ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 12
Shadow

Author: Kodanki

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு அமல்!

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு அமல்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினசரி நிர்ணயம் செய்து வருகின்றன. 137 நாட்களுக்கு பிறகு கடந்த மார்ச் மாதம் 22-ம் தேதி பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்த்தப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இதற்கிடையே, ரஷியா-உக்ரைன் போர் காரணமாக எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்ட பாதிப்பால் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில்  எரிபொருள் விலை 51 சதவீதத்தை தாண்டி உயர்ந்துள்ளது. ஆனால் இந்தியாவில் 5 சதவீதமே எரிபொருள் விலை உயர்ந்துள்ளது என மத்திய அரசு விளக்கம் அளித்தது. சென்னையில் கடந்த 45 நாளாக  ஒரு லிட்டர் பெட்ரோல் 110 ரூபாய் 85 காசுக்கும், டீசல் 100 ரூபாய் 94 காசுக்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், மத்திய அர...
மன்னிப்பு கேட்காவிட்டால் ரூ.10 கோடி நஷ்ட ஈடு – தனுஷின் அதிரடி முடிவு!

மன்னிப்பு கேட்காவிட்டால் ரூ.10 கோடி நஷ்ட ஈடு – தனுஷின் அதிரடி முடிவு!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
நடிகர் தனுஷ் தங்கள் மகன் எனக் கூறி மதுரையைச் சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதியினர் மேலூர் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்திருந்தனர். அத்துடன் ஊடகங்களிலும் தனுஷ் தங்கள் மகன் என்று பேட்டி அளித்து இருந்தனர். இந்த வழக்கை ஐகோர்ட் மதுரைக்கிளை ரத்து செய்தது. இந்த நிலையில் தங்களைக் கொலை செய்ய கஸ்தூரிராஜா முயற்சித்ததாகவும், கோர்ட்டில் போலி ஆவணங்களை தாக்கல் செய்து உத்தரவு பெற்று விட்டதாகவும் குற்றச்சாட்டுகளைக் கூறி கதிரேசன் தம்பதியினர் நடிகர் தனுசுக்கும், கஸ்தூரி ராஜாவுக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். இந்த குற்றச்சாட்டுகளுக்கு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், தவறினால் 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு கோர்ட்டில் வழக்குத் தொடர நேரிடும் எனவும் நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் கஸ்தூரிராஜா சார்பில் கதிரேசன் தம்பதியினருக்கு வழக்கறிஞர் காஜாமொய்தீன் கிஸ்தி நோட்டீஸ் அனுப்பி உள்ளார்....
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு!

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி முறையே லிட்டருக்கு ரூ.8 மற்றும் ரூ. 6 -குறைக்கப்பட்டது. இந்த வரிக்குறைப்பின் மூலம் பெட்ரோல், ஒரு லிட்டர் ரூ. 9.5-ம், டீசல் ரூ. 7-குறையும் என்று நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இந்நிலையில் பெட்ரோல், டீசல் மீதான வரிக்குறைப்பு குறித்து பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, எப்போதும் மக்கள் நலனே முதலில் என்பதை கருத்தில் கொண்டு மத்திய அரசு செயல்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட டுவிட் பதிவில் கூறியிருப்பதாவது: எங்களுக்கு எப்போதும் மக்கள்தான் முதன்மை,  இன்றைய முடிவுகள், குறிப்பாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் குறிப்பிடத்தக்க சரிவு தொடர்பான முடிவுகள் பல்வேறு துறைகளில் சாதகமாக அமையும். ந...
கேன்ஸ் விழாவில் நடனம் ஆடிய தீபிகா படுகோனே!

கேன்ஸ் விழாவில் நடனம் ஆடிய தீபிகா படுகோனே!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள்
பிரான்சில் நடைபெற்று வரும் 75வது கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய திரைத்துறையினருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த விழாவில் தீபிகா படுகோனே ஒரு நடுவராக அமர்த்தப்பட்டிருக்கிறார். இந்தியா கவுரவமான நாடு என்று அதற்கான முக்கியத்துவத்தை கேன்ஸ் அமைப்பினர் தெரிவித்திருக்கிறார்கள். இந்த விழாவில் தான்சானியா கிராமிய பாடகர் மேமே கான் ஒரு பாடலைப் பாட ஆரம்பித்திருக்கிறார். அப்போது அங்கிருந்த தீபிகா, தமன்னா பாட்டியா, பூஜா ஹெக்டே ஆகியோர் அந்தப் பாடலுக்கு நடனம் ஆடியிருக்கிறார்கள். இதுபற்றி தீபிகா கூறியதாவது, இன்றைய சூழலில் இந்திய சினிமா உலகின் உச்சத்தில் இருக்கிறது. நான் கேன்ஸ் விழாவில் கலந்து கொள்வேன் என்று நினைத்ததுகூட இல்லை. ஆனால் இன்று இருக்கும் நிலையில் நாளை இந்தியாவிலேயே கேன்ஸ் போல் திரைப்பட விழா நடந்தாலும் நடக்கும் என்றார் தீபிகா படுகோனே....
நிக்கி கல்ராணிக்கு கிடைத்த இரட்டிப்பு மகிழ்ச்சி!

நிக்கி கல்ராணிக்கு கிடைத்த இரட்டிப்பு மகிழ்ச்சி!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நிக்கி கல்ராணி. இவருக்கும் நடிகர் ஆதிக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. அதே தினத்தில் நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி திருமணத்தன்று ஆண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். சஞ்சனா இரண்டு வருடங்களுக்கு முன்பு ஆசிஷ் பாஷா என்பவரைக் காதல் திருமணம் செய்து கொண்டார். சஞ்சனா தமிழில் சில படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். 2020ம் வருடம் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு மூன்று மாதங்கள் சிறையில் இருந்து பின்னர் பெயில் பெற்று வெளியில் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது....
பிளேஆப் சுற்றில் நுழையும் 4வது அணி டெல்லியா, பெங்களூரா?

பிளேஆப் சுற்றில் நுழையும் 4வது அணி டெல்லியா, பெங்களூரா?

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட போட்டியில் நேற்றுடன் 68 போட்டிகள் முடிந்துவிட்டன. இன்னும் 2 லீக் ஆட்டமே எஞ்சி உள்ளன. குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய 3 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளன. குஜராத் 20 புள்ளியுடன் முதல் இடத்தை பிடித்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் 18 புள்ளியுடன் 2ம் இடத்திலும், லக்னோ 18 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளது. 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் , 4 தடவை ஐ.பி.எல். கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ், 2 முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய 5 அணிகள் தொடரில் இருந்து வெளியேறின. இந்நிலையில், பிளே ஆப் சுற்றில் நுழையும் 4வது அணிக்கான போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் உள்ளன. பெங்களூரு அணி 16 புள்ளிகளுடனும், டெல்லி அணி 14 புள்ளிகளுடனும் உள்ளன. டெல்ல...
அமெரிக்காவுக்கு நன்றி கூறி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நெகிழ்ச்சி!

அமெரிக்காவுக்கு நன்றி கூறி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நெகிழ்ச்சி!

HOME SLIDER, NEWS, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள், செய்திகள்
உக்ரைனின் மரியுபோல் நகரில் உள்ள அசோவ் உருக்காலையில் இருந்த படைவீரர்கள் 2 ஆயிரம் பேர் சரண் அடைந்துள்ளனர் என ரஷிய ராணுவ மந்திரி செர்கே லாவ்ரோவ் தெரிவித்துள்ளார். இதையடுத்து, மரியுபோல் நகரம் முழுவதும் ரஷிய படைகள் வசம் வந்துவிட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர். ரஷியாவின் பயங்கர தாக்குதலுக்கு கடும் சேதங்களைச் சந்தித்து வரும் உக்ரைனுக்கு நிதியுதவியாக 40 பில்லியன் டாலர்களை (ரூ.3.08 லட்சம் கோடி) அமெரிக்க பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த சில நாள்களுக்கு முன் 40 பில்லியன் டாலர் வழங்க ஒப்புதல் அளித்த நிலையில் மீண்டும் நிதியுதவி செய்ய அமெரிக்கா முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், உக்ரைனுக்கு தொடர்ந்து நிதியுதவி அளித்து வரும் அமெரிக்காவுக்கு அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி நன்றி தெரிவித்துள்ளார்....
அசாம் வெள்ளதில் 14 பேர் பலி !

அசாம் வெள்ளதில் 14 பேர் பலி !

HOME SLIDER, NEWS, செய்திகள்
அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பிரம்மபுத்திரா ஆற்றிலும் அபாய அளவை கடந்து வெள்ளநீர் ஓடுகிறது. இந்த வெள்ளத்தில் மூழ்கி பல கிராமங்கள் நீரில் மிதக்கின்றன. இந்நிலையில் இந்த வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 7 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் பாதித்த மக்களை மீட்கும் பணியில் ராணுவம், துணை ராணுவ படைகள், அசாம் பேரிடர் மீட்பு படை, தீயணைப்பு மற்றும் அவசரகால சேவை துறையைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் ரெயில்வே தண்டவாளங்கள், பாலங்கள் மற்றும் சாலைப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன....
கல்குவாரி விபத்து – ஒப்பந்ததாரர் உள்பட 2 பேர் கைது!

கல்குவாரி விபத்து – ஒப்பந்ததாரர் உள்பட 2 பேர் கைது!

HOME SLIDER, NEWS, செய்திகள்
நெல்லை மாவட்டம் அடைமிதிப்பான் குளத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் இதுவரை 3 பேர் பலியாகி உள்ளனர். 2 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாறைகளுக்குள் சிக்கிய மேலும் ஒருவரை மீட்கும் பணி தொடர்ந்து நடந்தது. அப்போது மீட்புப் பணிகளை ஆய்வுசெய்த மாவட்ட கலெக்டர் விஷ்ணு கூறுகையில், கல்குவாரி விபத்தில் தொடர்புடைய அனைத்து அதிகாரிகளும் விரைவில் சஸ்பெண்டு செய்யப்படுவார்கள் என தெரிவித்தார். இந்நிலையில், நெல்லை கல்குவாரி விபத்து தொடர்பாக தேடப்பட்டு வந்த 2 பேர் மங்களூருவில் கைது செய்யப்பட்டு உள்ளனர். திசையன்விளையைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் செல்வராஜ் மற்றும் அவரது மகன் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்....
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர்-அரையிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து!

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர்-அரையிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் பாங்காக்கில் நடைபெற்றது. இதில் நேற்று நடைபெற்ற காலிறுதி சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்துவும், ஜப்பானைச் சேர்ந்த நம்பர் 1 வீராங்கனை அகானே யமகுச்சியும் மோதினர். தொடக்கம் முதல் சிறப்பாக ஆடிய பி.வி.சிந்து முதல் செட்டை 21 -15 என கைப்பற்றினார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் அகானே யமகுச்சி 22 - 20 என வெற்றி பெற்றார். இதையடுத்து, வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது சுற்றில் 21 -13 என கைப்பற்றி அரை இறுதிச்சுற்றுக்க்கு முன்னேறினார். இன்று நடைபெற உள்ள அரையிறுதிப் போட்டியில் பிவி சிந்து, சீன வீராங்கனை யு பெய் சென்னுடன் மோதுகிறார்....