வெள்ளிக்கிழமை, ஜூலை 3
Shadow

Author: Kodanki

தமிழகத்தில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை – அரசுக்கு வைகோ எச்சரிக்கை

தமிழகத்தில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை – அரசுக்கு வைகோ எச்சரிக்கை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை; தமிழக நலன் காப்போர் மீது பாசிச அடக்குமுறை! வைகோ கண்டனம் தமிழ்நாட்டின் வாழ்வாதாரங்களைக் காக்கவும், சுற்றுச்சூழல் நாசத்தைத் தடுக்கவும், விவசாயிகள் உரிமைகளைப் பாதுகாக்கவும் போராடுகின்றவர்களை, தேசப் பாதுகாப்புச் சட்டம், தேசத்துரோகக் குற்றச்சாட்டு, குண்டர் சட்டம் ஆகிய கொடிய அடக்குமுறைச் சட்டங்களில் வழக்குப் பதிவு செய்து, அறவழிப் போராட்டக்காரர்களையும் சிறையில் அடைத்துத் துன்புறுத்துவது, தமிழக அரசின் அன்றாட நடவடிக்கை ஆகி விட்டது. நாசகார ஸ்டெர்லைட் நச்சுஆலையை எதிர்த்து, மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுக்க வந்த பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி 14 பேரை காவல்துறை சுட்டுக்கொன்றது. மரண காயமுற்று மருத்துவமனையில் இருந்தவர்களைப் பார்க்கச் சென்றவர்கள் மீதும் தடியடி நடத்தினர். அரசியல் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். சேலம் சென்னை எட்டு வழிச் சாலை குறி...
கருத்து சுதந்திரம், ஜனநாயக உரிமையை பறிக்கும் நீதிமன்ற தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது – CPM அறிக்கை

கருத்து சுதந்திரம், ஜனநாயக உரிமையை பறிக்கும் நீதிமன்ற தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது – CPM அறிக்கை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
கருத்து சுதந்திரம் மற்றும் ஜனநாயக உரிமைகளை பாதிக்கும் விதத்தில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது சென்னை - சேலம் 8 வழி பசுமைச்சாலை திட்டத்தை எதிர்த்து பொதுக்கூட்டம் நடத்துவதற்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி கே.வி. சுசீந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகினார். இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் அதற்குக் கூறியுள்ள காரணங்கள் அரசியல் சாசனம் வழங்கியிருக்கிற அடிப்படை உரிமைகளுக்கு எதிராக உள்ளன என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்டுகிறது. அரசு முன்மொழியும் திட்டங்களில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டவும், எதிர்த்து இயக்கம் நடத்தவும் இந்திய அரசியல் சட்டம் உரிமைகளை வழங்கியுள்ளது. அந்த அடிப்படையில் சேலம் பசுமை வழிச்சாலைத் திட்டத்தை எதிர்க்கிற உரிமை அனைவருக்கும் உண்டு. குறிப்பாக, ஏற்கனவ...
பெண் இயக்குனரின் கைவண்த்தில்  வெடிகுண்டு பசங்க ஆடியோ வெளியீடு

பெண் இயக்குனரின் கைவண்த்தில் வெடிகுண்டு பசங்க ஆடியோ வெளியீடு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
ஸ்ரீ ஐஸ்வர்ய ஜனனி கிரியேசன்ஸ்”சார்பில் ஜனனி கே. பாலு மற்றும் “வீடு புரொடக்ஷன்ஸ்”சார்பில் தினேஷ் குமார் தயாரித்திருக்கும் திரைப்படம் “வெடிகுண்டு பசங்க”. முழுக்க முழுக்க மலேசியாவில் நடப்பது மாதிரியான கதைப் பின்னணி கொண்ட இப்படத்தை பெண் இயக்குநரான Dr.விமலா பெருமாள் இயக்கியிருக்கிறார். இப்படத்தில் நாயகனாக தினேஷ் குமார், நாயகியாக சங்கீதா கிருஷ்ணசாமி  நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் தங்கமணி வேலாயுதன், டேவிட் ஆண்டனி, ஆல்வின் மெர்வின் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். “டோரா”, “குலேபகாவலி” படங்களுக்கு இசையமைத்த விவேக் & மெர்வின் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்கள். பி. சிதம்பரம் ஒளிப்பதிவாளராகவும், ஆனந்த் ஜெரால்டின் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றி இருக்கிறார்கள். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமன், கே.பாக்யராஜ், நடிகர்கள் நாசர், சதீஷ், பிருத்விராஜ்,...
கார்த்திக்-கவுதம்கார்த்திக் இந்த இணைதான் மிஸ்டர்.சந்திரமெளலி பட வெற்றிக்கு காரணம் – தனஞ்செயன் பெருமிதம்

கார்த்திக்-கவுதம்கார்த்திக் இந்த இணைதான் மிஸ்டர்.சந்திரமெளலி பட வெற்றிக்கு காரணம் – தனஞ்செயன் பெருமிதம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
மிஸ்டர் சந்திரமௌலி படத்திற்காக தனது படக்குழுவுக்கு தனது மனதில் ஆழத்தில் இருந்து நன்றி தெரிவிக்கும் தயாரிப்பாளர் ஜி. தனஞ்செயன் அவர்களிடம் இருந்து வெளியாகும் வார்த்தைகள் இவை.   இயக்குனர் திரு பற்றி அவர் பாராட்டி கூறுகையில், "அவருடன் சேர்ந்து பணியாற்றுவது மிகவும் மகிழ்ச்சிகரமான ஒன்று. அவரது உற்சாகமான பொறுப்பு, நேர்மை, அர்ப்பணிப்பு, புதுமையான சிந்தனை, அணியின் புத்துணர்ச்சியை மேம்படுத்துபவர் என முழு அணியும் நேசிக்கும் ஒரு நல்ல தலைவராக இருக்கிறார்.   தொழில்நுட்பக் குழுவை பற்றி பேசும்போது, "ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம்.நாதன் அவரது முழுமையான அர்ப்பணிப்பை இந்தத் திரைப்படத்துக்கு அளித்திருக்கிறார். மேலும் அவருடைய காட்சியமைப்புகள் ரசிகர்களை மிகவும் ஈர்க்கும். நிச்சயமாக, இசையமைப்பாளர் சாம் சிஎஸ் இந்த படத்தின் மிகப்பெரிய சொத்து. படத்தை முடித்து வீட்டுக்கு செல்லும் ரசிகர்கள் அவரது பாடல்கள் மற்றும் பி...
NTR வாழ்க்கை வரலாற்று படத்தில் வித்யாபாலன்..!

NTR வாழ்க்கை வரலாற்று படத்தில் வித்யாபாலன்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  ஆந்திராவின் முன்னாள் முதல்வரும், தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாரும் இன்றளவும் பல நடிகர்களுக்கு முன்னோடியாகவும் திகழ்பவர் என்.டி.ராமராவ். தற்போது பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக என்.டி.ராமராவ் அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக்கப்படுகிறது. "என்.டி.ஆர் பயோபிக்" என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில்  நந்தமுரி பாலகிருஷ்ணா, தந்தையின்  வேடத்தில் நடிக்கின்றார்.  இந்த படத்தில் என்.டி.ஆரின்  மனைவி பசவதாரகம் வேடத்தில்  இந்தி நடிகை வித்யாபாலன் நடிக்கின்றார். வித்யாபாலன் மிகவும் முக்கியதுவம்வாய்ந்த கதாபாத்திரத்தில்  நடிக்கின்றார் என்பதால் ஏற்கனவே இருந்த இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மேலும் கூடியுள்ளது. கிருஷ் இயக்கும் இப்படத்தை நந்தமுரி பாலகிருஷ்ணா தயாரிக்க உடன் சாய் கோரப்பட்டி, விஷ்ணு வர்தன் இந்தூரி இணைந்து  தயாரிக்கின்றனர்....
துணை நிலை ஆளுனருக்கு தனி அதிகாரம் இல்லை – உச்ச நீதிமன்றம் வரலாற்று தீர்ப்பு

துணை நிலை ஆளுனருக்கு தனி அதிகாரம் இல்லை – உச்ச நீதிமன்றம் வரலாற்று தீர்ப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
டெல்லியில் யாருக்கு உண்மையான அதிகாரம் இருக்கிறது என ஆம் ஆத்மி கட்சி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ஏ.கே.சிக்ரி, ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய். சந்திரசூட், அசோக்பூஷன் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து வந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. இவ்வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு விபரங்கள் கீழ்வருமாறு:- மத்திய அரசும் மாநில அரசுகளும் கூட்டட்சி தத்துவப்படி செயல்பட வேண்டும். மக்களின் பிரதிநிதிகள் மக்களின் கேள்விக்கு பதில் கூற கடமைப்பட்டவர்கள். அரசியல் சாசனத்தை மதிக்கும் வகையில் அனைவரின் செயல்பாடு இருக்க வேண்டும். மக்கள் நல திட்டங்கள் தாமதமானால் துணை நிலை ஆளுநர் மற்றும் டெல்லி அரசு என இருவருமே பொறுப்பு. மாநில அரசுகளின் சட்டமன்ற அதிகாரங்களில் மத்திய அரசு தலையிட கூடாது. சுப்ரீம் கோர்ட்டின் முந்தைய தீர்ப்புகள் ...
ராஜபாண்டி இயக்கத்தில் அரவிந்த்சாமி..!

ராஜபாண்டி இயக்கத்தில் அரவிந்த்சாமி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
அரவிந்த்சாமி நடிக்கும் புதிய படம்  ராஜபாண்டி இயக்குகிறார்     பட எண்ணிக்கை எனக்கு முக்கியமில்லை...நல்ல படம் தரமான கதைக்களம் திறமையான தொழில் நுட்ப கலைஞர்கள் என தேர்ந்தெடுத்து நடிப்பவர் அரவிந்த்சாமி...   இது வரை இப்படித் தான் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்..   அப்படி சமீபத்தில் அவர் தேர்ந்தெடுத்து ஒத்துக் கொண்டது  வித்தியாசமான கதைக்களம் கொண்ட ஒரு படம்..   "என்னமோ நடக்குது" "அச்சமின்றி" போன்ற வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களை இயக்கிய ராஜபாண்டி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டிருக்கிறார்.   செப்டம்பர் மாதம் படப்பிடிப்பு துவங்க உள்ள இப்படத்தில் முன்னணி நடிகை ஒருவர் நடிக்க உள்ளார்..படத்தில் பங்கு பெறும் நட்சத்திரங்கள் மற்றும்  பிரபலமான கலைஞர்கள் பற்றியும் தயாரிப்பு நிறுவனம் பற்றியும் விரைவில் அறிவிக்கப் பட உள்ளது....
ராஜ்தாக்ரேவிடம் அரசியல் பேசினாரா லதா ரஜினி – வெளிப்படும் வாரீசு அரசியல்

ராஜ்தாக்ரேவிடம் அரசியல் பேசினாரா லதா ரஜினி – வெளிப்படும் வாரீசு அரசியல்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
ரஜினிகாந்த் கட்சியே ஆரம்பிக்கவில்லை, அதற்குள் வாரிசு அரசியலா? மும்பையில் மகாராஷ்டிரா நவ நிர்மான் கட்சி தலைவர் ராஜ்தாக்ரேவை, நடிகர் ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த் சந்தித்து பேசியுள்ளது பல தளங்களில் சர்ச்சைக்கு காரணமாகியுள்ளது. மஹாராஷ்டிரா மாநிலத்தில் பிறந்தவர் ரஜினிகாந்த். இதன்பிறகு பெங்களூரில் பேருந்து நடத்துனராக வேலை பார்த்தார். சென்னைக்கு வந்து நடிகராகி முன்னணி ஸ்டாராக மாறியுள்ளார். இருப்பினும், சிவசேனாவின் நிறுவனர் பால் தாக்ரேவோடு நெருங்கிய தொடர்பில் இருந்தவர் ரஜினிகாந்த். கடந்த 2010ம் ஆண்டு பால் தாக்ரேவை சந்தித்த ரஜினிகாந்த், அவரை தனக்குக் கடவுளைப் போன்றவர் என்றும் கூறியிருந்தார். மகாராஷ்டிராவில் சுமார் 30 வருடங்களுக்கு முன்பாக தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. மண்ணின் மைந்தர்கள் மராட்டியர்கள் என்று கூறி அதற்காக நடந்த தாக்குதலில் முன்னின்றவர் என்ற குற்றச்சாட்டு மறைந்த...