புதன்கிழமை, ஜூலை 8
Shadow

Author: Kodanki

யாராக இருந்தாலும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு உரிய மரியாதை தரவேண்டும்: ஓபிஎஸ்

யாராக இருந்தாலும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு உரிய மரியாதை தரவேண்டும்: ஓபிஎஸ்

HOME SLIDER, NEWS, செய்திகள்
  யாராக இருந்தாலும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மரியாதை தரவேண்டியது தனி மனித கடமை என்று துணை முதல்வர் ஓபிஎஸ் கூறியுள்ளார். தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய போது எழுந்து நிற்காமல் அவமரியாதை செய்த விஜயேந்திரர் சர்ச்சையில் அனைத்து கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. இந்த சர்ச்சையில் உங்கள் கருத்து என்ன என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திடம் கேட்ட செய்தியாளர்களுக்கு...   ”யாராக இருந்தாலும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு உரிய மரியாதை தருவது ஒரு தனிமனிதனின் கடமை என்று தெரிவித்துக்கொள்கிறேன்” என்று சொன்னார் ஓ.பி.எஸ்....
ஜைன சந்நியாசியாக மாறிய பட்டதாரி பெண்..!

ஜைன சந்நியாசியாக மாறிய பட்டதாரி பெண்..!

HOME SLIDER, NEWS, செய்திகள்
ஜைன துறவியான பட்டதாரி பெண் சென்னையைச் சேர்ந்த மம்தா கட்டாரியா என்ற எம் பி ஏ படித்த பட்டதாரி இல்லற வாழ்க்கையை துறந்து, ஸந்நியாசம் வாங்கிக் கொண்டிருக்கிறர் .  இது குறித்த சென்னை அயனாவரத்தில் உள்ள டாடிபாடி ஜைன  ஆலயத்தின் நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது.. ‘ ஜைன மதத்தின் தத்துவங்களை எடுத்துரைப்பதற்காகவும், அதனை பரப்புரை செய்வதற்காக ஜைன துறவிகள் சுற்றுபயணம் மேற்கொள்வதுண்டு. அது போன்ற தருணங்களில் யாரேனும் துறவற வாழ்க்கையை வேண்டும் என்ற கொள்கையில் உறுதியாக இருந்தால், அவர்களுக்கு தீக்ஷா வழங்கப்படும். அதனை மூன்று நாள் வைபவமாகக் கொண்டாடுவார்கள். அது போன்றதொரு விழா தான் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சென்னை தி நகரில் வசித்து வரும் மம்தா கட்டாரியா என்ற 29 வயது எம் பி ஏ படித்த பட்டதாரி பெண் சாதாரண லௌகீக வாழ்க்கையை புறந்தள்ளி துறவியாக வாழ உறுதி கொண்டிருக்கிறார். அவருக்கு இங்...
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்பது மரபல்ல  மட (த்தனமான) விளக்கம்..!

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்பது மரபல்ல மட (த்தனமான) விளக்கம்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
பாஜக ராஜாவையும் சர்ர்ச்சைகளையும் பிரிக்கவே முடியாது போல... ஒன்னு அவர் பேசியது சிக்கலை ஏற்படுத்தும் அல்லது சிக்கல் வர்றமாதிரி அவர் பேசுவார்... இந்த முறை அவர் ஏற்பாடு செய்த கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு சங்கர மடத்தின் விஜயேந்திரர் எழுந்து நிற்காமல் அவமரியாதை செய்து சிக்கலை ஏர்படுத்திக் கொண்டார். ஆண்டாள் குறித்து தினமணி நாளிதழில் வைரமுத்து தவறாக எழுதியதாக சர்ச்சை கிளம்பியதையடுத்து வைரமுத்துவும் தினமணி ஆசிரியர் வைத்தியநாதனும் திருவில்லிப்புத்தூர் ஆண்டாள் சன்னதியில் விழுந்து மன்னிப்பு கேட்கவேண்டும் என்று கடந்த சில நாட்கலாக பலத்த சர்ச்சைகளும், விவாதங்களும் நடந்து வந்த நிலையில் ,  வைத்தியநாதன் ஆண்டாள் சன்னதியில் விழுந்து வணங்கி மன்னிப்பு கேட்டார். அதே சமயம் , இவ்விவகாரத்தில் வைரமுத்து  ‘வருத்தம்’ மட்டும் தெரிவித்த  செயலை மறக்கடிக்கும் விதமாக புது விவகாரம் கிடைத்துள்ளது. சென்னையில் பா...
‘அச்சமில்லை அச்சமில்லை’ இரண்டாம் பாகம் எடுப்பேன்! – அமீர்

‘அச்சமில்லை அச்சமில்லை’ இரண்டாம் பாகம் எடுப்பேன்! – அமீர்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
டீம் ஒர்க் புரொடக்ஷன்ஸ் சார்பாக இயக்குனர் அமீர் தயாரிக்க, முத்து கோபால் இயக்கத்தில், விவுரி குமார் இசையமைப்பில், அமீர், முத்து கோபால், ஹரீஷ், சாந்தினி தமிழரசன் மற்றும் பலர் நடிக்கும் அச்சமில்லை அச்சமில்லை படத்தின் இசை வெளியீடு  சென்னையில் நடைபெற்றது. பொதுவாக, திரைப்பட விழாக்களில் திரையுலகத்தைச் சார்ந்தவர்கள்தான் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொள்வது வழக்கம். ஆனால், இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சமூக ஆர்வலர்களை அழைத்து விழாவை நடத்தினார்கள். டிராஃபிக் ராமசாமி, சுப.உதயகுமார், கார்ட்டூனிஸ்ட் பாலா, வளர்மதி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்கள். இதில் கார்டூனிஸ்ட் பாலா தன் உரையின் போது, “விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள இயலாத ஓர் அரசாங்கம் இங்கு நடைபெறுகிறது. உங்கள் அம்மணங்களை மறைத்துக்கொள்ள எங்கள் விமர்சனங்களை எடுத்துக்கொள்ள வேண்டும். அதைவிட்டுவிட்டு படம் வரைபவனை கைது செ...
ஏமாலி ஆபாச படமா இயக்குனர் வி.இசட்.துரை விளக்கம்

ஏமாலி ஆபாச படமா இயக்குனர் வி.இசட்.துரை விளக்கம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகைகள்
லதா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ‘முகவரி’, ‘தொட்டி ஜெயா’, ‘நேபாளி’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் வி.இசட்.துரை இயக்கத்தில் சாம்.டி.ராஜ் இசையமைப்பில் சமுத்திரக்கனி, சாம் ஜோன்ஸ், அதுல்யா, ரோஷினி மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ‘ஏமாலி’.படத்தின் நாயகன் சாம் ஜோன்ஸ், சமுத்திரக்கனி இருவரும் விதவிதமான தோற்றங்களில் படத்தில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் சிங்கம்புலி, பால சரவணன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இதில் அதுல்யா ரவி கதாநாயகியாக அறிமுகமாகிறார். படம் பற்றி விவரித்த இயக்குனர் வி.இசட்.துரை ”“இந்த படத்துக்கு ‘ஏமாலி’ என்று பெயர் வைத்ததற்கு காரணம் இருக்கிறது. இன்றைய இளைஞர்கள் காதலை ‘டேக் இட் ஈசி’ என்று சாதாரணமாக பார்க்கிறார்கள். காதலர்களிடம் பிக் அப், பார்ட்டி, டேட்டிங், அவுட்டிங், பிரேக் அப் எல்லாம் சாதாரணமாகி விட்டது. அதைத்தான் இந்த படத்தில் காட்டி இருக்கிறேன். இந்த ஏமாலி படம் ஒரு பு...
இளையராஜாவுக்கு பத்மவிபூஷண் விருது – முதல்வர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு

இளையராஜாவுக்கு பத்மவிபூஷண் விருது – முதல்வர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு

CINI NEWS, HOME SLIDER, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பத்மவிபூஷண் விருது வழங்கப்பட்டுள்ளதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக  அவர் வெளியிட்ட அறிக்கையில், "இசை உலகின் தலை சிறந்த இசையமைப்பாளரான இளையராஜா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற பல்வேறு மொழி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். நாட்டுப்புற இசை, கர்நாடக இசை மற்றும் மேற்கத்திய இசையில் புலமையும் முறையான பயிற்சியும் பெற்ற இவருக்கு, இந்தியாவின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண் விருது கிடைத்ததற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன். தொல்லியல் துறையில் அனைவரும் பாராட்டத்தக்க வகையில் சிறப்பாக பணியாற்றிய தமிழ்நாட்டைச் சேர்ந்த ராமச்சந்திர நாகசாமிக்கு பத்ம பூஷன் விருது கிடைத்ததற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். பத்ம விபூஷன் விருதினை பெற்ற இளையர...
ஒரிஜினலில் நிமிர்ந்து ரீமேக்கில் நிமிர மறுக்கும் நிமிர் – விமர்சனம்

ஒரிஜினலில் நிமிர்ந்து ரீமேக்கில் நிமிர மறுக்கும் நிமிர் – விமர்சனம்

HOME SLIDER, REVIEWS, விமர்சனம்
ஒரிஜினலில் நிமிர்ந்து ரீமேக்கில் நிமிர மறுக்கும் நிமிர் - விமர்சனம் மலையாளத்தில் திலீஷ் போத்தன் இயக்கத்தில் ஃபகத் ஃபாசில் நடித்து வெளிவந்த ‘மகேஷிண்ட பிரதிகாரம்’ படத்தின் ரீ – மேக் தான் நிமிர். உதயநிதி, பார்வதி நாயர், நமீதா பிரமோத் ஆகியோர் நடிப்பில், பிரியதர்ஷன் இயக்கத்தில், ரோனி ஆர் ரபீல், தர்புகா சிவா, அஜானீஷ் லோக்நாத் ஆகியோர் இசையமைப்பில் சமுத்திரக்கனி, மகேந்திரன், எம்.எஸ்.பாஸ்கர், கருணாகரன், சண்முகராஜா, துளசி, கஞ்சா கருப்பு ஆகிய நட்சத்திர பட்டாளத்தோடு வெளியாகியிருக்கும் படம் நிமிர். தென்காசியில் ஒரு சிறிய ஃபோட்டோ ஸ்டுடியோ வைத்து நடத்திக்கொண்டிருக்கும் நேஷனல் செல்வத்தை (உதயநிதி) ஒரு சிறிய சண்டையில், பலர் முன்பு அடித்துத் துவைத்துவிடுகிறான் வெள்ளையப்பன் (சமுத்திரக்கனி). அவனைத் திரும்பவும் அடித்து வீழ்த்தும்வரை தான் செருப்பு அணியப்போவதில்லை என சபதமேற்கிறான் செல்வம். இந்த சூழலில்...
இணையதளம் மூலம் ஆபாச படம் வெளியிட்ட ராம்கோபால் வர்மா மீது வழக்கு

இணையதளம் மூலம் ஆபாச படம் வெளியிட்ட ராம்கோபால் வர்மா மீது வழக்கு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
ராம்கோபால் வர்மா  ‘காட் செக்ஸ் அன்ட் ட்ரூத்’ என்ற குறும்படத்தை இயக்கியுள்ளார். இதில் அமெரிக்காவின் பிரபல ஆபாச பட நடிகை மியா மல்கோவா நடித்திருக்கிறார். இந்தப் படம்  இணையதளம் மூலம் வெளியாகியது. இதில் அமெரிக்காவின் பிரபல ஆபாச பட நடிகை மியா மல்கோவா நடித்திருக்கிறார்.   . இந்த நிலையில் இந்த படம் வெளியாகும் இணையதளம் குறித்த தகவலை ராம்கோபால் வர்மா  தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அமெரிக்க இணையதளமான http://www.godsextruth.online என்ற இணையதளத்தில்  26ஆம் தேதி காலை 9 மணிக்கு இந்த படம் வெளியானது. இந்த இணையதளத்தை படத்தை பார்க்க கட்டணம் செலுத்த வேண்டும், ஒருமுறை கட்டணம் செலுத்தினால் ஒருமுறை மட்டுமே பார்க்க முடியும். மீண்டும் பார்க்க வேண்டும் என்றால் மறுபடியும் கட்டணம் செலுத்த வேண்டும்.  இந்தியாவில் ரூ 150 ஆக கட்டணம் நிர்ணயிக்கபட்டு உள்ளது. இலங்கையில் ரூ.200 கட்டணம். இந்த படத்தின்  வ...
‘தமிழக அரசியலில் கால் பதிக்கும் எண்ணம் இல்லை’ நடிகை விஜயசாந்தி

‘தமிழக அரசியலில் கால் பதிக்கும் எண்ணம் இல்லை’ நடிகை விஜயசாந்தி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகைகள்
 நடிகையும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான விஜயசாந்தி   கூறியதாவது:– நான் தமிழக அரசியலில் ஈடுபடப்போவதாக வதந்திகள் உலா வருகின்றன. அதில் உண்மையில்லை. தமிழக அரசியலில் கால் பதிக்கும் எண்ணம் இல்லை. ஆந்திர அரசியலிலேயே தீவிரமாக ஈடுபடுவேன். காங்கிரஸ் கட்சி எந்த பொறுப்பை கொடுத்தாலும் ஏற்றுக்கொண்டு பணியாற்றுவேன். சந்திரசேகரராவ் ஆட்சி மீது தெலுங்கானா மக்கள் அதிருப்தியில் உள்ளனர். 2019–ம் ஆண்டு தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இல்லை. ஆனால் ராகுல்காந்தி போட்டியிட சொன்னால் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் எங்கு வேண்டுமானாலும் போட்டியிட தயார். விரைவில் தென் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து காங்கிரஸ் கட்சி ஆட்சியை கொண்டுவர பிரசாரம் செய்வேன்....