புதன்கிழமை, ஜூலை 1
Shadow

Author: Kodanki

திரிஷாவுக்கு வாழ்த்து சொன்ன ஆர்யாவுக்கு ரசிகர்கள் கண்டனம்

திரிஷாவுக்கு வாழ்த்து சொன்ன ஆர்யாவுக்கு ரசிகர்கள் கண்டனம்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
தமிழ் சினிமாவில் நீண்ட நாட்களாக முன்னணி இடத்தில் இருப்பவர் திரிஷா. இவர் நேற்று பிறந்த நாள் கொண்டாடினார். திரிஷாவுக்கு சமூகவலைதளங்களில் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். திரையுலகினர் பலரும் டுவிட்டரில் வாழ்த்துக்களை தெரிவித்தனர். நடிகர் ஆர்யாவும் டுவிட்டரில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். அதில், ‘பிறந்த நாள் வாழ்த்துக்கள் மைடியர் குஞ்சுமணி. இந்த ஆண்டு வெளியாகும் உங்கள் படங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டும் திரிஷாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லும் போது அவரை குஞ்சுமணி என்று தான் ஆர்யா வாழ்த்தி இருந்தார். இந்த ஆண்டும் அதே வார்த்தையை பயன்படுத்தி இருப்பதற்கு ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள். ஒரு நடிகையை குஞ்சுமணி என்று அழைப்பதா? உங்களுக்கு வேறு நல்ல வார்த்தையே கிடைக்கவில்லையா? பெண்களை மதிக்க தெரியாதா? என்று பல ரசிகர்கள் ஆர்யாவை இணையதளத்...

தி.மு.க. நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் 3 நாட்கள் ஆய்வு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளையும் சென்னைக்கு அழைத்து ஆய்வு கூட்டம் நடத்தி வந்தார். தி.மு.க.வில் உள்ள 65 மாவட்ட நிர்வாகிகளுடன் ஆய்வு நடத்தி முடிந்ததை தொடர்ந்து இப்போது அணிகளின் மாநில நிர்வாகிகளுடன் ஆய்வு நடத்த மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். அண்ணா அறிவாலயத்தில் வருகிற 11-ந்தேதி காலை 8 மணிக்கு இளைஞர் அணியின் மாநில நிர்வாகிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்துகிறார். 9 மணிக்கு தொண்டர் அணி, 10 மணிக்கு வழக்கறிஞர் அணி, 11 மணிக்கு இலக்கிய அணி, 12 மணிக்கு விவசாய அணி, பகல் 12.30 மணிக்கு விவசாய தொழிலாளர் அணியுடன் ஆய்வு கூட்டம் நடத்துகிறார். 12-ந்தேதி காலை 8 மணிக்கு மாணவர் அணி, 9 மணிக்கு மீனவர் அணி, 10 மணிக்கு நெசவாளர் அணி, 11 மணிக்கு ஆதிதிராவிடர் நலக்குழு, 12 மணிக்கு கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை, பகல் 12.30 மணிக்கு தகவல் தொழில்நுட்ப அணிகளுடன் ஆய்வு நடைபெறுகிறது. ...
டி.வி.யில் மற்ற நிகழ்ச்சிகளை பின்னுக்கு தள்ளிய ஐபிஎல் – சென்னை அணிக்கு கூடுதல் மவுசு

டி.வி.யில் மற்ற நிகழ்ச்சிகளை பின்னுக்கு தள்ளிய ஐபிஎல் – சென்னை அணிக்கு கூடுதல் மவுசு

HOME SLIDER, NEWS, செய்திகள்
இந்தியாவின் தேசிய விளையாட்டு ஆக்கி என்றாலும், சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் ரசித்து பார்க்கும் விளையாட்டு கிரிக்கெட் தான். உலகம் முழுவதும் கால்பந்து விளையாட்டுக்கு ரசிகர்கள் அதிகம். ஆனால் இந்தியாவில் ஐந்தில் 4 பேர் கிரிக்கெட் பார்க்கிறார்கள் என்பதே கிரிக்கெட் விளையாட்டின் மீதான இந்தியர்களின் காதலுக்கு சான்று. அதனால் தான் என்னவோ நமது நாட்டின் 2-வது தேசிய விளையாட்டாகவே கிரிக்கெட் போட்டி பார்க்கப்படுகிறது. ஒருநாள், டெஸ்ட் என்ற 2 வகை பரிமாணத்தில் மட்டுமே பயணித்து வந்த கிரிக்கெட்டை, அடுத்த தளத்துக்கு கொண்டு சென்றது 20 ஓவர் போட்டி தான். பவுண்டரிகளுக்கும், சிக்சர்களுக்கும் பஞ்சமில்லாத இந்த கிரிக்கெட் போட்டி ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்துள்ளது. அதிலும் ஐ.பி.எல். என்னும் இந்தியன் பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ரசிகர்களின் ரசனைக்கும், கொண்டாட்டத்துக்கும், உற்சாகத்துக்கும் பெரும் தீன...
குழந்தைகளை குறிவைக்கும் அப்ளிகேஷன்கள் – உஷார் ரிப்போர்ட்

குழந்தைகளை குறிவைக்கும் அப்ளிகேஷன்கள் – உஷார் ரிப்போர்ட்

HOME SLIDER, NEWS, Photos, செய்திகள்
  பிளே கிரவுண்ட் தெரியாது ! ஆனால் பிளே ஸ்டோர் தெரியும் !! -இது தான் இன்றைய குழந்தைகளின் நிலை. இப்படி டிஜிட்டல் விளையாட்டுகளில் சிக்கிக் கிடக்கும் குழந்தைகளை குறிவைத்து தகவல் திருட்டுகள் நடக்கின்றன என்பது தான் இப்போதைய அதிர்ச்சித் தகவல். இன்றைய தொழில்நுட்ப உலகில் ஸ்மார்ட்போன் செலுத்தும் ஆதிக்கத்தைப் போல வேறெதுவும் செலுத்தவில்லை என்பது தான் உண்மை. பெரும்பாலான மக்களின் பொழுதுகள் குட்டிக்குட்டி வெளிச்சத் திரைகளில் அடங்கிவிடுகின்றன. அதிலும் சுட்டிக்குழந்தைகளின் நிலைமை படுமோசம். ஏனெனில் அவர்கள் வளர்க்கப்படுவதே, அப்ளி கேஷன்களின் உதவியுடன்தான். நிலாவை காண்பித்து சோறு ஊட்டிய காலம் மலையேறி, யூ-டியூப் வீடியோக்களை காட்டி சோறு ஊட்டும் நிலை உருவாகிவிட்டது. அதனால் குழந்தைகள் ஸ்மார்ட்போன்களிலும், அதிலிருக்கும் அப்ளிகேஷன்களிலும் ஸ்மார்டாக செயல்படுகிறார்கள். ஆனால் அதுவே அவர்களுக்கு ஆபத்தாகவும் மா...
நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உதவும் திரையுலகப் பிரபலங்கள்

நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உதவும் திரையுலகப் பிரபலங்கள்

HOME SLIDER, NEWS, செய்திகள், நடிகர்கள்
நீட் தேர்வு வி‌ஷயத்தில் தமிழக மாணவர்களுக்கு மீண்டும் அநீதி இழைக்கப் பட்டிருக்கிறது. வருங்கால சமூகத்திற்கு சேவை செய்வ தற்காக வெளி மாநிலங்களுக்கு சென்று தேர்வு எழுதும் தம்பி, தங்கைகளுக்கு உதவுவது என் கடமை. அவர்களுக்கு உதவிக் கரம் கொடுக்க நான் எப்போதும் தயாராக இருக்கிறேன். என்னை உங்கள் சகோதரனாக நினைத்து என்னை தொடர்பு கொள்ளலாம். தொடர்பு எண்: 97104 44442. இவ்வாறு விஷால் கூறியுள்ளார். இதேபோல் நடிகர் பிரசன்னாவும் நீட் தேர்வு எழுதவுள்ள இரண்டு பேருக்கான போக்குவரத்து மற்றும் மற்ற செலவுகளுக்கு பொறுப்பேற்பதாக கூறியுள்ளார். அதேபோல் நடிகை கஸ்தூரியும் அவரது டுவிட்டர் பக்கத்தில் உதவ தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் பலரும் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உதவுவதாக தெரிவித்து வருகின்றனர்...
பாகிஸ்தான் கொடியுடன் தூய்மை இந்தியா புத்தகம் வெளியீடு

பாகிஸ்தான் கொடியுடன் தூய்மை இந்தியா புத்தகம் வெளியீடு

HOME SLIDER, NEWS, செய்திகள்
பிகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக 5000 புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. அந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ள படம் ஒன்றில் பாகிஸ்தானைச் சேர்ந்த சிறுமி அந்நாட்டின் கொடியை வரைவது போன்ற படம் இடம்பெற்றுள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதுகுறித்து பதிலளித்துள்ள ஜமுய் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர், இது தவறுதலாக நேர்ந்த பிழை என்று கூறியுள்ளார். இதுகுறித்து முறையான விசாரணை நடத்த மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூய்மை இந்தியா புத்தகத்தில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய படம் யுனிசெப் அமைப்பு பாகிஸ்தானில் கல்வி விழிப்புணர்வை ஏற்படுத்த பயன்படுத்தியதாகும். இதனை அச்சிடும் முன் மாவட்ட நிர்வாகம் ஒப்புதல் வழங்கியதாக புத்தகத்தை அச்சி...
நாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு – தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்

நாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு – தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்

HOME SLIDER, NEWS, செய்திகள்
மருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அதன் மீது மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த ஆண்டுக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த தமிழக மாணவர்களுக்கு கேரளா, ராஜஸ்தானில் தேர்வு மையம்  ஒதுக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. நீட் தேர்வை நடத்தும் சி.பி.எஸ்.சி.யின் அலட்சியம் காரணமாக மாணவர்கள் அலைக்கழிக்கப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று காலை 10 மணிக்கு தேர்வு தொடங்க உள்ளது. கடும் சோதனைகளுக்கு பின்னரே மாணவர்கள் மையத்தின் உள்ளே அனுமதிக்கப்பட உள்ளனர். ஏ பிரிவு நுழைவுச்சீட்டு உள்ளவர்கள் 7.30 மணிக்கும், பி பிரிவு நுழைவுச்சீட்டு உள்ளவர்கள் 8.30 மணிக்கும் உள்ளே அனுமதிக்கப்படுவ...
நடிகையாக இருந்து இயக்குனர் அவதாரம் எடுத்த அக்‌ஷயா..!

நடிகையாக இருந்து இயக்குனர் அவதாரம் எடுத்த அக்‌ஷயா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
AB கிரியேசன்ஸ் பட நிறுவனம் சார்பில் பாலச்சந்தர்.T தயாரித்திருக்கும் படம் “ யாளி “ இந்த படத்தில் தமன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக நடித்து இயக்கியிருக்கிறார் அக்ஷயா. மற்றும் ஊர்வசி, மனோபாலா இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் அர்ஜுன் என்ற புதுமுகம்  நடித்திருக்கிறார். படம் பற்றி இயக்குனரும், நாயகியுமான அக்ஷயா கூறியதாவது.. பெண் இயக்குனர்களுக்கு தமிழ் சினிமாவில் எப்போது நல்ல வரவேற்பு இருக்கும் அந்த வரிசையில் நான் இணைந்துள்ளேன்.  இது ஒரு ரொமான்டிக், திரில்லர் படமாக உருவாக்கி இருக்கிறோம். மும்பை பின்னணியில் நடக்கும் கதை.                                      முக்கியமான மூன்று கதாபாத்திரங்களை சுற்றி திரைக்கதை நகரும். நாயகி ஜனனி ( அக்ஷயா ),நாயகன்(தமன் )இருவரும் காதலிக்கிறார்கள். ஆனால் இவர்களுக்கு தொடர்பு இல்லாத பாலா ( அர்ஜுன் ) என்ற கதாபாத்திரம் ஜனனியை பின்தொடர்கிறார். யார் அவர் எதற்கா...
ரெஜினாவுக்கு MR.சந்திரமெளலி தான் முதல் முறையாம்..!

ரெஜினாவுக்கு MR.சந்திரமெளலி தான் முதல் முறையாம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
திரு இயக்கத்தில் கவுதம் கார்த்திக் - ரெஜினா கசாண்ட்ரா இணைந்து நடித்துள்ள படம் `மிஸ்டர்.சந்திரமௌலி'. கார்த்திக்கும், கவுதம் கார்த்திக்கும் முதல்முறையாக இணைந்து நடித்திருக்கும் இந்த படத்தை கிரியேட்டிவ் எண்டர்டெய்னர்ஸ் அன்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் சார்பில் தனஞ்செயன் இந்த படத்தை தயாரித்துள்ளார். வரலட்சுமி சரத்குமார், சதீஷ், மகேந்திரன், அகத்தியன், விஜய் சந்திரசேகர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கவுதம் கார்த்திக் இந்த படத்தில் பாக்ஸராக நடித்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், நடிகை ரெஜினா அவரது காட்சிகளுக்கு டப்பிங் பேசி முடித்துள்ளார். ரெஜினா டப்பிங் பேசிய முதல் தமிழ் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது...