புதன்கிழமை, ஜூலை 1
Shadow

Author: Kodanki

காவிரி மேலாண்மை சர்ச்சை: திமுக மாநாட்டில் ஸ்டாலின் எச்சரிக்கை!

காவிரி மேலாண்மை சர்ச்சை: திமுக மாநாட்டில் ஸ்டாலின் எச்சரிக்கை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
ஈரோடு பெருந்துறை அருகே சரளையில் கோவை தேசிய நெடுஞ்சாலையில் தி.மு.க. மண்டல மாநாடு நேற்று தொடங்கியது, இன்று மாநாட்டின் 2-வது நாள் நிகழ்ச்சி காலை 9 மணிக்கு இறையன்பு குத்தூஸ் குழுவினரின் இசை நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு தலைப்புகளில் கட்சியின் முன்னோடி தலைவர்கள் பேசினார்கள். மாநாட்டில் பங்கேற்க மு.க.ஸ்டாலின் காலை 10.30 மணிக்கு மாநாட்டு மேடைக்கு வந்தார். காலை 11.30 மணியளவில் மு.க.ஸ்டாலின் மாநாட்டின் சிறப்பு தீர்மானத்தை வாசித்தார். அவர் பேசியதாவது: "தமிழ்நாட்டின் உயிர் நாடிப் பிரச்சினையான காவிரி நதிநீர் உரிமைக்காகத் தி.மு.க. தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. கலைஞர் தமிழகத்தின் முதல்வராகவும், சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் பிரதமராகவும் இருந்தபோது தான், தலைவர் கலைஞரின் வலியுறுத்தலை ஏற்று, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி நடுவர் மன்றத்தை மத்திய அரசு அமைத்தது. நடுவர் மன்றத்தின் இட...
கோலிவுட்டிலிருந்து டோலிவுட்டுக்கு(ம்) போன தன்ஷிகா!

கோலிவுட்டிலிருந்து டோலிவுட்டுக்கு(ம்) போன தன்ஷிகா!

CINI NEWS, சினி நிகழ்வுகள்
சினம்’ என்ற குறும்படத்தில் நடித்திருந்தார் நடிகை சாய் தன்ஷிகா. இந்த குறும்படம் கொல்கத்தாவில் நடைபெற்ற கல்ட் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அப்போது சிறந்த நடிகைக்கான விருது உள்பட எட்டு விருதுகள் ‘சினம் ’ குறும்படத்திற்கு கிடைத்தது. மேலும் நார்வே திரைப்படவிழாக்களிலும் சிறந்த நடிகைக்கான விருதையும், கலிஃபோர்னியாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்படவிழாவிலும் திரையிடப்பட்டு விருதினை வென்றிருக்கிறது ‘சினம்’. சிறந்த நடிகைக்கான விருதினை வென்றிருந்த மகிழ்ச்சியில் இருந்த நடிகை சாய்தன்ஷிகாவை  சந்தித்து வாழ்த்து சொல்லிவிட்டு உரையாடத் தொடங்கினோம். ‘நான் தற்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஒரு கதாசிரியர்கள் தங்களின் மனதில் ஒரு நடிகையை வைத்து திரைக்கதையை உருவாக்குகிறார்களோ அந்த தருணம் தான் அனைத்து நடிகைகளுக்கும் சந்தோஷமான தருணம். எனக்கு அப்படி ஒரு அனுபவம் அண்மையில் ஏற்பட்டது. தெலுங்கு திரையுலகில...
சென்னையில் 13 இடங்களில் காவலர்களுக்கு யோகா பயிற்சி !

சென்னையில் 13 இடங்களில் காவலர்களுக்கு யோகா பயிற்சி !

HOME SLIDER, NEWS, செய்திகள்
காவல்துறையினரின் மன அழுத்தத்தைப் போக்க இன்று சென்னையில் 13 இடங்களில் காவலர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. மன அழுத்தத்தின் காரணமாக காவலர்கள் தற்கொலையில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது என்று குற்றச்சாட்டு எழுந்துவருகிறது. இந்தநிலையில், காவலர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கவேண்டும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். அதனையடுத்து, இன்று சென்னையில் 13 இடங்களில் யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடந்த பயிற்சியில் சுமார் 3 ஆயிரம் போலீஸார் பங்கேற்றனர். இதில், சென்னைக் காவல் ஆணையாளர் ஏ.கே.விஸ்வநாதன் மற்றும் உயரதிகாரிகள் கலந்துகொண்டனர். அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை பங்கேற்ற இந்த யோகா பயிற்சி காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை 2 மணி நேரம் நடைபெற்றது. இதுகுறித்து தெரிவித்த ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், ‘காவல் துறை பணி உடலுக்கும் மனதுக்கும் அழுத்தம் ஏற்படுத்து...
லாலு பிரசாத் யாதவிற்கு 7 ஆண்டுகள் சிறை

லாலு பிரசாத் யாதவிற்கு 7 ஆண்டுகள் சிறை

HOME SLIDER, NEWS, செய்திகள்
கால்நடைத் தீவன ஊழல் தொடர்பான 4ஆவது வழக்கில் பிகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவிற்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் 30 லட்ச ரூபாய் அபராதமும் விதித்து ராஞ்சி சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 1990 முதல் 97 வரை லாலு பிரசாத் யாதவ் பிகார் மாநில முதல்வராக இருந்தபோது மாட்டுத் தீவனம் வழங்குவதில் மிகப் பெரிய ஊழல் நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. மாட்டுத் தீவன ஊழல் தொடர்பாக லாலு பிரசாத் யாதவ் மீது 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இவற்றில் 3 வழக்குகளில் லாலு குற்றவாளி என அறிவிக்கப்பட்டு 3 வழக்குகளிலும் 5, 3.5, 5 ஆண்டுகள் என மொத்தம் 13.5 ஆண்டுகள் அவருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 4ஆவது வழக்கான தும்கா கருவூலத்தில் 3.13 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கின் விசாரணை ராஞ்சி நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. கடந்த 19ஆம் தேதி இந்த வழக்கில் லாலு குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்தது....
தலைமை முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.! – ரஜினி எச்சரிக்கை!

தலைமை முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.! – ரஜினி எச்சரிக்கை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில் அரசியலில் களம் காண உள்ள ரஜினி, முற்கட்டமாக மாவட்டம் வாரியாக நிர்வாகிகளை நியமித்து வருகிறார். அதன்படி திண்டுக்கல் மாவட்டத்திற்கும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இருதினங்களுக்கு முன்னர் மன்றத்தின் விதிகளுக்கு மாறாக செயல்படுவதாக கூறி ரஜினி மக்கள் மன்றத்தின் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் தம்புராஜ் இடைக்கநீக்கம் செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஜினி மக்கள் மன்றத்தில் ஒட்டுமொத்த நிர்வாகிகளும் ராஜினாமா செய்வதாக நேற்று அறிவித்தனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகளுக்கு, ரஜினியின் அறிவுரைப்படி, ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி விஎம்.சுதாகர் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ரஜினி மக்கள் மன்றத்தின் தலைமை வெளியிட்டுள்ள செய்தியில், தம்புராஜ் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்திற்கு அனைவரையும் அழைக்காமல் தனக்கு விருப்பமானவர்களை ம...
ஈரோடு திமுக மாநாட்டுக்கான பிரச்சாரத்தில் ஸ்டாலின் நவீன பொம்மை!

ஈரோடு திமுக மாநாட்டுக்கான பிரச்சாரத்தில் ஸ்டாலின் நவீன பொம்மை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
திமுக மண்டல மாநாடு ஈரோடில் நடைபெற உள்ள நிலையில், மு.க.ஸ்டாலின் உருவம் கொண்ட பொம்மை மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கும் வகையில் ஈரோடுமாநகர் முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறது. ஈரோட்டில் நாளையும் நாளை மறுநாளும் திமுக மண்டல மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில், ஈரோடு, திருப்பூர், சேலம், கோவை, நீலகிரி, கரூர்உள்ளிட்ட 15 மாவட்டங்களை சேர்ந்த திமுகவினர் கலந்து கொள்கின்றனர். இந்த மண்டல் மாநாட்டு பணிகள் 95 சதவீதம் முடிவடைந்துள்ள நிலையில் மீதமுள்ள பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. இதனிடையே இம்மாநாட்டுக்காக, கடந்த 2மாதங்களாகவே ஈரோடு மாநகர் முழுவதும் பேனர்கள் வைக்கப்பட்டும், சுவர் விளம்பரங்கள் செய்தும் வருகின்றனர். மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கும் வகையில்தெருமுனைப் பிரச்சாரங்களும் திமுகவினர் நடத்தினர். குறிப்பாக மு.க.ஸ்டாலின் போன்று தோற்றமுடைய பொம்மை ஒன்று சைக்கிளில் சென்றபடியே மாநாட்டிற்கு அழைப்ப...
உறுமீன் படத்தின் இயக்குநரின் நாய் அட்வெஞ்சர் ஹீரோவாகும் படம்!

உறுமீன் படத்தின் இயக்குநரின் நாய் அட்வெஞ்சர் ஹீரோவாகும் படம்!

CINI NEWS, சினி நிகழ்வுகள்
உறுமீன் படத்தின் இயக்குநர் சக்திவேல் பெருமாள் சாமி அடுத்ததாக நாயை கதாபாத்திரமாகக் கொண்டு அட்வெஞ்சர் பாணியில் திரைப்படம் ஒன்றை உருவாக்கவிருக்கிறார். பாபி சிம்ஹா, கலையரசன், ரேஷ்மி மேனன் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் உறுமீன். சிறிய முதலீட்டில் உருவாக்கப்பட்ட படம் என்றாலும் நல்ல வரவேற்பையும் இயக்குநருக்கு பாராட்டையும் பெற்றுத் தந்தது. இந்தப் படத்திற்குப் பிறகு தற்போது வித்தியாசமான முயற்சியில் இறங்கியுள்ளார் இயக்குநர் சக்திவேல் பெருமாள் சாமி. இந்தியாவில் நாய்களை மையமாக வைத்து எவ்வளவோ படங்கள் வந்தாலும், அவை முழுக்க நாய்களின் வாழ்வியலைப் பேசக்கூடிய அட்வெஞ்சர் படங்களாக இல்லை. இந்த நிலையில் நாயை மையமாக வைத்து முழுமையான அட்வெஞ்சர் திரைப்படம் ஒன்றை உருவாக்கவிருப்பதாக இயக்குநர் சக்திவேல் பெருமாள் சாமி அறிவித்து அதன் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். இந்த படத்திற்காக 8 மாதங்கள் ஆராய்ச்சி ...
இன்று ராஜ்யசபா தேர்தல்!

இன்று ராஜ்யசபா தேர்தல்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
ராஜ்யசபா உறுப்பினர்களாக இருந்த நடிகை ரேகா, கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் உள்பட 58 உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் மாதத்தில் முடிவடைகிறது. கேரள மாநிலத்தில் 1 உறுப்பினர் இறந்ததால் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதனால் 59 இடங்களுக்கான தேர்தல் மார்ச் 23ஆம் தேதி நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. மாநில வாரியாக தேர்ந்தெடுக்கப்படும் எம்பிக்களின் எண்ணிக்கை விபரம் வருமாறு: ஆந்திரம் - 3, பீகார் - 6, சத்திஷ்கர் - 1, குஜராத் - 4, அரியானா - 1, இமாசலப்பிரதேசம் - 1, கர்நாடகம் - 4, மத்தியப்பிரதேசம் - 5, மகாராஷ்டிரம் - 6, தெலங்கானா - 3, உத்தரபிரதேசம் - 10, உத்தரகாண்ட்- 1, மேற்குவங்கம்- 5, ஒடிசா - 3, ராஜஸ்தான் - 3, ஜார்கண்ட் - 2, கேரளம் - 1. மொத்தம் தேர்தல் நடைபெற வேண்டிய 59 இடங்களில் 33 இடங்களுக்கு போட்டியின்றி உறுப்பினர் தேர்வு நடந்துள்ளது. ஆக, மீதமுள்ள 26 இடங்களுக்கு மட்டும்...
தியேட்டர் உரிமையாளர்கள் ஸ்டிரைக் வாபஸ்! – ஆனால் புது படம் ரிலீஸில்லை!

தியேட்டர் உரிமையாளர்கள் ஸ்டிரைக் வாபஸ்! – ஆனால் புது படம் ரிலீஸில்லை!

CINI NEWS, சினி நிகழ்வுகள்
தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் நடத்தி வந்த போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர். நாளை(வெள்ளி) முதல் தியேட்டர்கள் இயங்கும் என அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார்.ஸ்டிரைக்கேளிக்கை வரி முற்றிலும் நீக்கம், லைசென்ஸ் புதுப்பித்தல் மூன்றாண்டுகளுக்கு ஒரு மாற்றுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தியேட்டர் உரிமையாளர்கள், கடந்த மார்ச் 16-ம் தேதி படங்களை வெளியிடாமல் ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வந்தனர். சென்னையில் உள்ள தியேட்டர்கள் மட்டும் இந்தப்போராட்டத்தில் பங்கேற்கவில்லை.முதல்வருடன் சந்திப்புஇப்பிரச்னை தொடர்பாக இரு தினங்களுக்கு முன்னர் முதல்வர் பழனிசாமியை தியேட்டர் நிர்வாகிகள் சந்தித்தனர். அப்போது இரண்டுநாளில் தனது கருத்தை சொல்வதாக முதல்வர் தெரிவித்ததாக ரோகினி பன்னீர் செல்வம் தெரிவித்திருந்தார்.இந்நிலையில், சென்னையில் உள்ள தியேட்டர் உரிமையாளர்கள் சங்க தலைவர் அபிராமி ராமநாதன் தலைமையிலான நிர்வாகிகள் சென்னை ...
சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோர் மீது நடவடிக்கை -சென்னை காவல் துறை

சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோர் மீது நடவடிக்கை -சென்னை காவல் துறை

NEWS, செய்திகள்
18 வயதுக்குட்பட்ட சிறுவர்களை வாகனம் ஓட்ட அனுமதிக்கும் பெற்றோர்கள் மற்றும் வாகன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் சாலை விபத்துகள் அதிகளவில் நடைபெறுகின்றன. இது தவிர, சிறுவர்கள் வாகனம் ஓட்டுவதாலும் பெரும்பாலான விபத்துக்கள் ஏற்படுகின்றன. சிறுவர்கள் வாகனம் ஓட்டுவது மட்டுமில்லாமல், பந்தயத்திலும் ஈடுபடுகின்றனர். இதனால் அவர்களுக்கு மட்டுமின்றி, பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்துகின்றனர். இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கொண்டுவரும் வகையில் சென்னை காவல் துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்,   ஓட்டுநர் உரிமம் இல்லாத, 18 வயதுக்கு குறைவான சிறார்களுக்கு வாகனம் ஓட்ட அனுமதி தரும் பெற்றோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.  வாகனத்தை ஓட்ட அனுமதிக்கும் வாகன உரிமையாளர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை  எடுக்கப்படும்.  சென்னை சாலை...