வெள்ளிக்கிழமை, ஜூலை 3
Shadow

Author: Kodanki

விஷால் பாஜகவில் இணைய முடிவா?

விஷால் பாஜகவில் இணைய முடிவா?

CINI NEWS, HOME SLIDER, politics, அரசியல், சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
தமிழ் திரையுலகின் ஆக்‌ஷன் ஹீரோவான நடிகர் விஷால் அரசியலுக்கு வருவாரா? என்ற எதிர்பார்ப்பு நீண்ட காலமாக இருந்து வருகிறது. இதுபற்றி கடந்த மாதம் ஆந்திராவில் நடந்த ஒரு நிகழ்ச்சியின் போது விஷாலிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த விஷால், ஒருவர் 100 ரூபாய் செலவு செய்து சேவை செய்தாலே அவர் அரசியலுக்கு வந்து விட்டதாக அர்த்தம். அதனால் நான் ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்டேன். தீவிர அரசியலுக்கு வர இன்னும் காலமாகும் என்றார். இந்நிலையில் காசிக்கு சென்ற விஷால் அங்கு செய்துள்ள புனரமைப்பு பணிகளை பார்த்து வியந்தார். இதற்காக பிரதமர் மோடியை பாராட்டினார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட சமூக வலைத்தளப் பதிவில், "அன்புள்ள மோடி ஜி, நான் காசிக்குச் சென்றேன். அற்புதமான தரிசனம்-பூஜை செய்து, கங்கை நதியின் புனித நீரை தொட்டேன். கோவிலை புதுப்பித்து, அதை இன்னும் அற்புதமாகவும், எளிதாக எவரும் தரிச...
விஜய்யின் ரஞ்சிதமே பாடல் ரசிகர்களை கவர்ந்து யூடியூபில் ஹிட்!

விஜய்யின் ரஞ்சிதமே பாடல் ரசிகர்களை கவர்ந்து யூடியூபில் ஹிட்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தீபாவளி தினத்தன்று 'வாரிசு' திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டு, சங்கராந்திக்கு திரைப்படம் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இதையடுத்து 'வாரிசு' படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது. இப்படத்தின் முதல் பாடலான 'ரஞ்சிதமே' பாடலை நேற்று (05.11.2022) மாலை 5.30 மணிக்கு படக்குழு வெளியிட்டிருந்தது. விஜய் மற்றும் எம்.எம்.மானசி குரலில், விவேக் வரிகளில் வெளியான 'ரஞ்சிதமே...
‘பொன்னியின் செல்வன்’ நன்றி தெரிவிக்கும் விழா!

‘பொன்னியின் செல்வன்’ நன்றி தெரிவிக்கும் விழா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
‘பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று’ வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் புதிய சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தை வெற்றி பெறச் செய்த பத்திரிக்கை மட்டும் ஊடகங்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா சென்னை உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதில் லைகா குழும தலைவர் சுபாஸ்கரன், திருமதி பிரேமா சுபாஸ்கரன், இயக்குநர் மணிரத்னம், நடிகர்கள் சீயான் விக்ரம், இரா. பார்த்திபன், கார்த்தி, ஜெயம் ரவி, லைகா நிறுவனத்தின் தமிழக தலைமை நிர்வாக அதிகாரி ஜிகேஎம் தமிழ்குமரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஜி கே எம் தமிழ் குமரன் பேசுகையில், '' பொன்னியின் செல்வன் திரைப்படம் வெற்றி பெறும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் இது போன்ற பிரம்மாண்டமான வெற்றியை எதிர்பார்க்கவில்லை. இந்த வெற்றியைக் கொண்டாடுவதில் லைகா குழுமம் பெரு மகிழ்ச்சியடைகிறது. பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக்க பல ஜாம்பவான்கள் ...
குஜராத் சட்டசபை தேர்தல்- பிரதமர் மோடி இன்று பிரசாரம்!

குஜராத் சட்டசபை தேர்தல்- பிரதமர் மோடி இன்று பிரசாரம்!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள்
குஜராத் சட்டசபையின் பதவி காலம் முடிவடைவதை தொடர்ந்து அங்கு தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான அறிவிப்பை தேர்தல் கமிஷன் வெளியிட்டது. அதன்படி டிசம்பர் 1 மற்றும் 5-ந்தேதிகளில் குஜராத்தில் இரண்டு கட்டமாக தேர்தல் நடக்கிறது. தேர்தல் அறிவிப்பு வெளியானதும் அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விட்டன. குஜராத் மாநிலத்தில் 182 தொகுதிகள் உள்ளன. கடந்த தேர்தலில் இங்கு பாரதிய ஜனதாவும், காங்கிரஸ் கட்சியுமே பிரதான கட்சிகளாக களம் இறங்கியது. இதில் பாரதிய ஜனதா 99 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சிக்கு 77 இடங்கள் கிடைத்தன. இம்முறை குஜராத்தில் ஆட்சியை கைப்பற்ற காங்கிரசுடன் ஆம் ஆத்மி கட்சியும் களம் இறங்கி உள்ளது. இதனால் அங்கு மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. மும்முனை போட்டி காரணமாக குஜராத்தில் வாக்குகள் சிதறும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வருகிறார்கள். ஆனால் இம்முறையும...
‘D3 ‘படத்தில் நிர்வாணமாக நடித்திருக்கிறேன்: நடிகர் பிரஜின் பேச்சு!

‘D3 ‘படத்தில் நிர்வாணமாக நடித்திருக்கிறேன்: நடிகர் பிரஜின் பேச்சு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  'D3 'படத்தில் நிர்வாணமாக நடித்திருக்கிறேன்: நடிகர் பிரஜின் பேச்சு! ' D3 'படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை கிருஷ்ணவேணி திரையரங்கத்தில் இன்று நடைபெற்றது.இது பற்றிய விவரம் வருமாறு: நடிகர் பிரஜின் பிரதான நாயகனாக நடித்து ' D 3 'என்கிற சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் உருவாகியுள்ளது.இப்படத்தை பாலாஜி எழுதி இயக்கியுள்ளார். பீமாஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் மனோஜ் எஸ், சாமுவேல் காட்சன் தயாரித்துள்ளனர். ஜே. கே .எம் .புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்துக்கு மணிகண்டன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.ஸ்ரீஜித் எடவானா இசையமைத்துள்ளார். கலை இயக்கம் - ஜெயசீலன் , ஸ்டண்ட் -ராம்போ விமல், படத்தொகுப்பு ராஜா ஆறுமுகம் . 'D3 ' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நடிகரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜய் வசந்த், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூப...
‘லைகா’ சுபாஸ்கரன் மற்றும் இயக்குநர் மணிரத்னம் இணைந்து அமரர் கல்கியின் அறக்கட்டளைக்கு ஒரு கோடி நன்கொடை.

‘லைகா’ சுபாஸ்கரன் மற்றும் இயக்குநர் மணிரத்னம் இணைந்து அமரர் கல்கியின் அறக்கட்டளைக்கு ஒரு கோடி நன்கொடை.

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
  'லைகா' சுபாஸ்கரன் மற்றும் இயக்குநர் மணிரத்னம் இணைந்து அமரர் கல்கியின் அறக்கட்டளைக்கு ஒரு கோடி நன்கொடை. அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் அறக்கட்டளைக்கு லைகா குழும தலைவர் சுபாஸ்கரன் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பாளர் மணிரத்னம் இணைந்து ஒரு கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளார்கள். அமரர் கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவலை, லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் 'பொன்னியின் செல்வன்' எனும் பெயரில் இரண்டு பாகங்களைக் கொண்ட திரைப்படமாக தயாரித்திருக்கிறது. இதன் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகி, வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் சாதனையை படைத்திருக்கிறது. இந்நிலையில் லைகா குழுமம் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும், அமரர் கல்கியின் புகழையும், அவரது சேவைகளையும், பாரம்பரியத்தையு...
பூணூல் போட்டவன்தான் மூளைக்காரன் என்கிறதா “பனாரஸ்”  – கோடங்கி விமர்சனம்

பூணூல் போட்டவன்தான் மூளைக்காரன் என்கிறதா “பனாரஸ்” – கோடங்கி விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், விமர்சனம்
  பூணூல் போட்டவன்தான் மூளைக்காரன் என்கிறதா “பனாரஸ்” கோடங்கி விமர்சனம்     நண்பர்களிடம் பந்தயம் கட்டி விளையாட்டாக நாயகன் ஜையீத்கான்  செய்த ஒரு செயல் ஹீரோயின் சோனல் மோண்டோரியோவின் வாழ்க்கையில் பெரிய சிக்கலை ஏற்படுத்துகிறது. இதனால் அவர் தனது கல்லூரி படிப்பையும், தனது லட்சியத்தை பாதியில் விட்டு விட்டு காசி பனாரஸில் உள்ள தனது சித்தப்பா வீட்டுக்கு போய் விடுகிறார். செய்த்து தவறு என தெரிந்து தடுமாறும் ஹீரோ தன் தவறுக்கு மன்னிப்பு கேட்க ஹீரோயினை தேடி காசி பனாரஸ் செல்கிறார்.   அங்கு போனதும் ஹீரோயினை சந்தித்தாலும் மன்னிப்பை பெற முடியவில்லை இந்த சூழலில் ஹீரோவுக்கு திடீரென உளவியல் மாற்றங்கள் நடக்கிறது. டைம் லூப்பில் மாட்டிக் கொண்ட்து போல சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நடக்கிறது. இதில் இருந்து ஹீரோ தப்பித்தாரா? ஹீரோயின் மன்னித்தாரா? கடைசியில் என்ன ஆனது என்பதை ...
பிரிகேடியர் சுப.தமிழ்ச் செல்வன் அவர்களின் நினைவுநாள் Dr.திருமாவளவன் MP அஞ்சலி

பிரிகேடியர் சுப.தமிழ்ச் செல்வன் அவர்களின் நினைவுநாள் Dr.திருமாவளவன் MP அஞ்சலி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  சு.ப.தமிழ்ச்செல்வன் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்தவர். தினேஸ் என்ற இயக்கப் பெயரைக் கொண்டிருந்த இவர் புலிகள் இயக்கத்தில் கீழ் மட்டங்களில் இருந்து வளர்ந்து இறப்பின் போது புலிகளின் தலைமையின் உள்வட்டத்தின் ஒருவராக செயற்பட்டார். தமிழ்ச்செல்வன் யாழ்ப்பாண மாவட்டத்தின் சாவகச்சேரியில் பிறந்தார். இவர் தனது கல்வியைசாவகச்சேரி இந்துக் கல்லூரியில் பயின்றார். 1984 இல் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்துஇந்தியாவில் ஆயதப் பயற்சி பெற்றார். 1993 இலிருந்து இறக்கும் வரை தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளராகச் செயற்பட்டார். நோர்வே அனுசரணையில் இலங்கை அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் பங்குபற்றினார். அண்ணன் பாலசிங்கத்தின் மரணத்தைத் தொடர்ந்து விடுதலைப்புலிகள் அமைப்பின் அதிகாரப்பூர்வ அரசியல் பிரிவின் தலைவரானார். அதோடு தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் பிரி...
நடிகர் விஷாலின் பதிவிற்கு பிரதமர் மோடி பதில்!

நடிகர் விஷாலின் பதிவிற்கு பிரதமர் மோடி பதில்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஷால் தன் குடும்பத்துடன் காசிக்கு தரிசனத்திற்காக சென்றார். இது குறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "அன்புக்குரிய மோடி அவர்களுக்கு, நான் காசிக்கு சென்று வந்தேன். மிகச்சிறந்த தரிசனம் கிடைத்தது. புனிதமான கங்கை நதியை தொடும் பாக்கியமும் எனக்கு கிடைத்தது. காசியின் கோவிலை புதுப்பித்து எளிதில் அனைவரும் தரிசனம் செய்யும் வகையில் மாற்றியதற்காக கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார்" என்று பதிவிட்டுள்ளார். அரசியல் மீது விஷால் ஆர்வம் காட்டி வரும் இந்நேரத்தில் இப்படியொரு கருத்தை அவர் தெரிவித்திருப்பது கவனிக்க வைத்திருக்கிறது. பா.ஜனதா கட்சி திரைத்துறையினரை தங்கள் கட்சியில் இணைத்துக் கொண்டிருக்கும் நிலையில் விஷால் தெரிவித்திருக்கும் இந்த கருத்து பல்வேறு யூகங்களை கிளப்பியுள்ளதாக பலரும் கருத்துக்களை தெரிவித்தனர். அவர் பா.ஜனதா கட்சியில் சேரலாம் என்ற தகவலும் பர...
சன்னி லியோன்காக தான் நடிக்க ஒத்துக்கொண்டேன் – நடிகர் சதீஷ் !

சன்னி லியோன்காக தான் நடிக்க ஒத்துக்கொண்டேன் – நடிகர் சதீஷ் !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
இயக்குனர் யுவன் இயக்கத்தில் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் நடிக்கும் படம் 'ஓ மை கோஸ்ட்'. இதில் அவர் நகைச்சுவை பேய் வேடத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் சன்னி லியோனுடன் நகைச்சுவை நடிகர் சதீஷ், 'குக் வித் கோமாளி' புகழ் தர்ஷா குப்தா, சஞ்சனா, யோகி பாபு, தங்கதுரை, திலக் ரமேஷ், ஜி.பி.முத்து உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை வாவ் மீடியா என்டர்டெயின்மென்ட் மற்றும் ஒயிட் ஹார்ஸ் ஸ்டுடியோஸ் சார்பில் வீர சக்தி மற்றும் கே சசி குமார் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த திரைப்படம் குடும்ப பொழுதுபோக்கு படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்துக்கு ஜாவேத் ரியாஸ் இசையமைத்துள்ளார். இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் 'ஓ மை கோஸ்ட்' படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் சதீஷ் பேசியதாவது...