ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 12
Shadow

Author: Kodanki

ஸ்பெயின் நாட்டில் பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் விடுமுறை!

ஸ்பெயின் நாட்டில் பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் விடுமுறை!

helth tips, HOME SLIDER, NEWS, World News, உலக செய்திகள், செய்திகள்
ஸ்பெயின் நாட்டில் வசிக்கும் பெண்கள், தங்கள் மாதவிடாயின் போது மாதத்தில் 3 நாட்களுக்கு விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என்ற சிறந்த அறிவிப்பினை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது. பெண்களின் மாதவிடாய் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான பிற நடவடிக்கைகளை உள்ளடக்கிய இந்த சீர்திருத்தம், வரும் செவ்வாய்கிழமை அன்று நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் நிறைவேற்றப்படும் என தெரிகிறது. மேலும், அங்கு சமூகத்தில் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த பெண்களுக்கு, சானிட்டரி நாப்கின் பேட்கள் இலவசமாக வழங்கப்படும் என்றும் பள்ளிகளில் தேவைப்படும் பெண்களுக்கு சானிட்டரி பேடுகள் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டு பெண்களின் நீண்டகால கோரிக்கையான, சானிட்டரி பேட்கள் மற்றும் டம்பன்களின் விற்பனை விலையில் இருந்து வாட் வரியை நீக்க வேண்டும் என்பதும் நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளது. இந்த முடிவை இதுவரை எந்த ஐரோப்பிய ...
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாம்பரம் – வேளச்சேரி இடையிலான மேம்பாலத்தை திறந்து வைத்தார்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாம்பரம் – வேளச்சேரி இடையிலான மேம்பாலத்தை திறந்து வைத்தார்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
செங்கல்பட்டு, மேடவாக்கம் பகுதியில் தாம்பரம் - வேளச்சேரி இடையிலான மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை திறந்து வைத்தார். நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் ரூ. 95.21 கோடி மதிப்பீட்டில் இந்த மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. புதிதாக திறக்கப்பட்ட இந்த மேம்பாலத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் காரில் பயணம் செய்தார்....
சிரஞ்சீவி பேச்சால் கோபமடைந்த கோட்டா சீனிவாசராவ்!

சிரஞ்சீவி பேச்சால் கோபமடைந்த கோட்டா சீனிவாசராவ்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
பிரபல தெலுங்கு வில்லன் நடிகர் கோட்டா சீனிவாசராவ். இவர் தமிழில் சாமி, திருப்பாச்சி, ஏய், சத்யம், சகுனி, தாண்டவம், மாசி, அரண்மனை உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார். தெலுங்கில் 700-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் தெலுங்கு திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் நடத்திய விழாவில் பங்கேற்ற நடிகர் சிரஞ்சீவி, “நான் தயாரிப்பாளர் அல்ல. தொழிலாளிதான். சினிமா தொழிலாளர்களுக்காக ஆஸ்பத்திரி கட்ட போகிறேன்’’ என்று பேசினார். இது கோட்டா சீனிவாசராவுக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. சிரஞ்சீவியை கண்டித்து கோட்டா சீனிவாசராவ் அளித்துள்ள பேட்டியில், “திரைப்பட தொழிலாளர்கள் மூன்று வேளை உணவுக்கு கஷ்டப்படும் நிலையில் அவர்களுக்கு ஆஸ்பத்திரி கட்டுவேன் என்று சிரஞ்சீவி பேசுகிறார். இது தேவையற்றது. ஆஸ்பத்திரிக்கு பதிலாக சினிமா தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுப்பதுதான் முக்கிய...
ஆந்திராவில் பலத்த மழை- 1000 ஏக்கர் பயிர்கள் சேதம்!

ஆந்திராவில் பலத்த மழை- 1000 ஏக்கர் பயிர்கள் சேதம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கடந்த 8ஆம் தேதி புயலாக உருவெடுத்தது. அசானி எனப் பெயரிடப்பட்ட அந்தப் புயல் வடக்கு ஆந்திரம் ஒடிசா கடற்கரையை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதியை நோக்கி நகா்ந்து, ஆந்திர கடல் பகுதியில் நிலைகொண்டது. இதனால் ஆந்திர மாநில வட கடலோர மாவட்டங்களில் நேற்று சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. புயல் காரணமாக ஆந்திரா, ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநில கடலோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. ஆந்திரத்தின் கடலோர மாவட்டங்களான ஸ்ரீகாகுளம், பபாத்லா, ஓங்கோல் மாவட்டங்களில் கனமழை பெய்தது. திருப்பதி, நெல்லூா் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. இந்நிலையில், ‘அசானி’ புயல் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்து மசூலிப்பட்டினம் நா்சாபுரம் இடையே நேற்று இரவு கரையைக் கடந்ததாக ஆந்திர பேரிடா் மேலாண்மை ஆணைய இயக்குநா...
அசானி புயலின் பலத்த காற்றால் நடுக்கடலில் தத்தளித்த 9 மீனவர்கள்!

அசானி புயலின் பலத்த காற்றால் நடுக்கடலில் தத்தளித்த 9 மீனவர்கள்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
அசானி புயல் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக சில இடங்களில் மழை மற்றும் பலத்த காற்று வீசி வருகிறது. நேற்று அதிகபட்சமாக 70 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. இதனால் பல்வேறு இடங்களில் இருந்த தடுப்பு கம்பிகள், விளம்பர பலகைகள் காற்றில் சரிந்து விழுந்தது. தூத்துக்குடி மையவாடி பகுதியில் உள்ள மின்தகன மையத்தில் புகை போக்கி கோபுரம் சரிந்து மின் வயரில் விழுந்ததால் சில மணி நேரம் மின் தடை ஏற்பட்டது. மேலும் மரக்கிளைகளும் முறிந்து விழுந்தது. இதே போல் ஆத்தூர், ஆறுமுகநேரி, திருச்செந்தூர், மெஞ்ஞானபுரம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் பலத்த காற்று வீசியது. இதனால் அங்குள்ள மின் வயர்கள் அறுந்தது. மீன்பிடி தடைகாலம் அமலில் உள்ளதால் விசைப்படகு மற்றும் இழுவை படகுகள் மூலம் மீன்பிடிக்க செல்வது தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டு படகு மீனவர்கள் மட்டும் குறிப்பிட்ட தூரத்திற்கு சென்று ...
இலங்கையில் நெருக்கடியை தீர்க்க ரனில் விக்ரமசிங்கே பிரதமராக வாய்ப்பு!

இலங்கையில் நெருக்கடியை தீர்க்க ரனில் விக்ரமசிங்கே பிரதமராக வாய்ப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் கடும் இன்னல்களுக்கு உள்ளான மக்கள் தொடர் போராட்டத்தை நடத்தி வந்தனர். இந்த நிலையில் போராட்டம் தீவிரமாகி தற்போது வன்முறை, அரசியல் நெருக்கடி என அந்நாட்டில் பரபரப்பான சூழல்கள் அரங்கேறி வருகின்றன. அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் பதவி விலக கோரி கடந்த மாதம் 9-ந்தேதி மக்கள் போராட்டத்தை தொடங்கினர். அதிபர் மாளிகை முன்பு உள்ள காலி திடலில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும் இலங்கை அரசுக்கு எதிர்க்கட்சிகளும் கடும் நெருக்கடி அளித்தன. மக்களின் தொடர் போராட்டத்தால் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்சே கடந்த 9-ந்தேதி ராஜினாமா செய்தார். இதனால் மகிந்த ராஜபக்சே ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்கள் மீது கடும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. போராட்டக்காரர்கள் எதிர் தாக்குதலில...
‘பத்தல பத்தல’-குத்தாட்டம் போட்ட கமல்!

‘பத்தல பத்தல’-குத்தாட்டம் போட்ட கமல்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'விக்ரம்'. இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். விக்ரம் திரைப்படம் வருகிற ஜூன் 3-ம் தேதி வெளியாக உள்ளது. விக்ரம் திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வருகிற மே 15-ந்தேதி அன்று வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி உள்ளது. நடிகர் கமல்ஹாசன் எழுதி, கமல்ஹாசன் மற்றும் அனிருத் இணைந்து பாடியுள்ள 'பத்தல பத்தல' என்று தொடங்கும் பாடல் வெளியானது. கமல் நடனமாடும் இந்த பாடலில் கமலின் குத்தாட்டம் ...
‘பேபி பெர்த்’ வசதி- குழந்தைகளுடன் பெண்கள் எளிதாக பயணிக்க  ரெயில்வே அறிமுகம்!

‘பேபி பெர்த்’ வசதி- குழந்தைகளுடன் பெண்கள் எளிதாக பயணிக்க ரெயில்வே அறிமுகம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
குழந்தைகளுடன் பெண்கள் இனி எளிதாக பயணம் செய்யும் வகையில், ரெயில்களில் குழந்தைகளுக்கு படுக்கை வசதியை ரெயில்வே துறை அறிமுகம் செய்துள்ளது. ரெயில் பயணங்களை பயணிகளுக்கு வசதியாக மாற்றும் வகையில், வடக்கு ரெயில்வே குழந்தைகளுக்கான படுக்கை வசதியை (பேபி பெர்த்) சேதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வசதி அன்னையர் தினத்தை முன்னிட்டு வடக்கு ரெயில்வேயின் டெல்லி பிரிவில் பெண்களுக்கு பரிசாக வழங்கப்பட்டுள்ளது. அதாவது, கடந்த 9-ம் தேதி முதல் லக்னோ மெயிலில் அறிமுகமாகியுள்ளது. இதுகுறித்து லக்னோ வடக்கு ரெயில்வேயின் கோட்ட ரெயில்வே மேலாளர் சதீஷ் குமார் தனது டுவிட்டரில், லக்னோ மெயிலில் கோச் எண் 194129/பி4, பெர்த் எண் 12 & 60-ல் குழந்தைகளுக்கான படுக்கை வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டிருந்தார். இந்த பேபி பெர்த்துகள் மடிக்கக்கூடியவை ஆகவும் மற்றும் குழந்தைகள் விழாமல் இருக்க ஒர...
கார்கீவ்வில் ரஷிய படைகளை துரத்தியடித்த உக்ரைன் படைகள்!

கார்கீவ்வில் ரஷிய படைகளை துரத்தியடித்த உக்ரைன் படைகள்!

HOME SLIDER, NEWS, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள், செய்திகள்
ரஷியா- உக்ரைன் போர் கடந்த 77-வது நாளாக நடைபெற்று வருகிறது. இந்த போரில் பல முக்கிய நகரங்களை ரஷியா கைப்பற்றி தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் மரியுபோல் நகரத்தை ரஷியா கைப்பற்றியதாக அறிவித்தது. அதன் உருக்கு ஆலையை கைப்பற்றுவதற்கு ரஷியா தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதேபோல உக்ரைனின் கார்கிவ் நகரத்தின் பல முக்கிய பகுதிகளை ரஷியா கைப்பற்றி இருந்தது. போரின் தொடக்கத்திலேயே கார்கிவ் ரஷியாவின் பிடியில் சிக்கியது. இந்நிலையில் தற்போது உக்ரைனுக்கு அமெரிக்க உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து ஆயுதம் மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கி வருகின்றன. இதனால் போரில் உக்ரைன் பல இடங்களில் முன்னேற்றம் கண்டுள்ளது. இதன்படி ரஷ்யா ஆக்கிரமித்த கார்கிவ் நகரத்தின் வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதியில் உள்ள பல கிராமங்களை உக்ரைன் படைகள் மீண்டும் கைப்பற்றியதாக அந்நாட்டின் செய்தித் தொடர்பாளர் டெட்டியானா அபட்செங்கோ த...
கர்ப்பமான நமீதா வைரலாகும் புகைப்படம்!

கர்ப்பமான நமீதா வைரலாகும் புகைப்படம்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
2004-ம் ஆண்டு வெளியான நடிகர் விஜயகாந்த் நடித்த எங்கள் அண்ணா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நமீதா. முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்த அவர் இளைஞர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்தார். விஜய், அஜித் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்த நமீதா, கவர்ச்சி நடிகையாகவும் வலம் வந்தார். ஒரு கட்டத்தில் உடல் எடை அதிகரித்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறினார். மன அழுத்தத்தால் தான் தனது உடல் அவ்வாறு மாறியதாக, நமீதா குறிப்பிட்டு இருந்தார். பட வாய்ப்புகள் குறைந்து சின்னத்திரை நிகழ்ச்சிகளில் மட்டுமே தலைக்காட்டி வந்த நமீதா, கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார். அதிலிருந்து வெளியில் வந்ததும் தனது காதலர் வீரேந்திர சவுத்ரி என்பவரை மணந்து கொண்டார். 2017-ம் ஆண்டு நமீதா-வீரேந்திர சவுத்ரி திருமணம் நடந்தது. இந்நிலையில் தற்போது தான் கர்ப...