வெள்ளிக்கிழமை, ஜூலை 3
Shadow

Author: Kodanki

துப்பாக்கிச்சூட்டில் பலியான மீதமுள்ள 6 பேரின் உடலை உடற்கூறு ஆய்வு செய்ய ஐகோர்ட் அனுமதி

துப்பாக்கிச்சூட்டில் பலியான மீதமுள்ள 6 பேரின் உடலை உடற்கூறு ஆய்வு செய்ய ஐகோர்ட் அனுமதி

HOME SLIDER, NEWS, politics, Uncategorized, செய்திகள்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். பலியான 13 பேரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்தாலும் பதப்படுத்தி வைக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. ஏற்கனவே, 7 பேரின் உடல்கள் பரிசோதனை செய்யப்பட்டிருந்தது. இதனை, அடுத்து மீதமுள்ள 6 பேரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய அரசு அனுமதி கோரியிருந்தது. இந்த வழக்கு கடந்த மாதம் 30-ம் தேதி விசாரணைக்கு வந்த நிலையில், தங்களது தரப்பு மருத்துவர் இல்லாமல் பிரேத பரிசோதனை செய்ய கூடாது என வழக்கறிஞர் சங்கரச்சுப்பு வாதிட்டார். இதனை அடுத்து, மீதமுள்ள 6 பேரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய நீதிபதிகள் தடை விதித்தனர். பிரேத பரிசோதனை செய்யப்பட்ட 7 பேரின் உடல்களை மறு பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கலாம் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி, 7 பேரது உடல்கள் மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்...
ஒரு குப்பைக் கதை படத்தை பாராட்டிய வைகோ..!

ஒரு குப்பைக் கதை படத்தை பாராட்டிய வைகோ..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
சத்யஜித்ரே படம் போல இருக்கிறது" ; ஒரு குப்பை ​கதைக்கு வைகோ பாராட்டு  சமீபத்தில் தயாரிப்பாளர் அஸ்லம் தயாரிப்பில் அறிமுக இயக்குந​ர் காளி ரங்கசாமி இயக்கத்தில் 'ஒரு குப்பைக்​கதை' படம் வெளியானது.. டான்ஸ் மாஸ்டர் தினேஷ் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள இந்தப்படத்தில் மனிஷா யாதவ் கதாநாயகியாக நடித்துள்ளார். மிகசிறந்த படம் என படம் பார்த்தவர்களும், பத்திரிகை, ஊடகங்களும், திரையுலக பிரபலங்களும் பாராட்டி வரும் நிலையில் இந்த சமூகத்திற்கு தேவையான கருத்துக்களை கொண்ட இந்தப்படத்தைக்​ கட்டாயம் பார்க்கவேண்டும் என மதிமுக கட்​சியின் பொதுச்செயலாளர் ​வைகோ வெகுவாக பாராட்டியுள்ளார். இதுகுறித்த பத்திரிகையாளர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்த வைகோ ​ இந்தப்படம் குறித்து மிகவும் சிலாகித்து, தனது கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்.. "பெண்கள் அனைவரும் சமீபத்தில் வெளியாகியுள்ள 'ஒரு குப்பை கதை' படத்தை பார்க்...
சபாஷ் நாயுடுவால் இந்தியன்-2 வந்த பிரச்சனை

சபாஷ் நாயுடுவால் இந்தியன்-2 வந்த பிரச்சனை

CINI NEWS, HOME SLIDER, MOVIES, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
அரசியலை ஒரு பக்கம் கவனித்துக்கொண்டே இன்னொரு பக்கம் சினிமா, டிவியிலும் கவனம் செலுத்துகிறார் கமல். இந்த மாதம் துவங்க இருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார். அடுத்து அவர் நடிப்பில் விஸ்வரூபம்-2 வெளியாக இருக்கிறது. கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் விஸ்வரூபம் 2 படத்தை பிக்பாஸ் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் போதே வெளியிட திட்டம் இருக்கிறது. காரணம் பிக்பாசில் வைத்து விளம்பரம் செய்தால் அது மக்களிடையே எளிதில் சேரும். பிக்பாஸ் முடிந்த பிறகு இந்தியன் 2 தொடங்க திட்டமிட்டு இருந்தார்கள். ஆனால் சபாஷ் நாயுடுவை முடித்துக் கொடுத்தால் தான் அடுத்த படத்தை தொடங்க விடுவோம் என்று தயாரிப்பு தரப்பில் அழுத்தம் தரப்பட்டதாம். எனவே மீதம் இருக்கும் சபாஷ் நாயுடு படப்பிடிப்பை நடத்தி முடித்துவிட்டு இந்தியன் 2-ஐ தொடங்கவிருக்கிறார். ஆகஸ்டில் சபாஷ் நாயுடு படப்பிடிப்பு மீண்டும் தொடங்கவிருக்...
மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்த கீர்த்தி சுரேஷ்

மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்த கீர்த்தி சுரேஷ்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Uncategorized, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
சிவகார்த்திகேயன், சமந்தா, சிம்ரன் நடிப்பில் உருவாகும் படம் ‘சீமராஜா’. தென்காசி, குற்றாலம் பகுதிகளில் வளர்ந்த ‘சீமராஜா’ படம் தற்போது இறுதி கட்ட படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த காட்சிகளுக்காக சிவகார்த்திகேயன் இதுவரை நடிக்காத புதிய தோற்றத்தில் நடிக்கவுள்ளார். இந்த தோற்றத்துக்காக தாடி வளர்த்து வருகிறார். ப்ளாஷ்பேக்கில் இடம்பெறவுள்ள இந்த தோற்றம் இன்னொரு கதாபாத்திரமாக இருக்கலாம் என்கிறார்கள். இந்த ப்ளாஷ்பேக் காட்சியில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. விரைவில் இதன் படப்பிடிப்பை முடித்து பின்னணி வேலைகளில் ஈடுபட இருக்கிறார்கள். இதனையடுத்து, டீசர், டிரைலர்கள் வெளியிட இருக்கிறார்கள். பொன்ராம், சிவகார்த்திகேயன் கூட்டணியில் வெளியான ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினிமுருகன்’ படங்கள் நல்ல வரவேற்பு பெற்றதால், இப்படத்தின் மீது அதிக...
காவிரிக்கும் காலா திரைப்படத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை – பிரகாஷ் ராஜ்

காவிரிக்கும் காலா திரைப்படத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை – பிரகாஷ் ராஜ்

CINI NEWS, HOME SLIDER, politics, Uncategorized, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
நடிகர் ரஜினிகாந்த் நடித்த காலா படம் வருகிற 7-ந்தேதி தமிழ்நாடு மற்றும் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது. கர்நாடகத்தில் காலா படத்தை திரையிட கன்னடர் கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் மற்றும் கர்நாடக திரைப்பட வர்த்தக சபை போன்றவை எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழகத்துக்கு ஆதரவாக ரஜினி குரல் கொடுத்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முதல்-மந்திரி குமாரசாமியை நேற்று, கர்நாடக திரைப்பட வர்த்தக சபை நிர்வாகிகள் சந்தித்து காலா படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுகொடுத்தனர். இந்த வி‌ஷயத்தில் அரசு தலையிட முடியாது என்று குமாரசாமி தெரிவித்துவிட்டார். இந்நிலையில் இது குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :- தண்ணீர் பிரச்சனையோ அல்லது வேறு எந்த பிரச்சனையோ மாநிலங்களுக்கு இடையே ஏற்பட்டால், அதை  தீர்த...
எந்த நேரத்திலும் மெஜாரிட்டியை அதிமுக அரசு நிரூபிக்க தயார்: அமைச்சர் காமராஜ் பேட்டி

எந்த நேரத்திலும் மெஜாரிட்டியை அதிமுக அரசு நிரூபிக்க தயார்: அமைச்சர் காமராஜ் பேட்டி

HOME SLIDER, NEWS, politics, Uncategorized, செய்திகள்
திருவாரூர் மாவட்டம் குடவாசலில் ரூ.2 கோடி மதிப்பில் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கான பூமி பூஜை இன்று காலை நடந்தது. இதில் அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டு பூமி பூஜையை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- காவிரி உரிமையை பெற்றதில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு பெரும் பங்கு உள்ளது. சட்ட வல்லுனர்களை கொண்டு சரியான வாதத்தை முன்வைத்ததன் மூலமாக காவிரி விவகாரத்தில் நல்ல தீர்வு கிடைத்துள்ளது. மேட்டூர் அணையை ஜூன் 12-ந் தேதி திறக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம். ஆனால் 80 அடி நீர் இருந்தால் மட்டுமே அணையை திறக்க முடியும் என்பது வழக்கம். இருப்பினும் குருவை சாகுபடி செய்யப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. மு.க.ஸ்டாலின் காவிரி பிரச்சினையை உணர்வு பூர்வமாக அணுகவில்லை. அரசியலாகவே பார்க்கிறார். சட்டமன்ற கூட்டத்தொடரில் தூத்துக்குடி பிரச்சினையை காரணம் கா...
சர்ச்சையை கிளப்பியுள்ள எப்.ஐ.ஆர் – துப்பாக்கிச்சூடு குறித்து புகாரே அளிக்கவில்லை என்கிறார் அதிகாரி

சர்ச்சையை கிளப்பியுள்ள எப்.ஐ.ஆர் – துப்பாக்கிச்சூடு குறித்து புகாரே அளிக்கவில்லை என்கிறார் அதிகாரி

HOME SLIDER, NEWS, politics, Uncategorized, செய்திகள்
தூத்துக்குடியில் கடந்த 22-ந்தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் 13 பேர் பலியானார்கள். ஏராளமானோர் காயம் அடைந்தனர். துப்பாக்கி சூட்டை தொடர்ந்து வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. கலெக்டர் அலுவலகம் சூறையாடப்பட்டது. தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியில் போலீஸ் வாகனம் தீ வைத்து எரிக்கப்பட்டது. இந்த சம்பவங்கள் குறித்து தூத்துக்குடி வடபாகம், சிப்காட், தென்பாகம் போலீசார் வழக்குகள் பதிவு செய்துள்ளனர். தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்திருப்பதில் திருச்செந்தூர் வட்ட வழங்கல் அலுவலர் கோபால் புகார் கொடுத்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போது திருச்செந்தூர் வட்ட வழங்கல் அலுவலராக கண்ணன் என்பவர் பணியாற்றி வருகிறார். கோபால் ஸ்ரீவைகுண்டம் வட்ட வழங்கல் அலுவலராக பணியில் உள்ளார். துப்பாக்கி சூடு விவகாரத்தில் போலீசார் தவறுதலாக தனது பெயரை பயன்படுத்தியத...
ஆதிராஜனின் “அருவாசண்ட” படத்தில் பாடகியாக ரம்யா நம்பீசன்..!

ஆதிராஜனின் “அருவாசண்ட” படத்தில் பாடகியாக ரம்யா நம்பீசன்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், முன்னோட்டம்
சிலந்தி, ரணதந்த்ரா படங்களை தொடர்ந்து ஆதிராஜன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி முடித்திருக்கும் படம் “ அருவாசண்ட “ கபடி விளையாட்டையும், கௌரவக் கொலைகளையும் பின்னணியாகக் கொண்ட அதிரடிப் படமாக உருவாகியிருக்கும், இதன் கிளைமாக்ஸ் காட்சி சமூக அவலங்களுக்கு சாட்டையடி கொடுக்கும் விதமாக, உணர்வுப் பூர்வமாக எடுக்கப்பட்டுள்ளது. அந்த காட்சிகாகவே சரண்யா பொன்வண்ணனுக்கு தேசிய விருது கிடைக்கும் என்று படத்தை பார்த்தவர்கள் கூறுகின்றனர். “ இந்த படத்தில் மூன்று அட்டகாசமான பாடல்களை கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ளார். இரண்டு பாடல்களை நான் எழுதியிருக்கிறேன். வைரமுத்து எழுதிய “ சிட்டு சிட்டுக் குருவி வாலாட்டுதோ   “ தொட்டுத் தொட்டு இழுத்து தாலாட்டுதோ “ என்ற பாடலை தரண் இசையில் நடிகை  ரம்யா நம்பீசன் அருமையாக பாடியிருக்கிறார் உடன் இணைந்து பாலாஜி ஸ்ரீ பாடியிருக்கிறார். இந்த பாடல் காதலர்களின் இதயங்களில் சிம்மாசனம்...
அனைவரையும் கலாய்த்து இணையத்தில் கலக்கிய சிவா

அனைவரையும் கலாய்த்து இணையத்தில் கலக்கிய சிவா

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Uncategorized, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மிர்ச்சி சிவா நடிப்பில் 2010-ஆம் ஆண்டு வெளியான படம் ‘தமிழ்ப்படம்’. சி.எஸ்.அமுதன் இயக்கியிருந்த இப்படம் சூப்பர் ஹிட்டானது. தற்போது, இந்த படத்தின் இரண்டாம் பாகம் பரபரப்பாக உருவாகி வருகிறது. சி.எஸ்.அமுதனே இயக்கி வரும் இதிலும் ஹீரோவாக சிவாவே நடித்துள்ளார். சிவாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா மேனன் நடித்துள்ளார். மேலும், சதீஷ், சந்தான பாரதி, மனோபாலா, ஆர்.சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி, உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். முதல் பாகத்தில் நடித்த திஷா பாண்டேவும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். கண்ணன் இசையமைத்து வரும் இதற்கு கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘ஒய் நாட் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் சார்பில் எஸ்.சஷிகாந்த் தயாரித்திருக்கிறார். சமீபத்தில், வெளியிடப்பட்ட படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது படத்தின் டீசரை வெளியிட்டிருக்கிறார்கள். இந்த ...
கடைக்குட்டி சிங்கம் படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு

கடைக்குட்டி சிங்கம் படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Uncategorized, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகி வரும் படம்` கடைக்குட்டி சிங்கம்'. பாண்டிராஜ் இயக்கும் இந்த படத்தில் கார்த்தி விவசாயியாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக சாயிஷா நடிக்கிறார். பிரியா பவானிசங்கர், அர்த்தனா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கார்த்தியின் அப்பாவாக முதிர்ந்த தோற்றத்தில் நடிகர் சத்யராஜ் நடித்திருக்கிறார். சூரி, ஸ்ரீமன், பானுபிரியா, மவுனிகா உள்பட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைக்கும் இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். முழுக்க முழுக்க கிராமத்திலேயே படமாக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து, இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் டீசரை ஜூன் 3ம் தேதி இரவு 7 மணி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். ஏற்கனவே இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரவேற்பு பெ...