வெள்ளிக்கிழமை, ஜூலை 10
Shadow

Author: Kodanki

இயக்குனர் மணிரத்னத்திற்கு கொரோனா!

இயக்குனர் மணிரத்னத்திற்கு கொரோனா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
பகல் நிலவு படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் இயக்குனர் மணிரத்னம். அதன்பின் மௌன ராகம், நாயகன், தளபதி, ரோஜா, ராவணன் போன்ற பல படங்களை இயக்கியுள்ளார். தற்போது இவர் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் என்கிற வரலாற்று கதையம்சம் கொண்ட படம் விரைவில் வெளிவரவுள்ளது. இந்நிலையில், இயக்குனர் மணிரத்னத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....
எதிர்க்கட்சி துணைத்தலைவராக நத்தம் விசுவநாதன் தேர்வு?- சபாநாயகருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் அனுப்புகிறார்!

எதிர்க்கட்சி துணைத்தலைவராக நத்தம் விசுவநாதன் தேர்வு?- சபாநாயகருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் அனுப்புகிறார்!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
தமிழக சட்டசபையில் 66 எம்.எல்.ஏ.க்களை கொண்ட அ.தி.மு.க. எதிர்க்கட்சியாக உள்ளது. எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமியும், துணைத்தலைவராக ஓ.பன்னீர்செல்வமும் இருக்கிறார்கள். இந்த நிலையில் அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை பற்றிய பிரச்சினையில் எடப்பாடி பழனிசாமி வகித்து வந்த இணை ஒருங்கிணைப்பாளர் பதவி, ஓ.பன்னீர்செல்வம் வகித்து வந்த ஒருங்கிணைப்பாளர் பதவிகள் ரத்து செய்யப்பட்டன. ஒற்றை தலைமையை தேர்வு செய்வதற்கான சிறப்பு பொதுக்குழு கூட்டம் கடந்த 11-ந்தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அத்துடன் ஓ.பன்னீர் செல்வம் வகித்து வந்த கட்சியின் பொருளாளர் பதவியும் பறிக்கப்பட்டது. கட்சிக்கு விரோதமாக செயல்படுவதாக கூறி கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டார். இதற்கிடையில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற அதேநேரத்தில் ஓ.பன்னீர...
தொடர்ந்து 22 மணி நேரம் ஆக்‌ஷன் காட்சிகளில் சிம்புவை மிஞ்சிய ஹன்சிகா “மஹா” அதிரடி!

தொடர்ந்து 22 மணி நேரம் ஆக்‌ஷன் காட்சிகளில் சிம்புவை மிஞ்சிய ஹன்சிகா “மஹா” அதிரடி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
ஆக்‌ஷன் காட்சிகளில் சிம்புவை மிஞ்சிய ஹன்சிகா “மஹா” அதிரடி!   ஹன்சிகாவின் 50 வது திரைப்படமாக உருவாகியுள்ள மஹாவில் சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். சிறப்பு தோற்றமாக இருந்தாலும் படத்தில் சுமார் 40 நிமிடங்கள் வரும் சிம்புவின் அனல் பறக்கும் ஆக்‌ஷன் காட்சிகளும், அதிரடி வசனங்களும் ரசிகர்களை நிச்சயம் கவருமாம்.   மாநாடு’ வெற்றியை தொடர்ந்து சிம்புக்கு மற்றொரு மாபெரும் வெற்றியை கொடுக்க இருக்கும் ‘மஹா’ திரைப்படம் ஹன்சிகாவின் சினிமா பயணத்தில் மிக முக்கியமான படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இப்படத்திற்காக மிக கடுமையாக உழைத்திருக்கும் ஹன்சிகா, பல ஆக்‌ஷன் காட்சிகளில் சிம்புவைப் போல அதிரடியை காட்டியிருக்கிறாராம். குறிப்பாக இப்படத்தில் இடம்பெறும் ஒரு சண்டைக்காட்சிக்காக ஹன்சிகா தொடர்ந்து 22 மணி நேரம் பணியாற்றி படக்குழுவினரை வியக்க வைத்துள்ளார். காரணம் இந்த ...
கமல் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு  ரூ.1½ கோடி நன்கொடை !

கமல் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ரூ.1½ கோடி நன்கொடை !

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, அரசியல், சினி நிகழ்வுகள், தமிழக அரசியல், நடிகர்கள்
மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில, மாவட்ட, மண்டல நிர்வாகிகளின் கூட்டம் மாங்காட்டில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சி தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டு நிர்வாகிகள் மத்தியில் பேசினார். அப்போது அவர் நிர்வாகிகள் அனைவரும் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை சந்திக்க இப்போதே தயாராக வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் அவர் கூறும்போது, "கட்சியில் நான் செய்யாத எதையும் உங்களை செய்ய அறிவுறுத்த மாட்டேன். அந்த வகையில் எனது வருமானத்தில் இருந்து கட்சிக்காக ரூ.1½ கோடியை நன்கொடையாக வழங்குகிறேன்" என்று தெரிவித்தார். இதனை கட்சி நிர்வாகிகள் ஆரவாரத்துடன் வரவேற்றனர். அப்போது கட்சி நிர்வாகிகளிடம் கமல்ஹான் வேண்டுகோள் ஒன்றையும் முன்வைத்தார். உங்களால் முடிந்த தொகையை கட்சிக்கு நன்கொடையாக வழங்குங்கள். அது சிறிய தொகையாக இருந்தாலும் பரவாயில்லை என்றார். 100 ரூபாய் சம்பாதிக்கும் நபராக ...
ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக பென் ஸ்டோக்ஸ் அறிவிப்பு!

ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக பென் ஸ்டோக்ஸ் அறிவிப்பு!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருபவர் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ். டெஸ்ட் போட்டிகளில் ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி தொடர் தோல்விகளை சந்தித்த நிலையில் இவர் இந்த ஆண்டு டெஸ்ட் கேப்டனாக பொறுப்பேற்று கொண்டார். 2019-ம் ஆண்டு இங்கிலாந்து அணி உலகக்கோப்பையை வெல்ல பென் ஸ்டோக்ஸ் முக்கிய காரணமாக இருந்தார். இந்த நிலையில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக பென் ஸ்டோக்ஸ் இன்று அறிவித்துள்ளார். நாளை தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியுடன் ஓய்வு பெறுவதாக அவர் கூறியுள்ளார். தனது ஓய்வு முடிவு குறித்து அவர் கூறுகையில்:- நாளை டர்ஹாமில் நடக்கும் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்துக்காக எனது கடைசி ஆட்டத்தை விளையாடுகிறேன். இந்த வடிவத்தில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். இது ஒரு நம்பமுடியாத கடினமான முடிவாகும். இங்கிலாந்துக்காக எனது நண்பர்களுடன் விள...
அதிமுக பொதுக்குழு விவகாரம்- உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி கேவியட் மனு தாக்கல் !

அதிமுக பொதுக்குழு விவகாரம்- உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி கேவியட் மனு தாக்கல் !

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
அதிமுக பொதுக்குழு கடந்த 11 ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அதேபோல், ஓ.பன்னீர் செல்வமும் அதிமுகவில் இருந்து நீக்கப்படுவதாக பொதுக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. அதிமுகவில் இருந்து தன்னை நீக்கியது செல்லாது என ஓ. பன்னீர் செல்வம் கூறி வருகிறார். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திலும் ஓபிஎஸ் தரப்பு முறையிட்டுள்ளது. மேலும் தனி நீதிபதி உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ், வைரமுத்து சார்பில் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது . இந்த நிலையில், அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொதுக்குழு முடிவுகளுக்கு எதிராக உத்தரவு எதுவும் மனு எதுவும் தாக்கல் செய்யப்பட்டால் தங்கள் தரப்பு...
பிரகிடா சார்பாக மன்னிப்பு கேட்ட பார்த்திபன்!

பிரகிடா சார்பாக மன்னிப்பு கேட்ட பார்த்திபன்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் இயக்கி நடித்து வெளியான திரைப்படம் 'இரவின் நிழல்'. இப்படம் ஜூலை 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பலரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது. இதில் வரலக்ஷ்மி சரத்குமார், ரோபோ ஷங்கர், சகாய பிரகிடா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 'இரவின் நிழல்' திரைப்படம் நான் லீனியர் திரைக்கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்நிலையில் ஆஹா கல்யாணம் வெப் தொடரில் பவி டீச்சர் என்ற கதாப்பாத்திரத்தின் மூலம் பிரபலமான நடிகை சகாய பிரகிடா முக்கிய கதாப்பத்திரத்தில் நடித்திருந்தார். இரவின் நிழல் படத்தில் இவர் நிர்வாண காட்சியில் நடித்திருந்தார், இதுகுறித்து அவர் விளக்கமளித்திருந்தது பேசுபொருளானது. அதில், "இந்தக் கதையே தனி ஒருவன் பற்றியதுதான். அவனது வாழ்க்கையில் கெட்டது மட்டும்தான் நடந்திருக்கிறது. அதை ராவா...
தளபதிக்கு எதிரியாகும் சமந்தா!

தளபதிக்கு எதிரியாகும் சமந்தா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் வாரிசு. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். வாரிசு படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 2023 பொங்கலுக்கு இந்த படம் திரைக்கு வரவுள்ளது. இதையடுத்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் தளபதி 67 படத்தில் நடிக்க உள்ளார். கமல் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து லோகேஷ் இயக்கவிருக்கும் விஜய் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்த்து எழுந்திருக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு எதிராக ஒரு வில்லி கதாப்பாத்திரம் இடம் பெற்றிருப்பதாகவும், இதற்கான தேர்வு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இதில் முன்னணி நடிகை ஒருவர் வில்லி கதாப்பாத்திரத்தில் நடிக்கலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. அதன்ப...
ராயப்பேட்டை அலுவலகத்தில் மோதல்- அ.தி.மு.க.வினர் 48 பேருக்கு போலீசார் சம்மன்!

ராயப்பேட்டை அலுவலகத்தில் மோதல்- அ.தி.மு.க.வினர் 48 பேருக்கு போலீசார் சம்மன்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் கடந்த 11-ந்தேதி ஏற்பட்ட கலவரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் 400 பேர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் 15 பேர் அன்றைய தினமே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அ.தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்ற மோதல் தொடர்பாக மற்றவர்களை அடையாளம் கண்டு கைது செய்யும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. மோதல் சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை வைத்து கலவரத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர் யார்? யார்? என்பதை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். இதன்படி 48 பேருக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். இவர்கள் அனைவரும் தேனி, தஞ்சை, ராமநாதபுரம் உள்ளிட்ட வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் அனைவரும் நாளையும், நாளை மறுநாளும் நேரில் ஆஜராக வேண்டும் என்று போல...
கொலை திரைப்படத்தின் சுவாரசிய கதாபாத்திரங்கள்!

கொலை திரைப்படத்தின் சுவாரசிய கதாபாத்திரங்கள்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
லைலாவை கொன்றது யார் எனும் ஹேஸ்டேக் சமூக வலை தளங்களில் டிரெண்டிங் ஆகி வருகிறது. கொலை படம் குறித்து பரவும் இந்த செய்தி திரைப்பட ஆர்வம் இல்லா பொது ரசிகர்களுக்கும், படத்தின் மீது பெரும் ஆர்வத்தை தூண்டுவதாக அமைந்துள்ளது. Infiniti Film Ventures நிறுவனம் Lotus Pictures உடன் இணைந்து தயாரிக்க, பாலாஜி K குமார் எழுதி இயக்கும் இப்படத்தில் விஜய் ஆண்டனி முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார். ‘கொலை’ திரைப்படம் கடந்த ஒரு வாரமாக கோலிவுட்டில் பேசப்பட்டு வருகிறது. இந்த 'கொலை' சஸ்பென்ஸ் மர்ம திரைப்படத்தில் சம்பந்தப்பட்ட முக்கிய கதாபாத்திரங்களை பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர்களின் புதுமையான முயற்சிக்கு பாராட்டுக்கள் கிடைத்து வருகிறது. கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தும் இந்த புதுமையான முயற்சி மீனாட்சி சவுத்ரி நடித்த ‘லீலா’ கதாபாத்திரத்தின் அறிமுகத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து, பான்-இந்...