடை அளித்த ஐசரி கணேஷ் வருகிற ஜூன் அல்லது ஜூலை மாதம் கட்டுமான பணிகள் முடிவடைந்து நடிகர் சங்க கட்டிடம் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கட்டிடத்தில் ரூ.2 கோடி செலவில் ஐசரி வேலன் பெயரில் அமைய உள்ள மினி திருமண மண்டபத்திற்கான முழு செலவையும் நடிகர் சங்க அறக்கட்டளையின் அறங்காவலர் குழு உறுப்பினர் ஐசரி கணேஷ் ஏற...
அடல்ட் ஹாரர் காமெடி படத்தில் யோகிபாபு ஹீரோவாம்..!

அடல்ட் ஹாரர் காமெடி படத்தில் யோகிபாபு ஹீரோவாம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் 'அடல்ட் ஹாரர் காமெடி' ஜானர் படங்களுக்கு ஒரு கலவையான வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் யோகிபாபு, யாஷிகா ஆனந்த் மற்றும் நிக்கி தம்போலி ஆகியோர் நடிக்க, No.1 Productions தயாரிக்கும் பெயரிடப்படாத படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர் விநாயக் சிவா தன் படத்தை பற்றி சில தகவல்களை பகிர்ந்து கொள்கிறார். "இந்த படத்தை நான் 'அடல்ட் ஹாரர் காமெடி' என்று குறிப்பிடுவதை விட 'குறும்பு' வகையாக படம் என சொல்வேன். அதை நியாயப்படுத்தும் வகையிலான ஒரு சரியான கதை இருக்கிறது. ஸ்கிரிப்ட் எழுதும்போது நான் கவனத்தில் வைத்திருந்த முக்கிய விஷயம், யாரையும் காயப்படுத்தவோ அல்லது இழிவுபடுத்தவோ கூடாது என்பது தான். வேடிக்கையான மற்றும் முழுமையான பொழுதுபோக்கு அம்சங்களுடன் அச்சமூட்டும் விஷயங்களும் படத்தில் இருக்கும். மேலும் விஷுவல் எஃபெக்ட்ஸ் மற்றும் 3D மூலம் திகிலான மற்றும் பயமுறுத்தும் புதிய அனுபவத...
சினிமாகாரர்கள் ஏன் அரசியலுக்கு வருகிறார்கள் – ஆரி தகவல்

சினிமாகாரர்கள் ஏன் அரசியலுக்கு வருகிறார்கள் – ஆரி தகவல்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
'ஸரோமி மூவி கார்லேண்டு' நிறுவனம் சார்பில் ஆர்.தங்கப்பாண்டி தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ரூட்டு’.ஏ.சி. மணிகண்டன் இயக்கியுள்ள இந்தப்படத்தில் கதாநாயகனாக கவித்ரன், கதாநாயகியாக மதுமிதா மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் மைம் கோபி, அப்புக்குட்டி, கூல் சுரேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு விஜய் பிரபு இசையமைத்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. படத்தின் தயாரிப்பாளர் தங்கபாண்டி பேசும்போது, “சென்னை போன்ற பெரிய நகரங்களில் அன்றாடம் நாம் ஒரு இடத்திலிருந்து கிளம்பி, நினைத்த நேரத்தில் இன்னொரு இடத்திற்கு செல்ல முடியுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. அதை மையப்படுத்தி அதனால் ஏற்படும் விளைவுகளை வைத்து இந்த படம் உருவாகியுள்ளது. படம் பார்க்கும் ஒவ்வொருவரும் அட இந்த நிகழ்வு நமக்கு நடந்தது போன்று இருக்கிறதே என்கிற உணர்வு நிச்சயம் ஏற்படும...
இளம் நடிகரிடம் ஒரு கோடி  ஏமாற்றிய புகார் மிஷ்கினுக்கு கிரைம்,த்ரில்லர் படங்களை இயக்க கோர்ட் திடீர் தடை..!

இளம் நடிகரிடம் ஒரு கோடி ஏமாற்றிய புகார் மிஷ்கினுக்கு கிரைம்,த்ரில்லர் படங்களை இயக்க கோர்ட் திடீர் தடை..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, துப்பறிவாளன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மிஷ்கின் மீது அறிமுக நடிகர் மைத்ரேயா ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். தன்னை வைத்து படம் எடுப்பதாக சொல்லி பணம் வாங்கி ஏமாற்றிவிட்டு அதே கதையை உதயநிதியை வைத்து எடுப்பதாக குற்றம்சாட்டி இருந்தார். மைத்ரேயாவின் மனுவை ஏற்று கிரைம் திரில்லர் படம் எடுக்க மிஷ்கினுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மைத்ரேயா அளித்த பேட்டியில் ’மிஷ்கினுடன் 2015-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்தோம். துப்பறிவாளன் முடிந்ததும் படம் தொடங்கலாம் என்று கலைத்தாய் மீது சத்தியம் செய்தார். இப்போது எனக்கு சொன்ன கதையை வேறு ஒரு ஹீரோவை வைத்து எடுக்கிறார். எங்கள் படத்துக்காக அவருக்கு 3 கோடி ரூபாய் சம்பளம் பேசி, ஒரு கோடி ரூபாயை அட்வான்சாக கொடுத்தோம். பலமுறை பேச முயற்சித்தோம். அவர் முன்வரவில்லை. தயாரிப்பாளர் சங்கத்தில் அவர் செயற்குழு உறுப்பினராக இருப்பதால் சங்கம் மூலம...
ஜெ.,ஆக வித்யாபாலன் சசி.,ஆக சாய் பல்லவி பரபரக்கும் ஏ.எல்.விஜய் படம்..!

ஜெ.,ஆக வித்யாபாலன் சசி.,ஆக சாய் பல்லவி பரபரக்கும் ஏ.எல்.விஜய் படம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் போட்டி வலுத்து வருகிறது. இயக்குநர் மிஷ்கினின் உதவி இயக்குநர் பிரியதர்ஷினி இயக்கத்தில் ஜெயலலிதாவாக நித்யா மேனன் நடிக்கும் ‘தி அயர்ன் லேடி’ என்ற படம் உருவாகவுள்ளது. இயக்குநர் கவுதம் மேனன் இயக்கத்தில் ஜெயலலிதா கேரக்டரில் ரம்யா கிருஷ்ணன் நடிக்க வெப் சீரிஸ் ஒன்றுக்கு உருவாகவுள்ளது. மேலும், இயக்குநர் இமயம் பாரதிராஜாவும் ஜெயலலிதா வாழ்க்கையை தழுவி படமாக்க திட்டமிட்டு வருகிறார். இவர்களின் பட்டியலில் தற்போது இயக்குநர் ஏ.எல்.விஜய்யும் இணைந்துள்ளார். ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் ஜெயலலிதாவின் கேரக்டரில் பாலிவுட் நடிகை வித்யா பாலன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. சினிமாவில் அறிமுகமானது முதல் அரசியலில் களமிறங்கி தமிழக முதல்வர் ஆன வரையில் நடந்த சம்பவங்களை மையப்படுத்தி இப்படம் உருவாகவுள்ளது. இதில் ஜெயலலிதாவின் உயிர் ...
குறுக்கு வழியில் பதவி பிடித்த பார்த்திபன் நிர்வாகத்தை குலைத்த விஷால் கொந்தளிக்கும் சுரேஷ் காமாட்சி

குறுக்கு வழியில் பதவி பிடித்த பார்த்திபன் நிர்வாகத்தை குலைத்த விஷால் கொந்தளிக்கும் சுரேஷ் காமாட்சி

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
விஷால் தரப்புக்கும் அதன் எதிரணிக்கும் முட்டல் மோதல் நடந்ததுதான் கடந்தவார பரபரப்பு.அதன் தொடர்சியாக விளக்கம் கேட்டு 27 தயாரிப்பாளர்களுக்கு நோட்டிஸ் அனுப்பியிருக்கிறார் தயாரிப்பாளர் சங்க தலைவர்.அதற்கும்,பார்த்திபன் எப்படி பதவிக்கு வந்தார் என்பது குறித்தும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஏகப்பட்ட கேள்விகளை முன் வைத்து வெளுத்து வாங்கியிருக்கிறார். தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தை பூட்டிவிட்டோம் என 27 பேருக்கு ஷோகாஸ் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளது திரு விசால் தலைமையிலான குறைந்த பட்ச செயற்குழு.பாதிபேர் ராஜினாமா செய்துவிட்டபின் அதில் இருப்பது குறைந்த பட்சம்தானே?இந்த நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டபின் எதுவும் முறைப்படி நடைபெறவில்லை.பொதுக்குழு முறையாக நடக்கவில்லை.பொதுக்குழுவில் எடுக்க வேண்டிய தீர்மானங்களை தமக்கு வேண்டியவர்களை வைத்துக்கொண்டு செயற்குழுவில் நிறைவேற்றும் நிர்வாகம்...
விஸ்வாசம் படத்தை கைப்பற்றிய அருண்பாண்டியன்..!

விஸ்வாசம் படத்தை கைப்பற்றிய அருண்பாண்டியன்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
அஜித்குமார் நடித்துள்ள விஸ்வாஸம் வர்த்தக வட்டாரங்களில் மிகவும்  சாதகமான சூழ்நிலையை உருவாக்கியிருக்கிறது. 2019ஆம் ஆண்டில் மிகுந்த எதிர்பார்ப்புக்குரிய திரைப்படங்களில் ஒன்றான, சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த திரைப்படம், இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் ஒரு மிகப்பெரிய வணிக சந்தையை கொண்டுள்ளது. தற்போது ரஷ்யாவில் மிக அதிகமான திரையரங்குகளில் வெளியாகும் முதல் தமிழ் படம் என்ற சாதனையை படைத்திருக்கிறது. ரஷ்யா மற்றும் உக்ரேன் நாடுகளில் திரைப்படத்தை வெளியிடும் செவன்த் சென்ஸ் சினிமேடிக்ஸின் பிரசாந்த் அவர்கள் இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ".அஜித்குமார் அவர்களின் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்திழுக்கும் கதை தேர்வு, வெளிநாட்டு சந்தையில் அவருக்கென ஒரு தனி மார்க்கெட்டை உருவாக்கியுள்ளது. செவன்த் சென்ஸ் சினிமாடிக்ஸ் சார்பில் ரஷ்யா மற்றும் உக்ரேன் நாடுகளில் 'விஸ்வாஸம்' படத்தை வெளியிடுவதில...
2019 புத்தாண்டை குடும்பத்தோடு அமெரிக்காவில் கொண்டாடுகிறார் ரஜினிகாந்த்..!

2019 புத்தாண்டை குடும்பத்தோடு அமெரிக்காவில் கொண்டாடுகிறார் ரஜினிகாந்த்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
2019 புத்தாண்டு கொண்டாட்டத்தை குடும்பத்தோடு அமெரிக்காவில் கொண்டாடுகிறார் ரஜினிகாந்த். பேட்ட ரிலீசுக்கு முன் சென்னை திரும்புகிறார். அமெரிக்கா சென்றுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடியுள்ளார். ஷங்கரின் ‘2.0’ படத்தை தொடர்ந்து, கார்த்திக் சுப்புராஜின் ‘பேட்ட’ பட பணிகளை முடித்த ரஜினிகாந்த், ஓய்வெடுக்க தனது குடும்பத்துடன் அமெரிக்கா சென்றார். அங்கு ரசிகர்களுடன் ரஜினிகாந்த் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது அதைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் அவரது மருமகனும் நடிகருமான தனுஷும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. தனுஷின் தோள் மீது ரஜினி கைப்போட்டுக் கொண்டு சிரிக்கும் புகைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். புத்தாண்டு கொண்டாட்டங்களை முடித்துக் கொண்டு சென்னை திரும்பும் ரஜினி, பொ...