காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுமா? – விவசாயிகள் எதிர்பார்ப்பு
மேட்டூர் அணை மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், கரூர், நாகப்பட்டணம், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கடலூர் ஆகிய 12 மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந் தேதி முதல் ஜனவரி மாதம் 28-ந் தேதி வரை காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியாக இருந்தால் தான் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும். இதேபோல் நீர்மட்டம் 90 அடிக்கு குறைவாக இருந்தாலும் அணைக்கு வரும் நீர்வரத்து திருப்திகரமாக இருந்தால் மட்டுமே தண்ணீர் திறந்துவிடப்படும்.
ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக பருவ மழை சரிவர பெய்யாததாலும் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீர் திறந்துவிடப்படாததாலும் குறிப்பிட்ட காலத்தில் அணையில் இருந்து தண்ணீர் திறக்க முடிய...









