விறுவிறுப்பான படப்பிடிப்பில் கருணாஸ் – கருணாகரன் நடிக்கும் ” சுந்தரா டிராவல்ஸ் சூப்பர் பாஸ்ட் “
விறுவிறுப்பான படப்பிடிப்பில் கருணாஸ் - கருணாகரன் நடிக்கும் " சுந்தரா டிராவல்ஸ் சூப்பர் பாஸ்ட் "
முரளி மற்றும் வடிவேலு இணைந்து நடித்து 2002 ஆம் ஆண்டு வெளியான " சுந்தரா டிராவல்ஸ்" படம் பட்டி தொட்டி எங்கும் மாபெரும் வெற்றி பெற்று மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று அன்று முதல் இன்று வரை யாராலும் மறக்க முடியாத படமாக இருந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இந்த படத்திற்கு " சுந்தரா டிராவல்ஸ் சூப்பர் பாஸ்ட் " என்று தலைப்பிட்டுள்ளனர்.
கருணாஸ் மற்றும் கருணாகரன் இருவரும் கதையின் நாயகர்களாக நடிக்கிறார்கள். மற்றும் ஆடுகளம் முருகதாஸ், சாம்ஸ், ரமா, வின்னர் ராமச்சந்திரன், சிசர் மனோகர், டெலிபோன் மணி, வினோத் குமார் ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் இவர்களுடன் தயாரிப்பாளர் செவன்த் சேனல் நாராயணன் இந்த படத்தின் மூலம் நடிகராக அறி...









