சனிக்கிழமை, ஜூலை 11
Shadow

Author: Kodanki

கவர்ச்சி காட்டும் அஞ்சலி !

கவர்ச்சி காட்டும் அஞ்சலி !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
'அங்காடி தெரு' படத்தின் மூலம் பிரபலமான அஞ்சலி, எங்கேயும் எப்போதும், மங்காத்தா, கலகலப்பு, சேட்டை, இறைவி, பலூன், காளி, நாடோடிகள் 2, நிசப்தம் என்று தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் உடல் எடையை குறைத்து மெலிந்த தோற்றத்துக்கு மாறிய அவர், தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார். அஞ்சலி நடிப்பில் கடைசியாக வெளியான சைலன்ஸ் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் ஆர்சி15 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் தெலுங்கு நடிகர் நிதின் நடிப்பில் உருவாகி வரும் 'மச்சேர்லா நியோஜகவர்கம்' என்ற படத்தில் ஒரு பாடலுக்கு அஞ்சலி கவர்ச்சி நடனம் ஆடியுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த போஸ்டர் ஒன்றை சமூக ...
வைரலாகும் ருத்ரன் பட போஸ்டர்!

வைரலாகும் ருத்ரன் பட போஸ்டர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  ராகவா லாரன்ஸ், ருத்ரன், raghava lawrence, ruthranதமிழ் திரையுலகில் பல வெற்றிப் படங்களை தயாரித்த ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இயக்குனராக அறிமுகமாகும் படம் 'ருத்ரன்'. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்து வருகிறார். சரத்குமார், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், என பல மொழிகளில் வெளியாக இருக்கும் ருத்ரன் படத்தின் சண்டைக் காட்சிகளுக்காக மட்டும் ஒரு கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்பு வெளியான ருத்ரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்நிலையில் ருத்ரன் படத்தின் இரண்டாம் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. கையில் மதுபாட்டில் வைத்தபட...
இந்தியாவை நீண்ட காலம் ஆட்சி செய்த கட்சிகள் இப்போது வீழ்ச்சி அடைந்துள்ளன- பிரதமர் மோடி!

இந்தியாவை நீண்ட காலம் ஆட்சி செய்த கட்சிகள் இப்போது வீழ்ச்சி அடைந்துள்ளன- பிரதமர் மோடி!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள்
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெறும் பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் பிரதமர் மோடி ஆற்றிய உரை குறித்து பாஜக தலைவர்களில் ஒருவரான ரவிசங்கர் பிரசாத், பின்னர் செய்தியாளர்களிடம் விளக்கினார். அப்போது அவர் கூறியதாவது: சர்தார் படேல் ஒருங்கிணைந்த இந்தியாவின் அடித்தளத்தை அமைத்ததாகவும், இப்போது அதை மேலும் முன்னெடுத்துச் செல்வது பாஜகவின் பொறுப்பு என்றும், பிரதமர் மோடி தெரிவித்தார். வம்ச அரசியல்,வாரிசு அரசியல் கட்சிகளால் நாட்டு மக்கள் சலிப்படைந்துள்ளனர் என்றும், இதுபோன்ற கட்சிகள் நீண்ட காலம் நீடிப்பது கடினம் என்றும் பிரதமர் கூறினார். இந்தியாவை நீண்ட காலம் ஆட்சி செய்த கட்சிகள் இப்போது இறுதி வீழ்ச்சியில் உள்ளன; அவர்களை கேலி செய்யாமல் அவர்களின் தவறுகளில் இருந்து பாடம் கற்க வேண்டும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் கூறினார்....
ராகுல் நர்வேகர்  இளம் வயது சபாநாயகர் என்ற பெருமையை பெற்றார்!

ராகுல் நர்வேகர் இளம் வயது சபாநாயகர் என்ற பெருமையை பெற்றார்!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள்
  மகாராஷ்டிரா சட்டசபையில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு நாளை பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க உள்ளது. இதற்காக இரண்டு நாட்கள் கொண்ட சிறப்பு சட்டசபை கூட்டம் இன்று தொடங்கியது. -முதல் நாளான இன்று சபாநாயகர் தேர்தல் நடைபெற்றது. சபாநாயகர் பதவிக்கு பாஜக சார்பில் ராகுல் நர்வேக்கர், சிவசேனா சார்பில் ராஜன் சால்வி போட்டியிட்டனர். வாக்கெடுப்பில் நர்வேகருக்கு ஆதரவாக 164 வாக்குகளும், சால்விக்கு ஆதரவாக 107 வாக்குகளும் கிடைத்தன. இதையடுத்து புதிய சபாநாயகராக ராகுல் நர்வேக்கர் தேர்வானதாக அறிவிக்கப்பட்டது. முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவும், துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிசும், நர்வேக்கரை சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர். அப்போது பேசிய பட்னாவிஸ், ராகுல் நர்வேகர் மகாராஷ்டிராவிற்கு மட்டுமல்ல, இந்தியாவின் இளம் வயது சபாநாயகராக உள்ளார் என தெரிவித்தார். 45 வயதான நார்வேக்கரின் முதலில் தேசியவா...
டி பிளாக் கோடங்கி விமர்சனம்

டி பிளாக் கோடங்கி விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள்
டி பிளாக் கோடங்கி விமர்சனம்   வெள்ளியங்கிரி நடுக்காட்டுல ஒரு என்ஜினியரிங் காலேஜ்.அந்த காலேஜ் உள்ள இருக்கிற லேடிஸ் ஹாஸ்டல்  D- Block. கட்டடத்துல இருக்கு. ஹாஸ்டல் அப்படீன்னாலே ஏகப்பட்ட கண்டீஷன்ஸ் இருக்கும். அதுலயும் லேடிஸ் ஹாஸ்டல்னா சொல்லனுமா என்ன. எங்க சுத்துனாலும், 6 மணிக்குள்ள ஹாஸ்டலுக்குள்ள வந்திறனும். இராத்திரி 9 மணிக்கு மேல மொட்ட மாடிக்கு போகக்கூடாது. 10 மணிக்கு மேல ரூம்ல லைட் எரியக்கூடான்னு ஏகப்பட்ட கண்டிஷன் போட்றார் வாடன் உமா ரியாஸ். இதுக்கெல்லாம் காரணம்… ராத்திரியில அங்க புலி நடமாட்டம் இருக்கும்னு ஷாக் குடுக்குறார் இயக்குனர் எருமசாணி விஜய். புலி வர்ற எடத்துல எப்படிடா காலேஜ் நடத்துறீங்கன்னோ… இராத்திரில வர்ற புலி பகல்ல வராதான்னோ கேள்வி எல்லாம் கேக்காம படம் பாத்தா படம் விறுவிறுப்பா இருக்கும்… இத நம்ப வைக்கறதுக்காக சில பொண்ணுங்க மர்மமா இறந்து போறாங்க… அவங்களை எ...
சென்னையில் 4ம் தேதி தொழில் முதலீட்டாளர் மாநாடு!

சென்னையில் 4ம் தேதி தொழில் முதலீட்டாளர் மாநாடு!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சென்னை தாஜ் ஓட்டலில் வரும் 4ஆம் தேதி தொழில் மாநாடு நடைபெறும். இந்த மாநாட்டில் புதிய தொழில் நிறுவனங்களுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளும். இந்த மாநாட்டின் மூலம் ₨.3,494 ஆயிரம் கோடி தொழில் முதலீடுகள், 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். நான் முதல்வன் திட்டத்தால் இளைஞர்களுக்கு திறன்மேம்பாடு வழங்கப்படுகிறது கடந்த ஓராண்டு காலத்தில் தொழில்துறையில் மாபெரும் மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது. 29 திட்டங்களுக்கு நிலம் அடையாளம் காணும் பணி நிறைவடைந்துள்ளது. 25 திட்டங்கள் அனுமதி பெறும் நிலையில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்....
சிவகார்த்திகேயனின் அடுத்த பட ஹீரோயின்!

சிவகார்த்திகேயனின் அடுத்த பட ஹீரோயின்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
சிவகார்த்திகேயன் நடித்து வெளியான 'டாக்டர்' மற்றும் 'டான்' ஆகிய இரண்டு திரைப்படங்களும் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. கலவையான விமர்சனங்களை பெற்றாலும் மக்கள் மத்தியில் இந்த இரண்டு திரைப்படங்களும் பெரும் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கி வரும் 'பிரின்ஸ்' படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். தமன் இசையமைக்கும் இப்படத்திற்கு மனோஷ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் உக்ரைன் நடிகை மரியா, சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்தை இந்த வருட தீபாவளி தினத்தன்று திரையரங்குகளில் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. இப்படத்தை தொடர்ந்து 'மண்டேலா' திரைப்படத்தை இயக்கிய மடோன் அஷ்வின் இயக்கவிருக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் சிவகார்த்திகே...
பிரமாண்டமாக உருவாகும் வின்னர் 2!

பிரமாண்டமாக உருவாகும் வின்னர் 2!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் பிரசாந்த். இவர் 90-களின் காலகட்டத்தில் கொடிகட்டிப் பறந்த முன்னணி நடிகர்களில் ஒருவர். நீண்ட இடைவேளைக்கு பிறகு இவர் நடிக்கும் திரைப்படம் அந்தகன். இப்படத்தில் சிம்ரன், வனிதா, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, பிரியா ஆனந்த், சமுத்திரகனி என ஏராளமானோர் நடிக்கின்றனர். இப்படத்தை பிரசாந்தின் தந்தை தியாகராஜனே இயக்குகிறார். சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலானது. இதைத் தொடர்ந்து பிரசாந்த், வடிவேல் நடிப்பில் வெளியான வின்னர் திரைப்படம் மிகப்பெரும் வெற்றியடைந்ததை அடுத்து வின்னர் இரண்டாம் பாகம் தொடங்கவுள்ளது. இந்நிலையில், திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலுக்கு நடிகர் பிரசாந்த் சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். அவர் கூறுகையில், "அந்தகன் விரைவில் வெளியாகும். வின்னர் 2-ஆம் பாகம...
தவறான செய்திகளை பரப்புவதை நிறுத்துங்கள் – மீனா உருக்கம்!

தவறான செய்திகளை பரப்புவதை நிறுத்துங்கள் – மீனா உருக்கம்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் ஜூன் 28-ந் தேதி இரவு காலமானார். 48 வயதாகும் இவருக்கு சில தினங்களுக்கு முன் திடீரென நுரையீரலில் தொற்று அதிகமானதால், நுரையீரல் மற்றும் இதயம் செயலிழந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு உறுப்புகள் கிடைக்காத நிலையில், ஒவ்வொரு உறுப்புகளும் செயலிழந்து சிகிச்சை பலனின்றி வித்யாசாகர் உயிரிழந்தார். அவரது உடல் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. மேலும் திரைப்பிரபலங்கள் பலர் அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். வித்யாசாகரின் உடல் ஊர்வலமாக பெசன்ட் நகர் மின்மயானத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது இறுதி சடங்கு முடிந்ததும் உடல் தகனம் செய்யப்பட்டது.   இந்நிலையில், நடிகை மீனா தற்போது இணையத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நான் என் கணவரின் இறப்பினால் ஆழ்ந்த சோகத்த...
Think Originals’ ரிலீஸ் செய்த “வாடி வாடி” வீடியோ பாடல்!

Think Originals’ ரிலீஸ் செய்த “வாடி வாடி” வீடியோ பாடல்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் அஷ்வின் குமார் லக்‌ஷ்மிகாந்தன் & அஞ்சு குரியன் நடிப்பில், Think Originals’ உடைய “வாடி வாடி” வீடியோ பாடல், வெளியானது!!! இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் முதல் சுயாதீன ஆல்பம் பாடலான ‘வாடி வாடி’ பாடல் ஜூன் 29 அன்று வெளியிடப்பட்டது, இப்பாடல் அதன் அற்புதமான இசை மற்றும் அசத்தலான காட்சிகளுக்காக ரசிகர்களை கவர்ந்திழுத்திருக்கிறது. Think Originals’ தொடர்ந்து இசை பிரியர்களின் இதயம் அள்ளும் சுயாதீன ஆல்பம் பாடல்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் இப்பாடல் ரசிகர்களுக்கு விருந்தளிக்கிறது. ஜூன் 29ஆம் தேதி வெளியான ‘வாடி வாடி’ பாடல் வெளியானதில் இருந்தே ரசிகர்களிடம் பாடலுக்கான வரவேற்பு அமோகமாக உள்ளது. ஹாரிஸ் ஜெயராஜின் அற்புதமான இசைக்கோர்வை மற்றும் விவேகாவின் நவநாகரீக பாடல் வரிகள் ரசிகர்களை ஈர்க்கும் அம்சமாக அமைந்துள்ளன. அஸ்வின் குமார் லக்ஷ்ம...