ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 12
Shadow

Author: Kodanki

பலத்த மழையால் திருப்பதியில் பக்தர்கள் செல்லும் வழியில் மரங்கள் சாய்ந்தது!

பலத்த மழையால் திருப்பதியில் பக்தர்கள் செல்லும் வழியில் மரங்கள் சாய்ந்தது!

HOME SLIDER, NEWS, செய்திகள்
ஆந்திர மாநிலம் திருப்பதியில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று மாலை கருமேகங்கள் சூழ்ந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. லேசாக சாரல் மழை செய்தது. கோடை விடுமுறை என்பதால் தற்போது திருப்பதியில் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்கு குவிந்து வருகின்றனர். சூறாவளி காற்றுடன் மழை பெய்ததால் பக்தர்கள் மிகுந்த சிரமம் அடைந்தனர். இந்தநிலையில் மாலை 5 மணிக்கு திடீரென சூறாவளி காற்றுடன் பலத்த மழை கொட்டி தீர்த்தது. சூறாவளி காற்று வீசியதால் மரங்கள் வேரோடு சாய்ந்தது. சாலைகள் மற்றும் மின்கம்பங்கள் மீது விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சாலைகளில் மரம் விழுந்ததால் வாகனங்கள் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். பக்தர்கள் செல்லும் வழியிலும் மரக்கிளைகள் முறிந்து விழுந்தது. மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் த...
சர்வதேச புக்கர் பரிசை வென்ற முதல் இந்திய மொழி எழுத்தாளர்!

சர்வதேச புக்கர் பரிசை வென்ற முதல் இந்திய மொழி எழுத்தாளர்!

HOME SLIDER, NEWS, World News, உலக செய்திகள், செய்திகள்
ஆங்கிலத்தில் எழுத்தப்பட்டு அல்லது மொழிபெயர்க்கப்பட்டு பிரிட்டன் அல்லது அயர்லாந்தில் வெளியிடப்படும் புத்தகத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் புகழ்வாய்ந்த இலக்கிய பரிசான, சர்வதேச புக்கர் பரிசு வழங்கப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு இந்தி எழுத்தாளர் கீதாஞ்சலி ஸ்ரீ, தனது ‘ரெட் சமாதி’ என்ற நாவலுக்காக புக்கர் பரிசை வென்றுள்ளார். இதன்மூலம், சர்வதேச புக்கர் பரிசை வெல்லும் முதல் இந்திய மொழி எழுத்தாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார். கீதாஞ்சலி ஸ்ரீயின் ரெட் சமாதி நாவல் ஆங்கிலத்தில் 'டோம்ப் ஆஃப் சாண்ட்’ என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டது. பிரபல மொழிபெயர்ப்பாளர் டெய்சி ராக்வெல்லால் என்பவர் ரெட் சமாதியை மொழிபெயர்த்தார். புக்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட புத்தகங்களின் பட்டியலில் இருந்து தேர்வுக்குழுவுக்கு அனுப்பப்பட்ட முதல் இந்தி மொழி புத்தகமும் இதுவேயாகும். இந்த புத்தகத்திற்கு 50,000 பவுண்ட் ...
‘தளபதி 66’ படத்தின் புதிய அறிவிப்பை வெளியிட்டு படக்குழு!

‘தளபதி 66’ படத்தின் புதிய அறிவிப்பை வெளியிட்டு படக்குழு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து தோழா உள்ளிட்ட படங்களை இயக்கிய வம்சி பைடிப்பள்ளி இயக்கும் படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். விஜய் 66 என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தைப் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார் நடிக்கிறார். இப்படம் விஜய்யின் ஆரம்பக் கட்டத்தில் வெளியான பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை போன்ற குடும்ப பின்னணி படமாக உருவாகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தளபதி 66 படம் குறித்த புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. தளபதி 66 படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது என்றும் விரைவில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தொடங்கப்படும் என...
“என் வாழ்க்கையில் மறக்க முடியாத கல்லூரி ஸ்டெல்லா மேரிஸ்” CM ஸ்டாலின் பேச்சால் கூச்சலிட்ட மாணவிகள் ????

“என் வாழ்க்கையில் மறக்க முடியாத கல்லூரி ஸ்டெல்லா மேரிஸ்” CM ஸ்டாலின் பேச்சால் கூச்சலிட்ட மாணவிகள் ????

HOME SLIDER, kodanki voice, politics, செய்திகள், தமிழக அரசியல், முதல்வர் ஸ்டாலின், வீடியோ
"என் வாழ்க்கையில் மறக்க முடியாத கல்லூரி ஸ்டெல்லா மேரிஸ்" CM ஸ்டாலின் பேச்சால் கூச்சலிட்ட மாணவிகள் ????   https://youtu.be/HNWCgGADJD4
ஹிப்ஹாப் ஆதியின் அடுத்த பட அப்டேட்!

ஹிப்ஹாப் ஆதியின் அடுத்த பட அப்டேட்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
பாடகர், இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் ஹிப்ஹாப் ஆதி. இவர் ஆம்பள, தனி ஒருவன், அரண்மனை 2, கதகளி, கத்தி சண்டை, இமைக்கா நொடிகள், கோமாளி, ஆக்‌ஷன் உள்பட பல படங்களுக்கு இசைமைத்துள்ளார். மீசையை முறுக்கு என்ற படத்தை இயக்கி, கதாநாயகனாகவும் அறிமுகமானார். தொடர்ந்து நட்பே துணை, நான் சிரித்தால், அன்பறிவு ஆகிய படங்களிலும் கதாநாயகனாக நடித்தார். இந்த படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. இந்நிலையில், ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. மரகத நாணயம் படத்தை இயக்கிய ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கும் படத்தில் ஆதி நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு வீரன் என்று பெயரிடப்பட்டுள்ளது. ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளியான சிவகுமாரின் சபதம், அன்பறிவு ஆகிய படங்களை தயாரித்த ‘சத்யஜோதி பிலிம்ஸ்’ டி.ஜி.தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் மற்றும...
கருணாநிதி பிறந்தநாளன்று “விக்ரம்” படம் வெளியீடு!

கருணாநிதி பிறந்தநாளன்று “விக்ரம்” படம் வெளியீடு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
கமல்ஹாசன் நடிப்பில் கடைசியாக 2018-ல் விஸ்வரூபம் 2 படம் வெளியானது. நீண்ட இடைவெளிக்கு பிறகு கமல்ஹாசன் நடித்துள்ள 'விக்ரம்' படம் அடுத்த மாதம் 3ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்த திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இதில் விஜய் சேதுபதி, பகத் பாசில், செம்பன் வினோத், நரேன், காளிதாஸ் ஜெயராம், காயத்ரி, சிவானி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். 'விக்ரம்' திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் கமலஹாசன் கலந்து கொண்டார். அப்போது பேசிய கமல்ஹாசன் கூறுகையில், “4 வருடங்களாக என் நடிப்பில் எந்த படமும் வெளியாகவில்லை. 4 வருடங்கள் காத்திருக்க வைத்ததற்காக எனது அன்பான ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். ‘விக்ரம்’ படத்த...
ஏ.ஆர்.முருகதாஸ் பட ஃபர்ஸ்ட் லுக்!

ஏ.ஆர்.முருகதாஸ் பட ஃபர்ஸ்ட் லுக்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
அஜித் நடிப்பில் வெளியான தீனா படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ஏ.ஆர்.முருகதாஸ். அதன்பின் விஜயகாந்தின் ரமணா, சூர்யாவின் கஜினி என அடுத்தடுத்து ஹிட் படங்களை இயக்கி தனக்கென தனி அடையாளத்தை பதித்துக்கொண்டார். வி ஜய்யை வைத்து துப்பாக்கி, கத்தி, சர்கார் என அடுத்தடுத்து ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்த ஏ.ஆர்.முருகதாஸ், கடைசியாக ரஜினி நடிப்பில் வெளியான தர்பார் படத்தை இயக்கி இருந்தார். இதற்கிடையில் 'ஏ.ஆர் முருகதாஸ் ப்ரொடைக்ஷன்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் முருகதாஸ் நடத்தி வருகிறார். இவர் தயாரிப்பில் வெளியான 'எங்கேயும் எப்போதும்', 'ராஜா ராணி', 'மான் கராத்தே', 'ரங்கூன்' போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. இந்நிலையில் ஏ.ஆர் முருகதாஸ் தயாரிக்கும் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சிவகார்த்திகேயன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்ட...
தமிழகத்தில் இன்று பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் திட்டங்கள்!

தமிழகத்தில் இன்று பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் திட்டங்கள்!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள்
பிரதமர் மோடி இன்று மாலை சென்னை வருகிறார். நேரு உள் விளையாட்டரங்கில் மாலை 5.45 மணியளவில் நடைபெறும் அரசு விழாவில் கலந்துகொண்டு ரூ. 31 ஆயிரத்து 500 கோடி மதிப்பிலான திட்ட பணிகளை தொடங்கி வைத்தும் நாட்டுக்கு அர்ப்பணித்தும் உரையாற்றுகிறார். விழாவில் முடிவுற்ற 5 திட்டங்களை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். அந்த 5 திட்டங்கள் விபரம் வருமாறு:- தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 30 கி.மீ. தூரத்துக்கு ரூ.598 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள 3-வது ரெயில் பாதையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இதே போல் மதுரை-தேனி இடையே ரூ.506 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள அகல ரெயில் பாதையையும் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். எண்ணூர்-செங்கல்பட்டு பிரிவில் 115 கி.மீ. தூரத்துக்கு குழாய் வழியே எரிவாயு கொண்டு செல்லப்படுகிறது. இதற்காக 115 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.849 கோடி செலவில் எரிவாயு குழாய்கள் அமைக்கப்பட்...
வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை!

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை!

HOME SLIDER, NEWS, World News, உலக செய்திகள், செய்திகள்
வடகொரியா, இந்த ஆண்டு தொடக்கம் முதல் அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தாலும் அதனை கண்டு கொள்ளவில்லை. இந்த நிலையில் வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனையை நடத்தி உள்ளது. இன்று அதிகாலை ஜப்பான் கடல்பகுதியை நோக்கி கண்டம் விட்டு கண்டம் பாயும் மூன்று ஏவுகணைகளை ஏவி வடகொரியா சோதனை செய்ததாக தென்கொரியா ராணுவம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா அதிபர் ஜோ பைடன், ஜப்பானில் நடந்த குவாட் அமைப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்றுவிட்டு தனது நாட்டுக்கு புறப்பட்ட சில மணி நேரத்தில் வடகொரியா ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது. ஜப்பான் பிரதமர் புயிடோ கிஷிடா கூறும் போது, வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியது தொடர்பாக உறுதி செய்ய முயற்சித்து வருகிறோம் என்றார். வடகொரியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. தினமும் வட்சக்கணக்கானோர் தொற்றுக்கு உள்ளாகி வரு...
இலங்கைக்கு நிதி உதவி வழங்க உலக வங்கி நிபந்தனை!

இலங்கைக்கு நிதி உதவி வழங்க உலக வங்கி நிபந்தனை!

HOME SLIDER, NEWS, World News, உலக செய்திகள், செய்திகள்
இலங்கை, பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அங்கு பெட்ரோல், டீசல், அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. எரிபொருள் இறக்குமதி செய்வதற்கு அன்னிய செலாவணி கையிருப்பு இல்லாததால் இலங்கை அரசு திணறுகிறது. இந்தியா, உலக வங்கி ஆகியவை கடனுதவி அளித்த நிலையில் அந்த நிதிகள் தீர்ந்து உள்ளதால் இலங்கையில் மீண்டும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இந்தியா, உலக வங்கியிடம் இலங்கை அரசு மீண்டும் நிதியுதவி கேட்டுள்ளது. இந்த நிலையில் நிதியுதவி வழங்க இலங்கைக்கு உலக வங்கி நிபந்தனை விதித்துள்ளது. இது தொடர்பாக உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- இலங்கைக்கு ஒரு கடன் திட்டம் அல்லது புதிய கடன் உறுதிப்பாடுகளை முன்னெடுக்க உலக வங்கி திட்டமிட்டுள்ளதாக பல தவறான தகவல் வெளியாகியுள்ளன. “இலங்கை மக்கள் மீது நாங்கள் அக்கறை கொண்டுள்ளோம். பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் ப...