காவிரி மேலாண்மை சர்ச்சை: திமுக மாநாட்டில் ஸ்டாலின் எச்சரிக்கை!
ஈரோடு பெருந்துறை அருகே சரளையில் கோவை தேசிய நெடுஞ்சாலையில் தி.மு.க. மண்டல மாநாடு நேற்று தொடங்கியது, இன்று மாநாட்டின் 2-வது நாள் நிகழ்ச்சி காலை 9 மணிக்கு இறையன்பு குத்தூஸ் குழுவினரின் இசை நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு தலைப்புகளில் கட்சியின் முன்னோடி தலைவர்கள் பேசினார்கள்.
மாநாட்டில் பங்கேற்க மு.க.ஸ்டாலின் காலை 10.30 மணிக்கு மாநாட்டு மேடைக்கு வந்தார். காலை 11.30 மணியளவில் மு.க.ஸ்டாலின் மாநாட்டின் சிறப்பு தீர்மானத்தை வாசித்தார். அவர் பேசியதாவது: "தமிழ்நாட்டின் உயிர் நாடிப் பிரச்சினையான காவிரி நதிநீர் உரிமைக்காகத் தி.மு.க. தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. கலைஞர் தமிழகத்தின் முதல்வராகவும், சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் பிரதமராகவும் இருந்தபோது தான், தலைவர் கலைஞரின் வலியுறுத்தலை ஏற்று, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி நடுவர் மன்றத்தை மத்திய அரசு அமைத்தது.
நடுவர் மன்றத்தின் இட...









