சனிக்கிழமை, ஜூலை 11
Shadow

Author: Kodanki

தளபதி 66  படத்தின் டைட்டில் லீக்!

தளபதி 66 படத்தின் டைட்டில் லீக்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து தோழா உள்ளிட்ட படங்களை இயக்கிய வம்சி பைடிப்பள்ளி இயக்கும் படத்தில் விஜய் நடித்து வருகிறார். தளபதி 66 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தைப் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், ஷாம், ஸ்ரீகாந்த், ஜெயசுதா, சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். இப்படம் குடும்ப பின்னணி படமாக இருக்கும் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் தலைப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, தளபதி 66 படம் தெலுங்கில் 'வாரிசுடு' என்றும் தமிழில் 'வாரிசு' என்ற...
தமிழ் சினிமாவின் மூத்த தலைவர்களுக்கு மலர் மரியாதை செய்த இயக்குனர் சீனு ராமசாமி!

தமிழ் சினிமாவின் மூத்த தலைவர்களுக்கு மலர் மரியாதை செய்த இயக்குனர் சீனு ராமசாமி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  *தமிழ்நாட்டின் மூத்த தலைவர்களுக்கு மலர் மரியாதை செய்த இயக்குனர் சீனு ராமசாமி!* மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் நடித்து யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் முதன் முறையாக இளையராஜா & யுவன் சங்கர் ராஜா இசையில் சீனு ராமசாமி எழுதி இயக்கியிருக்கும் திரைப்படம் ”மாமனிதன்”. வரும் ஜூன் 24 ஆம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது. நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் தனது ஸ்டுடியோ 9 நிறுவனம் மூலம் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் வெளியிடுகிறார். இந்த தருணத்தில் தமிழக திரைத்துறையில் முன்னோடிகளாக மக்களால் இன்றும் நினைக்கப்படும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு இயக்குனர் சீனுராமசாமி மலர் மரியாதை செய்தார். இதுபற்றி அவர் கூறும் போது "இந்த தமிழ் சினிமாவின் மாமனிதர்கள் எனக்குள் உண்டாக்கிய கலை உணர்வுக...
நடிகை சாய் பல்லவியின் கருத்துக்கு கிளம்பும் எதிர்ப்பு !

நடிகை சாய் பல்லவியின் கருத்துக்கு கிளம்பும் எதிர்ப்பு !

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
நடிகை சாய் பல்லவி, நடிகர் ராணா நடித்துள்ள விராட பர்வம் திரைப்படம் ஜூன் 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதற்கான விளம்பரப் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த படத்தில் நக்சல் தலைவர் என்ற கேரக்டரில் ராணா நடித்துள்ளார். உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். புரொமோஷனுக்காக நடைபெற்ற நேர்காணலின்போது பேசிய நடிகை சாய்பல்லவி, "எனது குடும்பத்தினர் எந்த கொள்கையையும் சாராதவர்கள். நல்ல மனிதராக இருக்க வேண்டும் என்றுதான் எனது குடும்பத்தினரால் நான் வளர்க்கப்பட்டுள்ளேன். யார் பாதிக்கப்படுகிறார்களோ அவர்களை பாதுகாக்க வேண்டும். இடது சாரிகள், வலது சாரிகள் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் யார் நல்லவர்கள், யார் கெட்டவர்கள் என்பதை நம்மால் சொல்ல முடியாது. காஷ்மீர் பண்டிட்டுகள் அனுபவித்த கொடுமைகளை தி காஷ்மீர் பை...
விக்ரம் படத்திற்காக அனிருத்துக்கு கமல் அளித்த பரிசு!

விக்ரம் படத்திற்காக அனிருத்துக்கு கமல் அளித்த பரிசு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஜூன் 3-ஆம் தேதி 'விக்ரம்' திரைப்படம் வெளியானது. கமல்ஹாசன், பகத்ஃபாசில், விஜய் சேதுபதி, சூர்யா என பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்துள்ள இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. விக்ரம் திரைப்படம் வெற்றியைத் தொடர்ந்து கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜ்-க்கு விலை உயர்ந்த காரை பரிசாக வழங்கினார். அதன்பின்னர், விக்ரம் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய 13 பேருக்கு டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 பைக்கை கமல் பரிசளித்தார். ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்த சூர்யாவிற்கு விலை உயர்ந்த ரோலக்ஸ் கைகடிகாரத்தை கமல் பரிசளித்தார். இதையடுத்து 'விக்ரம்' படம் வெற்றியைத் தொடர்ந்து படக்குழுவினர் கேரளாவில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது நிருபர் ஒருவர் கமல் சார், லோகேஷுக்கு காரும், சூர்யாவுக்கு வாட்ச்சும் பரிசளித்தார் உங்களுக்கு என்ன கொடுத்தா...
வீட்ல விசேஷம் ரசனையான படம் நெகிழ்ந்த ஊர்வசி!

வீட்ல விசேஷம் ரசனையான படம் நெகிழ்ந்த ஊர்வசி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  "RJ பாலாஜி புத்திசாலித்தனமிக்க ஒரு தெளிவான திரைப்பட இயக்குநர், அவரது குழுவினரிடமிருந்து சிறந்த உழைப்பை பெற்று விடுவார் " - நடிகை ஊர்வசி இந்திய திரையுலகில் மிக முக்கியமான நடிகையாக போற்றப்படும் நடிகை ஊர்வசியின் பங்கு, அவர் நடிக்கும் திரைப்படங்களின் மதிப்பை உயர்த்துகிறது. குறிப்பாக, படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் அவர் நடித்தால், ​​பார்வையாளர்களின் இதயங்களிலும் மனதிலும் என்றென்றும் நிலைத்திருக்கும் ஒரு நடிப்பை வெளிப்படுத்தி முழுத் திரையையும் ஆட்கொண்டுவிடுவார். ஜூன் 17, 2022 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளிவரத் தயாராக இருக்கும் RJ பாலாஜி நடித்த “வீட்ல விசேஷம்” திரைப்படத்தில் அத்தகைய ஒரு பாத்திரத்தில் அவர் மீண்டும் நடித்துள்ளார். இது குறித்து நடிகை ஊர்வசி கூறியதாவது.., “வீட்ல விசேஷம் திரைப்படம் எனக்கு முழு திருப்தியை கொடுத்தது. மிகவும் அரிதாகவே, ஒரு கலை...
உடல் நலக் குறைவால் உயர்சிகிச்சை அளிக்க டி.ராஜேந்தர் அமெரிக்கா பயணம்!

உடல் நலக் குறைவால் உயர்சிகிச்சை அளிக்க டி.ராஜேந்தர் அமெரிக்கா பயணம்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
திரைப்பட இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தருக்கு உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த மாதம் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மருத்துவர்கள் அறிவுரைப்படி, தனது தந்தைக்கு உயர்சிகிச்சை அளிக்க இருப்பதாகவும், டி ராஜேந்தர் அமெரிக்கா செல்ல இருப்பதாகவும் அவரது மகன் நடிகர் சிம்பு அறிவித்திருந்தார். இதன்படி நேற்று விமானம் மூலம் டி ராஜேந்தர் அமெரிக்கா சென்றார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது: நான் உயர் சிகிச்சைக்கு அமெரிக்கா செல்கிறேன். நான் வாழ்க்கையில் எதையும் மறைத்தவன் கிடையாது. அதற்குள் அமெரிக்கா சென்றுவிட்டேன் என பல கதைகளை எழுதி விட்டனர். யார் என்ன எழுதினாலும் விதியை மீறி எதுவும் நடக்காது. என்னை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய ஜி.கே.வாசன்,...
திருச்சிற்றம்பலம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

திருச்சிற்றம்பலம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  யாரடி நீ மோகினி', 'குட்டி', 'உத்தமபுத்திரன்' படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகி உள்ள 'திருச்சிற்றம்பலம்' படத்தில் தனுஷ் நடித்துள்ளார். இப்படத்தில் நித்யா மேன‌ன், பிரியா பவானி சங்கர், ராஷி கன்னா, பிரகாஷ்ராஜ், இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் இப்படத்தின் கதாபாத்திரங்களை படக்குழுவினர் அறிமுகம் செய்தனர். இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'திருச்சிற்றம்பலம்' திரைப்படம் ஆகஸ்ட் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் ஒரு வீடியோ பதிவு மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த வீடியோவை தனுஷ் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளா...
முதலமைச்சரை சந்தித்த  கமல்ஹாசன்!

முதலமைச்சரை சந்தித்த கமல்ஹாசன்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, அரசியல், சினி நிகழ்வுகள், செய்திகள், தமிழக அரசியல், நடிகர்கள்
மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமானு கமல்ஹாசன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேற்று நேரில் சந்தித்து பேசினார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் முகாம் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது கமல்ஹாசன் ஸ்டாலினுக்கு பூங்கொத்து கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அவருடன் விக்ரம் திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர் ஆர். மகேந்திரன் உடனிருந்தார். கமல்ஹாசன் தயாரிப்பில் திரைக்கு வந்துள்ள விக்ரம் திரைப்படம், 10 நாட்களுக்குள் உலகம் முழுவதும் ரூ.300 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் விக்ரம் திரைப்படத்தை முதல் 3 நாட்களுக்கு சிறப்பு காட்சிகளை திரையிட தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது. இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, கமல்ஹாசன் சந்தித்துள்ளார். விக்ரம் படத்தின் பெருவெற்றியை தொடர்ந்து இனிய நண்பர், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுடன் மரி...
லைகா புரொடக்ஷன்ஸின் பிரம்மாண்ட தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் – பி வாசு இணையும் ‘சந்திரமுகி 2’

லைகா புரொடக்ஷன்ஸின் பிரம்மாண்ட தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் – பி வாசு இணையும் ‘சந்திரமுகி 2’

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
லைகா புரொடக்ஷன்ஸின் பிரம்மாண்ட தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் - பி வாசு இணையும் 'சந்திரமுகி 2' ராகவா லாரன்ஸ் கதையின் நாயகனாக நடிக்க, 'வைகை புயல்' வடிவேலு முக்கிய வேடத்தில் நடிக்கும் 'சந்திரமுகி 2' படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் பெரும் பொருட்செலவில் 'சந்திரமுகி 2' எனும் புதிய பிரம்மாண்டத் திரைப்படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் வடிவேலு இணைந்து நடிக்கிறார்கள். இதனை 'சந்திரமுகி' படத்தின் முதல் பாகத்தை இயக்கிய இயக்குநர் பி வாசு இயக்குகிறார். லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிப்பில், அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜி. கே. எம். தமிழ் குமரன் அவர்களின் மேற்பார்வையில் உருவாகவிருக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தின் தயாரிப்பு ஒருங்கிணைப்பு பணிகளை பிரபல கலை இயக்...
பிரபல நடிகைக்கு வில்லனாகும் ஆரி.. எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்!

பிரபல நடிகைக்கு வில்லனாகும் ஆரி.. எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்!

Uncategorized
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்த ஹன்சிகா தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். ஏற்கனவே மகா படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் ஹன்சிகா தோற்றம் ஏற்கனவே வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள 4 படங்களில் நடித்து வருகிறார். தற்போது இன்னொரு புதிய படத்துக்கும் ஒப்பந்தமாகி உள்ளார். இதுவும் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சத்தில் தயாராகிறது. இப்படத்தை இகோர் இயக்குகிறார். இதில் ஹன்சிகாவுக்கு வில்லனாக ஆரி நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆரி ஏற்கனவே ரெட்டை சுழி, நெடுஞ்சாலை, மாயா உள்ளிட்ட பல படங்களில் நாயகனாக நடித்து இருக்கிறார். சமீபத்தில் வெளியான நெஞ்சுக்கு நீதி படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். வில்லன் வேடத்துக்கு மாறும் கதாநாய...