வெள்ளிக்கிழமை, ஜூலை 10
Shadow

Author: Kodanki

இயக்குனர் பாரதிராஜா மருத்துவமனையில் அனுமதி !

இயக்குனர் பாரதிராஜா மருத்துவமனையில் அனுமதி !

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனராக அறியப்பட்டவர் பாரதிராஜா. இவர் 16 வயதினிலே படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன்பின்னர் கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள், நிழல்கள், அலைகள் ஓய்வதில்லை, காதல் ஓவியம், முதல் மரியாதை உள்ளிட்ட பல படங்களை இயக்கின் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனராக உருவெடுத்தார். இயக்குனராக மட்டுமில்லாமல் நடிகராகவும் அயூத எழுத்து, பாண்டியநாடு, குரங்கு பொம்மை, படைவீரன், நம்ம வீட்டு பிள்ளை, ஈஸ்வரன், திருசிற்றம்பலம் உள்ளிட்ட படங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். இந்நிலையில் இயக்குனர் பாரதிராஜா திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....
விக்ரமை பார்க்க குவிந்த ரசிகர்கள்!

விக்ரமை பார்க்க குவிந்த ரசிகர்கள்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடிப்பில் வருகிற ஆகஸ்ட் 31-ம் தேதி கோப்ரா திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் அறிமுக நிகழ்ச்சி திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் இன்று நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக விக்ரம் மற்றும் கோப்ரா படக்குழுவினர் உள்ளிட்ட 9 பேர் இன்று காலை 8.20 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி சென்றனர். அவர்களை வரவேற்க ரசிகர்கள் ஏராளமானோர் விமான நிலையத்தில் திரண்டிருந்தனர். விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த விக்ரமை பார்த்த ரசிகர்கள் ஆர்வம் மிகுதியில் அவரை சூழ்ந்து கொண்டு ஆரவாரத்தில் ஈடுபட்டனர். பலர் முண்டியடித்துக் கொண்டு அவருக்கு முன்பாக நின்று செல்பி எடுக்க முயன்றனர். பாதுகாப்பு கருதி போலீசாரும் விக்ரமை சுற்றி பாதுகாப்பு வளையம் அமைத்திருந்தனர். அப்போது அங்கிரு...
தமிழகத்தில் 37,450 நபர்களுக்கு வேலை வாய்ப்புகள்: தோல் துறை மாநாட்டில் 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!

தமிழகத்தில் 37,450 நபர்களுக்கு வேலை வாய்ப்புகள்: தோல் துறை மாநாட்டில் 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
சென்னையில் இன்று காலணிகள் மற்றும் தோல் துறை மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். இம்மாநாட்டில் 2,250 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 37,450 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் 5 திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன. ஒப்பந்தம் செய்த நிறுவனங்கள்: 1. கோத்தாரி - ஃபீனிக்ஸ் அக்கார்ட் லிமிடெட் (காலணி உற்பத்தி) 2. கோத்தாரி - ஃபீனிக்ஸ் அக்கார்ட் லிமிடெட் (ஆயத்த நிலை மாதிரி சூழலமைப்பு) 3. கோத்தாரி - SEMS குழுமம் (தோல் அல்லாத காலணி உற்பத்தி) 4. வேகன் குழுமம் (தோல் அணிகலன் மற்றும் பரிசு அணிகலன்களின் உபகரணங்கள் உற்பத்தி) 5. வாக்கரூ இண்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் (தோல் அல்லாத காலணி உற்பத்தி) இத்திட்டங்கள், பெரம்பலூர் மற்றும் இராணிப்பேட்டை (பனப்பாக்கம்) மாவட்டங்களில் மேற்கொள்ளப்படுகின்றன. இது...
மகனுக்காக ஒன்று சேர்ந்த தனுஷ் – ஐஸ்வர்யா!

மகனுக்காக ஒன்று சேர்ந்த தனுஷ் – ஐஸ்வர்யா!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும் தனுஷும் காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2004ம் ஆண்டு நவம்பர் 18ம் நாள் திருமணம் செய்துக் கொண்டனர். மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வந்த இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் யாத்ராவுக்கு 15 வயது ஆகிறது. தனுஷ் - ஐஸ்வர்யா சமீபத்தில் தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்து செய்யப்போவதாகவும், இனிமேல் இருவரும் தனித்தனி பாதைகளில் பயணிக்கப்போவதாகவும் அறிவித்த்திருந்தனர். விவாகரத்து அறிவிப்புக்கு பின்னர் தனுஷ் பெயரை தனது சமூக வலைதள பக்கங்களில் இருந்து நீக்கி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என மாற்றியிருந்தார். தனுஷ் - ஐஸ்வர்யா இந்நிலையில் இருவரின் பிரிவிற்கு பிறகு மூத்த மகன் யாத்ராவின் பள்ளி நிகழ்ச்சிக்கு முதல் முறையாக இருவரும் ஒன்றாக வந்தனர். இவர்கள் மீண்டும் இணைய வேண்டும் என்று எதிர்ப்பார்த்திருந்த ரசிகர்களுக்கு தனது மகனுக...
படப்பிடிப்பை தொடங்கும் புஷ்பா படக்குழு!

படப்பிடிப்பை தொடங்கும் புஷ்பா படக்குழு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் 'புஷ்பா'. இப்படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். செம்மரக்கட்டை கடத்தலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூலை ஈட்டியது. இப்படத்தின் இரண்டாம் பாகமான 'புஷ்பா-தி ரூல்' படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கவுள்ளது. இதனை புஷ்பா படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளது. https://twitter.com/MythriOfficial/status/1561315266255941633?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwter...
ஜெயிலர்  ஃபர்ஸ்ட் லுக் –  உற்சாகத்தில் ரசிகர்கள்!

ஜெயிலர் ஃபர்ஸ்ட் லுக் – உற்சாகத்தில் ரசிகர்கள்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 169-வது படம் ஜெயிலர். இதில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். நேற்று ஜெயிலர் படத்தின் அறிவிப்பு (22.8.2022) காலை 11:00 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் அறிவித்தபடி ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. பெரும் எதிர்ப்பார்ப்பில் உருவாகவுள்ள ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. https://twitter.com/sunpictures/status/1561586499132559371?ref_src=twsrc%...
5 நாட்கள் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

5 நாட்கள் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று டெல்டா மாவட்டங்கள் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளை (23-ந்தேதி) தமிழகத்தில் அநேக இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும். 24, 25, 26 ஆகிய தேதிகளில் அநேக இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். டெல்டா மாவட்டங்கள், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் லே...
வெப்சீரியஸில் தனக்கென தனி முத்திரை பதித்த தமிழ்ராக்கர்ஸ்

வெப்சீரியஸில் தனக்கென தனி முத்திரை பதித்த தமிழ்ராக்கர்ஸ்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  தமிழ் சினிமாவில் சொல்ல முடியாத கதைகளையும்,  காட்ட முடியாத காட்சிகளையும் மிக வெளிப்படையாக பிரதிபலிக்கும் ஒரு இடமாக மாறியுள்ளதுதான் வெப் சீரியஸ். இந்திய மொழிகளில் இந்தியில் மிகசுதந்திரமாக உலா வந்த காமம், காதல், ஆக்ரோஷம், கொலை, ஆபாசங்கள் அனைத்தும் இப்போது தமிழையும் ஆக்ரமித்துள்ளது. சம்பத்தில் ஒரு வெப் சீரியஸ் பார்த்தேன் . அதை அப்படி சொல்வதற்கு பதில் “நீலப் படத்தை” கொஞ்சம் ஆடைகளோடு பார்த்தேன் என சொல்லலாம். ஆனால் இந்த  "தமிழ்ராக்கர்ஸ்"  வெப் சீரியஸ் கொஞ்சம் புதுசாய் ஒரு தினுசாய் இருக்கிறது . வெப் சீரிஸ் என்றால் முழு படைப்பு சுதந்திரம் என்று நினைத்துகொண்டு அசிங்க அசிங்கமாக கெட்ட வார்த்தை பேசுவது, பாலியல் காட்சிகளை திணிப்பது, ரத்தம் தெறிக்க தெறிக்க காட்சிகளை ஓட விடுவது, சம்மந்தமே இல்லாமல் அலற விடுவது என்றில்லாமல்  பார்க்கிற அனைவரையும் அடுத்த எபிசோடு என்ன என்று ஒரு ஆவலை தூண்...
மாஸ்டர் மகேந்திரன், ஷ்ரத்தா தாஸ் நடிப்பில் இரு மொழிகளில் உருவாகியுள்ள “அர்த்தம்”

மாஸ்டர் மகேந்திரன், ஷ்ரத்தா தாஸ் நடிப்பில் இரு மொழிகளில் உருவாகியுள்ள “அர்த்தம்”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  மினெர்வா பிக்சர்ஸ் சார்பில் ராதிகா ஸ்ரீனிவாஸ் தயாரித்துள்ள “அர்த்தம்” படத்தை மணிகாந்த் தல்லகுடி எழுதி இயக்கியுள்ளார். இரு மொழிகளில் பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தில், மாஸ்டர் மகேந்திரன், ஷ்ரத்தா தாஸ் உடன், அஜய், ஆமணி, சாஹிதி, பிரபாகர், ரோகினி மற்றும் இன்னும் பல முக்கிய நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தின் தமிழ் பதிப்பிற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. தயாரிப்பாளர் ஸ்ரீனிவாஸ் பேசியதாவது… நான் முன்னதாக இரண்டு தெலுங்கு படங்களை தயாரித்துள்ளேன் இது எனது முதல் தமிழ் படம். கடந்த லாக்டவுன் சமயத்தில் தான் இந்தப்படத்தை துவக்கினோம். இரண்டு மொழிகளில் எடுக்க திட்டமிட்டு மகேந்திரனை நாயகனாக்கினோம், அவர் சென்னை படப்பிடிப்பிற்கு மிக உதவியாக இருந்தார். இந்தப்படத்தில் மிக சிறப்பாக நடித்துள்ளார். படம் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம் நன்றி. ...
இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் தீபக் ஹூடா புதிய சாதனை!

இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் தீபக் ஹூடா புதிய சாதனை!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
நேற்று நடைபெற்ற ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே 38.1 ஓவரில் 161 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து, 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. இந்திய தரப்பில் ஷிகர் தவான், ஷுப்மன் கில் தலா 33 ரன்கள் எடுத்தனர். தீபக் ஹூடா 25 ரன்கள் அடித்தார். அதிபட்சமாக சஞ்சு சாம்சன் 43 ரன்கள் அடித்து களத்தில் இருந்தார்.இறுதியில், இந்தியா 25.4 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 167 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. இந்திய அணியின் இந்த வெற்றியின் மூலம் இந்திய ஆல்ரவுண்டர் தீபக் ஹூடா புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். அதாவது தனது அறிமுக போட்டியில் இருந்து நேற்றைய போட்டிவரை அவர் இந்தியாவுக்காக மொத்தம் 16 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். அனைத்து போட...