கட்சியில் இருந்து எங்களை நீக்க யாருக்கும் அதிகாரம் கிடையாது: தங்க தமிழ்ச்செல்வன்
டி.டி.வி.தினகரனின் ஆதரவாளரான தங்க தமிழ்ச்செல்வன் சென்னை அடையாறில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- டி.டி.வி.தினகரன் ஒரு மாயமான். அவர் பின்னால் சென்றால் எந்த பலனும் இருக்காது. அவரைப்பற்றி எனக்கு நன்கு தெரியும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியிருக்கிறாரே...
பதில்:- 1999-ம் ஆண்டு பெரியகுளம் தொகுதியில் டி.டி.வி.தினகரன் வேட்பாளராக நின்றபோது நாங்கள் தெருத்தெருவாக சென்று வாக்கு கேட்டுவிட்டு வந்து இரவு 11 மணிக்கு டீ சாப்பிடுவோம். அப்போது ஓ.பன்னீர்செல்வம் கையை கட்டிக் கொண்டு, நெற்றியில் பட்டையை போட்டுவிட்டு பவ்வியமாக நிற்பார்.
உங்களை விடவும் வயதில் நான் சின்னவன், வேட்பாளரும் வயது குறைவானவர்தான் உட்காருங்கள் தவறாக நினைக்கமாட்டார் என்று சொன்னேன். சாருக்கு முன்னாடி எப்போது நான் உட்கார்ந்தேன்.. சத்தியமாக உட்கா...









