செவ்வாய்க்கிழமை, ஜூலை 14
Shadow

Author: Kodanki

சாரா அலிகானின் பிகினி ஃபோட்டொ சூட்!

சாரா அலிகானின் பிகினி ஃபோட்டொ சூட்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
பிரபல இந்தி நடிகர் சயீப் அலிகான்-நடிகை அம்ரிதா சிங் தம்பதியின் மகளான சாரா அலிகான், பெற்றோரைப்போல் இந்தி படங்களில் நடித்து வருகிறார். நடிகை அம்ரிதா சிங்கை விவாகரத்து செய்து விட்டு நடிகை கரீனா கபூரை சயீப் அலிகான் 2-வது திருமணம் செய்து கொண்டார். தற்போது சாரா அலிகான் தனது தாயுடன் வாழ்ந்து வருகிறார். பாலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் சாரா அலிகான், 'கிதர்னாத்' என்கிற படத்தின் மூலம் அறிமுகமானார். சமீபத்தில் ஆனந்த் எல் ராய் இயக்கிய அத்ரங்கி ரே படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்நிலையில் சாரா அலிகான் தான் பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பல வண்ணங்களில் இருக்கும் பிகினி உடை அணிந்து கடற்கரையில் பல விதமாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். சூரியன், கடல், மணல் என குறிப்பிட்டு அந்த ...
பீஸ்ட் படைத்த  புதிய சாதனை!

பீஸ்ட் படைத்த புதிய சாதனை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விஜய் நடிப்பில் நெல்சன் திலிப்குமார் இயக்கியுள்ள பீஸ்ட் திரைப்படம் லைக்குகளை குவித்து புதிய சாதனை படைத்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவரது நடிப்பில் உருவாகியுள்ள " பீஸ்ட்" திரைப்படம் வரும் 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், செல்வராகவன் என திரையுலக பிரபலங்கள் பலர் இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளனர். நெல்சன் திலீப்குமார் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார். அனிருத் இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. நடிகர் விஜய் பேசும் அதிரடி வசனங்கள் மற்றும் சண்டை காட்சிகள் இடம்பெற்று இருந்த டிரைலர் ரசிகர்கள் மத்தியில் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வந்தது. குறிப்பாக டிரைலரில் விஜய் " நான் அரசியல்வாதி அல்ல, நான் போராளி" என பேசிய வசனத்தை ரசிகர்கள் அதிகளவில் டிரெண்ட் செய்து வருகின்றனர். இந்நிலையில் ப...
அனந்தம் பட டீசரை வெளியிட்ட யுவன் சங்கர் ராஜா!

அனந்தம் பட டீசரை வெளியிட்ட யுவன் சங்கர் ராஜா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரிகளில் ஒருவரான மணிரத்னம் அவர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த  பிரியா.வி இயக்கியுள்ள தொடர் “அனந்தம்”. இது 1964-2015 வரை அனந்தம் என்ற வீட்டில் வாழ்ந்த 3 தலைமுறைகளின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு உணர்ச்சிகரமான தருணங்களை தொகுத்துள்ள இணைய தொடர். இந்த தொடரில் பிரகாஷ் ராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் அரவிந்த் சுந்தர், சம்பத், விவேக் பிரசன்னா, வினோத் கிஷன், ஜான் விஜய், விவேக் ராஜ்கோபால், இந்திரஜா, சம்யுக்தா, அஞ்சலி ராவ், மிர்னா மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹேப்பி யூனிகார்ன் சார்பில் வி.முரளி ராமன் இந்த தொடரை தயாரித்துள்ளார். இதன் திரைக்கதையை பிரியா.வி, ராகவ் மிர்தாத், ப்ரீத்தா ஜெயராமன் மற்றும் ரீமா ரவிச்சந்தர் எழுதியுள்ளனர். பகத் ஒளிப்பதிவு பணியாற்றி ஏ.எஸ்.ராம்  இசையமைத்து சதீஷ் சூர்யா படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளனர். இந்த...
ஒரே நாளில் வெளியான கார்த்தியின் படங்கள்!

ஒரே நாளில் வெளியான கார்த்தியின் படங்கள்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
நடிகர் கார்த்தி, கடந்த 2007-ம் ஆண்டு வெளியான பருத்திவீரன் படம் மூலம் நடிகராக அறிமுகமானார். இதையடுத்து பையா, மெட்ராஸ், சிறுத்தை, தீரன், கைதி என பல்வேறு ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகராக உயர்ந்தார். தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் பொன்னியின் செல்வன், பி.எஸ்.மித்ரன் இயக்கும் சர்தார் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் கார்த்தி தற்போது அவருடைய சமூகவலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. அவர் நடிப்பில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்த பையா, கொம்பன் மற்றும் சுல்தான் ஆகிய மூன்று படங்களும் ஏப்ரல் 2-ஆம் தேதி அன்று வெளியானது. இந்த மூன்று படங்களின் நினைவுகளை பற்றியும் அவர் பகிர்ந்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பது, பையா திரைப்படம் எனக்கு முற்றிலும் புதிய கண்ணோட்டத்தைக் வெளிப்படுத்த வித்திட்டது. நான் அறிமுகமாகி 8 வ...
”சொத்து வரி உயர்வை மறு பரிசீலனை செய்ய வேண்டும்” – காங்கிரஸ் அறிக்கை

”சொத்து வரி உயர்வை மறு பரிசீலனை செய்ய வேண்டும்” – காங்கிரஸ் அறிக்கை

HOME SLIDER, politics, செய்திகள், தமிழக அரசியல்
  தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளின் சொத்து வரிகளை உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் அறிவிப்பின்படி, சென்னை மாநகரத்தில் 600 சதுரஅடி முதல் 1,200 சதுரஅடி வரை 75 சதவீத சொத்து வரி உயர்த்தப்பட இருக்கிறது. ஏற்கெனவே, 600 சதுரஅடிக்கு ரூபாய் 810 சொத்து வரி செலுத்தியவர்களுக்கு ரூ.1215 உயர்த்தப்பட்டிருக்கிறது. 1,201 சதுரஅடி முதல் 1,800 சதுரஅடி வரை 100 சதவீத வரி உயர்வும், 1,801 சதுரஅடிக்கு மேலாக உள்ள வீடுகளுக்கு 150 சதவீத சொத்து வரி உயர்வும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், வணிக வளாகங்களுக்கு 150 சதவீத வரி உயர்வும், கல்வி நிலையங்களுக்கு 100 சதவீத வரி உயர்வும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய சொத்து வரி உயர்வு அனைத்து தரப்பினரையும் பலமுனைகளில் கடுமையாக பாதிக்கும...
டெல்லியில் அண்ணா – கலைஞர் அறிவாலயத்தை திறந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்!

டெல்லியில் அண்ணா – கலைஞர் அறிவாலயத்தை திறந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்!

HOME SLIDER, NEWS, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
டெல்லியில் புதிதாக கட்டப்பட்டா அண்ணா - கலைஞர் அறிவாலயத்தை தி.மு.க தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். இந்த நிகழ்வில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டத் தலைவர்கள் பங்கேற்றனர்.   டெல்லி தீன்தயாளர் உபாத்யாயா மார்க்கில் மத்திய அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ள இடத்தில் தி.மு.கவுக்கு கட்சி அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்துக்கு அண்ணா - கலைஞர் அறிவாலயம் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தக் கட்டடத்தைத் திறந்துவைப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் டெல்லி சென்றார். டெல்லி சென்ற அவர் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய நிதியமைச்சர் உள்ளிட்டவர்களைச் சந்தித்து தமிழகத்தில் கோரிக்கைகளை முன்வைத்தார். இந்தநிலையில், இன்று அண்ணா - கலைஞர் அறிவாலயம் திறப்பு விழா நடைபெற்றது. அண்ணா - கலைஞர் அறிவாலயத்தை தி.மு.க தலைவரும் முதல்வருமான மு....
மேட்டூர் அணை நீர்மட்டம் 105 அடியாக நீடிப்பு!

மேட்டூர் அணை நீர்மட்டம் 105 அடியாக நீடிப்பு!

CINI NEWS, HOME SLIDER, NEWS, செய்திகள்
மேட்டூர் அணைக்கு நேற்று வினாடிக்கு 2 ஆயிரத்து 210 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து விநாடிக்கு 2 ஆயிரத்து 35 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரியில் 1500 கன அடி தண்ணீர் குடி நீருக்காக திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று 105.20 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 105.21 அடியானது. இனி வரும் நாட்களில் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது....
ஆஸ்கர் அகாடமி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் வில் ஸ்மித்!

ஆஸ்கர் அகாடமி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் வில் ஸ்மித்!

CINI NEWS, HOME SLIDER, World News, உலக செய்திகள், சினி நிகழ்வுகள், நடிகர்கள்
நடப்பாண்டிற்கான 94-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இதில் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது ஹாலிவுட் நடிகர்  வில் ஸ்மித்திற்கு முதன்முறையாகக் கிடைத்தது. 'கிங் ரிச்சர்ட்' திரைப்படத்தில் நடித்ததற்காக இந்த விருதை அவர் வென்றார். விருது வழங்கும் விழாவில் வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட் பற்றி தொகுப்பாளரும், காமெடி நடிகருமான கிறிஸ் ராக், நகைச்சுவையாக பேசினார். அப்போது ஜடா பிங்கெட்டின் தலைமுடியை கிறிஸ் ராக் கிண்டல் செய்தார். அதனால் அதிருப்தி அடைந்த வில் ஸ்மித் மேடைக்கு சென்று கிறிஸ் ராக் கன்னத்தில் அறைந்தார். அதன்பின், வில் ஸ்மித் தனது செயலுக்கு கண்ணீர் மல்க மன்னிப்பு கேட்டார். சக நடிகரை வில் ஸ்மித் தாக்கிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஆஸ்கர் மேடையில் நிகழ்ச்சி தொகுப்பாளர் கிறிஸ் ராக்கின் கன்னத்தில் அறைந...
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்து வரி உயர்வு- தமிழக அரசு அறிவிப்பு!

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்து வரி உயர்வு- தமிழக அரசு அறிவிப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள், தமிழக அரசியல்
  மத்திய அரசால் அமைக்கப்பட்ட 15-வது நிதி ஆணையமானது, தமது அறிக்கையில் 2022-2023-ம் ஆண்டு முதல், உள்ளாட்சி அமைப்புகள், ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில், மானியம் பெறுவதற்கான தகுதியை பெறும் பொருட்டு, 2021-2022-ம் ஆண்டில், சொத்துவரி தள வீதங்களை அறிவிக்கை செய்ய வேண்டும் எனவும் மற்றும் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு ஏற்றவாறு ஆண்டுதோறும் சொத்து வரி வீதத்தை உயர்த்திட வேண்டும் எனவும் நிபந்தனைகள் விதித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் கீழ்க்கண்டவாறு சொத்து வரி சீராய்வு செய்யப்பட்டுள்ளது. 600 சதுர அடிக்கும் குறைவான பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 25 சதவீதம் மட்டும் சொத்து வரி உயர்த்தப்படுகிறது. 601 முதல் 1,200 சதுர அடி வரை பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 50 சதவீதம் மட்டும் சொத்து வரி உயர்த்தப்படுகிறது. ...
பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி!

பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி!

HOME SLIDER, NEWS, செய்திகள்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்துள்ள சூழலில், அங்கு அரசியலில் நெருக்கடி நிலை நிலவுகிறது. இந்தநிலையில், அமெரிக்க டாலருக்கு எதிரான பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்திருக்கிறது. ஒரு டாலருக்கு இணையான பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு 183 ஆக சரிந்திருக்கிறது. சீனாவிடம் இருந்து பெற்ற கடன்களில் ஒரு பகுதி உள்ளிட்ட கடன்களை திரும்பச் செலுத்தியதால் அன்னியச் செலாவணி இருப்பு குறைந்து, ரூபாய் மதிப்பு சரிந்துள்ளதாக பாகிஸ்தான் ஸ்டேட் வங்கி தெரிவித்திருக்கிறது....