இந்திரஜித் விமர்சனம்
1400 வருடம் முன் சூரியனில் இருந்து விழுந்த மருத்துவ குணம் வாய்ந்த ஒரு அபூர்வ பொருளைத் தேடும் இந்திய தொல்லியல் துறையின் வீர தீரம் தான் கரு!
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாக சூரியனிலிருந்து தெறித்துவரும் ஒரு சிறியதுகள் பூமியில் வந்து விழுகிறது.மனிதனுக்கு ஏற்படும், எப்பேர்பட்ட காயங்களையும், தீராத நோய்களையும் குணப்படுத்தும் சக்தி அந்த துகளுக்கு இருப்பதால் சித்தர்கள்அதை ஒரு ரகசிய இடத்தில் வைக்கிறார்கள். அவர்கள்காலத்திற்குப் பிறகு அந்தப் பொருள் எங்கே இருக்கிறது என்பது தெரியாமலேயே போய்விடுகிறது.இதை தொல்பொருள்ஆராய்ச்சியின்பேராசிரியராக இருக்கும் சச்சின்கேதகர் தேட ஆரம்பிக்கிறார்.
இவரிடம் உதவியாளராக வந்துசேருகிறார் இந்திரஜித். -கௌதம் கார்த்திக், அதேநேரத்தில் ,இந்திய தொல்லியல்துறையைச் சேர்ந்த அதிகாரிஒருவரும் அந்தப்பொருளைத்தேடுகிறார். இறுதியில் அந்த சக்தி வாய்ந்தசிறு துகள் யாரிடம் கிடைத்தது...







