செவ்வாய்க்கிழமை, ஜூலை 14
Shadow

Author: Kodanki

கொடைக்கானலில் மழை : சுற்றுலா பயணிகள் உற்சாகம்!

கொடைக்கானலில் மழை : சுற்றுலா பயணிகள் உற்சாகம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றலா பயணிகள் வருகின்றனர். கடந்த வாரத்தில் அவ்வப்போது சாரல் மழையும், ஒரு சில நாட்களில் சிறிது நேரம் கன மழையும் பெய்துவந்த நிலையில் நேற்று முன்தினம் 4 மணி நேரத்திற்குமேல் கனமழை கொட்டித்தீர்த்தது. அதேபோல் நேற்றும் 12 மணி முதல் சாரல் மழையும், ஒரு சில நேரங்களில் கனமழையும் பெய்தது. மாலை 6 மணிக்கு மேல் இரண்டு மணி நேரத்திற்கும் அதிகமாக பலத்த மழை பெய்தது. இது கோடை சீசனை வரவேற்கும் விதமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. நகர் மற்றும் புறநகர்ப்பகுதிகளிலும் கனமழை பெய்ததால் பிரதான சாலை மற்றும் பல்வேறு தெருப்பகுதி சாலைகளிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. விடுமுறை தினம் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். இதனால் கோக்கர்ஸ்வாக், பைன்பாரஸ்ட், குணாகுகை, தூண்...
திருப்பதியில் இலவச தரிசன டோக்கன் வாங்க வந்த பக்தர்கள் ஏமாற்றம்!

திருப்பதியில் இலவச தரிசன டோக்கன் வாங்க வந்த பக்தர்கள் ஏமாற்றம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனம் செய்வதற்காக திருப்பதி பஸ் நிலையம் எதிரே உள்ள ஸ்ரீனிவாசம் பக்தர்கள் ஓய்வறை, ரெயில் நிலையம் பின்புறம் உள்ள கோவிந்தராஜர் சத்திரம், அலிபிரியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ் ஆகிய 3 இடங்களில் இலவச தரிசன டோக்கன் வழங்கப்படுகிறது. தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வருகிற 12-ந்தேதி தரிசனம் செய்வதற்கான டிக்கெட்டுகள் நேற்று மதியம் வரை மட்டும் வழங்கப்பட்டது. அதன்பிறகு இலவச தரிசன டிக்கெட் வழங்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. 12-ந்தேதி மதியத்திற்கு பிறகு இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படும். 12-ந்தேதி தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் 13-ந்தேதி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். எனவே, பக்தர்கள் இதை கருத்தில் கொள்ள வேண்டும் என்று தேவஸ்தானம் அறிவித்திருந்தது. ஆனால் தேவஸ்தான அறிவிப்பு தெரியாமல் ஏராளமான பக்தர்க...
பாகிஸ்தான் பாராளுமன்றம் ஒத்திவைப்பு – ஷபாஸ் ஷெரீப் புதிய பிரதமர் என தகவல்!

பாகிஸ்தான் பாராளுமன்றம் ஒத்திவைப்பு – ஷபாஸ் ஷெரீப் புதிய பிரதமர் என தகவல்!

HOME SLIDER, NEWS, World News, உலக செய்திகள், செய்திகள்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன. அந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நேற்று நள்ளிரவு நடைபெற்றது. நள்ளிரவு 1.30 மணியளவில் பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் இம்ரான்கானுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த தீர்மானம் வெற்றிபெற்றது. இதனால் பாகிஸ்தான் பிரதமர் பதவியில் இருந்து இம்ரான்கான் நீக்கப்பட்டார். நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்றியதும் பாகிஸ்தான் பாராளுமன்றம் திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது. பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட இம்ரான்கான், பிரதமர் அலுவலக இல்லத்தில் இருந்து வெளியேறினார். இந்நிலையில், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ஷபாஸ் ஷெரீப் நாட்டின் புதிய பிரதமராக தேர்ந்தெடு...
கல்லூரி தேர்வு கட்டண உயர்வு குறித்து ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்!

கல்லூரி தேர்வு கட்டண உயர்வு குறித்து ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- முப்பது வயதுக்கு உட்பட்ட தமிழகக் கல்லூரி மாணவர்களின் கல்விக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்“ என்று வாக்குறுதி அளித்து, அதன்மூலம் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ள தி.மு.க., வாக்குறுதியை நிறைவேற்றாததோடு, கல்லூரி மாணவ, மாணவியரின் தேர்வுக் கட்டணங்களை எல்லாம் 2 மடங்கு, 3 மடங்கு உயர்த்த வழிவகை செய்துள்ளது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந்துள்ளது. கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்து தற்போது தான் ஓரளவு இயல்பு நிலை திரும்பி இருக்கிறது. அனைவரும் பணிக்குச் செல்ல ஆரம்பித்து இருக்கிறார்கள். இருந்தாலும், அவர்களுடைய வாழ்க்கை இயல்பான நிலையை அடைய மேலும் ஓரிரு ஆண்டுகள் ஆகும் என்கின்ற நிலையில், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 147 இணைப்புக் கல்லூரிகளில் பயிலும் ஏழையெளிய மாணவ, மாணவியரின் தேர்வ...
‘சட்டம் என் கையில்’- படத்தில் கதாநாயகனாக நடிகும் சதீஷ்!

‘சட்டம் என் கையில்’- படத்தில் கதாநாயகனாக நடிகும் சதீஷ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தமிழ் சினிமாவில் பல படங்களில் காமெடி மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் சதீஷ். இவர் ‘நாய் சேகர்’ என்ற படம் மூலம் கதையின் நாயகனாக களமிறங்கினார். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் சதீஷ் நடிப்பில் ஓ மை கோஸ்ட் என்ற திரைப்படமும் உருவாகி வருகிறது. தற்போது ‘சட்டம் என் கையில்’ என்ற புதிய படத்தில் கதாநாயகனாக சதீஷ் நடித்து வருகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிலம்பரசன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வைரலாகி வருகிறது....
பாராட்டை தலையில் தூக்கி வைத்து கொள்ள கூடாது – இயக்குனர் பாரதிராஜா பேச்சு

பாராட்டை தலையில் தூக்கி வைத்து கொள்ள கூடாது – இயக்குனர் பாரதிராஜா பேச்சு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
பாராட்டை தலையில் தூக்கி வைத்து கொள்ள கூடாது - இயக்குனர் பாரதிராஜா பேச்சு இயக்குநர் பாரதிராஜா பேசுகையில், “என் இனிய தமிழ் மக்களே, என் சக தோழர்களே நண்பர்களே அனைவருக்கும் வணக்கம். தயாரிப்பாளர் பேசும் போது ரொம்ப கஷ்ட்டப்பட்டு வந்திருப்பதாக சொன்னார். நீங்க கஷ்ட்டப்பட்டு வந்தால் தான் இதை அனுபவிக்க முடியும். இதே வடபழனியில் தெரு தெருவாக சோத்துக்கே வழி இல்லாமல் அலைந்தவன் தான் பாரதிராஜா. சினிமா லவ்வபல் வேர்ட், இது யாரையும் கைவிடாது, நீங்க சினிமாவ லவ் பண்ணீங்கனா அது உங்கள் லவ் பண்ணும். ஒரு வேலை செய்யும் போது அதில் ஒரு தாக்கம் வேண்டும், அப்படி இருந்தால் தான் வெற்றி பெற முடியும். இதில் நடித்திருக்கும் பசங்கள பார்க்கும் போதே படம் வெற்றி பெறும் என்று தோன்றுகிறது. இதில் தயாரிப்பாளரின் மகன் நடித்திருக்கிறார். அவருக்கு நல்ல அப்பா கிடைத்திருக்கிறார். நான் எல்லாம் எந்த பின்புலம் இல்லாமல் வந்...
கிருத்திகா உதயநிதியின் இயக்கத்தில் புது வெப் சீரியஸ்!

கிருத்திகா உதயநிதியின் இயக்கத்தில் புது வெப் சீரியஸ்!

HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள்
  இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், காளிதாஸ் ஜெயராம், தான்யா ரவிச்சந்திரன் நடிக்கும், ஜீ5 ஒரிஜினல் வெப் சீரிஸ்  “பேப்பர் ராக்கெட்” ,  ‘ஒரு ஆசம் தொடக்கம்’ கொண்டாட்ட நிகழ்வில் அறிவிக்கப்பட்டது ! ஜீ5 நிறுவனம் தமிழ் மொழியில், தனது வெற்றியை கொண்டாடும் வகையில், ‘ஜீ5 தளத்தில் இந்த  அடுத்தடுத்து வெளிவரவுள்ள பிரமாண்ட படைப்புகள் தொடர்பான அறிவிப்புகள் வெளியிடும் நிகழ்வாக “ஒரு ஆசம் தொடக்கம்” நிகழ்வை நடத்தியது. இந்த நிகழ்வின் போது பிரபல இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில்,  'பேப்பர்  ராக்கெட்' எனும் வெப் சீரிஸ் பிரபலங்கள் முன்னிலையில் அறிவிக்கப்பட்டது. இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கும் முதல் வெப் சீரிஸ் இதுவென்பது குறிப்பிடதக்கது. ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் இத்தொடரை தயாரிக்கிறார். காளிதாஸ் ஜெயராம், தான்யா ரவிச்சந்திரன் முதன்மை பாத்திரங...
இம்ரான்கான் அரசு மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது இன்று வாக்கெடுப்பு!

இம்ரான்கான் அரசு மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது இன்று வாக்கெடுப்பு!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், உலக செய்திகள், செய்திகள்
பாகிஸ்தான் பாராளுமன்றத்தை கலைத்தது செல்லாது என அதிரடியாக உத்தரவு பிறப்பித்த அந்த நாட்டு சுப்ரீம் கோர்ட்டு, பிரதமர் இம்ரான்கான் அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது 9-ந்தேதி (இன்று) வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என தீர்ப்பளித்தது. பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது கடந்த 3-ந்தேதி ஓட்டெடுப்பு நடத்தாமல், துணை சபாநாயகர் காசிம் சூரி நிராகரித்தார். அதையடுத்து இம்ரான்கான் பரிந்துரையால் பாராளுமன்றத்தை ஜனாதிபதி ஆரிப் ஆல்வி கலைத்து உத்தரவிட்டார். இது அங்கு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தை அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரணை நடத்தியது. இந்த விசாரணை முடிவில், பாகிஸ்தான் பாராளுமன்றத்தை கலைத்த அதிபர் ஆரிப் ஆல்வியின் நடவடிக்கை சட்ட விரோதமானது எனவும், அது செல்லாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தன...
இலங்கையில் கல்லூரி மாணவர்கள் போராட்டம் !

இலங்கையில் கல்லூரி மாணவர்கள் போராட்டம் !

HOME SLIDER, NEWS, World News, உலக செய்திகள், செய்திகள்
தமிழகத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம், சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்ததுடன், அதில் வெற்றியும் கிடைத்தது. இந்த போராட்டத்தின் ஆரம்பத்தில் இருந்து மாணவர்கள் மிகத் தீவிரமாக கலந்து கொண்டு ஜல்லிக்கட்டு போராட்டத்தை வெற்றியடைய வைத்தனர். இதைப் போலவே இலங்கையில் தற்போது அரசுக்கு எதிராக மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம், அந்நாட்டு மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியை சரி செய்ய வலியுறுத்தியும், ஆட்சியாளர்களை பதவி விலகக் கோரியும் இலங்கை தலைநகர் கொழும்புவில் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். காலையில் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், மாலையில் பூங்காக்கள், பிரதான சாலைகள் உள்ளிட்ட இடங்களில் கூடி கையில் பதாகைகளை ஏந்தி அமைதி வழியில் போராடி வருகின்றனர். அரசியல் தலைவர்களுக்கு கல்வி அறிவு வழங்க வேண்டும், பொருளாதார நெருக்கட...
குஜராத்தில் புதிய வகை ஒமைக்ரான் வைரஸ் அறிகுறி!

குஜராத்தில் புதிய வகை ஒமைக்ரான் வைரஸ் அறிகுறி!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கொரோனா வைரஸ்  அடிக்கடி உருமாற்றம் பெற்று புதிய வகையாக மாறி பரவி வருகிறது. இதுவரை காமா, பீட்டா, டெல்டா, டெல்டா பிளஸ், ஒமைக்ரான் என்று பல்வேறு வடிவங்களை கொரோனா வைரஸ் எடுத்து விட்டது. ஒமைக்ரான் வைரசில் இருந்து 4 வகையான துணை உருமாற்றங்கள் நிகழ்ந்தன. அதில் பிஏ1, பிஏ.2 ஆகிய 2 வகை வைரசுகள் தற்போது உலகம் முழுக்க பரவி உள்ளன. இந்த நிலையில் பிஏ.1, பிஏ.2 ஆகிய 2 வைரசுகளும் கலந்து எக்ஸ்-இ என்ற புதிய வகை கொரோனா வைரசை தோற்றுவித்துள்ளன. இந்த எக்ஸ்-இ வைரஸ் முந்தைய கொரோனா வைரசுகளை விட 10 மடங்கு அதிவேகமாக பரவும் ஆற்றல் கொண்டது. இது ஒருவரை தாக்கினால் உடலில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது இதுவரை உறுதியாகவில்லை. என்றாலும் இந்த வைரஸ் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்று பெரும்பலான நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். உலகம் முழுக்க சுமார் 600 பேருக்கு எக்ஸ்-இ கொரோனா வைரஸ் இருப்பது உறுதிப்படுத்...