மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது!
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது!
ஒரு திருமணம்! ஒரு இரவு! முடிவில்லா குழப்பம்! வயிறுவலிக்க சிரிக்கலாம்!!
சில திருமணங்கள் இனிய நினைவுகளை உருவாக்கும். சில திருமணங்கள் மறக்க முடியாத கலகலப்பையும் குழப்பத்தையும் உருவாக்கும். அப்படிப்பட்ட ஒரு மறக்க முடியாத இரவை திரையரங்குகளில் கொண்டாட ரசிகர்களை அழைக்கிறது மைத்ரி மூவி மேக்கர்ஸ். முழுக்க முழுக்க குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய நகைச்சுவை பொழுதுபோக்கு திரைப்படமான ‘மொத ராத்திரி’ ஆகஸ்ட் 21 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது.
இயக்குநர் ராஜா கருப்பசாமி இயக்கியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படம் எதிர்பாராத திருப்பங்கள், வேடிக்கையான தவறான புரிதல்கள், மனதை தொடும் உணர்வுகள் மற்றும் இடைவிடாத நகைச்சுவை என ஒரு சாதாரண கிரா...









