திங்கட்கிழமை, ஜூலை 13
Shadow

Author: Kodanki

இணையத்தை கலக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் டிரைலர்!

இணையத்தை கலக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் டிரைலர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
2022 ஆண்டில் பல பிரமாண்ட படங்களின் வெற்றியை தொடர்ந்து, ரசிகர்களிடம் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் முக்கியமான படங்களின் ஒன்று “காத்து வாக்குல ரெண்டு காதல்”. விஜய் சேதுபதி, நயன்தாரா, நடிகை சமந்தா என தென்னிந்திய சினிமாவின் மிகப்பெரும் நட்சத்திர கூட்டணி இணைந்துள்ளதால் இப்படத்தின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இப்படத்தின் டிரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த டிரைலர் ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்று, இணையத்தில் வைரலாகி வருகிறது, முன்னதாக இப்படத்திலிருந்து வெளியிடப்பட்ட டீசர் மற்றும் இசையமைப்பாளார் அனிருத் இசையில் வெளியான “டூ டூடூ டூ டூடூ” பாடல், ரெண்டு காதல், நான் பிழை போன்ற பாடல்கள் பல மில்லியன் பார்வைகள் குவித்து, சாதனை படைத்தது. இந்நிலையில் டிரைலர், பெரும் வரவேற்பை பெற்றதுடன், இணையமெங்கும் பேசுபொருளாக மாறியுள்ளது. தமிழ் திரையுலகில் மாறுபட்ட களங்களில் தரமான...
கவின் நடிக்கும் ”டாடா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

கவின் நடிக்கும் ”டாடா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமான கவின், தற்போது சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடித்து வெளியான ‘லிஃப்ட்’ திரைப்படம் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் இதுதவிர நெல்சன் இயக்கும் ‘டாக்டர்’ மற்றும் ‘பீஸ்ட்’ ஆகிய படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். சமீபத்தில் இவர் நடித்த ‘ஆகாஷ் வாணி’ என்ற வெப் தொடர் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. 2012-ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ’மனம் கொத்தி பறவை’ படத்தை தயாரித்த ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம், அதன்பின் தேசிங்கு ராஜா, ஜிப்ஸி போன்ற படங்களை தயாரித்துள்ளது. ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் எஸ்.அம்பேத்குமார் தயாரிக்கும் புதிய படத்தில் பீஸ்ட் பட நடிகை அபர்ணா தாஸுடன் இணைந்து கவின் நடித்துவருகிறார். இப்படத்தை அறிமுக இயக்குனர் கணேஷ் கே.பாபு இயக்குகிறார். நவீனகால பின்...
பரத்தின் 50-வது படத்தின் போஸ்டர்!

பரத்தின் 50-வது படத்தின் போஸ்டர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
பாய்ஸ், செல்லமே, காதல், வெயில், ஸ்பைடர் உள்ளிட்ட பல படங்களில் நடித்து தனக்கான இடத்தை தமிழ் சினிமாவில் பதித்தவர் நடிகர் பரத். இவரின் யதார்த்தமான நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்தார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான நடுவண் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று 12வது தாதா சாகேப் பால்கே திரைப்பட விழா 2022-ல் தேர்வானது. பரத்தின் 50-வது படத்தின் பூஜையும் சமீபத்தில் தொடங்கியது. இதனை தயாரிப்பாளர் எஸ்.தாணு தொடங்கி வைத்துள்ளார். திரில்லர் கதை அம்சம் கொண்டு உருவாகும் இப்படத்தில் பரத்திற்கு ஜோடியாக வாணி போஜன் நடிக்கிறார். அவர்களுடன் விவேக் பிரசன்னா, பிக்பாஸ் புகழ் டேனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஆர்.பி.பிலிம்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. லுசிபர், மரைக்காயர், குருப் உள்ளிட்ட பல படங்களுக்கு தமிழில் வசனங்கள் மற்றும் பாடல்களை எழுதிய ஆர்.பி.பாலா இப்படத்தின் மூலம் இயக்குனரா...
ஸ்வீடன், ஃபின்லாந்து நாடுகள் நேட்டோவில் இணைவதற்கு ஆதரவு: கனடா பிரதமர்!

ஸ்வீடன், ஃபின்லாந்து நாடுகள் நேட்டோவில் இணைவதற்கு ஆதரவு: கனடா பிரதமர்!

HOME SLIDER, NEWS, ukrain war, World News, அரசியல், உலக செய்திகள், செய்திகள்
நேட்டோவில் இணைவதற்கு உக்ரைன் விருப்பம் தெரிவித்ததை தொடர்ந்து, அந்நாட்டின் மீது ரஷியா படையெடுத்து 56 நாட்களாக போர் செய்து வருகிறது. இதனால் அச்சமடைந்துள்ள ஸ்வீடன் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகள்  நேட்டோ ராணுவக் கூட்டணியில் இணையும் நடவடிக்கையில் இறங்கியுள்ளன. இந்த நடவடிக்கைக்கு ரஷியா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், கனடா தனது ஆதரவினை தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, நேட்டோவில் சேருவதற்கு ஸ்வீடன் மற்றும் ஃபின்லாந்து ஆகிய நாடுகள் விருப்பம் காட்டுவதாக உரையாடல்கள் நடைபெற்று வருகின்றன. அந்த இரு நாடுகளின் முடிவிற்கும் கனடா நிச்சயமாக தனது ஆதரவை அளிக்கும் என்று கூறினார்....
பிரபல குத்துச்சண்டை வீரரிடம் விமானத்தில் குத்து வாங்கிய பயணி!

பிரபல குத்துச்சண்டை வீரரிடம் விமானத்தில் குத்து வாங்கிய பயணி!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள்
பிரபல முன்னாள் குத்துச்சண்டை வீரர் மைக் டைசன், சக பயணி ஒருவரை விமானத்தில் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மைக் தைசன் சான்பிரான்ஸிஸ்கோ விமான நிலையத்தில் இருந்து கிளம்பிய விமானம் ஒன்றில் பயணம் செய்தார். அப்போது அவருக்கு பின் சீட்டில் அமர்ந்திருந்த நபர் ஒருவர் தொடர்ந்து மைக் டைசனை தொந்தரவு செய்வது போல பேசிகொண்டே இருக்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த மைக் டைசன் தன் சீட்டில் இருந்து எழுந்து, பின் இருக்கையை நோக்கி குணிந்து பயணியின் முகத்தில் சராமாரியாக தாக்குகிறார். அதன்பின் முகத்தின் ரத்தத்துடன் பயணி சில முக பாவனைகளை வெளியிடுகிறார். இதுகுறித்து சக பயணிகள் கூறுகையில், மைக் டைஸன் அந்த பயணியை அமைதியாக இருக்கும்படி கூறிவந்தார். ஆனால் அந்த பயணியோ அவரை தொந்தரவு செய்யும்படி காதில் கத்தியபடியே இருந்தார். இதனால் டைசன் அவரை தாக்கினார். பின்னர் விமானம் கிளம்புவதற்கு முன் மைக் டை...
தமிழகத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம்- அரசு அதிரடி அறிவிப்பு!

தமிழகத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம்- அரசு அதிரடி அறிவிப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. சென்னை ஐஐடியில் கடந்த 3 நாட்களில் 30 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் மக்கள் மீண்டும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். இந்நிலையில் இன்று முதல் பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகங்களுக்கு ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார். மேலும் கொரோனா தடுப்பூசிகளை மக்கள் தவறாமல் செலுத்திகொள்ள வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவில் பிற மாநிலங்களிலும் தற்போது முகக்கவசம் அணிவது கட்டாயம் என அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழ்நாட்டிலும் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது....
பாகிஸ்தானில் மக்களின் ஒருநாள் சராசரி வருமானம் ரூ.600க்கும் குறைவு: அதிர்ச்சி தகவல்!

பாகிஸ்தானில் மக்களின் ஒருநாள் சராசரி வருமானம் ரூ.600க்கும் குறைவு: அதிர்ச்சி தகவல்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
பாகிஸ்தானின் மக்கள் தொகையில் 34 சதவீதம் பேர், நாளொன்றுக்கு வெறும் ரூ.588 வருமானத்தில் வாழ்கின்றனர் என்று உலக வங்கியின் சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக வங்கி வெளியிட்ட பாகிஸ்தான் வளர்ச்சி புதுப்பிப்பு, இரு வருட அறிக்கையில் இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானில் உயர்ந்து வரும் விலைவாசி, ஏழைக் குடும்பங்களை அதிகமாகப் பாதிக்கிறது. உணவு மற்றும் எரிபொருளுக்காக மட்டுமே அவர்கள் தங்கள் பட்ஜெட்டில் அதிகப் பங்கைச் செலவழிக்கும் சூழல் உள்ளது. உலக வங்கி நேற்று வெளியிட்ட அறிக்கையில், ஏழைகள் தங்கள் மொத்த நுகர்வில், 50 சதவீதத்தை உணவுப் பொருட்களுக்கு செலவிடுகின்றனர். நடப்பு நிதியாண்டில் உடனடி தீர்வு நடவடிக்கைகள் எடுக்காவிட்டால், பாகிஸ்தான் பெரும் கடன் சுமைக்கு ஆளாக நேரிடும் என்று எச்சரித்துள்ளது. தொடர்ந்து அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;- அதிகரிக்கும் ...
கடனில் மூழ்கி கொண்டிருக்கும் பாகிஸ்தான்-பிரதமர் ஷபாஸ் ஷெரீப்!

கடனில் மூழ்கி கொண்டிருக்கும் பாகிஸ்தான்-பிரதமர் ஷபாஸ் ஷெரீப்!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள்
பாகிஸ்தானில் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் இம்ரான்கான் அரசு கவிழ்ந்ததை தொடர்ந்து, ஷபாஸ் ஷெரீப் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். அவரது தலைமையிலான புதிய மந்திரிசபை நேற்று முன்தினம் பதவியேற்றது. 34 பேர் மந்திரிகளாக பதவியேற்றனர். இந்நிலையில், பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தலைமையில் நேற்று முதல் மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய ஷபாஸ் ஷெரீப் பாகிஸ்தான் கடனில் மூழ்கி கொண்டிருப்பதாக எச்சரித்தார். இதுபற்றி அவர் பேசுகையில், “நீங்கள் வறுமை, வேலையில்லா திண்டாட்டம் மற்றும் பணவீக்கத்திற்கு எதிராக போராடுவதால், நான் இதை ஒரு போர் மந்திரி சபையாக கருதுகிறேன். நாடு எனும் படகு கடனில் மூழ்கி கொண்டிருக்கிறது. அந்த படகை நாம் கரைக்கு கொண்டுசெல்ல வேண்டும். வறுமை, வேலையில்லா திண்டாட்டம் மற்றும் பணவீக்கம் போன்ற சவால்களுடன் நாம் போராட வேண்டியுள்ளது. ஏனெனில் முந்தைய அரசாங்கம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதி...
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து பிரதமர் ஜான்சனுக்கு அகமதாபாத்தில் சிறப்பு வரவேற்பு!

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து பிரதமர் ஜான்சனுக்கு அகமதாபாத்தில் சிறப்பு வரவேற்பு!

HOME SLIDER, NEWS, World News, உலக செய்திகள், செய்திகள்
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்று காலை அலுவலகப் பயணமாக இந்தியா வந்துள்ளார். அவருக்கு அகமதாபாத் விமான நிலையத்தில் குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் மற்றும் அம்மாநில ஆளுநர் ஆச்சாசர்யா தேவ்ரத் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர். இவர்களுடன் மாநில மூத்த அதிகாரிகளும், அமைச்சர்களும் உடனிருந்தனர். இங்கிலாந்து பிரதமருக்கு அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து நகரத்தில் உள்ள 5 நட்சத்திர ஓட்டல் வரை 4 கி.மீ பாதையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. சாலை எங்கிலும் பாரம்பரிய குஜராத்தி நடனங்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகளை குழுவினர் நடத்தினர். குஜராத்தில் ஒரு நாள் தங்கயிருக்கும் இங்கிலாந்து பிரதமர் அம்மாநிலத்தைச் சேர்ந்த முக்கிய வணிகத் தலைவர்களை சந்திக்கவுள்ளார். பிறகு, பஞ்மஹால் மாவட்டத்தில் உள்ள ஹலோலுக்கு அருகில் உள்ள பிரிட்டிஷ் கட்டுமான உபகரண நிறுவனமான ஜேசிபியின் உற்பத்தி நிலையத்திற்கு...
ரூ.5 கோடி மோசடி வழக்கு – நடிகர் விமல் விளக்கம்!

ரூ.5 கோடி மோசடி வழக்கு – நடிகர் விமல் விளக்கம்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
நடிகர் விமல், மன்னர் வகையறா என்ற படத்தின் தயாரிப்புக்காக ரூ.5 கோடி கடன் பெற்றதாகவும், அந்த கடனை திருப்பித் தராமல் மோசடி செய்து விட்டதாகவும், சினிமா தயாரிப்பாளர் கோபி என்பவர் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில்  புகார் கொடுத்திருந்தார். இதற்கு பதிலடியாக நடிகர் விமல் கூடுதல் கமிஷனர் கண்ணனிடம் அளித்துள்ள புகார் மனுவில், கோபி தற்போது தன்மீது கொடுத்துள்ள ரூ.5 கோடி மோசடியில் தனக்கு சம்பந்தம் இல்லை என்று தெரிவித்திருந்தார். எனக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையிலும், எனது புகழை கெடுக்கும் நோக்கத்திலும் இந்த புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் நடிகர் விமல் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- மன்னர் வகையறா படத்தை இயக்கிய பூபதி பாண்டியன் பூபதி பாண்டியன் என்பவரை அறிமுகம் செய்தார். சிங்காரவேலன்தான், கோபிக்கு பணம் கொடுக்க வேண்டும். எனக்கும், அத...