சனிக்கிழமை, ஜூலை 4
Shadow

Author: Kodanki

மருத்துவமனையில் திருமாவளவன் அனுமதி

மருத்துவமனையில் திருமாவளவன் அனுமதி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உடல் ஒவ்வாமை ஏற்பட்டிருப்பதால் அதற்கு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. விழுப்புரத்தில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டபோதும் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உடற்சோர்வு, தூக்கமின்மை, நேரத்திற்கு உணவு சாப்பிடாமல் இருப்பதால் உடல்நிலையில் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாகவும், ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் டாக்டர்கள் கூறியுள்ளனர்.  சென்னை திரும்பிய பிறகு இன்று காலை மீண்டும் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது....
ஜானகி எம்.ஜி.ஆர். ஆக ரித்விகா ..!

ஜானகி எம்.ஜி.ஆர். ஆக ரித்விகா ..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கை வரலாற்றினை “ காமராஜ் “என்ற பெயரில்  திரைப்படமாக  தயாரித்து வெளியிட்ட  ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தற்போது மக்கள் திலகம்  எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாற்றினை  “ எம்.ஜி.ஆர் “ என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரித்து வருகிறது. ஆனையடி பள்ளியில் படித்துக்கொண்டிருந்த எம்.ஜி.ஆரின் கல்வி வறுமையால் தடைபட்டு நாடகக் கம்பெனியில் சேரும் நிலை ஏற்பட்டது. அப்போது அந்த நாடக கம்பெனி முதலாளி, சிறுவன் தங்க விக்ரகம் போல் இருக்கிறான் எனக் கூறினாராம். எனவே இந்த படத்திற்கு அது போன்ற ஒரு சிறுவனுக்கான தேர்வு நடைபெற்றது. இறுதியில் அத்வைத் என்ற சிறுவன் தேர்வு செய்யப்பட்டு எம்.ஜி.ஆரின் பால்யகால வேடத்தில் நடிக்கிறான். எம்.ஜி.ஆரைப் போன்றே முகத்தோற்றம் கொண்ட பிரபல விளம்பரப்பட நாயகன் சதீஷ்குமார் எம்.ஜி.ஆர் பாத்திரத்தில் நடிக்கிறார். எம்.ஆர்.ராதாவாக பாலாசிங், டைரக்டர் பந்துளுவாகY.G.மகேந்திரன்...
எம்.ஜி.ஆர் படத்தின் டிரைலர் வெளியீடு..!

எம்.ஜி.ஆர் படத்தின் டிரைலர் வெளியீடு..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
  எம்.ஜி.ஆர் படத்தின் டிரைலர் வெளியீட்டுவிழா பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கை வரலாற்றினை “ காமராஜ் “என்ற பெயரில்  திரைப்படமாக  தயாரித்து வெளியிட்ட  ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தற்போது மக்கள் திலகம்  எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாற்றினை  “ எம்.ஜி.ஆர் “ என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரித்து வருகிறது. எம்.ஜி.ஆரைப் போன்றே முகத்தோற்றம் கொண்ட பிரபல விளம்பரப்பட நாயகன் சதீஷ்குமார் எம்.ஜி.ஆர் பாத்திரத்தில் நடிக்கிறார். எம்.ஆர்.ராதாவாக பாலாசிங், டைரக்டர் பந்துளுவாகY.G.மகேந்திரன், எம்.ஜி.ஆரின் அண்ணன் சக்கரபாணியாக மலையாள நடிகர் ரகு, பாய்ஸ் நாடக கம்பெனி உரிமையாளராக தீனதயாளன், உயிர் தொண்டனாக வையாபுரி ஆகியோர் நடிக்கிறனர். அ.பாலகிருஷ்ணன் இத்திரைப்படத்தை தயாரித்து, இயக்குகிறார். இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.. விழாவில் முன்னாள் அமைச்சர் H.V.ஹண்டே, முன்னாள் மேயர் ச...
இயக்குனரிடம் கன்னத்தில் பளார் வாங்கிய தொடரா நாயகி..!

இயக்குனரிடம் கன்னத்தில் பளார் வாங்கிய தொடரா நாயகி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், முன்னோட்டம்
  "இன்னொரு தடவை கன்னத்தில அறைங்க சார்" ; இயக்குநரிடம் கெஞ்சிய 'தொட்ரா' நாயகி..! சென்னைக்கு பஸ் பிடித்து வந்து 'தொட்ரா' இயக்குநரை மிரட்டும் ஜாதி அமைப்புகள்..! குரு யாரென்று சொல்ல விரும்பாத 'தொட்ரா' இசையமைப்பாளர் 'தொட்ரா' தயாரிப்பாளரிடம் பாட்டு பாடியே பணம் கறந்த நடிகர்..! ஜெ.எஸ்.அபூர்வா புரொடக்சன்ஸ் சார்பில் ஜெய்சந்திரா சரவணக்குமார் தயாரித்துள்ள படம் ’தொட்ரா’.  இயக்குநர் பாக்யராஜின் சீடரான மதுராஜ் இந்தப்படத்தின் கதை திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். பிருத்விராஜன் நாயகனாகவும், மலையாள நடிகை வீணா நாயகியாகவும் நடித்துள்ளனர். இந்தப்படத்தில்,வீணாவின் அண்ணனாக, படத்தை தாங்கி கொண்டுபோகிற, கதைக்கு திருப்புமுனை ஏற்படுத்தும் முக்கிய கேரக்டரில் எம்.எஸ்.குமார் அறிமுகமாகிறார். இவர் வேறு யாருமல்ல, இந்தப்படத்தின் தயாரிப்பாளர் ஜெய்சந்திராவின் கணவர் தான்.. இவர்களுடன் இயக்குன...
காமெடியாக உருவாகும் “இராஜாவின் பார்வை இராணியின் பக்கம்“  

காமெடியாக உருவாகும் “இராஜாவின் பார்வை இராணியின் பக்கம்“  

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், முன்னோட்டம்
  விகாஷ் பிலிம் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பில் விகாஷ் ரவிச்சந்திரன்  தயாரிக்கும் படம்  “ இராஜாவின் பார்வை இராணியின் பக்கம் “   இந்த படத்தில் ஆதவா கதாநாயகனாக அறிமுகமாகிறார். இவர் 8 பேக் உடற்கட்டுடன் அதிரடி சண்டைக் காட்சியில் நடித்துள்ளார். நாயகியாக அவந்திகா நடித்திருக்கிறார். இவர் மலையாள படங்களில் நடித்தவர் . மற்றும் மதுமிதா, கானாஉலகநாதன், சிங்கப்பூர் தீபன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.    ஒளிப்பதிவு   சந்தான கிருஷ்ணன். லியாண்டர் லீ மார்டின் இசையில் பாடல்கள்.  விகாஷ் ரவிச்சந்திரன் தயாரிக்கிறார்.  கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும்     அழகுராஜ் படம் குறித்து கூறும் போது... இது முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாக்கி இருக்கிறோம். தன்னை ஏமாற்றிய காதலியை பழிவாங்க ஒரு பெரிய டானின் உதவியை நாடிச்செல்கிறார் நாயகன். அந்த டான் நாயகனை எப்படியெல்லாம் பயன்படுத்திக் கொண்டார் என்பது க...
அரசியல் இல்லா மக்கள் பணி தனிக்கொடி அறிவித்தார் விஷால்..!

அரசியல் இல்லா மக்கள் பணி தனிக்கொடி அறிவித்தார் விஷால்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  "விஷால் மக்கள் நல இயக்கம்" கொடியை அறிமுகம் செய்தார் விஷால் ! நடிகர் விஷால் தன்னுடைய பிறந்தநாளான இன்று தனது ரசிகர்களை சந்தித்து அவர்கள் முன் கலைவாணர் அரங்கத்தில் வைத்து தன்னுடைய ரசிகர் நற்பணி இயக்கத்தை மக்கள் நல இயக்கமாக மாற்றி அதன் கொடியை அறிமுகம் செய்து உரையாற்றினார். வந்திருக்கும் அத்தனை பேருக்கும் எனக்கும் பெரிய வித்தியாசம் ஏதும் இல்லை இந்த மேடை மட்டும்தான்.உங்களில் ஒருத்தனான நான் இன்று உங்களால் மேடை ஏறி பேசுகிறேன். இது என்னுடைய வெற்றி அல்ல உங்களுடைய வெற்றி.ஒரு விஷயத்தை கையில் எடுத்துவிட்டால் அதை முடிக்காமல் அடுத்த விஷயத்துக்கு போக கூடாது.நடிகனாக நல்லா சம்பாதித்து நாமலும்,நம்ம குடும்பமும் நல்லா இருந்தா போதும் என்று நினைத்துவிட்டு போய்விடலாம்.வீட்டுக்குள்ள போய்விட்டு மீண்டும் வீதிக்கு வர வேண்டும் அப்படி வரும் போது வீதியில் நடக்கும் சில விஷயங்களை பார்த்து சும்மா இருக்க முட...

செப்டம்பர் 30-ந்தேதி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா- தமிழக அரசு அறிவிப்பு

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
    மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை, தமிழக அரசு சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாட முடிவு செய்யப்பட்டது. அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் அரசு சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடத்தப்பட்டது. ஆனால் தவிர்க்க முடியாத காரணத்தால் கன்னியாகுமரி மாவட்டத்திலும், சென்னையிலும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா ஒத்திவைக்கப்பட்டது. தற்போது குமரி மாவட்டத்திலும், சென்னையிலும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெறும் தேதியை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:- முதல்-அமைச்சர் தலைமையில் கடந்த ஆண்டு மே மாதம் 2-ந்தேதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், அனைத்து மாவட்டங்களிலும் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவினை கொண்டாட முடிவு செய்யப்பட்டு விழா நட...
மக்கள் விரோத அரசுகளை வீழ்த்துவதே திமுக-வின் இலக்கு: முக ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம்

மக்கள் விரோத அரசுகளை வீழ்த்துவதே திமுக-வின் இலக்கு: முக ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சி தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:- என் உயிரினும் மேலான தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளே. புதிதாகப் பிறந்திருக்கின்றோம் நாம். ஆம் நம்மை ஆளாக்கிய தலைவர் கலைஞர் நம் நெஞ்சில் நிறைந்து, உலகைத் துறந்த நிலையில், அவர் காலமெல்லாம் கட்டிக்காத்த கழகம் எனும் லட்சிய தீபத்தை ஏந்தித் தொடர்ந்து மேற்செல்லும் மிகப்பெரும் பொறுப்புடன் நாம் புதிதாகப் பிறந்திருக்கின்றோம். உங்களால் உங்களுக்காகத் தலைவர் என்ற பொறுப்பை ஏற்றிருக்கும் தலைமைத் தொண்டன் நான். அரை நூற்றாண்டு காலம் தலைவர் கலைஞரின் தகுதி வாய்ந்த நிழலில்- அவரது வழிகாட்டுதலில் கழகத்தின் வளர்ச்சியிலும், சோதனைகளிலும் சம மனநிலையுடன் பங்கெடுத்து, சிறிதும் சளைக்காமல் களம் கண்ட உங்களில் ஒருவன் இன்று உங்களின் தலைவன் என்ற பொறுப்பினை உன்னதமான உங்களால் தான் பெற்றிருக்கிறேன் என்பதை உயிருள்...
4 மாதத்தில் பழைய மிரட்டலோடு பார்ப்பீர்கள் என பார்த்தீபனிடம் சொன்னாராம் விஜயகாந்த்..!

4 மாதத்தில் பழைய மிரட்டலோடு பார்ப்பீர்கள் என பார்த்தீபனிடம் சொன்னாராம் விஜயகாந்த்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
4 மாதத்தில் பழைய மிரட்டலோடு பார்ப்பீர்கள் என பார்த்தீபனிடம் சொன்னாராம் விஜயகாந்த்..! தே.மு.தி.க தலைவர் விஜய காந்த் கடந்த 25-ந்தேதி தனது 66-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். உடல்நலக்குறைவு காரணமாக அவர் அவ்வப்போது மருத்துவ சிகிச்சை எடுத்து வருகிறார். சமீபத்தில் அமெரிக்காவிற்கு சென்று சிகிச்சை மேற்கொண்டுவிட்டு வந்தார். மீண்டும் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல இருக்கிறார். நடிகர் பார்த்திபன் நேற்று விஜயகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்தியதோடு பிறந்தநாளுக்காக ஒரு மெழுகு விளக்கை பரிசளித்துள்ளார். படம் எடுத்து அதனை பகிர்ந்துள்ள பார்த்திபன் ‘முன் தினம் தளபதி, நேற்று நம்மவர், இன்று கேப்டன். அழகு மெழுகு விளக்கை பிறந்த நாள் பரிசாக அளித்து சந்தித்தேன். மனதில் பாரமும், இமையில் ஈரமும் கண்டவர் நாலே மாதத்தில் என்னை பழைய மிரட்டலுடன் காணப்போகிறீர்கள்’ என நம்பிக்கை அளித்தார் என்று பதிவிட்டுள்ளார்....